அயோத்தி அகழாய்வுகள்
அயோத்தி அகழாய்வுகள் (Archaeology of Ayodhya) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின், அயோத்தி மாவட்டத்தின் தலைமையிட நகரமான அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி வளாகத்தில் நடைபெற்ற அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களைத் குறித்தவைகள் ஆகும். அயோத்தி நகரம் பண்டைய கோசல நாட்டின் தலைநகரம் ஆகும்.
பின்னணி
தொகுஅயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி தான் இராமர் பிறந்த இடம் என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையாகும். முகலாயப் பேரரசர் பாபர் ஆட்சியின் போது, அவரது படைதலைவர் ராம ஜென்ம பூமியில் இருந்த கோயிலை இடித்து, அதன் மீது பாபர் மசூதி கட்டினார் என்பது இந்துக்களின் குற்றச்சாட்டாகும். டிசம்பர் 1949-ஆம் ஆண்டில் சில இந்துக்கள் இராமரின் சிலையை மசூதியின் ஒரு பக்கத்தில் வைத்து வழிபட்டதாகவும், அதன்பிறகே மசூதியை இராமர் கோவில் இருந்த இடம் என இந்து அமைப்பினர் கூறுவதாகவும், முஸ்லிம் தரப்பு குற்றம் சாட்டியது. 6 டிசம்பர் 1992 அன்று அயோத்தியில் கூடிய இந்து அமைப்புகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனால் இந்து-முஸ்லீம்களிடையே நாடு முழவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. எனவே பாரதிய ஜனதா கட்சியினர் ஆண்ட உத்தரப் பிரதேச சட்டமன்றத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் கலைத்தார்.
1993-ஆம் ஆண்டில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தை இந்திய அரசு ஒரு அரசாணையின் மூலம் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதுடன், பாபர் மசூதி இடிப்பு மற்றும் பிறகு ஏற்பட்ட வன்முறைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. 2003-ஆம் ஆண்டில் ராம ஜென்ம பூமி-பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வின் பரிந்துரையின் படி, இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அயோத்தில் உள்ள பாபர் மசூதி வளாகத்தில் அகழாய்வுகள் மேற்கொண்டது.
அகழாய்வுகளின் வரலாறு
தொகுஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் மொத்தம் ஐந்து முறை அகழாய்வுகள் நடைபெற்றுள்ளது. 1862-63-ஆம் ஆண்டுகளில் அலெக்சாண்டர் கன்னிங்காம் தொன்ம வரலாறுகளைக் கொண்டு முதல் ஆய்வு செய்தார்; 1889-91-ஆம் ஆண்டுகளில் செர்மானிய இந்தியவியல் அறிஞர் அலோயிஸ் அன்டன் ஃபூரர் இரண்டாவது முறையாக அகழாய்வு மேற்கொண்டார்; 1969-70-ஆம் ஆண்டுகளில் பேராசிரியர். ஏ. கே. நரேன் நடத்தியது மூன்றாவது அகழாய்வாகும்; 1975-76-ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் அறிஞர் பி. பி. லால் நடத்தியது நான்காவது அகழ்வாய்வு ஆகும்; 2003-ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி, இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அயோத்திய நடத்திய அகழாய்வு ஐந்தாவது மற்றும் இறுதி ஆகும். இந்த அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர்கள், 29 இசுலாமியர்கள் உள்ளிட்ட 131 நபர்கள் கலந்து கொண்டனர். அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் குறித்த 574 பக்க அறிக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. [1]
பிரித்தானிய இந்தியா ஆட்சிக் காலத்தில்
தொகுஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தை நிறுவிய அலெக்சாண்டர் கன்னிங்காம் 1862-63களில் அயோத்தி நகரம் குறித்து பழம்பெரும் நூல்களைக் கொண்டு ஆய்வு செய்தார்.[2]
அயோத்தி நகரத்தை இந்து-பௌத்த தொன்ம நூல்களில் சாகேதம் என்றும், சீனாவின் பௌத்த அறிஞர்களான பாகியானின் குறிப்புகளில் ஷா-சி என்றும், யுவான் சுவாங் விசாகா என்றும் குறிப்பிட்டுள்ளனர். கௌதம புத்தர் தான் அயோத்தி நகரத்தில் 6 மாதங்கள் கழித்ததாகக் கூறுகிறார். இந்து தொன்ம நூல்களை படித்த அலெக்சாண்டர் கன்னிங்காம், அயோத்தியில் 1000 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் காணப்படவில்லை என்றார். மகாபாரத காவியத்தின் படி, கிமு 1426-ஆம் ஆண்டில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் சார்பில் போரிட்ட கோசல நாட்டின் மன்னர் பிரகத்பாலன்[3] அபிமன்யுவால் கொல்லப்பட்ட பின்னர், கோசல நாடு பல பகுதிகளாக சிதைவுற்றது.
கிபி முதல் நூற்றாண்டில் உஜ்ஜைன் பேரரசர் விக்ரமாதித்தியன் அயோத்தி நகரத்திற்கு விஜயம் செய்த போது, அயோத்தி குறித்து இராமாயணம் கூறிய பகுதிகளில் புதிய கட்டிடங்களை எழுப்பினார். கிபி ஏழாம் நூற்றாண்டில் அயோத்திக்கு வருகை புரிந்த யுவான் சுவாங் தனது பயணக் குறிப்புகளில் அயோத்தி ஒரு பௌத்த் மையமாகவும், பழம்பெரும் பௌத்த கட்டிட அமைப்புகள் இருந்ததாகவும் குறித்துள்ளார்.[4] [5]
ஜெர்மானிய இந்தியவியல் அறிஞரான அலோயிஸ் அன்டன் ஃபூரர் [6] தலைமையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினர் 1889-91களில் அயோத்தியில் மற்றொரு தொல்லியல் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.[2] ஆனால் இக்குழுவினரால் அயோத்தியில் தொன்மையான கட்டிடங்கள், கல்வெட்டுகள், தூண்கள், சிற்பங்கள் குடியிருப்புகள் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் அயோத்தி நகரத்தின் தெற்குப் பகுதியில் மணி பர்வதம், குபேர பர்வதம், சுக்ரீவ பர்வதம் போன்ற பண்டைய குன்றுப் பகுதிகள் கண்டுபிடித்தனர். தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் காலத்தில் அயோத்தியில் இருந்த இந்து, சமண, பௌத்த கட்டிட அமைப்புகளை தகர்த்தனர். அயோத்தியில் தற்போது உள்ள இந்து, சமண கட்டிட அமைப்புகள் 1781-ஆம் ஆண்டுக்கு பிந்தையவைகளே என அலோயிஸ் அன்டன் ஃபூரர் கூறுகிறார்.
பாபர் ஆட்சியின் போது அவரது படைத்தலைவர் மீர் கான் என்பவர், அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோயில் நிலத்தில் 1523-ஆம் ஆண்டில் பாபர் மசூதி நிறுவியதாக அலோயிஸ் அன்டன் ஃபூரர் கூறினார். அதற்கு ஆதரவாக இடிக்கப்பட்ட ராம ஜென்மபூமி கோயிலின் கருங்கல் தூண்கள் பாபர் மசூதி கொண்டிருந்தது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் அயோத்தியின் சொர்க்க துவாரம் மற்றும் திரேதா கே தாக்கூர் பகுதியில் உள்ள கோயில்களை இடித்து புதிய மசூதிகளை கட்டினார்.
கன்னோசி மன்னர் செயச்சந்திரன் கிபி 1241-இல் நிறுவிய கல்வெட்டுக் குறிப்பில், அயோத்தியில் விஷ்ணு கோயில் இருந்தது குறிப்பிட்டுள்ளது. இந்த உடைந்த கல்வெட்டு அவுரங்கசீப் திரேத கே தாக்கூர் கோயிலை இடித்து கட்டிய மசூதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த உடைந்த கல்வெட்டு பைசாபாத் நகர அருங்காட்சியகத்தில் உள்ளது.[7]
1969-1970 அகழாய்வுகள்
தொகுபனாரஸ் இந்துப் பல்கழகத்தின் பேராரசிரியர் அவத் கிசோர் நாராயணன் தலைமையிலான குழு 1969-70களில் அயோத்தியில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டனர். அகழாய்வின் முடிவில் கிமு 17-ஆம் நூற்றாண்டிற்ற்கு முன்னர் நிறுவப்பட்ட அயோத்தி நகரத்தில், பௌத்த பிக்குகள் வாழ்ந்ததாக கூறுகிறார்.[8]
அகழாய்வுகள் (1975-1985)
தொகுஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் ஆய்வாளர் பி. பா. லால் தலைமையிலான குழுவினர் 1975-76-ஆம் ஆண்டுகளில், ராம ஜென்மபூமி எனக்கருதப்பட்ட பாபர் மசூதி வளாகம், சிரிங்கிபேரபுரம், நந்திகிராமம், பரத்துவாஜர் ஆசிரமம், சித்திரகூடம் போன்ற 14 இராமாயண நிகழிடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.[8] [9]ஆனால் இதன் அகழாய்வு அறிக்கை வெளியிடப்படவில்லை. [9] 1985-ஆம் ஆண்டுகளில் அயோத்தியில் நடத்தப்பட்ட அகழாய்வில் பாபர் மசூதி வளாகத்தில் சமணத் துறவியின் சுடுமண் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.[10]
பாபர் மசூதி வளாகத்தில் கண்டுபிடித்த கோயில் தூண்கள் (1990)
தொகுஇந்தியத் தொல்லியல் துறையிலிருந்து பணி ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளர் பி. பா. லால், 1990-இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இதழில், பாபர் மசூதியின் கீழ் ஒரு பத்தியில் தான் ஒரு இந்துக் கோவிலின் எச்சங்களைக் கண்டுபிடித்ததாக எழுதினார்.[11][12][13]
பி. பா. லால் 2008-ஆம் ஆண்டில் எழுதிய நூலில் இராமர், அவரது வரலாறு, ராம ஜென்மபூமி கோயில் மற்றும் இராமாயணம், தொல்லியல் மற்றும் பிற அறிவியல் சான்றுகள் குறித்து எழுதினார். இவரது நூலில் பாபர் மசூதியின் தூண்களுடன் இணைக்கப்பட்ட பன்னிரண்டு கல் தூண்கள் இருந்தன என்றும், அவைகள் வழக்கமான இந்து சமய தெய்வங்களின் உருவங்கள் மற்றும் வார்ப்புருக்கள் கொண்டிருந்தன எனக்குறிப்பிட்டார். இந்தத் தூண்கள் பாபர் மசூதியின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்றும், ஆனால் அதற்கு வேறானவை என்பது சுயமாகத் தெரிகிறது என்றார்.[14]}}
2003-ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பி. பா. லால் சமர்ப்பித்த அறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதியின் தெற்குப் பகுதியில் "தூண் தளங்கள்" கண்டுபிடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். மேலும் இது குறித்து 1989 ஆம் ஆண்டில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு ஏழு பக்க ஆரம்ப அறிக்கையை அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.[9]
பி. பா. லால் தலைமையிலான பாபர் மசூதி வளாக அகழாய்வுக் குழுவில் பணியாற்றிய தொல்லியல் ஆய்வாளர் கே. கே. முகமது என்பவர் எழுதிய சுய சரிதை நூலில், ஒரு இந்து கோயில் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் அடிப்படைவாதிகளுடன் இணைந்து முஸ்லிம் சமூகங்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் கூறினார்.[15][16]
சூன் - சூலை 1992
தொகுசூலை 1992-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை இயக்குநர்களான ஒய். டி. சர்மா மற்றும் கே. எம். சிறீவத்சவா ஆகியோர் பாபர் மசூதிக்கு அருகே இருந்த ராம்கோட் குன்றுப் பகுதியில் அகழாய்வில் கிடைத்த மதச் சிற்பங்கள் மற்றும் விஷ்ணு சிலை போன்ற தொல்லியல் எச்சங்களை ஆய்வு செய்தனர். இத்தொல்லியல் எச்சங்கள் சர்ச்சைக்குரிய கட்டிடமைப்பின் உள் எல்லையில் அமைந்திருந்தது என்றும், "முந்தைய கோவிலுக்குச் சொந்தமானதாக இருக்கலாம்" என்று கருத்து தெரிவித்தனர். (Indian Express, 4 July 1992.) மேலும் அவர்கள் ஆய்வு செய்த பொருட்களில் குசான் பேரரசு (கிபி. 100-300) காலத்திய இந்து சம்ய சுடுமண் சிற்பங்கள், வைணவ தெய்வங்கள் மற்றும் சிவன்-பார்வதியின் உருவங்களைக் காட்டும் செதுக்கப்பட்ட மணற்கல் பொருட்களும் அடங்கும். இவைகள் நாகரா கட்டிடப் பாணியில் (கிபி 900-1200) அமைந்த ஒரு கோவிலுக்கு சொந்தமானது என்று அவர்கள் முடிவு செய்தனர்.
விஷ்ணு ஹரி கல்வெட்டு, 1992
தொகுபாபர் மசூதியின் வளாகத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1992-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்த போது நாகரி எழுத்தில் சமசுகிருத மொழியில் இருபது வரிகள் சுலோகங்கள் கொண்ட மணற்கல் விஷ்ணு ஹரி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு பாபர் மசூதியின் இடிபட்ட சுவரின் கீழ் கண்டெடுக்கப்பட்டது.[17][18] [19]கிபி 12-ஆம் நூற்றாண்டில் சாகேதம் எனும் அயோத்தியை ஆண்ட அனயசந்திர வம்ச மன்னர் கோவிந்தசந்திரன் நிறுவிய கோயில் குறித்து நிறுவப்பட்டது. இக்கல்வெட்டின் சில பகுதிகள் கிடைக்கவில்லை. இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு வல்லுநர்கள் கே.வி.ரமேஷ் மற்றும் எம்.என்.கட்டி ஆகியோர் இக்கல்வெட்டுகளை மொழிபெயர்த்துள்ளனர். [20] இக்கல்வெட்டு கடவுள் வணக்கத்துடன் தொடங்குகிறது. பின்னர் ஒரு புகழ்பெற்ற வம்சத்தை விவரிக்கிறது. கல்வெட்டின் 6-18 வரிகள் கர்ணன் அல்லது மாமே, சல்லக்ஷனா மற்றும் அல்ஹானா உட்பட வம்சத்தின் உறுப்பினர்களின் வீர வெற்றிகளை விவரிக்கின்றன.[21] சமசுகிருத மொழி அறிஞர் கிஷோர் குனாலின் கூற்றுப்படி, இவர்கள் அனயசந்திரருக்கு முன் சாகேத மண்டலத்தின் ஆளுநராக இருந்த கஹாடவாலாவின் கீழ்ப்படிந்தவர்கள் என்று தோன்றுகிறது.[22] கல்வெட்டின் 19-21 வரிகள் அல்ஹானாவின் வாரிசான அனயச்சந்திராவின் செயல்பாடுகள் மற்றும் அயோத்தியில் விஷ்ணு-ஹரி கோயில் கட்டுவது தொடர்பாக கூறுகிறது. மீதமுள்ள வசனங்கள் அவரது வாரிசான ஆயுஷ்சந்திராவை விவரிக்கின்றன.[23]
2003 அகழாய்வுகள்
தொகுரேடார் ஆய்வுகள்
தொகுசனவரி 2003-இல் இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் வளாகத்தின் தரையடியில் உள்ளதை கண்டுபிடிக்கும் ரேடார் கருவியைக் கொண்டு பரிசோதனை செய்தனர்.[24] இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் கீழ் 0.5 முதல் 5.5 மீட்டர் ஆழத்தில் கட்டிட அமைப்புகளான தூண்கள், அடித்தள சுவர்கள், தரையமைப்பு போன்ற பழங்கால மற்றும் சமகால கட்டமைப்புகளுடன் தொடர்புடையவைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அகழாய்வுகள்
தொகு2003-ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு, ராம ஜென்மபூமி/பாபர் மசூதி வளாகத்தை மீண்டும் அகழாய்வு செய்ய இந்தியத் தொல்லியல் துறைக்கு ஆனையிட்டது. இந்த அகழாய்வில் 52 இசுலாமியர்கள் உள்ளிட்ட 131 பேர் ஈடுபட்டனர். ஆகஸ்டு, 2003-இல் தொல்லியல் துறை 574 பக்கங்கள் கொண்ட தொல்லியல் ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது.
இந்தியத் தொல்லியல் துறை 22 மே முதல் 6 சூன் 2003 முடிய அகழாய்வு செய்த போது கண்டுபிடித்த தொல்லியல் எச்சங்கள் குறித்த அறிக்கையில்:
அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள கட்டமைப்புகளில் கிழக்கு-மேற்கு திசை மற்றும் வடக்கு-தெற்கு திசைகளில் பல செங்கல் சுவர்கள், உடைந்த சிற்பங்கள் 'அலங்கரிக்கப்பட்ட வண்ணத் தரைத் தளம்', பல 'தூண் தளங்கள்' மற்றும் '1.64 மீட்டர் உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட உடைந்த கருங்கல் தூண்கள் ஆகியவை அடங்கும். தூண்களின் நான்கு மூலைகளிலும் அரபு மொழியில் குரான் வசனங்கள் செதுக்கப்பட்டிருந்தது.[25]
அகழாய்வு முடிவுகள்
தொகுதொல்லியல் மேடுகள்
தொகுஅயோத்தி அகழாய்வின் போது கண்டெடுத்த தொல்பொருட்கள் குறித்து இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அறிக்கை வெளியிட்டது. அறிக்கையில் அகழாய்வின் போது கண்டெடுத்த சிதைந்த கோயில் எச்சங்கள் சமணர்களுடையது எனக் குறிப்பிட்டுள்ளது.[26]கண்டெடுத்த பிற தொல்லியல் எச்சங்கள்:
- கிமு 1,000 முதல் கிமு 300 முடிய உள்ள காலத்தவைகள்: இடிக்கப்பட்ட பாபர் மசூதி வளாகத்தில் நடைபெற்ற அகழாய்வின் போது வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாட்டு காலத்திய மட்பாண்டங்கள், பேரரசர் அசோகர் காலத்திய பிராமி எழுத்து கல்வெட்டு, பெண் தெய்வங்களின் சுடுமண் சிற்பங்கள், நவரத்தின மணிகள், கண்ணாடித் துண்டுகள் மற்றும் வண்டிச் சக்கரங்கள் கிடைத்தது. [27]
- சுங்கர் காலம் கிமு 200 : தாய்க் கடவுளின் சுடுமண் சிற்பங்கள், மனித மற்றும் விலங்குகளின் எலும்புகள், நவரத்தின மணிகள், ஹேர் பின்கள், கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், செங்கல் சுவர்கள் [27]
- குசானப் பேரரசுக் காலம் - கிபி 100–300: மனித மற்றும் விலங்குகளின் சுடுமண் சிற்பங்கள், போதிகைகளின் உடைந்த துண்டுகள், மணிகள், உடைந்த வளையல்கள், சிவப்பு பீங்கான் பாண்டங்கள், இருபத்தி இரண்டு தளங்களில் பெரிய அளவிலான கட்டிட கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.[27]
- குப்தர்கள் காலம் (கிபி 320–600) மற்றும் குப்தர்களுக்கு பிந்தைய காலம்:வித்தியாசமான சுடுமண் சிற்பங்கள், முதலாம் சந்திரகுப்தர் உருவம் பொறித்த செப்பு நாணயங்கள், பானை ஓடுகள், நுழைவாயிலுடன் ஒரு வட்ட செங்கல் கோயில் மற்றும் சுவரில் நீர்-சட்டிக்கான ஏற்பாடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [27]
- கிபி 11 - 12-ஆம் நூற்றாண்டு காலத்தவைகள்: வடக்கு-தெற்கு திசையில் கிட்டத்தட்ட ஐம்பது மீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய கட்டிட அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஐம்பது தூண் தளங்களில் நான்கு மட்டுமே கிபி 11 - 12-ஆம் நூற்றாண்டு கால்த்தைச் சேர்ந்தவை. இதற்கு மேல் ஒரு பெரிய தூண் மண்டபத்தைக் கொண்ட குறைந்தபட்சம் மூன்று கட்டமைப்பு கட்டங்களைக் கொண்ட ஒரு மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டது.[27]
மேற்கோள்கள்
தொகு- ↑ அயோத்தி தொல்லியல் முடிவுகள் சொல்வது என்ன?
- ↑ 2.0 2.1 Ashok Malik (24 March 2003). "Depths of Ayodhya". India Today.
- ↑ Brihadbala
- ↑ Sir Alexander Cunningham (1871). Four Reports Made During the Years, 1862-63-64-65. Government Central Press. pp. 317–327.
- ↑ Peter van der Veer (1994). Religious Nationalism: Hindus and Muslims in India. University of California Press. p. 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-08256-4.
- ↑ Alois Anton Führer
- ↑ Alois Anton Führer (1891). The monumental antiquities and inscriptions: in the North-Western Provinces and Oudh. Printed and pub. by the superintendent, Government press, N.-W.P. and Oudh. pp. 295–300.
- ↑ 8.0 8.1 Sushil Srivastava (25 October 2003). "The ASI Report – a review". The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/the-asi-report-a-review/article797088.ece.
- ↑ 9.0 9.1 9.2 "I found pillar bases back in mid-seventies: Prof Lal". The Indian Express. 6 March 2003. http://www.indianexpress.com/oldStory/19644/.
- ↑ "Long ago, by the Sarayu". The Indian Express. 2019-10-27. பார்க்கப்பட்ட நாள் 2020-05-27.
- ↑ Reinhard Bernbeck, Susan Pollock (1996), Ayodhya, Archaeology, and Identity. Current Anthropology, Volume37, Supplement, February 1996, p.S139
- ↑ Bhan 1997, ப. 11.
- ↑ Romey 2006, ப. 105.
- ↑ "Ayodhya: High Court relies on ASI's 2003 report". Economic Times. Oct 1, 2010. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013.
- ↑ "Left historians prevented resolution of Babri Masjid dispute, says KK Mohammed, former ASI regional head". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
- ↑ Singh, Varun (2017-05-11). "Muslims misled over Ayodhya, says KK Mohammed". The Asian Age. பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
- ↑ Braj Basi Lal 2003, ப. 124.
- ↑ K. M. Shrimali 2002, ப. 614.
- ↑ A. G. Noorani 2003, ப. 131.
- ↑ Pushpa Prasad 2003, ப. 351.
- ↑ Kishore Kunal 2016, ப. 321-326.
- ↑ Kishore Kunal 2016, ப. 328.
- ↑ Kishore Kunal 2016, ப. 326-330.
- ↑ Ground-penetrating radar
- ↑ Sandipan Deb in Outlook India, (23 June 2003)
- ↑ "Ayodhya: Archaeologists yet to examine artefacts found at mandir site". The Week. பார்க்கப்பட்ட நாள் 2020-05-27.
- ↑ 27.0 27.1 27.2 27.3 27.4 (Pioneer, 9 September 2003. Ayodhya: lost and found By Sandhya Jain)
ஆதாரங்கள்
தொகு- அச்சு மூலங்கள்
- Bhan, Suraj (1997), "Recent Trends in Indian Archaeology", Social Scientist. V 25, No. 284-285 (Jan-Feb 1997), 25 (1/2): 3–15, JSTOR 3517757
- Coningham, Robin; Young, Ruth (2015), The Archaeology of South Asia: From the Indus to Asoka, c.6500 BCE–200 CE, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521846974, பார்க்கப்பட்ட நாள் 30 April 2018
- Droogan, Julian (2012), Religion, Material Culture and Archaeology, A&C Black
- Gupta, S. P. (1996). "If only the court had examined the evidence". In Dasgupta, Swapan (ed.). The Ayodhya Reference: Supreme Court Judgement and Commentaries. Voice of India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185990301.
- Hole, Brian (2016), "A Many-Cornered Thing: The Role of Heritage in Indian Nation-Building", in Jenkins, Tiffany (ed.), Political Culture, Soft Interventions and Nation Building, Routledge
- Jain, Meenakshi (2013). Rama and Aydhya. New Delhi: Aryan Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8173054518.
- Lal, B. B. (2008). Rama: His Historicity Mandir and Setu. Aryan Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8173053450.
- Mandal, Dhaneshwar (2003). Ayodhya, Archaeology After Demolition: A Critique of the "new" and "fresh" Discoveries. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-2344-9.
- Narain, Harsh (1993). The Ayodhya Temple Mosque Dispute: Focus on Muslim Sources. Delhi: Penman Publishers.
- Romey, Kristin M. (2006), "Flashpoint Ayodhya", in Vitelli, Karen D.; Colwell-Chanthaphonh, Chip (eds.), Archaeological Ethics, Rowman Altamira
- Sushil Srivastava (25 October 2003). "The ASI Report – a review". Frontline. http://www.thehindu.com/news/national/other-states/the-asi-report-a-review/article797088.ece.
- Thapar, Romila (2006). India: Historical Beginnings and the Concept of the Aryan. National Book Trust. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788123747798.
- Thakur Prasad Verma, S.P. Gupta, (2001), Ayodhya ka itihasa evam puratattva- Rgveda kala se aba taka. Delhi: D.K. Printworld (in Hindi)
- Michael E. J. Witzel (2001). "Autochthonous Aryans? The Evidence from Old Indian and Iranian Texts". Electronic Journal of Vedic Studies 7 (3): 1–115. http://www.people.fas.harvard.edu/~witzel/EJVS-7-3.pdf.
- Witzel, Michael (2006), "Rama's realm. Indocentric rewritings of early South Asian archaeology and history", in Fagan, Garrett G (ed.), Archaeological Fantasies: How Pseudoarchaeology Misrepresents the Past and Misleads the Public, Routledge
- Web-sources
வெளி இணைப்புகள்
தொகு- அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்
- அயோத்தி அகழாய்வு:இசுலாமிய தொல்லியல் அறிஞர் பார்வையில்
- அயோத்தி அகழ்வாராய்ச்சிக்கு சம்ஸ்கிருதம் உதவியாக இருந்தது: இந்திய தொல்பொருள் ஆய்வாளர் கே.கே.முகமது பேட்டி
- தொல்லியல் துறை அறிக்கை புத்தகமாக வெளியிடப்படும்: மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் தகவல்
- Sculptures Of Deities Emerge During Excavation At Ayodhya Ram Mandir Site -காணொலி
- What Do The Ram Janmabhoomi Excavations Tell Us? | K K Muhammed | Ayodhya | ASI - காணொலி
- https://www.huffingtonpost.in/2018/12/04/there-is-no-evidence-of-a-temple-under-the-babri-masjid-asi-lied-to-the-country-say-archeologists_a_23604990/
- Ayodhya the spiritual abode. Complete details of Ayodhya, proofs and documents.
- Hindu Temple lays beneath – dailypioneer.com – August 26, 2003
- The "Ram temple" drama – Frontline
- Ayodhya History
- ASI Report Critical Study – The Hindu (newspaper)
- ASI fabricating evidence – The Hindu (newspaper)
- Times of India news on ASI excavations Times of India
- Layers of truth From The Week – shows artist's impression of ASI underlying temple – archived here
- Ayodhya on YouTube
- Ayodhya and the Research on the Temple of Lord Rama
- Proof of temple found at Ayodhya: ASI report