அருந்ததியர்

தமிழ்நாடு
(அருந்ததியர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அருந்ததியர் (Arunthathiyar) அல்லது சக்கிலியர் (Chakkiliyar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம்[1][2] மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வசித்து வரும் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தலித்து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆந்திராவிலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்களுடன், விஜயநகர ஆட்சியின் போது விஜயநகர மன்னர்களால், தமிழ்நாட்டிற்கு குடியமர்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.[3][4][5][6][7]

அருந்ததியர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்தமிழ்நாடு • கேரளா • ஆந்திரப் பிரதேசம் • கருநாடகம்
மக்கள் தொகை2.3 மில்லியன்
மதங்கள்இந்து • கிறிஸ்தவம்
மொழிகள்தமிழ் • தெலுங்கு • கன்னடம்
பகுதிவடக்கு மற்றும் மேற்கு தமிழ்நாடு

தமிழகத்தில் அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மாதிகா, தோட்டின் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 18% இடஒதுக்கீட்டில், அருந்ததியினருக்கு 3% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில், 2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம். எஸ். ஜனார்த்தனம் தலைமையிலான ஒருநபர் குழு அளித்த பரிந்துரையின்பேரில், தாழ்த்தப்பட்ட மக்கள் என வகுக்கப்பட்டுள்ள 72 ஜாதிப்பட்டியலில்:

 1. ஆதி ஆந்திரர் (எண் 1)
 2. அருந்ததியர் (எண் 5)
 3. சக்கிலியர் (எண் 12)
 4. மாதாரி (எண் 37)
 5. மாதிகா (எண் 38)
 6. பகடை (எண் 48)
 7. தோட்டி (எண் 67)

போன்ற 7 சாதிகளுக்கு 3% உள் இடவொதுக்கீடு வழங்கப்பட்டது.[8][9]

பெயர் மாற்றம்

பொதுவாகவே தெலுங்கு பேசும் மாதிகா இனத்தவர்கள் தங்களை அருந்ததியலூ என்றே அழைக்கின்றனர்.[10][11][12] 1920 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் தெலுங்கு பேசும் மாதிகா இனத்தவரான எல். சி. குருசாமியால்[13][14] அருந்ததியர் மகாசபை கோமலீஸ்வரன்பேட்டையில் தொடங்கப்பட்டது.[15] [16][17] அருந்ததியர் மகாசபா முயற்சியால் 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, கோவை, சேலம், செங்கல்பட்டு, வடஆற்காடு ஆகிய மாவட்டங்கள் உட்பட சென்னை மாகாணத்தில் 17,396 பேர் சக்கிலியன், மாதிகா போன்ற பெயர்களை புறக்கணித்துவிட்டு அருந்ததியர் என்ற பெயரிலேயே தங்களை பதிவு செய்திருக்கின்றனர்.[18] ஐதராபாத் மாகாணத்தில் மாதிகா  இனத்தவர்கள் நலனுக்காக ராமசாமியால், 1931 ஆம் ஆண்டு அருந்ததியர் மகாசபா ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது.[19][20].

பெயர்க் காரணம்

சக்கிலியர் என்பது ஸ்சட்குழி என்ற சமசுகிருத சொல் மாறி சக்கிலி என்று அழைக்கப்படுகிறது. ஸ்சட்குழி என்ற சமசுகிருத சொல்லுக்கு “செத்த மாட்டை உண்பவன்” அல்லது “அதிக இறைச்சி உண்பவன்” என்று பொருளாகும்.[21]

விஸ்வநாத நாயக்கர் (1529–1564 ஆட்சியாண்டு) காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் மதுரைப் பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடன், அருந்ததியர்களும் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[22][23]

இவர்களின் முக்கியத் தொழிலான கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல் பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம் - பம்புசெட் - பிளாஸ்டிக் - ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து தாழ்வாக நிலைக்கு தள்ளப்பட்டார்கள். வரலாற்றின் ஒரு காலப்பகுதியில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு மக்கள் குழுவினர் பலவந்தமாகவும், சமயக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் அருந்ததியருக்கு (சக்கிலியர்) இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் சண்டாலா, பாங்கி போன்றவை உதாரணங்களாகும்.[24]

இவர்களின் முக்கிய தொழில் துப்புரவுப் பணியாளர்கள் என்றபடியால் கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர்.[25]

மக்கட் தொகை

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 18,61,457 அருந்ததியர் இருந்ததாகவும்,[26] இது மாநிலத்தின் பட்டியல் சாதி மக்களில் 6.5 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[27]

விடுதலைக்குப் பின்

இந்திய விடுதலைக்கு பின் சட்டப்படி இவர்கள் பட்டியல் சமூகத்தவராக அறிவிக்கப்பட்டனர். அரசாங்க பணிகளிலும், அரசியல் பதவியிலும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், உயரத் தொடங்கினர்.

தமிழகத்தில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல அமைப்புகளின் போராட்டங்களின் விளைவாக, கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம். எஸ். ஜனார்த்தனம் தலைமையில், அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்ய ஒரு நபர் குழு 2008 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி அமைத்தது.[28] இக்குழு ஏறத்தாழ ஒரு ஆண்டு காலம் பல விசாரணைகள் நடத்தியும், விபரங்கள் சேகரித்தும் அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மாதிகா, தோட்டி ஆகிய பிரிவினரை உள்ளடக்கிய அருந்ததியர்களுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு, பரிந்துரை செய்தது. தமிழக அரசு இதன் விபரங்களையும், சிபாரிசுகளையும் ஏற்று தலித்துகளுக்கு தமிழகத்தில் வழங்கப்படும் பொது இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக 3 சதம் அருந்ததியர் மக்களுக்கு வழங்கி 2009 ஆம் ஆண்டு ஆணை வெளியிட்டது.[29]

தொழில்கள்

ஆடு மாடு மேய்த்தல், மாட்டிறைச்சி வியாபாரம், குத்தகை முறை விவசாயம், பல்வேறு விதமான குடிசைத்தொழில்கள், சிறு வணிகர்கள் மற்றும் பறையிசைக்கலைஞர்கள் போன்ற தொழில்கள் செய்துவருகின்றனர்.

குறிப்பிடத்தக்க மக்கள் 

மேற்கோள்கள்

 1. Nagendra Kr Singh , தொகுப்பாசிரியர் (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography. Global Vision Pub House. பக். 43. https://books.google.co.in/books?id=Xcpa_T-7oVQC&pg=PA43&dq=Arundhatiya+,+Andhra+Pradesh+++prefer+++refer++themselves+,++Madiga&hl=en&sa=X&ved=2ahUKEwiEwcrXrbrrAhWJH7cAHTM1AocQ6AEwAHoECAEQAQ#v=onepage&q=Arundhatiya%20%2C%20Andhra%20Pradesh%20%20%20prefer%20%20%20refer%20%20themselves%20%2C%20%20Madiga&f=false. "In the past , The Arundhatiya of Andhra Pradesh , as they prefer to refer to themselves , are also called Madiga" 
 2. Census of India Paper, Issue 2  , தொகுப்பாசிரியர் (1960). Scheduled Castes and Scheduled Tribes Arranged in Alphabetical Order. Manager of Publications. பக். 99. https://books.google.co.in/books?id=_B22o9A190UC&dq=in+the+1950+order+arundhatiya+andhra&focus=searchwithinvolume&q=Arundhatiya. "In the 1950 order, the entry was Arunthathiyar in Madras. At the time of amendment of the 1950 order, the spelling was corrected as 'Arundhatiya' by the Government of Andhra Pradesh. Otherwise the castes are one and the same" 
 3. T. Madhava Menon , தொகுப்பாசிரியர் (2002). A handbook of Kerala - Volume 2. ‎International School of Dravidian Linguistics. பக். 667. https://books.google.co.in/books?id=TjVuAAAAMAAJ. "making of items including foot-wear in leather, used to be called "Chakkiliyar", but they prefer nowadays to be known as Arundhatiyar.They have remembered traditions of having migrated from Andhra Pradesh through Tamil Nadu, and have spread to all the districts of Kerala." 
 4. "தமிழகத்தில் தலித்துகளின் நிலை".
 5. கி. ராஜநாராயணன், தொகுப்பாசிரியர் (2002). கோபல்ல கிராம மக்கள். காவ்யா பதிப்பகம். பக். 30. https://books.google.co.in/books?id=coFkAAAAMAAJ&q=சக்கிலியர்+ஆந்திர. 
 6. பெ.கோ. சுந்தர ராஜன், சோ. சிவபாதசுந்தரம், தொகுப்பாசிரியர் (1977). தமிழ் நாவல்-நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும். கிறிஸ்தவ இலக்கிய சங்கம், சென்னை. பக். 232. https://books.google.co.in/books?id=swtIAAAAMAAJ&q=சக்கிலியர்+ஆந்திர. 
 7. மாற்கு, தொகுப்பாசிரியர் (2001). அருந்ததியர், வாழும் வரலாறு. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி. பக். 8. https://books.google.co.in/books?id=SkJuAAAAMAAJ&dq=விஜய. 
 8. என்.தமிழ்செல்வன், தொகுப்பாசிரியர் (20 மே 2019). உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தவிக்கும் மாதிகா சமூகத்தினர்: 10 ஆயிரம் ஆதி ஆந்திரப் பிரிவினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரிக்கை. தினமணி. பக். 159. https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/may/20/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-3155001.html. 
 9. என்.தமிழ்செல்வன், தொகுப்பாசிரியர் (27 பிப்ரவரி 2009). அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம். தினமலர். https://m.dinamalar.com/kmalardetail.php?id=2762. 
 10. Unseen: The Truth about India’s Manual Scavengers. 2014. https://books.google.co.in/books?id=ddbEAgAAQBAJ&pg=PT252&dq=Sometimes+the+people+of+the+Madiga+community+too+call+themselves+Arunthathiyar+or+Arundhatiyulu&hl=ta&sa=X&ved=0ahUKEwixypTvsKrkAhWIr48KHcGlD7sQ6AEIKTAA#v=onepage&q=Sometimes%20the%20people%20of%20the%20Madiga%20community%20too%20call%20themselves%20Arunthathiyar%20or%20Arundhatiyulu&f=false. 
 11. The Oriental Anthropologist: A Bi-annual International Journal of the Science of Man, Volume 5. Serials Publications,. 2005. பக். 252. https://books.google.co.in/books?id=WUNNAQAAIAAJ&dq=They+are+called+by+a+number+of+terms+such+as+Arundhatiyulu&focus=searchwithinvolume&q=Arundhatiyulu+madiga. 
 12. Census of India, 1961, Volume 2, Part 6, Issue 31. India. Office of the Registrar General. 1961. பக். 9. https://books.google.co.in/books?id=gNAcAQAAMAAJ&dq=They+are+called+by+a+number+of+terms+such+as+Arundhatiyulu&focus=searchwithinvolume&q=+Arundhatiyulu+++andhra+pradesh. 
 13. (in en) Social Action, Volume 54. Indian Social Institute. 2004. https://books.google.co.in/books?id=4PbZAAAAMAAJ&dq=a+Telugu+Madiga&focus=searchwithinvolume&q=+L+.+C+.+Guruswamy. 
 14. (in en) The Madiga movement for equal identity and social justice in A.P.,. simoncharsley.co.uk. 2004. http://www.simoncharsley.co.uk/mobil.html. 
 15. Gurusamy, S. (2019-06-05) (in en). EMPOWERMENT OF MARGINALIZED CHALLENGES AND SOLUTIONS. MJP Publisher. https://books.google.co.in/books?id=BHGbDwAAQBAJ&pg=PA29&dq=l.c+gurusamy+dalit&hl=en&sa=X&ved=2ahUKEwiL7c2S6-3pAhWbyTgGHZQKBwAQ6AEwAHoECAIQAQ#v=onepage&q=l.c%20gurusamy%20dalit&f=false. 
 16. Ramakrishnan, T. (2019-04-01). "Arunthathiyars feel left out by parties" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/arunthathiyars-feel-left-out-by-parties/article26696489.ece. 
 17. VISWANATHAN, S. "Separate slice". Frontline (in ஆங்கிலம்). 2020-06-06 அன்று பார்க்கப்பட்டது.
 18. Sameeksha Trust (1974). Economic and Political Weekly. 9. பக். 1963. https://books.google.co.in/books?id=GRYoAAAAMAAJ&dq=17%2C396+arunthathiyar+census&focus=searchwithinvolume&q=+arunthathiyar++17396+madigas. 
 19. K. Chandraiah , தொகுப்பாசிரியர் (1998). Hyderabad, 400 Glorious Years. K. Chandraiah Memorial Trust. பக். 204. https://books.google.co.in/books?id=8ixuAAAAMAAJ&q=arundhatiya++ramasamy&dq=arundhatiya++ramasamy&hl=en&sa=X&ved=2ahUKEwie1c7JlLvrAhUh4zgGHTqXARMQ6AEwAHoECAMQAQ. "The Arundhatiya Mahasabha : Soon Arige Ramaswamy , in collaboration with Girkala Mallesh Rao and B . S . Venkat Rao arranged a meeting at the Theosophical hall , Hanumantekdi , Hyderabad" 
 20. Thummapudi Bharathi , தொகுப்பாசிரியர் (2008). A History of Telugu Dalit Literature. Kalpaz Publications. பக். 56. https://books.google.co.in/books?id=eaik59igIMwC&pg=PA56&lpg=PA56&dq=The+Arundatiya+Mahasabha+especially+for+Madigas+was+formed+on+the+first+of+June+1931.+Ramaswamy+and+B.S.Venkatarao+never+became+the+members+in&source=bl&ots=tiX3y86Y4l&sig=ACfU3U01NEvOQYSZX6h5P5HbUGS_L11DgA&hl=en&sa=X&ved=2ahUKEwiFjKXnlrvrAhX7yTgGHWlQDY4Q6AEwAHoECAIQAQ#v=onepage&q=The%20Arundatiya%20Mahasabha%20especially%20for%20Madigas%20was%20formed%20on%20the%20first%20of%20June%201931.%20Ramaswamy%20and%20B.S.Venkatarao%20never%20became%20the%20members%20in&f=false. "The The Arundatiya Mahasabha especially for Madigas was formed on the first of June 1931. Ramaswamy and B.S.Venkatarao never became the members in working of Arundatiya Mahasabha" 
 21. நெல்லை. சு. தாமரைப் பாண்டியன் எழுதிய “நாட்டார் வழக்காறுகளில் மக்கள் இடம் பெயர்வும் வரலாறும் நூல், பக்கம்: 71.
 22. Singh, Nagendra Kr (20 November 2019). "Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography". Global Vision Publishing House – via Google Books.
 23. University, Vijaya Ramaswamy, Jawaharlal Nehru (22 May 2007). "Historical Dictionary of the Tamils". Scarecrow Press – via Google Books.
 24. "Tamil Nadu Government Gazette" (PDF). Government of Tamil Nadu. 12 March 2009. p. 3. 2015-04-05 அன்று பார்க்கப்பட்டது.
 25. "தமிழகத்தில் தலித்துகளின் நிலை" (in தமிழ் மொழி). பிபிசி. மார்ச் 16, 2006. சனவரி 1, 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)CS1 maint: unrecognized language (link)
 26. என்.தமிழ்செல்வன், தொகுப்பாசிரியர் (27 பிப்ரவரி 2009). அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம். தினமலர். https://m.dinamalar.com/kmalardetail.php?id=2762. 
 27. "Tamil Nadu Date Highlights: The Scheduled Castes Census of India 2001" (PDF). Office of the Registrar-General. 2015-04-05 அன்று பார்க்கப்பட்டது.
 28. "Separate slice". Frontline (January 16, 2009)
 29. http://cms.tn.gov.in/sites/default/files/go/adtw_e_61_2009.pdf
 30. குங்குமம் ஸ்பெஷல் , தொகுப்பாசிரியர் (08 அகத்து 2011). ஒண்டிவீரன். குங்குமம் வார இதழ். http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=1918&id1=4&issue=20110808. "வரலாற்றுப் பதிவுகளில் புறக்கணிக்கப்பட்ட வீரர்களில் முதன்மையானவர் ஒண்டிவீரன். ‘‘அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பல வீரர்கள் மன்னர் படையணிகளில் முக்கியப்பங்கு வகித்திருக்கிறார்கள். அவர்களில் மதுரைவீரன், ஒண்டிவீரன் போன்றோர் முக்கியமானவர்கள்." 
 31. குங்குமம் ஸ்பெஷல் , தொகுப்பாசிரியர் (16 டிசம்பர் 2016). வியூகங்களால் வென்றவள் ராணி வேலுநாச்சியார். குங்குமம் வார இதழ். http://www.kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3641&id1=118&issue=20161216. "குயிலி வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளர் குயிலி. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்கு தளபதியாக்கப்பட்டார்." 
 32. முதல் தமிழ் தற்கொலைப் போராளி குயிலி..!. தினமலர் நாளிதழ். மே 26,2013. https://m.dinamalar.com/detail.php?id=721437. "குயிலி தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவள். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார்." 
 33. ப. சரவணன், தொகுப்பாசிரியர் (2014). இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள். https://books.google.co.in/books?id=VLFdDwAAQBAJ&pg=PT47&dq=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwiVpYzb_YbrAhV04XMBHcmQDFcQ6AEIKDAA#v=onepage&q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&f=false. "குயிலி தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவள். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார்." 
 34.  , தொகுப்பாசிரியர் (31 டிசம்பர் 2012). ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை தகர்த்த குயிலிக்கு வேலுநாச்சியார் அங்கீகாரம். தினமணி நாளிதழ். https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2012/dec/31/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4--%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-609285.html. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருந்ததியர்&oldid=3168420" இருந்து மீள்விக்கப்பட்டது