உதம்பூர் மக்களவைத் தொகுதி
உதம்பூர் மக்களவைத் தொகுதி (Udhampur Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் சம்மு காசுமீரில் உள்ள ஆறு இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 20,230 சதுர கிலோமீட்டர் மலைப்பாங்கான இமயமலை நிலப்பரப்பை உள்ளடக்கியது. இது இசுரேலின் அளவுடன் ஒப்பிடத்தக்கது. இது கிஷ்துவார், இராம்பன், கதுவா, தோடா, ரியாசி மற்றும் உதம்பூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. உதம்பூர் மக்களவைத் தொகுதியின் மக்கள் தொகை 24,00,000க்கு மேல் உள்ளது. மேலும் இது நியூ மெக்சிகோவின் மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது. 1967 முதல் 1980 வரை இத்தொகுதியின் மக்களவை உறுப்பினராகக் கரண் சிங் இருந்தார்.
உதம்பூர் JK-4 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
உதம்பூர் மக்களவைத் தொகுதி வரைபடம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | சம்மு காசுமீர் |
நிறுவப்பட்டது | 1957 |
மொத்த வாக்காளர்கள் | 16,23,195[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகு2022ஆம் ஆண்டில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சம்மு காசுமீரில் உள்ள உதம்பூர் மக்களவைக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் பின்வருமாறு.[2][3][4]
ச. தொ. எண். | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
48 | இந்தர்வால் | கிஷ்துவார் | பயாரே லால் சர்மா | சுயேச்சை | |
49 | கிஷ்துவார் | சாகுன் பரிகார் | பாஜக | ||
50 | பாடர்-நாக்சேனி | சுனில் குமார் சர்மா | பாஜக | ||
51 | பாதர்வா | தோடா | தலீப் சிங் பரிஹார் | பாஜக | |
52 | தோடா | மெஹ்ராஜ் மாலிக் | ஏ. பி. ஏ. பி | ||
53 | தோடா மேற்கு | சக்தி ராஜ் | பாஜக | ||
54 | இராம்பன் | இராம்பன் | அர்ஜுன் சிங் ராஜு | ஜே. கே. என். சி | |
55 | பனிஹால் | சஜாத் சாகீன் | ஜே. கே. என். சி | ||
59 | உதம்பூர் மேற்கு | உதம்பூர் | பவன் குமார் குப்தா | பாஜக | |
60 | உதம்பூர் கிழக்கு | ரன்பீர் சிங் பதானியா | பாஜக | ||
61 | சென்னா. | பல்வந்த் சிங் மன்கோட்டியா | பாஜக | ||
62 | ராம்நகர் (ப.இ.) | சுனில் பரத்வாஜ் | பாஜக | ||
63 | பானி | கத்துவா | இராமேசுவர் சிங் | சுயேச்சை | |
64 | பில்லவர் | சதீசுகுமார் சர்மா | பாஜக | ||
65 | பசோஹ்லி | தர்ச்அன் குமார் | பாஜக | ||
66 | ஜஸ்ரோடா | ராஜீவ் ஜஸ்ரோடியா | பாஜக | ||
67 | கத்துவா (ப.இ.) | பாரத் பூசண் | பாஜக | ||
68 | கீராநகர் | விஜயகுமார் | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர். | கட்சி | |
---|---|---|---|
1957 | இந்தர்ஜித் மல்கோத்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | கரண் சிங் | ||
1968^ | ஜி. எசு. பிரிகேடியர் | ||
1971 | கரண் சிங் | ||
1977 | |||
1980 | இந்திய தேசிய காங்கிரஸ் (உ) | ||
1984 | கிர்தாரி லால் டோக்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | தரம் பால் | ||
1996 | சமன் லால் குப்தா | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | |||
1999 | |||
2004 | சவுத்ரி லால் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | |||
2014 | ஜிதேந்திர சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ஜிதேந்திர சிங் | 5,71,076 | 51.28 | ▼10.10 | |
காங்கிரசு | சௌத்ரி லால் சிங் | 4,46,703 | 40.11 | 9.01 | |
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி | ஜி.எம். சரூரி | 39,599 | 3.56 | New | |
நோட்டா | நோட்டா | 12,938 | 1.16 | 0.52 | |
வாக்கு வித்தியாசம் | 1,24,373 | 11.17 | ▼19.11 | ||
பதிவான வாக்குகள் | 11,13,696 | 68.27 | ▼2.74 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ▼10.10 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "EC releases absolute number of voters for all completed phases" (PDF). elections24.eci.gov.in. Election Commission of India. 2024-05-25.
- ↑ "Notification by Delimitation Commission" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 October 2022.
- ↑ "Final Delimitation Order" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 September 2022.
- ↑ "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.
- ↑ "Jammu & Kashmir 2024". Election Commission of India.
- ↑ Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - UDHAMPUR" இம் மூலத்தில் இருந்து 22 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240722125127/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-U084.htm.