கிராண்ட் எலியட்

கிராண்ட் டேவிட் எலியட் (Grant David Elliott, பிறப்பு: 21 மார்ச் 1979, ஜோகானஸ்பேர்க்) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர். பல்துறை ஆட்டக்காரரான இவர் வலக்கை மட்டையாளரும், வலக்கைப் பந்துவீச்சாளரும் ஆவார்.

கிராண்ட் எலியட்
Grant Elliott
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிராண்ட் டேவிட் எலியட்
பிறப்பு21 மார்ச்சு 1979 (1979-03-21) (அகவை 45)
ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா
பட்டப்பெயர்ஷண்ட், மாஜிக்
உயரம்6 அடி 2 அங் (1.88 m)
மட்டையாட்ட நடைவலக்கை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலக்கை
பங்குபல்துறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 236)22 மார்ச் 2008 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு3 டிசம்பர் 2009 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 150)18 சூன் 2008 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப24 மார்ச் 2015 எ. தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009சரே
2005-இன்றுவெலிங்டன்
2001–2003கவுட்டெங்
1999–2001கிரிக்கலாந்து மேற்கு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா.ப மு.த. ப.அ
ஆட்டங்கள் 5 51 82 155
ஓட்டங்கள் 86 1,013 3,856 3,414
மட்டையாட்ட சராசரி 10.75 29.79 30.84 30.75
100கள்/50கள் 0/0 1/6 8/20 3/20
அதியுயர் ஓட்டம் 25 115 196* 115
வீசிய பந்துகள் 282 657 7,078 3,492
வீழ்த்தல்கள் 4 20 89 95
பந்துவீச்சு சராசரி 35.00 27.25 36.98 32.97
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 -
சிறந்த பந்துவீச்சு 2/8 4/31 5/3 5/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 8/– 46/– 50/–

தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலியட் 1996-97 காலப்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் கௌட்டெங் அணியில் முதல்தரப் போட்டிகளில் விளையாடினார். 2001 ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.[1] 2007 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றார்.

2008 ஆம் ஆண்டில் நியூசிலாந்து தேசிய அணியில் சேர்ந்து முதல் முதலாக இங்கிலாந்து அணிக்கு எதிராக தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[2] அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு-நாள் போட்டியிலும் விளையாடி முதல் ஆட்டத்தில் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். 2009 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது போட்டியில் ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடி தனது முதலாவது சதத்தைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவர் எந்த ஒரு-நாள் போட்டியிலும் கலந்து கொள்ளாவிட்டாலும், 2015 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார்.

பன்னாட்டு சதங்கள்

தொகு
கிராண்ட் எலியட்டின் ஒரு நாள் சதங்கள்
# ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு முடிவு
1 115   ஆத்திரேலியா   அடிலெயிட், ஆத்திரேலியா அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் 2009 தோல்வி
2 104*   இலங்கை   துனெடின், நியூசிலாந்து பல்கலைக்கழக ஓவல் 2015 வெற்றி

மேற்கோள்கள்

தொகு
  1. Millmow, Jonathan (9 பெப்ரவரி 2009). "Black Cap Grant Elliott creates a buzz". The Dominion Post. http://www.stuff.co.nz/sport/1395587. பார்த்த நாள்: 24 சனவரி 2015. 
  2. Kiwis turn to all-rounder Elliot பிபிசி retrieved 1 March 2008

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராண்ட்_எலியட்&oldid=3968739" இலிருந்து மீள்விக்கப்பட்டது