சங்கனூர்

கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சங்கனூர் (Sanganoor) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கோயம்புத்தூரின் டவுன் ஹாலில் கோயில் கொண்டுள்ள கோயம்புத்தூரின் காவல் தெய்வம் என்று கருதப்படும் கோனியம்மன், 1710 ஆம் ஆண்டில் கோயம்புத்தூரில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு முன் சங்கனூரில், சங்கனூர் ஓடை என்று அழைக்கப்படுகிற சங்கனூர் பள்ளம் அருகில் கோயில் கொண்டு அருள்பாலித்தார்.[1] சங்கனூர் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், கோனியம்மன் மூலவர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, தற்போதைய டவுன்ஹால் பகுதியில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.

சங்கனூர்
Sanganoor
சங்கனூர் Sanganoor is located in தமிழ் நாடு
சங்கனூர் Sanganoor
சங்கனூர்
Sanganoor
சங்கனூர் (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°02′09″N 76°57′20″E / 11.035700°N 76.955500°E / 11.035700; 76.955500
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்
ஏற்றம்
455 m (1,493 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
641027
தொலைபேசி குறியீடு+91422xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்கோயம்புத்தூர், காந்திபுரம், ஆவாரம்பாளையம், டாடாபாத், சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி, கணபதி, ஆர். எஸ். புரம், கவுண்டம்பாளையம், துடியலூர், சின்னவேடம்பட்டி, மணியகாரன்பாளையம், நல்லாம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம்
மாநகராட்சிகோயம்புத்தூர் மாநகராட்சி
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்பி. ஆர். நடராஜன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்அம்மன் கே. அர்ஜுனன்
இணையதளம்https://coimbatore.nic.in

11 கி.மீ. நீள சங்கனூர் ஓடையானது, சில தசாப்தங்களாக, நீரோட்டமின்றி வற்றிக் கிடப்பதால், பயனற்ற நிலையில் காணப்படுகிறது. அருகிலுள்ள கணுவாய் தடுப்பணை மற்றும் தடாகம் பகுதியில், நீரோட்டம் வழித்தடங்களில் செங்கல் சூளைகளுக்காக மணல் சுரண்டி, ஏற்பட்ட மிக ஆழமான பள்ளங்களினால், தடாகம் பள்ளத்தாக்கில் நீர்வரத்து தடைபட்டது.[2] இதனால், இதன் கரைகளைப் பலப்படுத்தி, சாலைகளை செப்பனிட்டு, இலகு ரக வாகனங்கள் பயன்பாட்டிற்காக, திட்டப் பணிகள் ஆரம்பிக்க, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்படி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சில முக்கிய காரணங்களால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.[3] மாவட்டங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கட்டுமானங்களுக்கான திட்ட அனுமதியை விரைவுபடுத்தவும் பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்வகையில் கோயமுத்தூர் பெருநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கம் செய்வதற்காக, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட 118 வருவாய் கிராமங்களில், கோவை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட சங்கனூர் பகுதியும் ஒன்று.[4]

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 455 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சங்கனூர் ஊரின் புவியியல் ஆள்கூறுகள் 11°02'08.5"N, 76°57'19.8"E (அதாவது, 11.035700°N, 76.955500°E) ஆகும்.

அருகிலுள்ள ஊர்கள்

தொகு

கோயம்புத்தூர், காந்திபுரம், ஆவாரம்பாளையம், டாடாபாத், சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி, கணபதி, ஆர். எஸ். புரம், கவுண்டம்பாளையம், துடியலூர், சின்னவேடம்பட்டி, மணியகாரன்பாளையம், நல்லாம்பாளையம் மற்றும் பாப்பநாயக்கன் பாளையம் ஆகியவை சங்கனூருக்கு அருகிலுள்ள ஊர்களாகும்.

போக்குவரத்து

தொகு

சாலைப் போக்குவரத்து

தொகு

அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் சங்கனூர் பகுதிக்கு பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

தொடருந்து போக்குவரத்து

தொகு

சங்கனூரிலிருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்தில் கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையமும், சுமார் 5 கி.மீ. தொலைவில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாகக் செயல்படும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகியவையும் உள்ளன.

வான்வழிப் போக்குவரத்து

தொகு

கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், சங்கனூரிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

கல்வி

தொகு

பள்ளி

தொகு

35 வருடங்களுக்கும் மேலாக சங்கனூரில் சேவை புரிந்து வருகிறது, இங்குள்ள குழந்தை இயேசு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி.

ஆன்மீகம்

தொகு

கோயில்

தொகு

சங்கனூரில், சங்கனூர் சாலை மற்றும் காந்திஜி சாலை சந்திப்பிற்கு அருகில் ஐயப்பன் கோயில் ஒன்று உள்ளது.[5][6] சங்கனூர் சாலையில் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயில் ஒன்றும் உள்ளது.[7]

அரசியல்

தொகு

சங்கனூர் பகுதியானது, கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் அம்மன் கே. அர்ஜுனன். மேலும் இப்பகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக பி. ஆர். நடராஜன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "கோட்டைமேடு உருவான வரலாறு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  2. ""என்னை போல் உடைந்துள்ள தடாகம் பள்ளத்தாக்கை மீட்க முயல்கிறேன்" 18 வயது சூழலியலாளர் சாந்தலா" (in ta). BBC News தமிழ். https://www.bbc.com/tamil/india-61180179. 
  3. "Sanganur stream restoration work suspended over design approval". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  4. "கோவை நகருடன் 118 கிராமங்களை இணைத்து கோவை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-05.
  5. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  6. "கேரளா மற்றும் தமிழக ஐயப்பன் கோயில்களின் முகவரி". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  7. மாலை மலர் (2021-07-29). "கோவை சங்கனூர் ரோட்டில் உள்ள முத்தாரம்மன் கோவில் கொடை விழா தொடங்கியது" (in ta). https://www.maalaimalar.com/devotional/worship/2021/07/29121712/2867848/mutharamman-temple-kodai-vizha.vpf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கனூர்&oldid=3631734" இலிருந்து மீள்விக்கப்பட்டது