சாரா ரூதர்போர்டு

உலகைச் சுற்றி வந்த இளம் விமானி

சாரா ரூதர்போர்டு (Zara Rutherford) (பிறப்பு 2002 அல்லது 2003) ஒரு பெல்சிய-பிரித்தானிய விமானி ஆவார். மிக இலகு இரக விமானத்தில் உலகைச் சுற்றிய முதல் நபர் இவர்தான். இவர் தனது 19ஆம் வயதில், பெல்ஜியத்தில் உள்ள கோர்ட்ரிஜ்கில் 2021ஆம் ஆண்டு ஆகத்து 18ஆம் நாள் தொடங்கி, 2022ஆம் ஆண்டு சனவரி 20 அன்று முடிவடைந்த ஐந்து மாத பயணத்திற்குப் பிறகு, தனியாக உலகைச் சுற்றி வந்த இளைய பெண் விமானி ஆனார். இவர் 5 மாதங்களில் 5 கண்டங்களில் 51 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார்.[2][3]

சாரா ரூதர்போர்டு
பிறப்பு5 சூலை 2002 (2002-07-05) (அகவை 22)[1]
பிரசெல்சு, பெல்சியம்
தேசியம்பெல்சியம், பிரித்தானியா
கல்விபுனித ஸ்விதுனின் பள்ளி, வின்செஸ்டர்
அறியப்படுவதுஉலகை முதன்முதலாகத் தனியாகப் பயணித்து சுற்றி வந்த இளம் பெண் விமானி

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ரூதர்போர்டு பெல்ஜியத்தின் பிரசெல்சில் பிரித்தானிய தொழில்முறை விமானி சாம் ரூதர்போர்டு மற்றும் பெல்ஜிய பொழுதுபோக்கு விமானி மற்றும் வழக்கறிஞர் பீட்ரைஸ் டி ஸ்மெட் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[4] ஒரு இளம் பெண்ணாக, ரூதர்போர்டு தன் தந்தையுடன் விமானப் பயணம் செல்வார். அப்போது சில சமயங்களில் தானும் விமானத்தை இயக்கியுள்ளார். தனது 14 ஆம் வயதில், அவர் ஒரு விமானி ஆவதற்கான பயிற்சியைத் தொடங்கினார். 2020-ஆம் ஆண்டில் தனது விமானி உரிமத்தைப் பெற்றார் [5] இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர், வின்செஸ்டரில் அமைந்துள்ள பெண்கள் பள்ளியான செயின்ட் ஸ்விதுன்ஸ் பள்ளியில் கணிதம், உயர் நிலைக் கணிதம், பொருளாதாரம் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களில் தனது “ஏ” தர நிலைகளை முடித்தார்.[6]

உலகம் முழுவதும் தனி விமானம்

தொகு
 
சாரா ரூதர்போர்டு பயணித்ததைப் போன்ற சுறா வடிவ ஏரோ சார்க் யுஎல் வகை விமானம்.

26 சூலை 2021 அன்று, வின்செஸ்டருக்கு அருகிலுள்ள போபம் விமான நிலையத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ரூதர்போர்டு தனது 19 ஆம் வயதில், உலகைச் சுற்றி தனியாகப் பறக்கும் இளைய பெண் விமானி ஆவதற்கான முயற்சியை அறிவித்தார்.[7] முன்னதாக 2017 ஆம் ஆண்டில் அமெரிக்க விமானி சேஷ்தா வைசு தனது 30 ஆவது வயதில் உலகைத் தனியே சுற்றி வந்ததே இத்தகு சாதனையாக இருந்தது.[4][5][7] இந்த சாதனையைத் தவிர, ரூதர்போர்டு மற்ற இரண்டு சாதனைகளையும் முறியடிக்க முயன்றார். அதாவது, மிக இலகு இரக விமானத்தில் உலகைச் சுற்றி வந்த முதல் பெண்மணி மற்றும் ஒற்றைப் பொறி விமானத்தில் தனியாக உலகைச் சுற்றி வந்த முதல் பெல்ஜியத்தவர் ஆகிய சாதனைகளையும் ஏற்படுத்த முயன்றார்.[8] அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில் பாலின இடைவெளியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை STEM துறைகளில் முன்கூட்டியே ஈடுபட ஊக்குவிக்கவும் இந்த சாதனை முயற்சியானது மேற்கொள்ளப்படுவதாகவும் இவர் கூறினார்.[4][9] இவரது முயற்சிக்கு முக்கிய நிதிப்பங்களிப்பாளராக இணையத்தில் வலைத்தள சேவையை வழங்கும் ஐசிடிசாப்ட்(ICDSoft) என்ற நிறுவனம்,[10] றிச்சர்ட் பிரான்சனின் வெர்ஜின் குழுமம் [11] பெல்ஜியன் ஸ்டார்ட்-அப் சேப் ஸ்கை மற்றும் டச்சுப் பணியாளர் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனமான டிஎம்சி குழுமம் ஆகியவை ஆதரவு அளித்தன.[12] பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் நுழைவதற்கு ஊக்கமளித்து உதவுவதை நோக்கமாகக் கொ ண்ட கேர்ள்ஸ் ஹூ கோட் மற்றும் ட்ரீம்ஸ் சோர் ஆகிய தொண்டு நிறுவனங்களுடனும் இவருடன் கூட்டு சேர்ந்தன.[9][11]

ரூதர்போர்டு தனது தனி முயற்சியை பெல்ஜியத்தில் உள்ள கோர்ட்ரிஜ்க்-வெவெல்ஜெம் விமான நிலையத்தில் இருந்து 18 ஆகஸ்ட் 2021 அன்று சார்க் யுஎல் விமானத்தில் தொடங்கினார்,[8][9] இது அவருக்கு ஸ்லோவாக்கிய உற்பத்தியாளர் சார்க்.ஏரோ. மூலம் கடனாக வழங்கப்பட்டது.[4][5][7] கோர்ட்ரிஜ்க்கிலிருந்து, போஃபம் விமான நிலையத்திற்குப் பறந்தார், அங்கிருந்து அவர் அபர்தீன் வழியாக ஸ்காட்லாந்தில் உள்ள விக்கிற்கு பறப்பதற்கு ஒரு மணி நேரம் செலவிட்டார்.[13][14] அடுத்த நாள், ஐந்து மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு, ஐஸ்லாந்தின் ரெய்க்யவிக் நகரில் தரையிறங்கினார்.

தனது பயணத்தைத் தொடங்கிய பிறகு, ரூதர்போர்டு கிரீன்லாந்து, கனடா, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை, பகாமசு, துர்கசு மற்றும் கைகோசு தீவுகள், பிரித்தானிய கன்னித் தீவுகள், கொலம்பியா, பனாமா, கோஸ்ட்டாரிக்கா, மெக்சிகோ, அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை ஆகிய இடங்களில் நிறுத்தினார். அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம்.[15] 30 செப்டம்பர் 2021 அன்று அலாஸ்காவின் நோம் நகருக்கு வந்த பிறகு , தனது உருசிய விசா புதுப்பிக்கப்படுவதற்கு ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டெக்சஸில் உள்ள ஹியூஸ்டனில் உள்ள உருசிய தூதரகத்திலிருந்து அவளது பாஸ்போர்ட் திரும்பி வந்த நேரத்தில், வானிலை மோசமாகி விட்டதால், இவர் பெரிங் ஜலசந்தியைக் கடப்பதற்கு இன்னும் மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.[16] நவம்பர் 1, 2021 அன்று, அவர் இறுதியாக தனது பயணத்தின் பாதிப் புள்ளியான ருசியாவின் அனாடைரை அடைந்தார்.[17] அனாடிரில் இருந்து, மறுநாள், மகதானுக்குப் பறந்து, நவம்பர் 9 ஆம் தேதி அயனில் நிறுத்தப்பட்டார். 800 பேர் மட்டுமே இருந்த ஒரு நகரத்தில், இவர்கள் யாரும் ஆங்கிலம் பேசவில்லை, வைஃபை சேவை இல்லாத நிலையில் இவர் மீண்டும் குளிர்காலப் புயலொன்றில் சிக்கிக்கொண்டார்.[16][18] இவர் இறுதியாக ஹபரோவ்ஸ்கை 30 நவம்பர் அன்றும் மற்றும் விளாதிவசுத்தோக் எனுமிடத்தை டிசம்பர் 2 இலும் அடைந்தார்.[15]

டிசம்பர் 11 அன்று உருசியாவிலிருந்து பறந்த பிறகு, ரூதர்போர்டு சீனாவில் நிறுத்த விரும்பினார், ஆனால் நாட்டின் கடுமையான கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக, அவர் யப்பான் கடலில் ஒரு மாற்றுப்பாதையை உருவாக்கி அதற்கு பதிலாக தென் கொரியாவிற்கு பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[16] ஆறு மணி நேர விமானப் பயணத்தின் போது, சியோலில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களைத் தொடர்புகொள்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், இவர் ஒரு கேஎல்எம் வணிக விமானியின் உதவியை நாடினார். இவர் தனது செய்திகளை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு அனுப்பி, சரியான அலைவரிசைகளைக் கண்டறிய உதவினார்.[19][20] இம்முறை ரூதர்போர்டு அதே நாளில் ஜிம்போவில் இறங்கினார்.[20][21][22] திசம்பர் 13 ஆம் நாள் இடையில் ஒரு முவானில் நின்று செல்ல விரும்பினார். அதற்குப் பிந்தைய நாளில் தைவானின் தாய்பெய்க்குச் செல்ல இருந்தார்.[23][24] டிசம்பர் 16 அன்று, ரூதர்போர்டு பிலிப்பைன்ஸில் உள்ள பம்பங்காவில் உள்ள கிளார்க்கில் இறங்கினார்.[25] இவர் டுமகுடேவில் இரண்டாவது நிறுத்தத்தை மேற்கொள்ள எண்ணினார். ஆனால், அடுத்த நாள் ராய் புயல் நெருங்குதைத் தவிர்க்கும் பொருட்டு மலேசியாவின் கோத்தா கினபாலுவுக்குப் பறக்க வேண்டியிருந்தது.[18][26]

கோத்தா கினபாலுவில் இருந்து புறப்பட்ட இவர் கேடடப்பங் மற்றும் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள கேட்டப்பங் மற்றும் சிங்கப்பூரின் செலேடர் ஆகிய இடங்களில் நிறுத்தங்களை மேற்கொண்டார்.[15] டிசம்பர் 27 அன்று பண்டா ஆச்சே என்ற இடத்திற்கான பயணத்தின் போது, இவர் இடியுடன் கூடிய மழைக்கு மிக அருகில் பறந்தார். அந்த இடியானது இவரிடமிருந்து 3 கிலோமீட்டர் (1.9 மைல்கள்) தொலைவிலேயே நிகழ்ந்துள்ளது.[16][27] பண்டா ஆச்சேக்குப் பிறகு, இவர் இலங்கையின் கொழும்பு, மற்றும் இந்தியாவின் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நிறுத்தினார்.[28][29] மும்பையில் புத்தாண்டு தினத்தன்று நிறுத்திய பிறகு,[16] ரூதர்போர்டு 2022 ஐ ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் ஐன் [27] மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் மற்றும் தபூக் ஆகியவற்றில் நிறுத்தினார். அங்கு இவரை சவுதி இளவரசர் மற்றும் முன்னாள் விமானியும் மற்றும் விண்வெளி வீரருமான சுல்தான் பின் சல்மான் அல் சவுத் வரவேற்றார்.[30] 2022 சனவரி 8 ஆம் நாள் அன்று எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியாவில் நிறுத்தப்பட்ட பிறகு, இவர் மற்றொரு நிறுத்தத்திற்காக கிரேக்க தீவான கிரீட்டில் உள்ள ஹெராக்லியோனுக்கு வந்தார்.[15]

2022 சனவரி 14 அன்று ரூதர்போர்டு பல்கேரியாவின் சோஃபியா மற்றும் சிலோவாக்கியாவின் செனிக்கா ஆகிய இடங்களில் நிறுத்தம் மேற்கொண்டார். சனவரி 16 ஆம் நாள் இவர் செக் குடியரசில் உள்ள பெனிசோவ் என்ற இடத்தில் இறங்கினார்.[15] 2022 சனவரி 19 ஆம் நாளில் செருமனியின் பிராங்க்பர்ட் நகரில் எகிள்ஸ்பாச் விமான நிலையத்தில் தரையிறங்கினார். சனவரி 20 அன்று பெல்ஜியத்தின் கோர்ட்ரிஜ்கை வந்தடைந்து தனது முழுமையான சுற்றுப்பயணத்தை முடித்தார்.[15]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-06-07. பார்க்கப்பட்ட நாள் 2022-01-22.
  2. "Teenage pilot Zara Rutherford completes solo round-world record". BBC News. 20 January 2022. https://www.bbc.co.uk/news/uk-england-hampshire-59899980. 
  3. "British-Belgian teen becomes youngest woman to fly solo round the world". ராய்ட்டர்ஸ். 20 January 2022. https://www.reuters.com/lifestyle/british-belgian-teen-becomes-youngest-woman-fly-solo-round-world-2022-01-20/. 
  4. 4.0 4.1 4.2 4.3 Ives, Mike (25 August 2021). "Teenage Aviator Aims to Be Youngest Woman to Circle the Globe Solo". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.Ives, Mike (25 August 2021). "Teenage Aviator Aims to Be Youngest Woman to Circle the Globe Solo". The New York Times. Retrieved 10 January 2022.
  5. 5.0 5.1 5.2 "Teenage pilot Zara Rutherford begins solo round-world record bid". BBC News. 18 August 2021. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022."Teenage pilot Zara Rutherford begins solo round-world record bid". BBC News. 18 August 2021. Retrieved 10 January 2022.
  6. "Zara Embarks On World Record Flight Attempt". www.stswithuns.com. 18 August 2021. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  7. 7.0 7.1 7.2 PA Media (26 July 2021). "Student, 19, hopes to be youngest woman to fly solo around the world". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.PA Media (26 July 2021). "Student, 19, hopes to be youngest woman to fly solo around the world". The Guardian. Retrieved 10 January 2022.
  8. 8.0 8.1 El-Bawab, Nadine (15 December 2021). "Zara Rutherford tries to break record for youngest pilot to fly solo around the world". ABC News. பார்க்கப்பட்ட நாள் 18 December 2021.El-Bawab, Nadine (15 December 2021). "Zara Rutherford tries to break record for youngest pilot to fly solo around the world". ABC News. Retrieved 18 December 2021.
  9. 9.0 9.1 9.2 Cairns, Rebecca (18 August 2021). "This teenage aviator hopes to be the youngest woman to fly solo around the world". CNN. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.Cairns, Rebecca (18 August 2021). "This teenage aviator hopes to be the youngest woman to fly solo around the world". CNN. Retrieved 10 January 2022.
  10. "ICDSoft Is the Main Sponsor of a World Record Attempt". www.icdsoft.com. 14 August 2021. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.,
  11. 11.0 11.1 Branson, Holly (12 August 2021). "Supporting Zara Rutherford's solo flight around the world". வெர்ஜின் குழுமம். பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  12. "People Fly Technology - Fly Solo Around The World". tmc-employeneurship.com. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  13. Ashworth, James (18 August 2021). "Zara Rutherford lands at Popham Airfield in record attempt". www.basingstokegazette.co.uk. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  14. Hendry, Alan (20 August 2021). "Zara heading for Greenland in aviation record bid after stopping off in Wick". www.johnogroat-journal.co.uk. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  15. 15.0 15.1 15.2 15.3 15.4 15.5 "Arrivals Board". FlyZolo.com. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021."Arrivals Board". FlyZolo.com. Retrieved 10 January 2021.
  16. 16.0 16.1 16.2 16.3 16.4 Pop, Valentina (7 January 2022). "A teen pilot flies around the world and into the record books". பைனான்சியல் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.Pop, Valentina (7 January 2022). "A teen pilot flies around the world and into the record books". The Financial Times. Retrieved 10 January 2022.
  17. Wildes, Michael (3 November 2021). "Pilot Attempting Around-the-World Flight Hits Halfway Point". www.flyingmag.com. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  18. 18.0 18.1 De Abreu, Kristine (16 December 2021). "Zara Rutherford Hurries to Malaysia Ahead of Super-Typhoon". explorersweb.com. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.De Abreu, Kristine (16 December 2021). "Zara Rutherford Hurries to Malaysia Ahead of Super-Typhoon". explorersweb.com. Retrieved 10 January 2022.
  19. "KLM pilot assists Belgian teenager in her bid to fly solo around the world". The Brussels Times. 12 December 2021. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
  20. 20.0 20.1 "Teen solo pilot gets an assist from KLM during around-the-world flight". nltimes.nl. 12 December 2021. பார்க்கப்பட்ட நாள் 18 December 2021.
  21. Orban, André (12 December 2021). "Belgian-British teenager Zara Rutherford lands in Korea on her solo world tour with the help of a KLM pilot she wants to thank". www.aviation24.be. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  22. "Teen aviator Zara Rutherford lands historic flight in Seoul". CNN Travel. பார்க்கப்பட்ட நாள் 18 December 2021.
  23. Everington, Keoni (15 December 2021). "Teen global aviator raves about Taiwanese bubble tea". Taiwan News. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  24. Lee Hsin-Yin (15 December 2021). "Female teen aviator tests mettle in round-the-world flight". Focus Taiwan. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  25. Matias Pizarro, Shirley (15 December 2021). "EXCLUSIVE: Eyeing Guinness record, teen Belgian lady pilot lands at Clark Airport". Manila Bulletin. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  26. Abarro, Mico (16 December 2021). "Teen aviator on record solo flight skips 2nd stop in PH". ABS-CBNnews.com. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  27. 27.0 27.1 Clarke, Kelly (4 January 2022). "Meet the teenage pilot who battled thunderstorms in her around-the-world solo flight". www.thenationalnews.com. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  28. "Coimbatore-based company to sponsor British-Belgian teen pilot's bid to circle to globe". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 December 2021. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  29. "Elgi supports Zara Rutherford in her quest to be the youngest woman to solo circumnavigate the globe". Elgi Equipments. 30 December 2021. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
  30. "Youngest woman to fly solo around the world arrives in Saudi Arabia". Arab News. 7 January 2022. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_ரூதர்போர்டு&oldid=3924956" இலிருந்து மீள்விக்கப்பட்டது