சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்
இக்கட்டுரை |
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்
இந்தியாவின் மாநிலமானத் தமிழத்தின் உயர் நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்தவர்கள் மற்றும் தற்பொழுதயத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்.
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மற்றும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40[1] உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபரிபாலணை புரிவர். இதன் நீதி நிர்வாகங்களை செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் இவரின் வழிகாட்டுதலின்படி செயல் படுகின்றன.
- உரிமையியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணையில்;[1]
- மாவட்ட நீதிபதி
- சார்பு நீதிபதி
- மாவட்ட முன்சீப் ஆகியவர்கள் பங்காற்றுகின்றனர்.
- குற்றவியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணைகள்;[1]
- செசன்சு நீதிபதி
- தலைமை நீதிமுறைமை நடுவர்
- உதவி செசன்சு நீதிபதி
- நீதிமுறைமை நடுவர் ஆகியவர்களின் தலைமையில் நடைபெறுகின்றன.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்தொகு
வ. எண் | தலைமை நீதி | தலைமை/பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்ட நாள் | ஓய்வு பெற்ற நாள் |
---|---|---|---|
1 | பி. வி. ராஜமன்னார் | 1948 | 10 மே 1961 |
2 | சுப்பிரமணிய இராமச்சந்திர ஐயர் | 10 மே 1961 | 23 நவம்பர் 1964 |
3 | பி. சந்திர ரெட்டி | 23 நவம்பர் 1964 | 1 ஜூலை 1966 |
4 | எம். அனந்தநாராயணன் | 1 ஜூலை1966 | 1 மே 1969 |
5 | குப்புசாமி நாயுடு வீராசுவாமி | 2 மே 1969 | 7 ஏப்ரல் 1976 |
6 | பள்ளப்பட்டி சடையக் கவுண்டர் கைலாசம் | 8 ஏப்ரல் 1976 | 3 சனவரி 1977 |
7 | பத்மநாப்பிள்ளை கோவிந்தன் நாயர் | 4 சனவரி 1977 | 28 மே 1978 |
8 | தயி ராம்பிராசாத ராவ் | 29 மே 1978 | 6 நவம்பர் 1979 |
9 | மு. மு. இஸ்மாயில் | 6 நவம்பர் 1979 | 12 மார்ச் 1982 |
10 | கிருஷ்ண பல்லப் நாரயண் சிங் | 12 மார்ச் 1982 | 2 ஏப்ரல் 1984 |
11 | மதுகர் நர்கர் சந்துர்கர் | 2 ஏப்ரல் 1984 | 19 அக்டோபர் 1989 |
12 | ஆதர்ஷ் செயின் ஆனந்த் | நவம்பர் 1989 | 16 ஜூன் 1992 |
13 | காந்தா குமாரி பட்நகர் | 15 ஜூன் 1992 | 1 ஜூலை 1993 |
14 | குதாரிகோட்டி ஆன்னதனய சாமி | 1 ஜூலை 1993 | 7 ஜூலை 1997 |
15 | மன்மோகன் சிங் லிபரான் | 7 ஜூலை 1997 | 24 மே 1999 |
16 | அசோக் சோட்டலால் அகர்வால் | 24 மே 1999 | 9 செப்டம்பர் 1999 |
17 | கொ. கோ. பாலகிருஷ்ணன் | 9 செப்டம்பர் 1999 | 15 ஜூன் 2000 |
18 | நாகேந்திர குமார் ஜெயின் | 13 செப்டம்பர் 2000 | 30 ஆகத்து 2001 |
19 | போ. சுபாசன் ரெட்டி | 12 செப்டம்பர் 2001 | 20 நவம்பர் 2004 |
20 | மார்க்கண்டேய கட்சு | 28 நவம்பர் 2004 | 10 அக்டோபர் 2005 |
21 | அஜித் பிராக்காஷ் ஷா | 12 நவம்பர் 2005 | 9 மே 2008 |
22 | ஏ.கே.கங்குலி | 21 மே 2008 | 9 மார்ச் 2009[2] |
23 | எச். எல். கோகிலே | 9 மார்ச் 2009 | 10 ஜூன் 2010 |
24 | எம். ஒய். இக்பால் | 11 ஜூன் 2010 | 6 பிப்ரவரி 2013 |
பொறுப்பு | ஆர். கே. அகர்வால் | 7 பிப்ரவரி 2013 | 23 அக்டோபர் 2013 |
25 | ஆர். கே. அகர்வால் | 24 அக்டோபர் 2013 | 12 பிப்ரவரி 2014 |
பொறுப்பு | சதீஷ் கே அக்னிஹோத்ரி | 13 பிப்ரவரி 2014 | 25 ஜூலை 2014[3] |
26 | சஞ்சய் கிஷன் கவுல் | 26 ஜூலை 2014 | 15 பிப்ரவரி 2017 [4] |
பொறுப்பு | ஹுலுவடி ஜி.ரமேஷ் | 16 பிப்ரவரி 2017 | 4 ஏப்ரல் 2017 |
27 | இந்திரா பானர்ஜி | 5 ஏப்ரல் 2017 | 6 ஆகஸ்ட் 2018 |
பொறுப்பு | ஹுலுவடி ஜி.ரமேஷ் | 7 ஆகஸ்ட் 2018 | 11 ஆகஸ்ட் 2018 |
28 | விஜய தஹில் ரமணி | 12 ஆகஸ்ட் 2018 | 6 செப்டம்பர் 2019 |
பொறுப்பு | வினீத் கோத்தாரி | 21 செப்டம்பர் 2019 | 10 நவம்பர் 2019 |
29 | அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி | 11 நவம்பர் 2019 | 31 டிசம்பர் 2020 |
பொறுப்பு | வினீத் கோத்தாரி | 1 ஜனவரி 2021 | 3 ஜனவரி 2021 |
30 | சஞ்சிப் பானர்ஜி | 4 ஜனவரி 2021 | 17 நவம்பர் 2021 |
பொறுப்பு | எம். துரைசாமி | 18 நவம்பர் 2021 | 21 நவம்பர் 2021 |
பொறுப்பு | முனீசுவர் நாத் பண்டாரி | 22 நவம்பர் 2021 | பதவியில் |
இவற்றையும் பார்க்கவும்தொகு
வெளி இணைப்புக்கள்தொகு
- சென்னை உயர் நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்
- அரசு இணையம்
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 1.2 "சென்னை உயர்நீதிமன்ற வரலாறு- உயர் நீதிமன்ற இணையம் |பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009". 2014-03-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-07 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Justice Asok Kumar Ganguly to be Chief Justice of Madras High Court". The India Post. 21 மே 2008. Archived from the original on 17 ஜூலை 2011. https://web.archive.org/web/20110717004938/http://www.theindiapost.com/2008/05/21/justice-asok-kumar-ganguly-to-be-chief-justice-of-madras-high-court/. பார்த்த நாள்: 26 நவம்பர் 2009.
- ↑ "Madras High Court". www.hcmadras.tn.nic.in. 13 சூலை 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 மே 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Madras High Court". www.hcmadras.tn.nic.in. 9 மே 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 மே 2017 அன்று பார்க்கப்பட்டது.