செம்போல் மக்களவைத் தொகுதி

செம்போல் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Jempol; ஆங்கிலம்: Jempol Federal Constituency; சீனம்: 仁保国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், செம்போல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P127) ஆகும்.[5]

செம்போல் (P127)
மலேசிய மக்களவைத் தொகுதி
நெகிரி செம்பிலான்
Jempol (P127)
Federal Constituency in Negeri Sembilan
செம்போல் மக்களவைத் தொகுதி
(P127 Jempol)
மாவட்டம்செம்போல் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை95,882 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிசெம்போல்
முக்கிய நகரங்கள்பகாவ், பண்டார் ஸ்ரீ செம்போல், ரொம்பின், செர்த்திங்
பரப்பளவு1,125 ச.கி.மீ[3]
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி      பாரிசான் நேசனல்
மக்களவை உறுப்பினர்சம்சுல்ககார் முகமது டெலி
(Shamshulkahar Mohd. Deli)
மக்கள் தொகை108,379[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

செம்போல் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து செம்போல் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

செம்போல் மாவட்டம்

தொகு

செம்போல் மாவட்டம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். நெகிரி செம்பிலான் மாநிலத்திலேயே பெரிய மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடகிழக்கில் பகாங்; கிழக்கில் ஜொகூர் மாநிலங்கள் உள்ளன.

கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 137 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து கிழக்கே 70 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. மிக அருகாமையில் உள்ள நகரம் பகாவ் நகரம். 21 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

மூவார் ஆறும் செர்த்திங் ஆறும் சந்திக்கும் இடத்தில் செம்போல் மாவட்டம் அமைந்து உள்ளது. பழங்காலத்தில் போக்குவரத்துக்கு அந்தச் சந்திப்பு மிக முக்கியப் பங்கு வகித்து உள்ளது.

செம்போல் மக்களவைத் தொகுதி

தொகு




 

2022-இல் செம்போல் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[7]

  மலாயர் (64.8%)
  சீனர் (22%)
  இதர இனத்தவர் (0.7%)
செம்போல் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1984-ஆம் ஆண்டில் செம்போல் தொகுதி உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P104 1986–1990 முகமட் காலிட் யூனோஸ்
(Mohd Khalid Mohd Yunus)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P114 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P127 2004–2008 முகமட் இசா அப்துல் சமாட்
(Mohd Isa Abdul Samad)
12-ஆவது மக்களவை 2008–2013 லீலா யாசின்
(Lilah Yasin)
13-ஆவது மக்களவை 2013–2018 முகமட் இசா அப்துல் சமாட்
(Mohd Isa Abdul Samad)
14-ஆவது மக்களவை 2018–2022 முகமட் சலீம் சரீப்
(Mohd Salim Shariff)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் சம்சுல்ககார் முகமது டெலி
(Shamshulkahar Mohd. Deli)

செம்போல் தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
சம்சுல்ககார் முகமது டெலி
(Shamshulkahar Mohd. Deli)
பாரிசான் நேசனல்30,13841.984.85
நோர்வானி அகமட்
(Norwani Ahmat)
பாக்காத்தான் அரப்பான்24,28133.8210.16
நூரபின்டி முகமட் சாலே
(Norafendy Mohd Salleh)
பெரிக்காத்தான் நேசனல்16,72223.2923.29  
முகமட் காலிட் முகமட் யூனுஸ்
(Mohd Khalid Mohd Yunus)
தாயக இயக்கம்6540.910.91  
மொத்தம்71,795100.00
செல்லுபடியான வாக்குகள்71,79598.61
செல்லாத/வெற்று வாக்குகள்1,0131.39
மொத்த வாக்குகள்72,808100.00
பதிவான வாக்குகள்95,81375.995.15
      பாரிசான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 13 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு