செவந்த் சானல் கம்யூனிகேசன்ஸ்
செவந்த் சேனல் கம்யூனிகேசன்ஸ் (Seventh Channel Communications) என்பது 1985 இல் துவக்கப்பட்ட ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இது 1990களில் பல தமிழ் தொலைக்காட்சித் தொடர்களை உருவாக்கியது. இது மணிக்கம் நாராயணனின் தலைமையில் உள்ளது.[1][2]
வகை | திரைப்படத் தயாரிப்பு திரைப்பட விநியோகம் |
---|---|
நிறுவுகை | 1985 |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
முதன்மை நபர்கள் | மாணிக்கம் நாராயணன் |
தொழில்துறை | மகிழ்கலை |
உற்பத்திகள் | திரைப்படம் (தமிழ்) |
வரலாறு
தொகுசெவந்த் சேனல் கம்யூனிகேசன்ஸ் 1985 ஆம் ஆண்டில் மாணிக்கம் நாராயணனால் நிறுவப்பட்டது. ஒளிப்படக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவக்கிய பிறகு, மணிக்கம் தூர்தர்சனுக்காக நிகழ்ச்சிகளைத் தயாரிக்கத் துவங்கினார். இந்தத் தயாரிப்பு நிறுவனம் 1990களில் தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களுக்கான முதன்மை தயாரிப்பு நிறுவனமாக மாறியது. நிறுவனம் அதன் செயல்பாட்டின் உச்சத்தினல் இருந்தபோது சிவகுமார், ரோஜா , எஸ். பி. பாலசுப்பிரமணியம் உட்பட பல திரைப்பட நடிகர்களை தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்ற வைத்தது.[3][4] இந்த நிறுவனம் உணவக வணிகம், நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துதல், பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள், தமிழ்நாடு திரைப்பட விழா ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளது.[5][6][7][8]
2005 ஆம் ஆண்டில், கமல்ஹாசன் நடித்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு (2006) படத்தை ரோஜா கம்பைன்ஸ் மற்றும் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கத் துவக்கி நின்றுபோன படத்தின் தயாரிப்பை செவந்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் ஏற்றது.[9]
அறிமுக இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி புதுமுகங்கள் சஞ்சய், ஏக்தா கோஸ்லா, லிஸ்னா, பூஜா ஆகியோர் நடித்த முன்தினம் பார்த்தேனே (2010), பார்த்திபன் மற்றும் பூர்ணா ஆகியோர் நடித்த வித்தகன் (2011) ஆகிய படங்களைத் தயாரித்தது. 2010 களின் முற்பகுதியில், செவந்த் சேனல் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து மகாபாரதம் (2013) தொடரை தமிழில் மொழிமாற்றம் செய்தது.[10]
திரைப்படவியல்
தொகு- திரைப்படத் தயாரிப்பாளராக
தலைப்பு | ஆண்டு | மொழி | இயக்குநர் | நடிகர்கள் | சுருக்கம் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
புதிய தென்றல் | 1993 | தமிழ் | பிரபாகர் | ரமேஷ் அரவிந்த், சிவரஞ்சனி, ராதிகா | ||
கூலி | 1995 | தமிழ் | பி. வாசு | சரத்குமார், மீனா, கவிதா விஜயகுமார் | ||
மாண்புமிகு மாணவன் | 1996 | தமிழ் | எஸ். ஏ. சந்திரசேகர் | விஜய், ஸ்வப்னா பேடி, மன்சூர் அலி கான் | ||
சீனு | 2000 | தமிழ் | பி. வாசு | கார்த்திக், மாளவிகா, பி. வாசு | ||
வேட்டையாடு விளையாடு | 2006 | தமிழ் | கௌதம் வாசுதேவ் மேனன் | கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி | [11] | |
இந்திரலோகத்தில் நா. அழகப்பன் | 2008 | தமிழ் | தம்பி ராமையா | வடிவேலு, யாமினி சர்மா, சுஜா வருணீ | [12] | |
முன்தினம் பார்த்தேனே | 2010 | தமிழ் | மகிழ் திருமேனி | சஞ்சய், ஏக்தா கோஸ்லா, லிஸ்னா, பூஜா | [13] | |
வித்தகன் | 2011 | தமிழ் | ஆர். பார்த்திபன் | பார்த்திபன், பூர்ணா, மிலிந்த் சோமன் | [14] |
- தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளராக
- எத்தனை மனிதர்கள்
- ஸ்ரீரங்கத்து தேவதைகள்
- கனவுகள் இலவசம்
- அலை ஓசை
- வாழ்க்கை
- மறக்கமுடியவில்லை
- பெண்மணம்
- மறுபடியும் அவள்
- உறவுகள் ஒரு தொடர்கதை
- மறுபக்கம்
- மதுமிதா
- பாண்டியன் பரிசு
- நதி எங்கே போகிறது
மேற்கோள்கள்
தொகு- ↑ Franko, Judy (2010-07-22). "Raj TV ropes in Mala Manian as COO". exchange4media.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
- ↑ Narayanan, Sujatha (2016-09-08). "From an idiot box to a productive package". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
- ↑ "List Of Awards Won". seventhchannel.com. 2005. Archived from the original on 2015-03-21.
- ↑ Shekar, Anjana (25 February 2019). "The mega serial: TV actors Devadarshini, Shylaja discuss how the medium has changed". தி நியூஸ் மினிட். பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
- ↑ "About_us". seventhchannel.com. 27 April 2006. Archived from the original on 2016-04-01.
- ↑ Tamil (15 September 2008). "Bombay Talkies restaurant in Chennai". IndiaGlitz.com.
- ↑ "Enjoy world cinema at this film festival". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 2016-11-09. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
- ↑ "Four-day International Film Festival, Al Gore and more". www.behindwoods.com. 2007-12-25. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
- ↑ Warrier, Shobha (2006-03-09). "Release of Vettayadu Vilayadu stayed". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
- ↑ "Will Mahabharatham walk the talk?". Indian Television Dot Com. 29 October 2013.
- ↑ Kumar, Krishna (2006-09-01). "Haasan is brilliant in Vettaiyadu Vilaiyadu". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
- ↑ "Indiralokathil Na Azhagappan". சிஃபி. 2008-03-05. Archived from the original on 15 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
- ↑ Srinivasan, Pavithra (2010-03-22). "Mundhinam Parthene is worth watching". rediff.com. Archived from the original on 2019-10-19. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
- ↑ Srinivasan, Pavithra (2011-11-18). "Review: Vithagan is silly". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.