மு. சரவணன்

மலேசிய அரசியல்வாதி
(டத்தோ எம்.சரவணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


டத்தோ முருகன் சரவணன் எனும் எம். சரவணன் (ஆங்கிலம்: Murugan Saravanan அல்லது M. Saravanan), மலேசியத் தமிழ் அரசியல்வாதி ஆவார். மலேசியா, பேராக், தாப்பா மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். இவர் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற 12-ஆவது பொதுத் தேர்தலில் இருந்து 2022-ஆம் ஆண்டு 15-ஆவது பொதுத் தேர்தல் வரையில் இந்தத் தொகுதியைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.

மாண்புமிகு டத்தோ ஸ்ரீ
மு. சரவணன்
YB Saravanan Murugan
2020-இல் சரவணன்
மலேசிய மனிதவள அமைச்சர்
பதவியில்
30 ஆகஸ்டு 2021 – 24 செப்டம்பர் 2022
ஆட்சியாளர்சுல்தான் அப்துல்லா
பிரதமர்இசுமாயில் சப்ரி யாகோப்
பின்னவர்வி. சிவகுமார்
தொகுதிதாப்பா மக்களவைத் தொகுதி
பதவியில்
10 மார்ச் 2020 – 16 ஆகஸ்டு 2021
ஆட்சியாளர்சுல்தான் அப்துல்லா
பிரதமர்முகிதீன் யாசின்
முன்னையவர்எம். குலசேகரன்
தொகுதிதாப்பா மக்களவைத் தொகுதி
மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை துணை அமைச்சர்
பதவியில்
16 மே 2013 – 9 மே 2018
பிரதமர்நஜீப் ரசாக்
தொகுதிதாப்பா மக்களவைத் தொகுதி
மலேசிய கூட்டாட்சிப் பகுதிகளின் துணை அமைச்சர்
பதவியில்
9 ஏப்ரல் 2009 – 15 மே 2013
பிரதமர்நஜீப் ரசாக்
தொகுதிதாப்பா மக்களவைத் தொகுதி
மலேசிய கூட்டாட்சிப் பகுதிகளின் துணை அமைச்சர்
பதவியில்
19 மார்ச் 2008 – 9 ஏப்ரல் 2009
பிரதமர்அப்துல்லா அகமது படாவி
(2008–2009)
நஜீப் ரசாக்
(2009)
தொகுதிதாப்பா மக்களவைத் தொகுதி
தாப்பா மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மார்ச் 2008
பெரும்பான்மை3,020 (2008)
7,927 (2013)
614 (2018)
5,064 (2022)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சரவணன் முருகன்

4 பெப்ரவரி 1968 (1968-02-04) (அகவை 56)
செந்தூல், கோலாலம்பூர், மலேசியா
அரசியல் கட்சிமஇகா (MIC)
பிற அரசியல்
தொடர்புகள்
பாரிசான் நேசனல் (BN)
பெரிக்காத்தான் நேசனல் (PN)
பாக்காத்தான் அரப்பான்] (PH)
துணைவர்கவிதா விவேகானந்தன்[1]
பிள்ளைகள்3
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்msaravanan68.blogspot.com

1 மார்ச் 2020 -இல்  நடந்த மலேசிய அரசியல் மாற்றத்தினால், முகிதீன் யாசின் பிரதமராக  அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 9 மார்ச் 2020 அன்று டத்தோ  மு. சரவணன் மலேசிய மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதுவே அவர் அமைச்சர் பதவிக்கான முதல் நியமனமாகும்.

பொது

தொகு

இவர் பாரிசான் நேசனல் கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மலேசிய இந்திய காங்கிரசு (மஇகா) கட்சியின் உறுப்பினர்; மற்றும் அக்கட்சியின் துணைத் தலைவரும் ஆவார். மார்ச் 2020 முதல் நவம்பர் 2022 வரை, இவர் ம.இ.கா.வின் ஒரே அமைச்சராகவும், 2018 பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மஇகா வேட்பாளர்களில் ஒருவராகவும்; 2022 பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மஇகா வேட்பாளராகவும் இருந்தார்.[2]

சரவணன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை 1994-இல், தித்திவங்சா மாவட்ட மஇகா கிளையின் செயலாளராகத் தொடங்கினார். மலேசிய அரசியலில் தீவிரமாகப் பங்கேற்பதற்கு முன்பு, இவர் ஓர் அலுவலகப் பையனாகவும்; பின்னர் மலேசிய காவல் துறையின் பணியாளராகவும்; மேலும் ஒரு வணிக நிறுவனத்தின் நிர்வாகியாகவும் பணியாற்றி உள்ளார்.

வாழ்க்கை வரலாறு

தொகு

கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் உள்ள பெகெலிலிங் அடுக்கு மாடி குடியிருப்பில் பிறந்து வளர்ந்தவர். இவரின் தந்தையார் ரப்பர் மரம் சீவும் தொழிலாளி; தாயார் ஒரு குடும்பமாது. சரவணன் குடும்பத்தில் ஒரே ஆண்பிள்ளை. குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், சரவணனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர் கல்வியில் கவனம் செலுத்துவதில் பெற்றோர் உறுதியாக இருந்தனர்.

1975 - 1980-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், கோலாலம்பூரில் உள்ள பிளெட்சர் சாலை தமிழ்ப்பளியில் தன் தொடக்கக் கல்வியைப் பெற்றார். அதன்பின்னர் 1981 - 1986 வரை கோலாலம்பூர் தித்திவங்சா இடைநிலைப்பள்ளியில் மேல்நிலைப்பள்ளிப் படிப்பை பெற்றார்.

உயர்நிலைக் கல்வி

தொகு

மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்கும் கட்டத்தில், அவரின் தந்தை காலமானார். குடும்பச் சுமையின் காரணமாக சரவணன் பகலில் வேலை செய்தார். இரவில் படிப்பில் கவனம் செலுத்தினார். கோலாலம்பூரில் ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து இரவில் தன் மேல்படிப்பைத் தொடர்ந்தார்.[3]

இந்தக் கட்டத்தில், மஇகாவின் முன்னாள் பொதுச்செயலாளர் டி,பி, விஜேந்திரன், மைக்கா ஓல்டிங்ஸ் நிறுவனத்தில் சரவணனுக்கு ஒருவேலை கிடைப்பதற்கு உதவினார். அந்த வகையில் அவர் மைக்கா ஓல்டிங்ஸ் நிறுவனத்தில் ஓர் அலுவலகப் பையனாக வேலையில் சேர்ந்தார்.[4][5]

பட்டப்படிப்பு

தொகு

1989-ஆம் ஆண்டில் இருந்து 1993-ஆம் ஆண்டு வரையில், இவர் இங்கிலாந்தில் உள்ள எமர்ஸ்மித் & வெஸ்ட் இலண்டன் கல்லூரியில் (Hammersmith & West London College) வணிக நிர்வாகம் படிக்க இலண்டன் சென்றார். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் இளங்கலைப் பட்டம் பெற்றார். மலேசியா திரும்பியதும், ஈசி கால் பேஜர்ஸ் (Easy Call Pagers) எனும் நிறுவனத்தில் வணிகத் துறை அதிகாரியாகத் தன் பதவியைத் தொடங்கினார்.[6]I

பின்னர் 2018-ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்தின் மேற்கு பல்கலைக்கழகத்தில் (University of the West of Scotland) தன் வணிக நிர்வாகப் படிப்பைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டில் முதுகலை பட்டத்தைப் பெற்றார்.[7]

அரசியல் வாழ்க்கை

தொகு

மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் படுவதற்கு முன்பு இவர் மலேசிய மேலவையின் செனட்டராக நியமிக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், அவர் தாப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும், அந்தத் தேர்தலில் மலேசிய இந்திய காங்கிரசு பரவலான தோல்வியைச் சந்தித்தது. மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மஇகா உறுப்பினர்கள் மூவரில் சரவணனும் ஒருவர் ஆவார்.

மலேசிய நாடாளுமன்றத்தில் அவரின் கட்சி மூன்று இடங்களைப் பெற்று இருந்தாலும், ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி, அவருக்கு துணை அமைச்சர் பதவியை வழங்கியது. 2008 முதல் 2013 வரை அவர் மலேசிய கூட்டாட்சிப் பகுதிகளின் துணை அமைச்சராகப் பதவி வகித்தார்.[8]

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசிய நாடாளுமன்றம்[9][10][11]
# தொகுதி வேட்பாளர் வாக்குகள் % எதிரணி வாக்குகள் % வாக்குப் பதிவு பெரும்
பான்மை
வாக்கு
அளித்தவர்கள்
2008 P072 தாப்பா, பேராக் மு. சரவணன் (மஇகா) 14,084 52.53% தான் செங் தோ
Tan Seng Toh (பிகேஆர்)
11,064 41.27% 26,811 3,020 70.12%
2013 மு. சரவணன் (மஇகா) 20,670 55.91% வசந்த குமார்
(K. Vasantha Kumar (பிகேஆர்)
12,743 34.48% 36,957 7,927 81.30%
சருசாமான் பிசுதாமான்
(Shaharuzzaman Bistamam (பெர்ஜாசா)
2,053 5.56%
ரிசுவான் பானி
(Ridzuan Bani (சுயேச்சை)
337 0.91%
2018 மு. சரவணன் (மஇகா) 16,086 44.47% முகமது அசுனி முகமது
(Mohd Azni Mohd Ali) (பெர்சத்து)
15,472 42.77% 37,113 614 78.75%
நோரசுலி மூசா
(Norazli Musa) (பாஸ்)
4,615 12.76%
2022 மு. சரவணன் (மஇகா) 18,398 41.36% சரசுவதி கந்தசாமி
(Saraswathy Kandasami) (பிகேஆர்)
13,334 29.98% 44,481 5,064 71.81%
முகமது யாட்சான்
(Muhammad Yadzan Mohamad) (பெர்சத்து)
12,115 27.24%
மியோர் அயிடிர் சுகைமி
(Mior Nor Haidir Suhaimi) (தாயக இயக்கம்)
335 0.75%
முகமது அக்பர் சரிப்
(Mohamed Akbar Sherrif Ali Yasin) (வாரிசான்)
200 0.45%
கதிரவன்
(M.Kathiravan) (சுயேச்சை)
99 0.22%
மலேசிய நாடாளுமன்றம்:தாப்பா மக்களவைத் தொகுதி
ஆண்டு தேசிய முன்னணி வாக்குகள் வீதம் எதிர்க்கட்சி வாக்குகள் வீதம்
2008 மு. சரவணன் (ம.இ.கா) 14,084 53% தான் செங் தோ (கெடிலான்) 11,064 41%

விருதுகள்

தொகு

மலேசிய விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Court Allows Saravanan To Strike Out Former Business Partner's Application". Bernama. 13 April 2010 இம் மூலத்தில் இருந்து 29 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629124439/http://www.bernama.com/bernama/v3/news_lite.php?id=490224. 
  2. "M. Saravanan, Y.B. Datuk". Parliament of Malaysia. Archived from the original on 29 January 2011. பார்க்கப்பட்ட நாள் 16 June 2010.
  3. "University of Wales Trinity Saint David". uwtsd.ac.uk. Archived from the original on 8 June 2020. பார்க்கப்பட்ட நாள் 7 June 2020.
  4. "Laman Utama". rmp.gov.my. Archived from the original on 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 7 June 2020.
  5. "Bloomberg - MAIKA Holdings". Bloomberg L.P. இம் மூலத்தில் இருந்து 7 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200607150020/https://www.bloomberg.com/profile/company/2251777Z:MK. 
  6. "EasyCall Malaysia Sdn Bhd - Paging Services in Kuala Lumpur". my6513-easycall-malaysia-sdn-bhd.contact.page. Archived from the original on 7 June 2020. பார்க்கப்பட்ட நாள் 7 June 2020.
  7. "Home - University of Wales". wales.ac.uk. Archived from the original on 31 August 2009. பார்க்கப்பட்ட நாள் 7 June 2020.
  8. "Vote for the President's Men, Says Samy Vellu". Bernama. 10 September 2009 இம் மூலத்தில் இருந்து 16 October 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091016180711/http://www.bernama.com/bernama/v5/newspolitic.php?id=439513. 
  9. "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri". Election Commission of Malaysia. Archived from the original on 6 September 2011. பார்க்கப்பட்ட நாள் 11 July 2010. Percentage figures based on total turnout.
  10. "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. Archived from the original on 1 December 2020. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017. Results only available from the 2004 Malaysian general election.
  11. "Malaysia Decides 2008". The Star (Malaysia). Archived from the original on 11 January 2010. பார்க்கப்பட்ட நாள் 6 January 2010..
  12. 12.0 12.1 "Semakan Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat". Bahagian Istiadat dan Urusetia Persidangan Antarabangsa. Prime Minister's Department (Malaysia). Archived from the original on 15 January 2021. பார்க்கப்பட்ட நாள் 25 October 2018.
  13. L. Suganya (1 February 2014). "Some 320 individuals awarded in conjunction with Federal Territories Day". The Star. Archived from the original on 31 January 2014. பார்க்கப்பட்ட நாள் 12 October 2018.

வெளி இணைப்புகள்

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._சரவணன்&oldid=4034459" இலிருந்து மீள்விக்கப்பட்டது