தொன்மா

(டைனோசோர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

Life

தொன்மா (Dinosaur, டைனோசர் (கேட்க) என்பது ஊர்வன வகுப்பில் திரியாசிக்கு யுகத்தில் வாழ்ந்த விலங்கினங்களைக் குறிக்கின்றன. இந்த உயிரினம் தற்போது தமிழில் துணுச்சாரை என்று அழைக்கப்படுகிறது. இவற்றின் படிமலர்ச்சி இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது.[1] இவற்றின் வரலாற்றுக் காலம் ஏறத்தாழ 231 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 241 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும். அறுதியிட்டு சுமார் 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத்தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கின்றன.[2] இவற்றின் வல்லாண்மைக் காலமானது, சுமார் 201 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய திரயாசிக்கு-சூராசைக் யுகங்களின் அழிவுக்குட்பட்ட காலமாகும். இவற்றின் வல்லாண்மை மேலும் தொடர்ந்து சூராசிக்-கிரேட்டேசியசு யுகங்கள் வரை தொடர்ந்து கிரேட்டேசியசு-பாகலியோசீன் யுகத்தில் (ஏறத்தாழ 66 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்) ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின.

தொன்மா
புதைப்படிவ காலம்:கடந்த டிரையாசிக் காலம்

முதல்–ஹாலோசெனெ தற்போது,

(231.4 மில்லியன் ஆண்டுகள்– 0) Mya
தொன்மாக்களின் எலும்புக்கூட்டுத் தொகுப்பு :

கடிகார சுழற்சியில் மேலிருந்து இடது:

(சிறகுள்ள தெரோபோடா),

(மிகப்பெரிய சௌரோபோடா),

(வாத்தைப் போன்ற ஆர்னிதோபோட்),

(கொம்புள்ள செரடாப்சியன்கள்),

(கவசமுள்ள ஸ்டெகொசௌரியா),

(காப்புள்ள அங்கைலோசௌரியா).

உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
{{{1}}}

Major groups

படிம ஆய்வுகளின்படி சூராசிக்கு யுகத்தில்[3] வாழ்ந்த தொன்மாக்களில் ஒரு வகையான தெரோபோடு என்னும் ஒரேயொரு ஆதி இனத்தின் கிளை மட்டும் தப்பி இன்று பறக்கும் இறக்கைகளுள்ள பறவை இனமாக உள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.[4] இவை மட்டுமே அழிவிலிருந்து எஞ்சிய வாழும் தொன்மாக்களாக அறியப்படுகின்றன. மேலும் இங்கு தொன்மாக்களில் பறவைகள் என குறிப்பிடப்பட்டவையும் நிலத்தில் வாழ்ந்த பறவைத் தொன்மாக்களாகும். இன்று அறியப்பட்ட எல்லா தொன்மாக்களும் ஏறத்தாழ நிலத்தில் தரை மீது வாழ்ந்தனவே; படிமம் கிடைத்ததனடிப்படையில் நீருள்ளோ, பறந்தோ வாழவில்லை.

தொன்மாக்கள் வகைப்பாடு, புறத்தோற்றம், சூழ்நிலை அடிப்படையில் விலங்குலகின் பொதுவான நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. தொல்லியல் ஆய்வின்படி, தொல்லுயிரியலாளர்கள் தொன்மாக்களில் சுமார் 500 பேரினங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களையும் வகைப்படுத்தியுள்ளனர். 1970களிலிருந்து நடைபெற்று வரும் ஆய்வுகளின் அடிப்படையில் தொன்மாக்கள், குளிர்-இரத்த விலங்குகளாகவும், வளர்சிதை மாற்றத்திற்குட்பட்டும், பல்வேறு சூழல் தகவமைப்புடன், அவற்றினுள் சமூகத் தொடர்புடையவையாகவும் அறியப்படுகின்றன. மேலும் சில தொன்மாக்கள் ஊனுண்ணிகளாகவும், சில தாவர உண்ணிகளாகவும் இருந்தன.படிமங்களின் அடிப்படையில் தொன்மாக்கள் கூடுகட்டுபவைகளாகவும், முட்டையிடுபவை களாகவும் அறியப்பட்டன.

தொன்மாக்களில் சில இரு காலில் நடப்பவையாகவும், சில நான்கு கால்களில் நடப்பவையாகவும் சில இவ்விரண்டையும் மாறி மாறி செயற்படுத்துபவையாகவும் இருக்கும். பரந்த உடலின் புறவமைப்பில் கொம்புகள், உச்சிமுற்கள், எலும்புக்கவசம், முதுகெலும்பு முள் போன்ற சிறப்புறுப்புகளைக் கொண்டிருந்தன. தொன்மாக்கள் மிக நீண்ட, பருத்த உடலமைப்பைப் பெற்றிருந்தன. சாரோபோடு இனம் சுமார் 39.7 மீட்டர் (130 அடி) நீளத்தையும்,[5] 18 மீட்டர் (59 அடி) உயரமும் கொண்ட மிகப்பெரும் நில வாழ் உயிரினமாக அறியப்படுகிறது. சில தொன்மாக்கள், சான்றாக சிக்சியானிகஸ் சிறிய 50 செ.மீ அளவில் (20 அங்குலம்) அளவே இருந்தன.

தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: ஒருநிலக் கொள்கை.) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொன்மாக்களின் படிமங்கள் கண்டறியப்பட்ட பின்னர் தொன்மாக்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகின. மேலும் ஜுராசிக்பார்க் திரைப்படத்தின் மூலம் தொன்மாக்களைப்பற்றிய கற்பனைக் கதைகள், புதினங்கள், புத்தகங்கள், பொம்மைகள், என அனைவராலும் பரவலாக அறியப்பட்டன.

தொன்மா - சொற்பிறப்பியல் & அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களும்

தொகு

தொன்மா என்பது இங்கே முற்றிலுமாய் அழிந்து போன விலங்கினங்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுகின்றது. மா என்றால் விலங்கு, தொல் என்றால் பழைய, எனவே தொல் + மா = தொன்மா = தொல் பழங்காலத்தில் இருந்த விலங்கினம். தொன்மா என்று கூறினாலும், இவைகளை போலவே தொல் பழங்காலத்தில் இருந்து வாழ்ந்து இன்றும் நம்மோடு இருக்கும் முதலை போன்ற இனங்களை இச்சொல் குறிக்காது.

தொன்மாக்கள் வாழ்ந்த காலத்தில் அதே காலத்தில் முதலைகளும், தவளைகளும், பல்லிகளும், ஆமைகளும், நத்தைகளும், பூச்சிகளும் வாழ்ந்திருந்தன.

கடலில் கிளிஞ்சலுயிரி, கணவாய் வகைகள் (squids), இளகிநீரிகள் (jelleyfish), விண்மீனிகள் (நட்சத்திர மீன்கள்), சுறா மீன்கள், பிற மீன் இனங்கள், இன்று மறைந்துவிட்ட கடலில்வாழ்ந்த இச்தியோசோர், பிளெசியோசோர், ஊர்வன உடலமைப்புகொண்ட வௌவால் போன்ற இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் மட்டுமல்லாமல் சிறிய எலி அளவிலான பாலூட்டி வகைகளும் வாழ்ந்தன.

அக்காலத்தில் பூக்கும் மரம் செடிகொடிகள் இன்னும் நில உலகில் தோன்றவில்லை. (பார்க்க: நிலவியல் உயிரின ஊழிக் காலங்கள்). இத் தொன்மாக்கள் என்பவை மிகப்பெரும்பாலும் நீரில் வாழாது நிலத்தின் தரைமீது வாழ்ந்த உயிரினங்களாகும். பறக்கவல்ல ஒருசில தொன்மா இனங்களும் (எ.கா. தெரோபோடு) இருந்தன.

தொல்பழங்காலத்தில் வாழ்ந்து அழிந்துபோன சிலவகை ஊர்வன விலங்குகளாகிய பெலிக்கோசோர், டைமெட்ரான் போன்றனவும், இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் முதலியனவும் நீர்வாழ் விலங்காக இருந்த இச்தியோசோர், பிளெசியோசோர், மொசசோர் முதலியனவும் இந்த தொன்மா வகையைச் சேர்ந்தவை அல்ல.

தொன்மாவை ஆங்கிலத்தில் டயனசோர் (Dinosaur) என்று அழைப்பர். இவ் ஆங்கிலச்சொல் கிரேக்க மொழியில் உள்ள இருசொற்களின் கூட்டாய்ப் பெறப்பட்டது. டைனோஸ் + சோரா = டைனசோர் . டைனோஸ் (δεινός deinos ) என்றால் “கொடிய” “அச்சமூட்டும்”, “பெரிய” என்று பொருள்படும்; சோரா அல்லது சௌரா ( σαύρα , saura ) என்றால் “பல்லி”, “ஊர்வன” என்று பொருள்படும். எனவே இத்தொன்மாக்களைக் கொடும் பல்லி அல்லது கொடிய ஊர்வன என்றும் சொல்லலாம்.

தொன்மா கண்டுபிடிப்பு

தொகு

ரிச்சர்டு ஓவன் (Richard Owen) என்னும் ஆங்கிலேய தொல்லுயிரியல் ஆய்வளர், 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்த[6] தொல்லுயிரெச்சங்களைக் கொண்டு, அவ்விலங்குகள், பல்லி போன்ற ஊர்வன வகையைச் சேர்ந்த சோரியன் என்னும் உயிரினத்தின் ஓர் உட்பிரிவில் டயனோசோரியா என்னும் ஒரு புதிய பிரிவில் சேர்த்தார். எனவே இவரே இந்த புதிய டயனசோர் என்னும் தொன்மாக்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர்.

கிரேக்கமொழிச் சொற்களில் இருந்து இப்பெயர் சூட்டியவரும் இவரே. ரிச்சர்டு ஓவன் அவர்கள் டயன்சோர் எனப் பெயர் சூட்டக் காரணம் அதன் கொடிய பற்களும் அது ஊட்டிய அச்சத்தாலும் அல்ல, ஆனால் அது வாழ்ந்த காலத்தில் அது எத்தனை வியப்பூட்டும் பெரிய விலங்காக இருந்திருக்கும் என்னும் பெருமை கருதி கொடும்பெரும்பல்லி என்று பொருள் தரும் டயனசோர் எனப் பெயரிட்டார் ,[7]

தொன்மாக்கள் மிகப்பல விதமான இனங்களைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். 2006ல் நடத்திய ஆய்வின்படி குறைந்தது கட்டாயம் 527 வெவ்வேறு தொன்மா (டயனசோர்) இனங்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 1844 தொன்மா இனங்கள் இருந்திருக்கக்கூடும் என கணிக்கின்றனர் [8][9]

தொன்மாக்களில் சில இனங்கள் இலையுணவு (மரஞ்செடி கொடி உணவுகள்) உண்பனவாகவும், சில ஊனுண்ணிகளாகவும் இருந்தன. சில இருகால்களில் நடப்பனவாகவும், சில நான்கு கால்களில் நடப்பனவாகவும், அம்மோசோரஸ் இகுவானடோன் போன்ற சில தொன்மாக்கள் தேவைக்கேற்றார் போல இருகால்களிலுமோ அல்லது நான்கு கால்களிலுமோ நடக்கவல்லவனவாய் இருந்தன.

தொன்மா வகைப்பாடு

தொகு
 
தொன்மா (பரிணாமம்)

2017ல் மாத்யூ ஜி பரோன் மற்றும் குழுவினர்கள் வகைப்பட்டியலின் படி,[10][11]

உருவ பரும வேறுபாடுகள்

தொகு
 
அளவை ஒப்பிட்டுப் பார்க்க டிப்லோடோகஸ் என்னும் தொன்மாவும் மனிதனும்


சோராப்போடா போன்ற சில தொன்மாக்கள் இன்றுள்ள திமிங்கிலம் போன்ற ஒரு சில விலங்குகளைத் தவிர மற்ற எல்லா விலங்குகளைக் காட்டிலும் மிக மிகப்பெரியதாக இருந்தன. நீலத் திமிங்கிலம் என்பது 190,000 கிலோ.கி (209 டன்) எடை கொண்டதாகவும் 33.5 மீட்டர் (110 அடி) நீளம் கொண்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொன்மாக்களை ஒப்பிட இன்றுள்ள யானை கூட மிகமிகச் சிறியதாகத் தென்படும்.

பெரும்பாலான தொன்மாக்கள் சோராப்போடா போல் பெரியன அல்ல. சராசரியாக பெரும்பாலான தொன்மாக்கள் 500 கிலோ.கி எடையுள்ளனவாக இருந்ததாக கணக்கிடுகின்றனர். தொன்மாக்களில் 63 இனங்களின் சராசரி எடை 850 கிலோ.கி எனவும் அமெரிக்காவின் கிரிஸ்லி கரடி அளவினதே என்றும் கணக்கிட்டுள்ளனர். தொன்மாக்களில் சரி பாதியானவை 2 டன் எடைக்கும் குறைவானதே என்கின்றனர். இன்றுள்ள பபலூட்டிகளின் சராசரி எடை 1 கிலோ கிராமுக்கும் குறைவானதே (863 கிராம்) [12]

தொன்மாக்களின் சிறப்பான உடலமைப்புகள்

தொகு
 
தொன்மாக்களை ஒப்பிடுவதற்கான அளவீட்டு வரைப்படம்
 
ஐரோப்பாசோர் வாழிடம் (கற்பனை ஓவியம்)

இன்றுவரை நிகழ்ந்துள்ள எராளமான கண்டுபிடிப்புகளை கணக்கில் கொண்டால் எல்லாத் தொன்மாக்களுக்கும் பொருந்தி வரும் பொது அமைப்புகள் அரிதாகிவந்தாலும், ஏறத்தாழ எல்லா தொன்மாக்களுமே மிகுதொல் இனமாகிய ஆர்க்கியோசோர்-வகையான எலும்பு அமைப்பின் மாறுதலாகவே உள்ளன.

(வளரும்) தொன்மாக்கள் எப்பொழுதுமே தங்களது உணவினைத் தேடி அலைந்தன. இத் தொன்மாக்களின் உடல் மிகவும் பொியதாக இருந்ததால் இவற்றிற்கு அதிகமான உணவு தேவையாக இருந்தது. இவற்றின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள

பறவைகளின் கூர்ப்பு

தொகு
 
பெர்லினில் உள்ள ஆர்க்கியோப்டெரிக்ஸ் தொன்மம்

மிசொசோயிக் காலத்தில் தெரோபொடா இனங்களிலிருந்து பறவைகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக பரிணாமவியல் அறிஞர் தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லே முதன் முதலாக 1868ல் சுட்டிக்காட்டியுள்ளார். ஆர்க்கியோப்டெரிக்ஸின் தொன்மம் கண்டெடுக்கப்பட்ட பின்னரே பறவைகளுக்கும் தொன்மாக்களுக்கும் உள்ள ஒப்பீடு பறவைகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்விற்கு வித்திட்டது.

 
பறவை, தொன்மாவின் உள்ளுறுப்பு ஒப்பீடு

பறவை, தொன்மாக்களின் அலகு, உடலுறுப்பு அமைப்பு, இறக்கைகளின் பரிணாம வளர்ச்சி, முட்டையிடல் பண்பு, சுவாச உறுப்புகளின் மாற்றம் முதலிய ஆய்வுகள் பல ஒப்புமைகளைக் குறிப்பிடுகின்றன.

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. Nesbitt, Sterling J.; Barrett, Paul M.; Werning, Sarah; Sidor, Christian A.; Charig, Alan J. (5 December 2012). "The oldest dinosaur? A Middle Triassic dinosauriform from Tanzania". Biology Letters 9 (1): 20120949. doi:10.1098/rsbl.2012.0949. பப்மெட்:23221875. பப்மெட் சென்ட்ரல்:3565515. http://rsbl.royalsocietypublishing.org/content/9/1/20120949. 
  2. Alcobar, Oscar A.; Martinez, Ricardo N. (19 October 2010). "A new herrerasaurid (Dinosauria, Saurischia) from the Upper Triassic Ischigualasto Formation of northwestern Argentina". ZooKeys 63 (63): 55–81. doi:10.3897/zookeys.63.550. பப்மெட்:21594020. 
  3. Lee, MichaelS.Y.; Cau, Andrea; Naish, Darren; Dyke, Gareth J. (1 August 2014). "Sustained miniaturization and anatomical innovation in the dinosaurian ancestors of birds". Science 345 (6196): 562–566. doi:10.1126/science.1252243. பப்மெட்:25082702. Bibcode: 2014Sci...345..562L. http://www.sciencemag.org/content/345/6196/562. பார்த்த நாள்: August 2, 2014. 
  4. St. Fleur, Nicholas (8 December 2016). "That Thing With Feathers Trapped in Amber? It Was a Dinosaur Tail". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2016/12/08/science/dinosaur-feathers-amber.html. பார்த்த நாள்: 8 December 2016. 
  5. Sellers, William Irvin; Margetts, Lee; Coria, Rodolfo Aníbal; Manning, Phillip Lars (2013-10-30). "March of the Titans: The Locomotor Capabilities of Sauropod Dinosaurs". PLoS ONE 8 (10): e78733. doi:10.1371/journal.pone.0078733. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட்:24348896. Bibcode: 2013PLoSO...878733S.   
  6. Owen, R. (1842). "Report on British Fossil Reptiles." Part II. Report of the British Association for the Advancement of Science, Plymouth, England.
  7. Farlow, J.O., and Brett-Surman, M.K. (1997). Preface. In: Farlow, J.O., and Brett-Surman, M.K. (eds.). The Complete Dinosaur. Indiana University Press: Bloomington and Indianapolis, ix-xi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-33349-0
  8. Fountain, Henry. "Many more dinosaurs still to be found." New York Times: 12 Sept. 2006. [1]
  9. Wang, S.C., and Dodson, P. (2006). Estimating the Diversity of Dinosaurs. Proceedings of the National Academy of Sciences USA 103:37, pp. 13601-13605. [2] பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்[3]
  10. Baron MG; Norman DB; Barrett PM (2017). "A new hypothesis of dinosaur relationships and early dinosaur evolution". Nature 543: 501–506. doi:10.1038/nature21700. 
  11. Naish, Darren (2017), "Ornithoscelida Rises: A New Family Tree for Dinosaurs", Scientific American Tetrapod Zoology blog, பார்க்கப்பட்ட நாள் March 24, 2017
  12. Origin of Dinosaurs and Mammals – Erickson பரணிடப்பட்டது 2013-06-18 at the வந்தவழி இயந்திரம் Soruce of Erickson quote.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்மா&oldid=3710943" இலிருந்து மீள்விக்கப்பட்டது