தஞ்சோங் மானிஸ் மக்களவைத் தொகுதி

சரவாக் மக்களவைத் தொகுதி

தஞ்சோங் மானிஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tanjong Manis; ஆங்கிலம்: Tanjong Manis Federal Constituency; சீனம்: 沙拉托联邦选区) என்பது மலேசியா, சரவாக், முக்கா பிரிவு; சரிக்கே பிரிவு ஆகிய பிரிவுகளின் தஞ்சோங் மானிஸ் மாவட்டம்; சரிக்கே மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P206) ஆகும்.[5]

தஞ்சோங் மானிஸ் (P206)
மலேசிய மக்களவைத் தொகுதி
 சரவாக்
Tanjong Manis (P206)
Federal Constituency in Sarawak
தஞ்சோங் மானிஸ் மக்களவைத் தொகுதி
(P206 Tanjong Manis)
மாவட்டம்தஞ்சோங் மானிஸ் மாவட்டம் சரிக்கே மாவட்டம்
வட்டாரம்முக்கா பிரிவு சரிக்கே பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை32,948 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிதஞ்சோங் மானிஸ் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்கூச்சிங் சரிக்கே
பரப்பளவு2,024 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2005
கட்சி      சரவாக் கட்சிகள் கூட்டணி
மக்களவை உறுப்பினர்யூசுப் அப்துல் வகாப்
(Yusuf Abdul Wahab)
மக்கள் தொகை32768 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2008
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

தஞ்சோங் மானிஸ் மக்களவைத் தொகுதி 2005-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2008-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2008-ஆம் ஆண்டில் இருந்து தஞ்சோங் மானிஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

சரிக்கே பிரிவு

தொகு

சரிக்கே பிரிவு (Sarikei Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். சரிக்கே பிரிவின் தொடக்க கால வரலாறு 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து தொடங்குகிறது.

1845-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி, இந்த சரிக்கே பகுதியைத்தான், ராஜா ஜேம்சு புரூக் முதன்முதலில் பார்வையிட்டார். ஜேம்சு புரூக்கின் நிர்வாகத்திற்கு உள்ளூர் மக்களின் முதல் எதிர்ப்பு இங்குதான் தொடங்கியது.

சரிக்கே பிரிவின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததாகும். சரவாக்கில் உள்ள மற்ற பிரிவுகளை விட சரிக்கே பிரிவு அதிக அளவில் மிளகு உற்பத்தி செய்கிறது.

தஞ்சோங் மானிஸ் மக்களவைத் தொகுதி

தொகு




 

தஞ்சோங் மானிஸ் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7]

  மலாயர் (45.9%)
  சீனர் (5.6%)
  இதர இனத்தவர் (0.6%)





 

தஞ்சோங் மானிஸ் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (49.94%)
  பெண் (50.06%)
 

தஞ்சோங் மானிஸ் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (6.88%)
  21-29 (22.45%)
  30-39 (21.37%)
  40-49 (17.29%)
  50-59 (15.54%)
  60-69 (10.19%)
  70-79 (4.55%)
  80-89 (1.24%)
  + 90 (0.48%)
தஞ்சோங் மானிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2008 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
தஞ்சோங் மானிஸ் தொகுதி 2005-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
12-ஆவது மக்களவை P206 2008–2013 நோரா அப்துல் ரகுமான்
(Norah Abdul Rahman)
பாரிசான் நேசனல்
(ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB)
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018 யூசுப் அப்துல் வகாப்
(Yusuf Abd. Wahab)
2018–2022 சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)
(ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
யூசுப் அப்துல் வகாப்
(Yusuf Abdul Wahab)
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)16,47486.5286.52  
சைனாப் சுகைலி
(Zainab Suhaili)
பாக்காத்தான் அரப்பான் (PH)2,56613.485.83
மொத்தம்19,040100.00
செல்லுபடியான வாக்குகள்19,04098.17
செல்லாத/வெற்று வாக்குகள்3551.83
மொத்த வாக்குகள்19,395100.00
பதிவான வாக்குகள்32,94857.798.08
Majority13,90873.0411.65  
      சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு