துனித் வெல்லாளகே

துனித் வெல்லாளகே (Dunith Nethmika Wellalage, பிறப்பு: 9 சனவரி 2003) ஒரு தொழில்முறை இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் சூன் 2022 இல் இலங்கை தேசிய அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகமானார்.[2] மொறட்டுவை புனித செபத்தியன் கல்லூரியிலும், மருதானை புனித யோசேப்புக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[3]

துனித் வெல்லாளகே
Dunith Wellalage
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்துனித் நெத்மிக்க வெல்லாளகே
பிறப்பு9 சனவரி 2003 (2003-01-09) (அகவை 21)
கொழும்பு, இலங்கை
பட்டப்பெயர்வெல்லா
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடது-கை வழமைச் சுழல்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 162)24 சூலை 2022 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 204)14 சூன் 2022 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப2 ஆகத்து 2024 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2019–இன்றுலங்கன் துடுப்பாட்டக் கழகம்
2024போர்ச்சூன் பரிசால்
2024-இன்றுகொழும்பு இசுட்டார்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ப.ஒ.நா மு.த
ஆட்டங்கள் 1 22 25
ஓட்டங்கள் 29 290 772
மட்டையாட்ட சராசரி 14.50 22.30 27.57
100கள்/50கள் 0/0 0/1 0/4
அதியுயர் ஓட்டம் 18 67* 78*
வீசிய பந்துகள் 78 944 3,835
வீழ்த்தல்கள் 0 25 80
பந்துவீச்சு சராசரி 33.28 26.87
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 5
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/40 8/152
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 8/0 14/0
மூலம்: கிரிக்கின்ஃபோ, 3 ஆகத்து 2024

உள்ளூர்ப் போட்டிகளில் பங்கேற்பு

தொகு

2022 சூலையில், யாழ்ப்பாணம் கிங்சு அணியில் சேர்ந்து லங்கா பிரிமியர் லீக்கின் மூன்றாவது பதிப்பில் விளையாடினார்.[4] 2024 இல் வங்காளதேச பிரிமியர் தொடரில் போர்ச்சூன் பரிசால் அணியிலும் விளையாடி வருகிறார்.

பன்னாட்டுப் போட்டிகள்

தொகு

சனவரி 2022 இல், மேற்கிந்தியத் தீவுகளில் 2022 ஐசிசி 19-இற்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கான இலங்கை அணியின் தலைவராக வெல்லாலகே நியமிக்கப்பட்டார்.[5] இச்சுற்றில் இலங்கையின் தொடக்க ஆட்டத்தில், வெல்லாளகே ஐந்து இலக்குகளை வீழ்த்தி,[6] ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] இச்சுற்றில், இலங்கையின் அடுத்த போட்டியில், இவர் மற்றொரு ஐந்து இலக்குகளை எடுத்து, போட்டியின் நாயகனாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இலங்கையின் சூப்பர் லீக் அரையிறுதிப் போட்டியில், வெல்லாளகே 113 ஓட்டங்களை எடுத்தார்.[9] 19-வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் சதம் அடித்த இலங்கை அணியின் முதல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.[10] 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணச் சுற்றில், பதினேழு தடவை ஆட்டமிழக்கச் செய்து, முன்னணி இலக்கு வீழ்த்தாளராக முடித்தார்.[11]

2022 மே மாதத்தின் பிற்பகுதியில், இலங்கையின் ஒரு நாள் பன்னாட்டு அணியில், ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம் பெற்றார்.[12][13] 2022 சூன் 14 அன்று இலங்கைக்காக ஆத்திரேலியாவுக்கு எதிராக தனது பன்னாட்டு ஒருநாளில் அறிமுகமானார்.[14] அடுத்த மாதம், ஆத்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இலங்கையின் தேர்வு அணியில் சேர்க்கப்பட்டார்.[15]

சூலை 2022 இல், பாக்கித்தானுக்கு எதிரான தொடருக்காக இலங்கையின் தேர்வு அணியில் இடம் பெற்றார்.[16] 2022 சூலை 24 அன்று, பாக்கித்தானுக்கு எதிராக இலங்கைக்காக தனது முதலாவது தேர்வுப் போட்டியில் அறிமுகமானார்.[17]

2024 மே மாதத்தில், 2024 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாட அழைக்கப்பட்டார்.[18]

மேற்கோள்கள்

தொகு
  1. "Dunith Wellalage". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 December 2019.
  2. "Dunith, who once withdrew from Sri Lanka U19 team for O/L's returns as skipper". Island. பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  3. Waris, Sarah. "Who is Dunith Wellalage, the 20-year-old Sri Lanka left-arm spinner who could take the World Cup by storm?". Wisden.com. பார்க்கப்பட்ட நாள் 25 September 2023.
  4. "LPL 2022 draft: Kandy Falcons sign Hasaranga; Rajapaksa to turn out for Dambulla Giants". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 July 2022.
  5. "Sri Lanka U19 Team to the World Cup". Cricket Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 4 January 2022.
  6. "Sri Lanka U19s start World Cup campaign with a rousing win". The Papare. பார்க்கப்பட்ட நாள் 15 January 2022.
  7. "Bowlers, Wyllie give Australia comprehensive win over West Indies in U-19 World Cup opener". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 January 2022.
  8. "Sri Lanka stun Australia after Wellalage heroics". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 January 2022.
  9. "Dunith Wellalage century takes Sri Lanka to fifth-place playoffs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
  10. "Wellalage's record-breaking century helps Sri Lanka brush South Africa aside". The Papare. பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
  11. "India win fifth U-19 World Cup title after seamers Raj Bawa, Ravi Kumar prove too hot for England". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 February 2022.
  12. "Rajapaksa recalled to ODI squad for Australia series". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 10 June 2022.
  13. "U19 World Cup breakout star called-up in Sri Lanka's squad for Australia ODIs". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 10 June 2022.
  14. "1st ODI (D/N), Pallekele, June 14, 2022, Australia tour of Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 June 2022.
  15. "Maheesh Theekshana and Dunith Wellalage called into Sri Lanka Test squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 July 2022.
  16. "Sri Lanka name squad for Pakistan Test series". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 14 July 2022.
  17. "2nd Test, Galle, July 24 - 28, 2022, Pakistan tour of Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 July 2022.
  18. "Sri Lanka's Squad for ICC Men's T20I World Cup 2024". ScoreWaves (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-11.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துனித்_வெல்லாளகே&oldid=4058365" இலிருந்து மீள்விக்கப்பட்டது