பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2022
பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் 2022 சூலையில் இரண்டு தேர்வுப் போட்டிகளில் இலங்கைத் துடுப்பாட்ட அணியுடன் விளையாடியது.[1] இத்தேர்வுத் தொடர் 2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக விளையாடப்பட்டது.[2][3] 2022 ஏப்பிரலில், பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் இத்தொடர் நடத்தப்படுவதை உறுதி செய்தது.[4][5] தொடக்கத்தில், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடத் தீர்மானிக்கப்பட்டிருந்தது,[6] ஆனால் இந்த ஒருநாள் போட்டிகள் 2020–2023 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம் சூப்பர் லீகின் ஒரு பகுதியாக இல்லாதிருந்ததால்,[7] இப்போட்டிகளை நடத்துவதில்லை என 2022 மே மாதத்தில் தீர்மானிக்கப்பட்டது.[8] 2022 சூன் மாதத்தில் தேர்வுப் போட்டிகளுக்கான அரங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.[9] பாக்கித்தான் கடைசியாக 2015 சூன் சூலை மாதங்களில் இலங்கையில் தேர்வுப் போட்டிகளில் விளையாடியிருந்தது.[10] இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 சூலை 17 இல், இலங்கை துடுப்பாட்ட வாரியம் இரண்டாவது தேர்வுப் போட்டியை கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கத்தில் இருந்து காலி பன்னாட்டு அரங்கத்திற்கு மாற்றியது.[11]
பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2022 | |||||
இலங்கை | பாக்கித்தான் | ||||
காலம் | 16 – 28 சூலை 2022 | ||||
தலைவர்கள் | திமுத் கருணாரத்ன | பாபர் அசாம் | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது. | ||||
அதிக ஓட்டங்கள் | தினேஸ் சந்திமல் (271) | பாபர் அசாம் (271) | |||
அதிக வீழ்த்தல்கள் | பிரபாத் ஜெயசூரிய (17) | முகமது நவாஸ் (10) | |||
தொடர் நாயகன் | பிரபாத் ஜெயசூரிய (இல) |
முதலாவது தேர்வுப் போட்டியில் 342 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாக்கித்தான் அணி 4 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[12] இது தேர்வுப் போட்டிகளில் பாக்கித்தானின் இரண்டாவது அதிகூடிய வெற்றிகரமான ஓட்ட இலக்காகும்.[13] இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது, தனஞ்சய டி சில்வா சதம் அடித்தார்.[14] தேர்வுத் தொடரின் வீரரான பிரபாத் ஜெயசூரிய ஆறு இன்னிங்சுகளில் தனது நான்காவது ஐந்து இலக்குகளை எடுத்தார்.[15]
அணிகள்
தொகுதேர்வுகள் | |
---|---|
இலங்கை[16] | பாக்கித்தான்[17] |
|
|
முதலாவது போட்டியில் காயமடைந்த இலங்கை அணியின் மகீசு தீக்சனாவுக்காக லக்சித்த மனசிங்க இரண்டாவது போட்டியில் விளையாடினார்.[18] முதல் போட்டியில் காயமடைந்த பாக்கித்தான் அணியின் சகீன் அஃப்ரிடி இரண்டாம் போட்டியில் விளையாடவில்லை.[19]
தேர்வுத் தொடர்கள்
தொகு1-வது தேர்வு
தொகு16–20 சூலை 2022
ஓட்டவிபரம் |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அகா சல்மான் (பாக்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- பாபர் அசாம் தனது 228 இன்னிங்சுகளில், பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில், 10,000 ஓட்டங்களை மிக வேகமாக எடுத்த பாக்கித்தான் துடுப்பாளர் ஆனார்.[20]
- முகமது நவாஸ் (பாக்) தனது முதலாவது தேர்வுப் போட்டி ஐவீழ்த்தலைப் பெற்றார்.[21]
- பாபர் அசாம் (பாக்) தனது 3,000-ஆவது தேர்வு ஓட்டத்தைப் பெற்றார்.[22]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: பாக்கித்தான் 12, இலங்கை 0.
2-வது தேர்வு
தொகு24–28 சூலை 2022
ஆட்டவிபரம் |
எ
|
||
231 (88.1 நிறைவுகள்)
அகா சல்மான் 62 (126) ரமேசு மெண்டிசு 5/47 (21.1 நிறைவுகள்) | ||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- துனித் வெல்லாளகே (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- அஞ்செலோ மத்தியூஸ் (இல) தனது 100-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[23]
- திமுத் கருணாரத்ன தனது 6,000-வது தேர்வு ஓட்டத்தைப் பெற்றார்.[24]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இலங்கை 12, பாக்கித்தான் 0.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
- ↑ "Takeaways: Are Pakistan dark horses for the 2023 World Test Championship?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 June 2021.
- ↑ "The SLC announces Sri Lanka's Cricketing Calendar for the year 2022". The Papare. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.
- ↑ "England, New Zealand set to tour Pakistan in November-December". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 15 April 2022.
- ↑ "Pakistan announce busy 12 months for national sides". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 15 April 2022.
- ↑ "Pakistan to Play Two Tests, Three ODIs in Sri Lanka". Sports NDTV. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
- ↑ "ODIs scrapped from Pakistan's tour of Sri Lanka in July 2022". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 May 2022.
- ↑ "Pakistan to play only two tests in Sri Lanka as ODIs scrapped from tour". The Papare. பார்க்கப்பட்ட நாள் 10 May 2022.
- ↑ "Pakistan to tour Sri Lanka for two Tests in July". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
- ↑ "Sri Lanka confirm itinerary for World Test Championship series against Pakistan". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
- ↑ "2nd Test venue shift: Pakistan Tour of Sri Lanka 2022". Sri Lanka Cricket. பார்க்கப்பட்ட நாள் 17 July 2022.
- ↑ "Shafique's epic 160* leads Pakistan to fourth-innings glory". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 July 2022.
- ↑ "Shafique's marathon knock, Pakistan's record chase, and Jayasuriya's dream start". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 July 2022.
- ↑ "Jayasuriya and Mendis spin Sri Lanka to a series-levelling win". The Papare. பார்க்கப்பட்ட நாள் 28 July 2022.
- ↑ "Jayasuriya, Mendis rattle Pakistan as Sri Lanka level series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 July 2022.
- ↑ "Sri Lanka name squad for Pakistan Test series". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 14 July 2022.
- ↑ "Yasir Shah returns for Sri Lanka Tests". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
- ↑ "Nissanka returns, Manasinghe replaces injured Theekshana for the second Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2022.
- ↑ "Knee injury rules Pakistan's Shaheen Shah Afridi out of second Test against Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2022.
- ↑ "Babar Azam completes 10000 international runs, surpasses Virat Kohli to achieve big milestone". My Khel. பார்க்கப்பட்ட நாள் 17 July 2022.
- ↑ "Fifties from Oshada Fernando, Kusal Mendis and Dinesh Chandimal put Sri Lanka in command". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 July 2022.
- ↑ "SL vs PAK: Babar Azam completes his 3000 career runs". BOL News. Archived from the original on 25 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 19 July 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Unprecedented highs and haunting lows - Mathews' complicated journey to 100 Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 July 2022.
- ↑ "De Silva, Karunaratne stretch Sri Lanka lead over Pakistan". France24. பார்க்கப்பட்ட நாள் 27 July 2022.