தேனீ வளர்ப்போர் பன்னாட்டுக் கூட்டமைப்பு

 

தேனீ வளர்ப்போர் பன்னாட்டுக் கூட்டமைப்பு
உருவாக்கம்1895
தலைமையகம்தேனீ வளர்ப்போர் பன்னாட்டுக் கூட்டமைப்பு

கோர்சோ விட்டோரியோ இமானுவேல் 101

I-00186 Rome, Italy
தலைவர்
ஜெப் பெட்டிசு
வலைத்தளம்https://www.apimondia.org/

ஏப்பிமாண்டியா அல்லது தேனீ வளர்ப்போர் பன்னாட்டுக் கூட்டமைப்பு (Apimondia or International Federation of Beekeepers' Associations) அனைத்து நாடுகளிலும் அறிவியல், சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார தேனீ வளர்ப்பு வளர்ச்சியையும், தேனீ வளர்ப்போர் சங்கங்கள், அறிவியல் அமைப்புகள் மற்றும் உலகளவில் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தனிநபர்களின் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் அமைப்பாகும். ஏபிமோண்டியா என்ற பெயர் இரண்டு சொற்களிலிருந்து உருவான ஒரு கூட்டுச் சொல்லாகும். ஏபி, தேனீக்களைக் குறிக்கும் சொல்லாகவும் மோண்டியா, உலகத்தைக் குறிக்கும் சொல்லாகும்.[1]

இக்கூட்டமைப்பு ஏபியாக்டா என்ற ஆய்விதழை வெளியிடுகிறது. 2003 மற்றும் 2004 ஆண்டு வெளிவந்த ஆய்விதழ்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.[2]

1897 முதல், ஒவ்வொரு ஆண்டும் ஏபிமோண்டியா தேனீ வளர்ப்பவர்களின் மாநாடுகளை பல்வேறு நாடுகளில் ஏற்பாடு செய்கிறது.[3]

தேனீ வளர்ப்பு பற்றிய அறிவியல் புரிதலை மேம்படுத்துவதற்கும், தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கும் ஏபிமோண்டியா ஏழு அறிவியல் ஆணையங்களையும் ஐந்து பிராந்திய ஆணையங்களையும் பராமரிக்கிறது.[4]

அறிவியல் ஆணையங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியது.

  • தேனீ வளர்ப்பு பொருளாதாரம்
  • தேனீ ஆரோக்கியம்
  • தேனீ உயிரியல்
  • மகரந்தச் சேர்க்கை மற்றும் தேனீ தாவரங்கள்
  • தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் தரம்
  • தேனீச்சிகிச்சை
  • கிராமப்புற மேம்பாட்டுக்கான தேனீ வளர்ப்பு

மாநாடுகளின் பட்டியல்

தொகு

[5]

வ. எண் ஆண்டு இடம் நாடு
I 1897 பிரசெல்சு பெல்ஜியம்
II 1900 பாரிசு பிரான்சு
III 1902 's-கெர்டோஜென்போசு நெதர்லாந்து
IV 1910 பிரஸ்ஸல்ஸ் பெல்ஜியம்
V 1911 துரின் இத்தாலி
VI 1922 மர்சேய் பிரான்சு
VII 1924 கியூபெக் கனடா
VIII 1928 துரின் இத்தாலி
IX 1932 பாரிசு பிரான்சு
X 1935 பிரஸ்ஸல்ஸ் பெல்ஜியம்
XI 1937 பாரிசு பிரான்சு
XII 1939 சூரிக்கு சுவிட்சர்லாந்து
XIII 1949 ஆம்ஸ்டர்டம் நெதர்லாந்து
XIV 1951 இலீமிங்டன் ஐக்கிய இராச்சியம்
XV 1954 கோபனாவன் டென்மார்க்
XVI 1956 வியன்னா ஆஸ்திரியா
XVII 1958 உரோம் இத்தாலி
XVIII 1961 மத்ரித் எசுப்பானியா
XIX 1963 பிராகா செக்கோசிலோவாக்கியா
XX 1965 புக்கரெஸ்ட் உருமேனியா
XXI 1967 மேரிலாந்து ஐக்கிய நாடுகள்
XXII 1969 மியூனிக் ஜெர்மனி
XXIII 1971 மாஸ்கோ சோவியத் ஒன்றியம்
XXIV 1973 புவெனஸ் ஐரிஸ் அர்கெந்தீனா
XXV 1975 கிரனோபிள் பிரான்சு
XXVI 1977 அடிலெயிட் ஆத்திரேலியா
XXVII 1979 ஏதென்ஸ் கிரேக்கம்
XXVIII 1981 அகபல்கோ மெக்சிக்கோ
XXIX 1983 புடாபெசுட்டு அங்கேரி
XXX 1985 நகோயா யப்பான்
XXXI 1987 வார்சாவா போலந்து
XXXII 1989 இரியோ டி செனீரோ பிரேசில்
XXXIII 1993 பெய்சிங் சீனா
XXXIV 1995 லோசான் சுவிட்சர்லாந்து
XXXV 1997 ஆண்ட்வெர்ப் பெல்ஜியம்
XXXVI 1999 வான்கூவர் கனடா
XXXVII 2001 டர்பன் தென்னாப்பிரிக்கா
XXXVIII 2003 லியுப்லியானா சுலோவீனியா
XXXIX 2005 டப்லின் அயர்லாந்து
XL 2007 மெல்பேர்ண் ஆத்திரேலியா
XLI 2009 மாண்ட்பெல்லியர் பிரான்சு
XLII 2011 பியூனஸ் அயர்ஸ் அர்ஜென்டினா
XLIII 2013 கீவ் உக்ரைன்
XLIV 2015 டேஜியோன் தென் கொரியா
XLV 2017 இசுதான்புல் துருக்கி
XLVI 2019 மொண்ட்ரியால் கனடா
XLVII 2022 இசுதான்புல் துருக்கி
XLVIII 2023 சான் டியேகோ சிலி[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "South Korea Won the Bid for the APIMONDIA 2015 at APIMONDIA 2011 Argentina". World Propolis Science Forum. 27 January 2012. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 1 September 2013.
  2. Apiacta
  3. "Apimondia congresses". Archived from the original on 2010-12-06. பார்க்கப்பட்ட நாள் 2009-11-12.
  4. "Welcome to Apimondia website". www.apimondia.com. Archived from the original on 2011-06-25.
  5. "APIMONDIA: Past Congresses". International Federation of Beekeepers' Associations. Archived from the original on 23 April 2019. பார்க்கப்பட்ட நாள் 1 September 2013.
  6. "47th Apimondia Apicultural Congress". apimondia.org. Apimondia. பார்க்கப்பட்ட நாள் 10 July 2022.

வெளி இணைப்புகள்

தொகு