தங்கராசு நடராசன்

இந்தியத் துடுப்பாட்ட வீரர்
(த. நடராஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

த. நடராஜன் (T. Natarajan, பிறப்பு: 04 ஏப்ரல் 1991) என்பவர் ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 2020 திசம்பரில், இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். இவர் 2018 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் இருந்து, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காகவும் மற்றும் தமிழக அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.[2] இந்தியாவின் 2020–21 ஆத்திரேலியா சுற்றுப்பயணத்தில் விளையாடும்போது, ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வித போட்டிகளிலும் சர்வதேச அளவில் அறிமுகமான முதல் இந்தியத் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[3]

த. நடராசன்
நடராசன் விஜய் அசாரே கோப்பை 2019–20 போட்டியில் விளையாடிய போது.
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தங்கராசு நடராசன்
பிறப்பு4 ஏப்ரல் 1991 (1991-04-04) (அகவை 33)
சின்னப்பம்பட்டி, தாரமங்கலம், சேலம், தமிழ்நாடு, இந்தியா[1]
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைஇடது கை மித-வேகம்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 232)2 திசம்பர் 2020 எ. ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 83)4 திசம்பர் 2020 எ. ஆத்திரேலியா
கடைசி இ20ப8 திசம்பர் 2020 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–தற்போதுவரைதமிழ்நாடு
2017கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2018–தற்போதுவரைசன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 44)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது பஇ20 முதது இ20
ஆட்டங்கள் 1 4 16 42
ஓட்டங்கள் 7 5
மட்டையாட்ட சராசரி 5.00
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 7* 3*
வீசிய பந்துகள் 60 96 747 852
வீழ்த்தல்கள் 2 7 18 41
பந்துவீச்சு சராசரி 35.00 17.42 31.27 25.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/70 3/30 3/22 3/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 0/0 2/0 13/0
மூலம்: Cricinfo, 8 திசம்பர் 2020

வாழ்க்கை

தொகு

நடராஜன் தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தங்கராஜ் ஒரு நெசவுத் தொழிலாளி, தாய் சாந்தா சாலையோரக் கோழிக் கடை நடத்துபவர். நடராஜன் 12 ஆம் வகுப்பு வரை சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் விளையாட்டு ஒதுக்கீட்டில் சேலம், ஏ. வி. எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மை இளமாணி படித்து முடித்து, அதே கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை பட்ட மேற்படிப்பு படித்தார்.

விளையாட்டு

தொகு

மாவட்ட அளவிலான துடுப்பாட்டப் போட்டியில் விளையாட ஆரம்பித்த பிறகு நடராஜன், 2015-16 இல் பெங்கால் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்கு முதல்முறையாக அறிமுகமானார். ஆனால் இவரது பந்துவீச்சு த்ரோ என்பதாக சந்தேகம் எழ இவர் பந்து வீச்சு பாணியை மாற்றி மீண்டும் முதல்தர துடுப்பாட்டத்துக்குள் நுழைந்தார். டி.என்.பி.எல். தொடரிலும், ரஞ்சி கோப்பையிலும் சாதனை புரிந்தது, அதனால் ஐபிஎல் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது, இவரை 2017 ஆம் ஆண்டு ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது.[4][5] இவர் தமிழ்நாடு ரஞ்சி கோப்பை போட்டியில் 2016\17 விளையாடி உள்ளார். வங்காள அணிக்கு எதிராக 2015ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் முதன்முறையாக முதல் தர போட்டிகளில் ஆடினார்.[6] 2018 ஆம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது துல்லியமாக யார்க்கர் பந்து வீசி வருகிறார்.

அக்டோபர் 26, 2020 அன்று, இந்தியத் துடுப்பாட்ட அணி, ஆஸ்திரேலியா துடுப்பாட்ட அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது, இதற்கு நான்கு கூடுதல் பந்து வீச்சாளர்களில் ஒருவராக நடராஜனும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] பிறகு நவம்பர் 9, 2020 அன்று, பிசிசிஐ வெளியிட்ட இருபது20 துடுப்பாட்ட அணி வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்த வருண் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரை நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக சர்வதேச இருபது - 20 அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டார்.[8]

முதல் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) போட்டியின் முன்னதாக, முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த நவ்தீப் சைனிக்கு மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.[9][10] திசம்பர் 02, 2020 ஆம் தேதி நடந்த ஆத்திரேலியாவுக்கு எதிராக நடந்த மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர், அந்த போட்டியில் மார்னஸ் லபுசேனை ஆட்டமிழக்கச் செய்து, தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி விக்கெட்டை எடுத்தார்.[11] இப்போட்டியில் இவர் இரண்டு விக்கெட்டுகளை பெற்றார்.

பின்னர் திசம்பர் 04, 2020இல் தான் பங்கேற்ற முதல் சர்வதேச இ-20 அறிமுக போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி, 30 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட் வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.[12]

பின்னர் 30 திசம்பர், 2020 அன்று, ஆத்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது தேர்வு போட்டிக்கு முன்னதாக நடராஜன் இந்தியாவின், தேர்வுத் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டார்.[13] பின்னர் சனவரி 15, 2020 அன்று ஆத்திரேலியாவுக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் அறிமுகமானார், அந்த போட்டியில் மேத்தியு வேடை ஆட்டமிழக்கச் செய்து தனது முதல் சர்வதேச தேர்வுத் துடுப்பாட்ட விக்கெட்டை எடுத்தார்.[14][15] ஆஸ்திரேலிய தொடரின் போது, தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 தொடரில் இருந்து பாதியில் நடராஜன் விலகினார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்டது. பின்னர் ஏப்ரல் 27, 2021இல் அவருக்கு முழங்காலில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "From Salem and TNPL, IPL exploits to India cap - The inspirational journey of T Natarajan | Latest News & Updates at DNAIndia.com". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 December 2020.
  2. "சின்னப்பம்பட்டியிலிருந்து ரஞ்சி, ஐபிஎல் வரை...- தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனின் பயணம்". செய்தி. தி இந்து. 20 பெப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "Natarajan becomes first Indian to make international debut in 3 formats on same tour" (in en-IN). The Hindu. 15 January 2021. https://www.thehindu.com/sport/cricket/natarajan-becomes-first-indian-to-make-international-debut-in-3-formats-on-same-tour/article33577395.ece. 
  4. வி.சீனிவாசன் (28 பெப்ரவரி 2017). "அடுத்த இலக்கை நோக்கி: ஐபிஎல் நாயகன் நடராஜன்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "Thangarasu Natarajan: All you need to know about Kings XI Punjab's mystery seamer". இசுபோர்ட்சுகீட்டா. பார்க்கப்பட்ட நாள் 20-02-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "Thangarasu Natarajan: All you need to know about Kings XI Punjab's mystery seamer". யாகூ கிரிக்கெட். பார்க்கப்பட்ட நாள் 20-02-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "Team India's T20I, ODI and Test squads for Tour of Australia announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 26 October 2020.
  8. "Kohli to go on paternity leave after 1st Australia Test; Rohit included for Tests, Varun Chakravarthy injured". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 9 November 2020.
  9. "AUS vs IND: T Natarajan added to India's squad for Australia ODI series". Sport Star. பார்க்கப்பட்ட நாள் 26 November 2020.
  10. "T Natarajan added to India ODI squad as cover for Navdeep Saini". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 November 2020.
  11. World, Republic. "T Natarajan trumps Marnus Labuschagne for maiden wicket in Indian colours; watch video". Republic World. பார்க்கப்பட்ட நாள் 2 December 2020.
  12. "T Natarajan shines on T20I debut to hand India victory". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 4 December 2020.
  13. "T Natarajan to make Test debut, KL Rahul to return; India pondering multiple changes in SCG". Times Now. பார்க்கப்பட்ட நாள் 30 December 2020.
  14. "Brisbane Test: T Natarajan, Washington Sundar make Test debuts as injury-hit India make 4 changes". India Today. https://www.indiatoday.in/sports/cricket/story/brisbane-test-t-natarajan-washington-sundar-make-test-debuts-as-injury-hit-india-make-4-changes-1759231-2021-01-15. 
  15. T Natarajan maiden Test wicket (15 January 2021). "AUS vs IND 4th Test Day 1: T Natarajan removes Matthew Wade for maiden Test wicket | Cricket News – India TV". www.indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கராசு_நடராசன்&oldid=3930601" இலிருந்து மீள்விக்கப்பட்டது