நாயன்மார்கட்டு நாயன்மார் குருபூசை மடம்
சிங்கையாரியச் சக்கரவர்த்திகளினால் அரசாட்சி செய்யப்பட்ட யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக விளங்கிய நல்லூரின் கிழக்கு எல்லையாக விளங்கிய பழமையான ஊர் நாயன்மார்கட்டு ஆகும். நாயன்மாருக்கு குருபூசை மடங்கட்டி செய்த அரும்பணியினால் நாயன்மார்கட்டு என பெயர் பெற்றது வரலாறு.
நாயன்மார்கட்டுப் பிராந்தியத்தின் பண்பாட்டுத் தொன்மையில் மடத்து வளவு அல்லது மடத்து வாசல் எனக் குறிப்பிடப்படும் பகுதி மிகப் பிரகானமானது ஆகும். இராசகுமாரன் வளவிற்கு நேர் கிழக்கே நாயன்மார்கட்டுக் திருக்களத்திற்கு வடபுறத்தே, அதன் அருகாமையில் அமைந்துள்ள நிலப்பரப்பே மடத்து வளவு அல்லது "மடத்து வாசல்" என அழைக்கப்படுவதனைக் காணலாம். இங்கு அறுபத்துமூவர் நாயன்மார் குருபூசை மடம் இருந்த்தாக மரபுகள் எடுத்துக் காட்டுகின்றன. இக் குருபூசை மடத்துடன் இணைந்த வகையிலேயே "சரஸ்வதி மஹால்" என்று அழைக்கப்பட்ட புரதான நூலகமொன்று நாயன்மார்கட்டில் அமைந்திருந்தது என்பதும் மரபுகள் வாயிலாக அறிந்த கொள்ளமுடியும்.
நாயன்மார்கட்டு நாயன்மார் குருபூசை மடம் தொடர்பாக யாழ்ப்பாணச் சரித்திரம் எனும் நூலில் நூலாசிரியர் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பின்வருமாறு பதிவு செய்கின்றார். “குணபூஷண சிங்கையாரியச் சக்கரவர்த்தியின் உத்தரவிற்கமைய அவனது மந்திரி அறுபத்துமூன்று நாயன்மார்க்கும் ஒருமடாலயம் அமைப்பித்தான். அறுபத்து மூவர் மடமிருந்தவிடம் நாயன்மார்கட்டென வழங்குகின்றது.”[1]
நாயன்மாரின் பட்டியல்
தொகுநாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.[2]
உசாத்துணை நூல்கள்
தொகுஆ. முத்துத்தம்பிப்பிள்ளை யாழ்ப்பாணச் சரித்திரம், இரண்டாம் பதிப்பு, 1915, பக். 27, 28
- ↑ ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை யாழ்ப்பாணச் சரித்திரம், இரண்டாம் பதிப்பு, 1915, பக். 27, 28
- ↑ கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் (பக்கம் 141 & 142 முதற்பதிப்பு-டிசம்பர் 1998)
- ↑ சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டத் தொகை-கடல் சூழ்ந்த சருக்கம்-இடங்கழி நாயனார் புராணம் பாடல் எண்:3
- ↑ புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:85
- ↑ காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:26
- ↑ புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:86
- ↑ காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:27