பண்டைய அலெப்போ நகரம்

பண்டைய அலெப்போ நகரம் (Ancient City of Aleppo) பண்டைய அண்மை கிழக்கின் தற்கால சிரியா நாட்டில் உள்ளது. தற்போதும் இதன் பெயர் அலெப்போ என்றெ அழைக்கப்படுகிறது.

பண்டைய அலெப்போ நகரம்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Aleppo old city image.jpg
பண்டைய அலெப்போ நகரத்தின் காட்சி
அமைவிடம்அலெப்போ, சிரியா
உள்ளடக்கம்2010-இல் அலெப்போ அரண்மனை மற்றும் அல்-மதீனா நகர வீதி
கட்டளை விதிபண்பாட்டுக் களம்: (iii), (iv)
உசாத்துணை21
பதிவு1986 (10-ஆம் அமர்வு)
அழியும்நிலை2013–
பரப்பளவு364 ha (1.41 sq mi)
ஆள்கூறுகள்36°12′09″N 37°09′46″E / 36.20250°N 37.16278°E / 36.20250; 37.16278ஆள்கூறுகள்: 36°12′09″N 37°09′46″E / 36.20250°N 37.16278°E / 36.20250; 37.16278
பண்டைய அலெப்போ நகரம் is located in சிரியா
பண்டைய அலெப்போ நகரம்
Location of பண்டைய அலெப்போ நகரம் in சிரியா.

2014-இல் சிரிய உள்நாட்டுப் போர் துவங்குவதற்கு முன்னர் அலெப்போ நகரத்தின் 12-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலான கட்டிடங்களும், அரண்மனைகளும் பழுதின்றி பராமரிக்கப்பட்டு வந்தது.

பண்டைய அலெப்போ நகரத்தைச் சுற்றிலும் கோட்டைச் சுவர்களுடன் 350 ஹெக்டேர் (860 ஏக்கர்; 3.5 சகிமீ) நிலப்பரப்பும், 1,20,000 மக்களும் வாழ்ந்து கொண்டிருந்தனர்.[1]

பெரிய குடியிருப்புகளும், பெரிய கடை வீதிகளும், சிறிய தெருக்களும் கொண்ட பண்டைய அலெப்போ நகரத்தை, 1986-இல் யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[2][3]

பண்டைய அலெப்பொ நகரத்தின் உலகப் பாரம்பரிய கட்டங்களும், சின்னங்களும் சிரிய உள்நாட்டுப் போரில் இசுலாமிய அரசு தீவிரவாதிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.[4][5][6][7][8]

தோற்றம்தொகு

 
பண்டைய அலெப்போ நகரத்தின் மாதிரிக் காட்சி
 
குஷ்ருவியா மசூதி, கார்ல்டன் அரண்மனை விடுதி, தற்போது இவைகள் சிரிய உள்நாட்டுப் போரில் சிதைந்து போனது

குயிக் ஆற்றின் இடது கரையில் 160 ஹெக்டேர் பரப்பில் அமைந்த பண்டைய அலெப்போ நகரத்தைச்சுற்றி, 5 கிமீ நீளம் கொண்ட சுவர்களைக் கொண்ட அரணுடன் கூடியது. மேலும் பண்டைய அலெப்போ நகரத்தைச் சுற்றி 8 சகிமீ வட்ட வடிவில் எட்டு குன்றுகளால் சூழப்பட்டது. இந்த குன்றுகளில் மையமாக அமைந்த குன்றில் கிமு இரண்டாயிரம் ஆண்டில் நிறுவப்பட்ட அக்ரோபோலிஸ் வடிவத்தில் கோயில் உள்ளது. மேலும் இக்குன்றுகளில் சவ்தா சைசா, அல்-அன்சாரி போன்ற தொல்லியல் மேடுகள் உள்ளது. [9] இப்பழைய நகரத்தின் 5 கிமி நீளம் கொண்ட சுற்றுச் சுவர்களை எகிப்திய மம்லுக் சுல்தான்கள் மறுசீரமைத்தனர். இந்நகரம் 9 அகலமான நுழைவாயில்கள் அகழியுடன் கூடியிருந்தது. தற்போது 5 நுழைவாயில்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது. [9]

வரலாறுதொகு

கிமு 2400 முதல் பண்டைய அலெப்போ நகரம் கீழ்கண்ட இராச்சியங்களின் பகுதியாக விளங்கியது. தற்கால அலெப்போ நகரத்தில் பண்டைய அலெப்பொ நகரத்தின் தொல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.[10]


 
பண்டைய அலெப்பொ நகரம்
 
அலெப்போ அரண்மனையில் ஆதாத் கடவுளின் கோயில்

பண்டைய நகரத்தின் பராமரிப்புதொகு

பண்டைய அலெப்போ நகரம் பெரிய வணிக மையமாக இருந்தது. இந்நகரம் கிழக்கே மெசொப்பொத்தேமியா, நடு ஆசியா, தெற்காசியாவிற்கும் மேற்கே பண்டைய எகிப்து, பண்டைய கிரேக்கம் மற்றும் உரோமைப் பேரரசுகளுக்கு இடையே வணிக மையமாக திகழ்ந்தது.

பண்டைய அலெப்போ நகரம் பெரிய வணிக வீதிகளும், வணிக வளாகங்களும், தேவாலயங்களும், மசூதிகளும், மதராசாக்களுடன் கூடியதாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1954-இல் பண்டைய அலெப்போ நகரம் மறுசீரமைக்கப்பட்டது.

1954 - 1983-க்குள் பண்டைய அலெப்போவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் தவிர்த்து பிற கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, மேற்கத்திய கட்டிடக் கலைஞர்களால் நவீன பல மாடி கட்டிடங்கள் நிறுவப்பட்டது நகரம் பொலியுறுத்தப்பட்டது. 1986-இல் பண்டைய அலெப்போ நகரத்தை யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாராம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.[3]

உலகின் பல தொல்லியல் அகழ்வாய்வாளர்கள் அலெப்போவின் தொல்லியல் மேடுகளை அகழ்வாய்ந்து பல தொல்லியல் களங்கள் மற்றும் தொல் பொருட்கள் கண்டறிந்தனர். [11]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. bleeker. "Alepposeife: Aleppo history". Historische-aleppo-seife.de. 2013-06-10 அன்று பார்க்கப்பட்டது.
 2. Ancient City of Aleppo
 3. 3.0 3.1 "eAleppo:Aleppo city major plans throughout the history" (Arabic).CS1 maint: Unrecognized language (link)
 4. "Fighting in Aleppo starts fire in medieval souks". Kyivpost.com. 2013-06-10 அன்று பார்க்கப்பட்டது.
 5. Bombing of the justice palace
 6. Bombing of Carlton hotel
 7. Bombing of the city council
 8. https://www.usnews.com/news/world/articles/2017-01-20/unesco-30-percent-of-aleppos-ancient-city-destroyed
 9. 9.0 9.1 Alexander Russell, தொகுப்பாசிரியர் (1856). The Natural History of Aleppo (1st ). London: Unknown. பக். 266. 
 10. "Ancient Aleppo Background". 2019-10-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-10-28 அன்று பார்க்கப்பட்டது.
 11. Writer, Suchitra Bajpai Chaudhary, Staff (2007-09-13). "A true cityzen". GulfNews. http://gulfnews.com/culture/people/a-true-cityzen-1.25266. 

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ancient City of Aleppo
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_அலெப்போ_நகரம்&oldid=3633190" இருந்து மீள்விக்கப்பட்டது