வாருங்கள்!

வாருங்கள், Ashokg15, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--நந்தகுமார் (பேச்சு) 18:21, 14 நவம்பர் 2013 (UTC)

விரிவான கட்டுரைதொகு

வணக்கம், தாங்கள் கட்டுரை போட்டியில் பங்களிப்பதை கண்டேன்.மகிழ்ச்சி :). தங்கள் கட்டுரை ஒரு லட்சம் பைட்டுகளை தாண்டிவிட்டது.ஆகவே நீங்கள் விரிவான கட்டுரைக்கு உண்டான சிறப்பு பரிசுக்கு தகுதி பெற்றுவிட்டீர்கள்.ஆகவே தங்களின் கட்டுரையை இணைத்துள்ளேன்.கட்டுரை போட்டி முடிவுகளில் கவனிக்கவும்.தாங்கள் முன்பதிவு செய்துள்ள இயங்குபடம் எனும் கட்டுரையை நான் முன்னரே முன்பதிவு செய்துள்ளேன்.ஏதேனும் ஐயம் இருப்பின் கேட்கவும்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:35, 18 நவம்பர் 2013 (UTC)

புரிதலுக்கு நன்றி.விருப்பத்தேர்வுகள் எனும் இடத்தில் தங்களின் கையெழுத்தை இடுங்கள்.மற்றவர் பேச்சு பக்கங்களில் செய்தியை இட்டுவிட்டு ~~~~ எனும் குறியீடை இட்டால் தங்கள் பெயர் நேரத்துடன் வந்துவிடும்:). விக்கிப்பீடியா:கையெழுத்து இதனைப் பார்க்கவும். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 02:57, 19 நவம்பர் 2013 (UTC)

கையெழுத்து அருமை.இட்டதிற்கு நன்றி :).மேலும் பல கட்டுரைகளை விரிவாக்குங்கள்,பரிசு பெற வாழ்த்துக்கள்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:41, 19 நவம்பர் 2013 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றிதொகு

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Ashokg15!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 18:42, 24 நவம்பர் 2013 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
முதல் விரிவுக் கட்டுரையே இவ்வளவு பெரிதா? இனி உங்களைப் போல் புதியவர்களுக்கு விக்கிப்பீடியாவை கொடுத்து விட்டு நாங்கள் தூங்கப் போய்விடலாம். ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்.......

தங்களின் முனைப்பான பங்களிப்புகளுக்கு இந்த பதக்கம். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:05, 27 நவம்பர் 2013 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

பதக்கத்திற்க்கு நன்றி தென்காசியாரே.. எங்களை போன்றவர்களுக்கு நீங்கள் தான் ஊக்கமே; சூரியனே உறங்கிவிட்டால் எங்களுக்கு வழி கட்டுவது யார்?? அசோக் ராஜ் (பேச்சு) 16:25, 27 நவம்பர் 2013 (UTC)

வுடி ஆலன் கட்டுரைதொகு

வுடி ஆலன் கட்டுரையினை விரிவாக்கியதற்கு நன்றிகள். கட்டுரையினை மொழிபெயர்க்க ஆங்கில விக்கியிலிருந்து தகவல்களை பயன்படுத்தும்போது அங்கு உள்ள 'edit' பொத்தானை அழுத்தி அதிலுள்ள தகவல்கள் (மேற்கோள்களையும் சேர்த்து<ref></ref>) பயன்படுத்துங்கள். மேலும் மேற்கோள்களை தனிப்பகுதியாக copy-paste செய்தல் வேண்டாம். அதனினை reflist வார்ப்புரு செய்துவிடும். ஏதேனும் உதவி தேவை எனின் எனது பேச்சுப் பக்கத்தில் இடவும். தமிழ் விக்கியில் தங்கள் பங்களிப்பு தொடரட்டும். நன்றி --அஸ்வின் (பேச்சு) 05:49, 30 நவம்பர் 2013 (UTC)

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்தொகு

வணக்கம், Ashokg15!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:11, 3 திசம்பர் 2013 (UTC)

  விருப்பம் -நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:18, 3 திசம்பர் 2013 (UTC)

உங்களது படம் தேவைதொகு

கட்டுரைப் போட்டி முடிவுகளை முதல் படத்தில் வெளியிடும் போது உங்கள் படம் இருந்தால் நன்றாக இருக்கும். மற்ற படி உங்கள் அஞ்சாநெஞ்சத்தையும் வீர செயல்களையும் கடைசி வரை போராடும் குணத்தையும் பாராட்டுகிறேன். கோவையில் எந்த கல்லூரி?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:08, 7 திசம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டிக்கான பதக்கம் 2தொகு

  கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
நவம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் 13 கட்டுரைகளை விரிவாக்கி இரண்டாம் இடத்தை பிடித்ததோடு நெடிய கட்டுரைக்கான சிறப்புப் பரிசையும் வென்றதுக்கு இப்பதக்கம்2.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:07, 11 திசம்பர் 2013 (UTC)|}
  விருப்பம் 2 --நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:09, 13 திசம்பர் 2013 (UTC)
  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:34, 22 திசம்பர் 2013 (UTC)

வாழ்த்துக்கள்தொகு

தங்களது மேலான பங்களிப்பிற்கு எம் வாழ்த்துக்கள்.உங்களின் மகத்தான பணி தொடரட்டும்- சேதுராமன்

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:52, 24 திசம்பர் 2013 (UTC)

2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்தொகு

வணக்கம், அசோக். 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.

  • உங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெயர், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, IFSC குறியீட்டு எண்.

மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு

  • வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.
  • சான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.

இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி. --இரவி (பேச்சு) 19:23, 30 சூன் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் Ashokg15!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:34, 30 திசம்பர் 2014 (UTC)
கட்டுரைப் போட்டி வெற்றியாளரே ! :) தமிழ் விக்கிப்பீடியர்களின் இந்தக் கூட்டு முயற்சியில் உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். --இரவி (பேச்சு) 16:52, 11 சனவரி 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ashokg15&oldid=1785452" இருந்து மீள்விக்கப்பட்டது