பயனர் பேச்சு:Jagadeeswarann99/தொகுப்பு03
ஜெகதீஸ்வரன் நடராஜன் | |||||||
முகப்பு | உரையாடல் | உருவாக்கப்பட வேண்டியவை | பங்களித்துள்ள கட்டுரைகள் | பதக்கங்கள் | திட்டங்கள் | மணல்தொட்டி |
சைதாபேட்டை நகராட்சி
தொகுஆங்கிலத்தில் உள்ள 'dead municipality' என்ற வார்த்தையை தமிழில் இறந்த நகராட்சி என்று தான் குறிப்பிடுவார்கள் . பார்க்க official website of chennai district - history .
- அப்படியா நல்லது. இப்பொழுதுதான் முதல்முறையாக இந்த வார்த்தையை கேள்வியுருகிறேன்,. என்பதால் தங்களிடம் தெரிவத்தேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:23, 11 சூன் 2013 (UTC)
தங்களின் கவனத்திற்கு...
தொகுவணக்கம் நண்பரே!
அசுவமேத யாகம், ஆடிக்கிருத்திகை போன்ற பல கட்டுரைகள்... பகுப்பு:விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் எனும் பகுப்பில் உள்ளன. இக்கட்டுரைகளை நீங்கள் செம்மைப்படுத்துவதன் வாயிலாக நமது விக்கி பல நன்மைகளைப் பெறும் என நினைக்கின்றேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:19, 12 சூன் 2013 (UTC)
- செய்யலாம் நண்பரே. ஆனால் தகவல்களை சேகரிக்க சில காலமாகும். நான்கு நாட்கள் விக்கிவிடுப்பில் செல்ல இருக்கிறேன். முடிந்ததும் இயன்றதைச் செய்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:02, 12 சூன் 2013 (UTC)
அன்பின் தோழர் சகதீசுவரன் அவர்களுக்கு ,
தொகுஅன்பின் தோழர் சகதீசுவரன் அவர்களுக்கு , நனிநன்று , தங்கள் ஊக்கத்திற்கு நன்றி , ஒரு வரி கட்டுரைக்களை சற்று விரிவாக்க அதன் மக்கட்தொகை , பரப்பளவு ஆகியவற்றை தேடிவருகிறேன் . அனைத்து ஊர்களுக்கும் அவை கிதைத்த பின்னர் சான்றுகளுடன் அவற்றை இடம் பெற செய்வேன் .- பயனர்:guy of india ரோஹித் முதலியார் 10:46, 12 சூன் 2013 (UTC)
- நல்லது நண்பரே. விரைந்து செய்யுங்கள் விக்கியை வளருங்கள் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:48, 12 சூன் 2013 (UTC)
விக்கிவிடுப்பு
தொகுநான் 16 - 06 -2013 வரை விக்கிவிடுப்பினை எடுக்கிறேன். தங்களது மேலான கருத்தினை இங்குப் பதியவும். திங்களன்று என் பதிலை எதிர்பார்க்கலாம், நன்றி., --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:34, 12 சூன் 2013 (UTC)
சைவத் தொண்டர்கள்
தொகுசைவம் வார்ப்புருவில் சில சைவக் குருக்களைத் தொண்டர்கள் என்று வகைப்படுத்தியுள்ளீர்கள். இது சரி தானா? வார்ப்புருவில் தரப்பட்டுள்ள கட்டுரைகளை அந்தக் குருக்களின் உறவினரே எழுதியிருக்கிறார் போல் தெரிகிறது. மேற்கோள்கள் எதுவும் தரப்படவில்லை.--Kanags \உரையாடுக 12:59, 12 சூன் 2013 (UTC)
- அவர்கள் ஈழத்தில் புகழ்பெற்ற தொண்டர்கள் என நினைத்தேன். நீக்கிவிடுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:31, 17 சூன் 2013 (UTC)
திருமுல்லைவாயில்
தொகுஅன்பு சகோதரன் ஜெகதீசன்! திருமுல்லைவாயில் இரண்டு உள்ளது,ஒன்று தெற்கே சீர்காழிக்கு 12 கி.மீ தொலைவில் உள்ளது ஞான சம்பந்த பெருமானாரால் பதிகம் பாடப்பெற்ற தலமாகும், அதேபோல் தொண்டை நாட்டில் அம்பத்தூருக்கும்-ஆவடிக்கும் இடையில் உள்ளது.முன் சொன்ன திருமுல்லைவாயிலுக்கு வடக்கே இருப்பதால் வடதிருமுல்லைவாயில் என ஒன்று உள்ளது இது சுந்தரமூர்த்்தி நாயனாரால் பாடப்பெற்ற தலமாகும். தாங்கள் தொகுத்துள்ள 274 சிவதலங்களில் தென்திருமுல்லைவாயில் இல்லை உரிய இடத்தில் சேர்க்கவும் அன்புடன்--Yokishivam (பேச்சு) 21:20, 15 சூன் 2013 (UTC)
- சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. கட்டுரையில் இல்லாவிட்டால் இணைக்கிறேன்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:33, 17 சூன் 2013 (UTC)
கோயில்களின் பெயரில் -ஈசுவரர் என முடியுமாறு மரபுப்படி எழுதியமைக்கு நன்றி
தொகுநீங்கள் உருவாக்கிய பல கட்டுரைகளிலும் கடவுளரின் பெயர்களில் " -ஈசுவரர்" என முடியுமாறு திருத்தியமைக்கு நன்றி. --செல்வா (பேச்சு) 00:48, 21 சூன் 2013 (UTC)
- இதுக்கெல்லாம் எதுக்குங்க நன்றி. தேவார தலங்கள் மட்டுமன்றி பல்வேறு தலங்களும் இவ்வாறுதான் எழுதப்பட்டு உள்ளன. அவற்றின் பட்டியலை விரைவில் உங்கள் பார்வைக்கு தருகிறேன். சைவத் தலங்கள் குறித்தான தங்களது பங்களிப்பு எனக்கு மிகவும் மகிழ்வு தருகிறது. இயலும் பொழுது தொடர்ந்து இப்பணியை செய்ய வேண்டுகிறேன். தனித்தமிழ் மீது அளவில்லா பற்றுடையவராக திகழ்கின்றீ்ர்கள், இதற்கு தமிழே உங்களுக்கு நன்றியுரைக்க வேண்டும். :-) நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:36, 21 சூன் 2013 (UTC)
- விருப்பம் ஈசுவரர் என்பதில் எனக்கும் விருப்பமே! ஈசுவரர்/ஈஸ்வரர் என்பதில் கிரந்தப் பிரச்சனை வரலாம். ஈசர் என்று முடித்தால் நன்றாக இருக்கும். பெயர்களை சுருக்குகிறேன் என்ற பெயரில் சொற்களை சிதைக்கும் இந்த காலத்தில் ஈசர் என்றால் எளிமையாகவும் சுருக்கமாகவும் இருக்கும். ஈசர் என்ற சொல் எல்லா இடங்களிலும் பொருந்துமெனில் இதை பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:11, 23 சூன் 2013 (UTC)
- ஈசர் என்ற சொல் எத்தனை பொருத்தமானது என்று தெரியவில்லை நண்பரே. அதற்குப் பதிலாக மூலவரின் வேறு தமிழ்ப்பெயருக்கு மாற்றலாம். உதாரணமாக சில கோயில்களின் மூலவர் பெயர் நாதர் என்று முடியுமாறு உள்ளது. இவை வழக்கத்திலும் உள்ளன என்பதால் அவ்வாறே மாற்றியிருக்கிறேன். வழக்கத்தில் இல்லாத தமிழ்ப்பெயர்களை நான் முன்னிருத்தவில்லை. பாடல் பெற்ற தலைப்பில் பகுப்பில் எழுதிய கோபி எனும் விக்கிப்பீடியர் அக்கோயிலின் புராணப்பெயரில் கட்டுரையை தொடங்கியதால், நடைமுறைப் பெயர்களில் தேடும் பொழுது சிக்கவில்லை. அவர் கடுமையாக உழைத்து எழுதியதன் பலன் இல்லாமல் போகுமே, அதனால்தான் விரைந்து அவற்றை திருத்தி வருகிறேன். சைவர் பலரும் சமஸ்கிருதத்தினையும், தமிழினையும் சிவனே தந்தமையாக நம்புகிறார்கள். நானும் அப்படித்தான் எனக்கு கிராந்தகம் ஒரு பொருட்டல்ல,.. எனினும் விக்கப்பீடியர்கள் ஒன்று கூடி முடிவெடுத்தால் இனங்குகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:30, 23 சூன் 2013 (UTC)
- விருப்பம் ஈசுவரர் என்பதில் எனக்கும் விருப்பமே! ஈசுவரர்/ஈஸ்வரர் என்பதில் கிரந்தப் பிரச்சனை வரலாம். ஈசர் என்று முடித்தால் நன்றாக இருக்கும். பெயர்களை சுருக்குகிறேன் என்ற பெயரில் சொற்களை சிதைக்கும் இந்த காலத்தில் ஈசர் என்றால் எளிமையாகவும் சுருக்கமாகவும் இருக்கும். ஈசர் என்ற சொல் எல்லா இடங்களிலும் பொருந்துமெனில் இதை பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:11, 23 சூன் 2013 (UTC)
தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:49, 24 சூன் 2013 (UTC)
- எனது விருப்பத்தினை பதிவு செய்திருக்கிறேன். இரு விக்கிப்பீடியரைக் கூட உடன் தங்க வைக்க இயலும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:48, 24 சூன் 2013 (UTC)
பரதநாட்டிய வலைவாசல்
தொகுவலைவாசல்:பரதநாட்டியம் இல் உங்களுக்குத் தெரயுமாவில் பிழை உள்ளது.திருத்தியுதவ முடியுமா?.செய்து தந்துதவவும்.நன்றி. --ஆதவன் (பேச்சு) 17:07, 24 சூன் 2013 (UTC)
- நிச்சயம் நண்பரே!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:11, 24 சூன் 2013 (UTC)
படங்களின் உரிமம்
தொகுபரதநாட்டியம் பற்றிய கட்டுரைகளுக்கு நீங்கள் மிக அருமையான படங்களை இணைத்துள்ளீர்கள். ஆனால் அவை தக்க உரிமம் பெற்றவைதாமா என்று எனக்கு ஓர் ஐயம். இவற்றை நீங்கள் வரைந்தீர்களா, அல்லது வரைந்தவரிடம் இருந்து கிரியேட்டிவ் காமன்சு பகிர்வுரிமம் பெற்றீர்களா? ஒளிவருடி (scan) செய்து சேர்த்தது எனில் எந்தப்புத்தகத்தில் இருந்து எடுத்தது, அப்படி எடுத்து இடுவது காப்புரிமம் மீறுவதாகாதா என்பன என் ஐயங்கள். நீங்கள் செய்யும் அருமையான பங்களிப்புக்கு நன்றி, ஆனால் இந்த உரிமம் மீறாமல் இருப்பது பற்றியும் நீங்கள் அருள்கூர்ந்து பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி. பரதநாட்டியம் பற்றி நானும் இயலும்பொழுது பங்களிக்கின்றேன். --செல்வா (பேச்சு) 20:46, 24 சூன் 2013 (UTC)
- சைவம் பற்றிய படங்களுக்கு இவ்வாற ஐயம் வேண்டாம் நண்பரே. முகநூலில் சைவ சமயத்தினை அறிவதற்காக உள்ள குழுமத்திலின் முயற்சியால் வெளியிட்டப்பட்ட படங்கள், சைவம் தளைத்தோங்குவதை அவர்கள் விரும்பியே தந்திருக்கிறார்கள். பகிர்தலுக்கான உரிமையும் அனைவருக்கும் உண்டு. புத்தகத்திலிருந்து ஸ்கேன் செய்தல்ல. நாயன்மார்களின் படங்களுக்காக சைவம் ஆர்க் தளத்தினை தொடர்புகொள்ள இருக்கிறேன். அவர்களின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அவர்களின் படங்களையும் தரவேற்ற முயலுகிறேன். அத்துடன் சிறிய அளவிலானா தள முகவரியோடு கூடிய படங்களை இணைக்க விக்கிப்பீடியா அனுமதிக்கின்றதா என்பதை தெளிவு படுத்தவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:56, 25 சூன் 2013 (UTC)
- படிமத்தில் தளப் பெயர், வேறு அடையாளங்கள் watermark போலோ தெளிவாகவோ உள்ள படங்களை நாம் வரவேற்பதில்லை. படங்களைத் தர ஒப்புபவர்கள் விக்கிப்பீடியாவுக்கு உகந்த கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் தருவதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தது, இதனை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், திருத்தலாம், விற்கலாம் என்ற புரிதலோடு அவர்கள் தர வேண்டும். சிலர் விக்கிப்பீடியாவுக்கு என்றால் சரி என்பார்கள். அனைவரும் பயன்படுத்தலாம் என்றால் தயங்குவார்கள். எனவே, இதனை உறுதி செய்து கொள்வது நல்லது.--இரவி (பேச்சு) 05:30, 2 சூலை 2013 (UTC)
- தாங்கள் கூறுவது சரியே சைவம் ஆர்க் தளத்தில் நாயன்மார் படங்களை தர மறுத்துவிட்டார்கள். (ஆன்மீகத்தினை வைத்து வியாபரத்தில் கொழிக்கும் போக்கு இன்னும் மாறவில்லை.:-() சைவ அடியார் ஒருவர் கோயிலுக்கு கொடுத்த காணிக்கையென அக்கோயிலின் பெயரையும், அடியாரின் பெயரையும் மட்டும் தந்திருக்கிறார்கள். அவரை தொடர்புகொள்ள வழியேதுமின்றி அப்பணி கிடப்பில் கிடக்கின்றது. நூல் அட்டைகள் போன்று இறை படங்களுக்கும் குறைந்த தரத்தில் விக்கியின் குறிப்பிட்ட கட்டுரையில் மட்டும் பயன்படுத்த வழிவகை செய்தால் விக்கியின் கட்டுரைகளுக்கு பல படங்கள் கிடைக்கலாம். நன்றி.
உதவ வேண்டுகிறேன்
தொகுஎன் பயனர் பக்கத்தை திறந்தால் பக்கம் உருவாக்கப்படவில்லை என்று வரும், அப்படி என்றால் என்னால் கட்டுரை எழுத முடியாதா நான் இதுவரை எழுதிய சிறு கட்டுரைகள் அனைத்தும் நீக்கப்படுகிறது அது ஏன், நான் நிரந்தர உறுப்பினர் ஆக என் வழி, நான் ஆங்கில வார்த்தைக்குரிய தமிழையும் சேர்த்துள்ளேன் எனினும் அது சேர்த்துகொள்ளப்பட்டதா என தெரியவில்லை. எந்த தலைப்பில் கட்டுரை எழுதலாம் என்றும் உதவுங்கள் நண்பா - Udhay udhayan 03
- நண்பரே, தாங்கள் எப்பொழுது பதிவு செய்தீர்களோ, அப்பொழுதே.. விக்கப்பீடியாவின் உறுப்பினாராகி விட்டீர்கள். விக்கப்பீடியா பதிவு செய்த பயனர்களின் அறிமுகத்திற்காக ஒரு பக்கத்தினை வழங்கியிருக்கிறது. அந்தப் பக்கத்தினை தங்களால் உருவாக்க இயலும், அதில் தங்களுடைய பெயர், பிறந்த ஊர், படிப்பு, வேலை, அறிமுகம் பங்களிப்பு என அனைத்தினையும் தொகுக்கலாம். அதற்கு உதவியாக விக்கிப்பீடியா:பயனர் பக்கம் என்பதில் உள்ளதினைப் படித்துப் பாருங்கள் புரியும். அதன்பின் பயனர் பக்கத்தினை உருவாக்குங்கள் அத்துடன் விருப்பம் இருந்தால் உங்களது கைப்பேசி (மொபைல்) எண்ணையும் பகிருங்கள். வழிகாட்ட உதவியாக இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:02, 25 சூன் 2013 (UTC)
நண்பா நான் மேலும் திருக்குறள் களுக்கு பொருள் எழுதுகிறேன் (5க்கு எழுதியுள்ளேன்) இனியும் அதை தொடரலாமா?
- இல்லை நண்பரே. விக்கிப்பீடியா என்பது கலைக்களஞ்சியமாகும் இதில் உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகளுக்கென விதிமுறைகள் உள்ளன. பொதுவாக நம்முடைய சிந்தனைகளை விக்கப்பீடியாவில் எழுத இயலாது. தாங்கள் விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம் என்பதில் உள்ள கட்டுரைகளை படியுங்கள்,. உதவியாக இருக்கும். அத்துடன் எவ்வாறான கட்டுரைகளை எழுதுவது என்று உங்களுடைய பயனர் பக்கத்தினைப் பார்த்து நான் கூறுகிறேன். தாங்கள் அதனை முதலில் உருவாக்குங்கள். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:05, 25 சூன் 2013 (UTC)
பயனர் பக்கம் உருவாக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன், உதவுங்கள் சகோ தகவல்களுக்கு நன்றி நண்பா
- சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:44, 27 சூன் 2013 (UTC)
நன்றி சகோ நான் எனது பயனர் பக்கத்தை மறு தொகுப்பு செய்துள்ளேன் ஏதும் பிழை இருந்தால் கூறுங்கள் 08:59, 27 சூன் 2013 (UTC)08:59, 27 சூன் 2013 (UTC)~ud
வேண்டுகோள்...
தொகுவணக்கம் நண்பரே!
தாங்கள் உருவாக்கிய சைவ சித்தாந்தம் மறு பார்வை எனும் கட்டுரையின் தலைப்பினை சைவ சித்தாந்தம் மறு பார்வை (நூல்) எனும் தலைப்பிற்கு நகர்த்தினேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை... நான் சரியாகவே செய்தேன். ஆனால் இரண்டு கட்டுரைகள் இப்போது உள்ளன. இதனை சரி செய்வதற்கு உங்களின் உதவி தேவை...
- சைவ சித்தாந்தம் மறு பார்வை கட்டுரையில் நீங்கள் கடைசியாக செய்த மாற்றங்களை தயவுசெய்து சைவ சித்தாந்தம் மறு பார்வை (நூல்) எனும் கட்டுரையில் செய்துவிடுங்கள்.
- அதன்பிறகு நான், சைவ சித்தாந்தம் மறு பார்வை எனும் கட்டுரையை நீக்கிவிடுகிறேன்.
- சிரமத்திற்கு மன்னிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:42, 28 சூன் 2013 (UTC)
- செய்துள்ளேன் நண்பரே. சைவ சித்தாந்தம் மறு பார்வை எனும் பெயரி்ல் விக்கிப்பீடியாவில் கட்டுரை வர வாய்ப்பில்லை என்று நினைத்தேன். அதனால் நூல் என்பதை இணைக்கவில்லை. சைவ சித்தாந்தம் மறு பார்வை பக்கத்தினை வழிமாற்றாக மாற்றியுள்ளேன். நீக்க வேண்டுமா என்பதை தாங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:49, 28 சூன் 2013 (UTC)
- பொதுவாக நூல்கள் குறித்த கட்டுரைகளின் தலைப்பில் (நூல்) என்பதனை இணைப்பதுவே சரி. உதாரணமாக 'சைவ சித்தாந்தம் மறு பார்வை' எனும் தலைப்பினைக் கண்டவுடன்... இது ஒரு ஆய்வுக் கட்டுரையோ என நினைக்கத் தோன்றுகிறது. திறந்து பார்த்த பிறகே இது ஒரு நூல் குறித்த கட்டுரை என அறிய முடிகிறது.
- 'சைவ சித்தாந்தம் மறு பார்வை' எனும் தலைப்பிற்கு வழிமாற்று தேவையில்லை என்றே கருதுகிறேன். ஏனெனில், 'சைவ சித்தாந்தம் மறு பார்வை' என தட்டச்சு செய்து தேடினால்... 'சைவ சித்தாந்தம் மறு பார்வை (நூல்)' என்பது தோன்றி விடும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:02, 28 சூன் 2013 (UTC)
- அவ்வாறானால் சரி நண்பரே! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:26, 28 சூன் 2013 (UTC)
- வழிமாற்று இருப்பதால் தவறில்லை.--Kanags \உரையாடுக 14:32, 28 சூன் 2013 (UTC)
- வழிமாற்று தேவை என்பது இப்போது புரிகிறது. சைவ சித்தாந்தம் மறு பார்வை எனும் பெயரில் இன்னொரு கட்டுரை அறியாமல் எழுதப்படும் வாய்ப்பினை இந்த வழிமாற்று தடுத்துவிடும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:38, 2 சூலை 2013 (UTC)
- நன்றி நண்பரே!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:30, 2 சூலை 2013 (UTC)
- வழிமாற்று இருப்பதால் தவறில்லை.--Kanags \உரையாடுக 14:32, 28 சூன் 2013 (UTC)
ஒரு உதவி (கல்லூரி பகுப்பு)
தொகுநண்பரே , தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளிக்கென பகுப்புகள் எதாவது உள்ளதா? - ரோஹித் 06:32, 2 சூலை 2013 (UTC)
- உள்ளது நண்பரே பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்லூரிகள், பகுப்பு:தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள்,. இவற்றில் எவை தக்கவையோ அவற்றை இடுங்கள், தமிழ்நாடு கல்லூரிகளில் மாவட்ட வாரியாகக் கூட பகுப்புகள் உள்ளன. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:50, 2 சூலை 2013 (UTC)
குறிப்பு
தொகுசில நிமிடங்கள் முன்பு நீங்கள் மேற்கோள் சேர்த்த பக்கங்களின் கீழே பிழைச் செய்தி வருகிறது. மேற்கோள் சேர்க்கும் பக்கங்களின் இறுதியில்
== மேற்கோள்கள் == என்ற பகுதியைச் சேர்த்து அதில் {{Reflist}} என்று இட்டு விடுங்கள்.
என்று இடுவதன் மூலம் இந்தப் பிழையைத் தவிர்க்கலாம். பல பக்கங்களில் ஒரே மாதிரியான தொகுப்புகளைச் செய்யும் போது முதல் ஒரு சில பக்கங்களுக்கு அடுத்து செய்பவற்றைச் சிறு தொகுப்புகளாக குறித்து விடுங்கள். இதன் மூலம் அண்மைய மாற்றங்களில் நெரிசலைக் குறைக்க முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 09:10, 2 சூலை 2013 (UTC)
- ஒரே மேற்கோள் என்பதால் அவற்றை அனைத்துக் கட்டுரைகளிலும் விரைந்து இடுவதற்காக இவ்வாறு செய்தேன். அனைத்து கட்டுரைகளிலும் சிறு தொகுப்பு என்று குறிப்பிடுவது நேரத்தினை அதிகரிக்கும் என்றே செய்யவில்லை. சில நிமிட வேலைகள் என்பதால் அவை உடனே மறைந்து போகுமென நினைக்கிறேன். நன்றி.
2013 தொடர் கட்டுரைப் போட்டி. சூலை, 2013
தொகுதேதி இன்றோடு ஐந்தாகிவிட்டது :) தாமதமில்லாமல் விரைந்து உங்கள் பங்களிப்புகளை தரவும்.--அராபத் (பேச்சு) 05:05, 5 சூலை 2013 (UTC)
- இம்முறை வேடிக்கைத்தான் நண்பரே. வேறு பணிகள் உள்ளன. அழைப்பிற்கு நன்றி! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:49, 5 சூலை 2013 (UTC)
- வடம் பிடித்து தேரை இழுக்க முடியாவிட்டாலும், அதை தொடுவதே புன்னியம் என்று சொல்வார்களே! அதேபோல் மற்ற பணிகளுக்கு மத்தியில், இதிலும் முடிந்த அளவு ஈடுபட முயற்சித்து பாருங்கள். --அராபத் (பேச்சு) 08:50, 5 சூலை 2013 (UTC)
- அழைப்பிற்கு நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:26, 5 சூலை 2013 (UTC)
வேண்டுகோள்-நாக வழிபாடு
தொகுஇந்துமதம் பற்றிய உங்கள் ஆர்வங்கண்டு, ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். உங்களுக்கு சம்மதம் எனில், இப்பகுப்பில் உள்ளவைகளை, தமிழ் விக்கிப்பீடியாவிற்கு கொண்டு வருக. மிகவும் தொன்மையான வழிபாட்டு முறையென்பதால் இதில் நான் ஆர்வம் கொண்டேன்.தமிழ் விக்சனரி, பொதுவகம், விக்கித்தரவு, உயிரியல், திறமூல மென்மியங்களில் போன்றவைகளில், இப்பொழுது ஈடுபாடு கொண்டிருப்பதால், எனது கவனத்தை இம்மொழிபெயர்ப்புப் பங்களிப்புகளில், என்னை ஈடுபடுத்திக் கொள்ள இயலவில்லை. அதனால் தான் உங்களை நாடினேன்.வணக்கம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 10:01, 13 சூலை 2013 (UTC)
- இயன்றதைச் செய்கிறேன் நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:04, 13 சூலை 2013 (UTC)
- நன்றி.--≈ த♥உழவன் ( கூறுக ) 10:37, 13 சூலை 2013 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த வழிகாட்டுனர் பதக்கம் | ||
பரதநாட்டிய வலைவாசல் உருவாக்க உதவியமைக்கும், பல வழிகளில் எனக்கு உதவியமைக்கும் நன்றி தெரிவிக்குமுகமாக இப்பதக்கம்.-- :) ♦ நி ♣ ஆதவன் ♦ ( உரையாட ) 09:18, 22 சூலை 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:48, 24 சூலை 2013 (UTC)
- மிகப்பெரும் பணியை மனமுவந்து ஏற்றிருக்கின்றீர்கள். அப்பணியில் எனக்கும் சில சந்தர்ப்பங்களை தந்தமைக்கும், இப்பதக்கத்தினை வழங்கியமைக்கும் மிக்க நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:35, 22 சூலை 2013 (UTC)
- விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:48, 24 சூலை 2013 (UTC)
- விருப்பம் என்னது பரதநாட்டிய வலைவாசலா?? இது எப்போது துவங்கப்பட்டது?! நான் ஊரில் இல்லாத காலத்தில் இவ்வளவு வேகமாக தொகுத்து சாதனை படைத்தீர் சகோ!! விக்கிப்பீடியாவே மாறிப்போய்விட்டது, எம்புட்டு வேகம்! ஓவர் இசுப்பீடு ஒடம்புக்கு ஆகாது! (நகைச்சுவைக்காக மட்டும் :)) வாழ்த்துகள் சகோ, தொடருங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:39, 24 சூலை 2013 (UTC)
- தாங்களின் வழிகாட்டுதல்கள் இல்லாமல் சிரமமாக இருந்தது நண்பரே. பணி நிமர்த்தமாக தாங்கள் பங்குகொள்ளாத நாட்களில் ஆதவனின் முயற்சியால் இந்த வலைவாசல் தொடங்கப்பட்டது. தற்போது அதற்கான கட்டுரைகளை மேம்படுத்துவதில் அவர் உழைத்துக் கொண்டுள்ளார். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:47, 24 சூலை 2013 (UTC)
- இங்கே சுற்றிக் கொண்டிருந்தால் நிறைய செய்திருப்பேன். :) இருந்தாலும், எனக்கு பப்ளிசிட்டி பிடிக்காது ;) அவ்வப்போது மற்றொருவர் கட்டுரைகளிலும் கவனம் செலுத்தி திருத்திடுவோம். தொடர்ந்து இணைந்திருப்போம், சிறப்பாக செய்திடுவோம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:15, 24 சூலை 2013 (UTC)
- நன்றி நண்பரே!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:18, 24 சூலை 2013 (UTC)
தங்களின் கவனத்திற்கு...
தொகுவணக்கம்!
இந்துத் தொன்மவியல் என்பதே சரியென நினைக்கிறேன்; தமிழறிஞர் செல்வா அவர்களிடம் ஒருமுறை கேட்டுப் பாருங்கள். தங்களின் உழைப்பையெல்லாம் கொட்டியபிறகு, பல இடங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டிய நிலையைத் தவிர்க்க எண்ணியே இந்த வேண்டுகோள்! பார்க்க: [பகுப்பு:தொன்மவியல்] --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:03, 24 சூலை 2013 (UTC)
- கிரேக்கம் தவிர்த்து தமிழ் முதல் அனைத்து தொன்மவியலும் ஒற்று இல்லாமலேயே எழுதப்பட்டுள்ளன. எவை சரியென செல்வா அவர்களிடம் கேட்டு தெளிவுருகிறேன். மாற்றம் செய்யப்பட வேண்டுமாயின் செய்யலாம். தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:15, 24 சூலை 2013 (UTC)
இந்து சமயத் தலைப்புகள் வார்ப்புரு
தொகுஜெகதீஸ்வரன், அநேகமாக இது ஆங்கில வார்ப்புருவின் மொழிபெயர்ப்பாகத்தான் இருக்கும். ஏதாவது மாற்றம் செய்யவேண்டும் அல்லது இற்றைப்படுத்த வேண்டும் என்று தோன்றினால் நீங்களே செய்துவிடலாம். நானும் பார்க்கிறேன். இந்துசமயம் தொடர்பான தலைப்புக்களில் தீவிர கவனம் செலுத்தி மேம்படுத்தி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.---மயூரநாதன் (பேச்சு) 06:58, 26 சூலை 2013 (UTC)
- ஆங்கில வார்ப்பருவின் மொழிபெயர்ப்பு என்றால், நான் ஏதேனும் மாற்றம் செய்யப் போய் முற்றிலுமாக மாறிவிட நேரிடும் என்றே பயந்தேன். தங்களின் பதிலால் அந்த பயம் தீர்ந்தது. தங்களுடைய வாழ்த்திற்கும், பதிலுக்கும் நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:26, 26 சூலை 2013 (UTC)
முதற்பக்கத்தில் சைவநெறி வலைவாசல்
தொகுவணக்கம் செகதீசுவரன். முதற்பக்கத்தில் சைவநெறி வலைவாசலைக் காட்சிப்படுத்தியுள்ளோம். இதையும் இன்னும் பல சமயம் சார் கட்டுரைகளையும் உருவாக்குவதில் நீங்கள் செலவிடும் அளவற்ற உழைப்புக்கு நன்றியும் வணக்கமும்!--இரவி (பேச்சு) 07:29, 1 ஆகத்து 2013 (UTC)
- முதற்பக்க கட்டுரைகளில் சிவன், வலைவாசல் பகுதியில் சைவம், உங்களுக்குத்தெரியுமா பகுதியில் காரைக்கால் அம்மை, பீநாகம் பற்றிய குறிப்புகள். மிகுந்த மகிழ்ச்சி நண்பரே. ஆடி பதினெட்டுக்கு கிராமத்திற்கு சென்றிருந்தமையால் காலதாமதமான நன்றியுரைத்தலுக்கு மன்னிக்கவும்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 00:38, 5 ஆகத்து 2013 (UTC)