பயனர் பேச்சு:Natkeeran/தொகுப்பு09
தேசிய தலைநகரப் பகுதி
தொகுநான் wanted pages என சிறப்புப் பக்கங்களில் காணப்படும் பக்கங்களுக்கு எழுத எடுத்துக் கொண்டுள்ளேன். பல ஆங்கில தலைப்புகள் உள்ளன; அவற்றை தமிழுக்கு மீள்வழிப் படுத்துதல் சரியல்ல என அறிகிறேன். அதனால் மூலப் பக்கங்களிலேயே அவற்றை மாற்ற வேண்டும். ஏதாவது தானியங்கி நிரல் செய்யுமென அவற்றை விடுகிறேன். தேசிய தலைநகர்ப் பகுதி: தில்லியில் NCT - National Capital Territory & NCR - National Capital Region என இரு சொல்லாடல்கள் உள்ளன. NCT தில்லி ஆட்சிப்பகுதியாகும். NCR தில்லி மாகரைச் சூழ்ந்த பிற மாநிலங்களின் பகுதிகளை ஒன்றிணைத்த திட்டக்குழுவாகும். இதற்கு நகரமைப்பு திட்டங்களில் மாநில அரசுகளை ஒருங்கிணைப்பதற்கு மட்டுமே அதிகாரமுள்ள அமைப்பாகும். region என்பது வலயம் என கொண்டு உங்கள் வார்ப்புரு இந்தியா 2 இல் தேசிய தலைநகர் வலயம் என மாற்றுவது சரியாக இருக்கும். தவிர தில்லி UT அல்ல, மாநிலமாக அங்கீகாரம் பெற்றுள்ளது..அதனை தேசிய தலைநகர் பகுதி NCT எனக் குறிக்கலாம். உங்கள் கருத்துக்களை அறிந்து இக்கட்டுரைகள் எழுத எண்ணம். -- 05:56, 29 ஜூன் 2009 (UTC)05:55, 29 ஜூன் 2009 (UTC)
மூளை தலைப்புகள் பட்டியல்
தொகுமிக்க நன்றி நற்கீரன். பட்டியலை பெரிதாக்குகிறேன் :) --Daniel pandian 16:37, 1 ஜூலை 2009 (UTC)
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல்
தொகுவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் திட்டத்தை தொடங்கியாச்சு:) இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது--கார்த்திக் 17:05, 19 ஜூலை 2009 (UTC)
நாம் யூதர்களிடம் இருந்து கற்க வேண்டியது, நாம் செய்த தவறுகளை திரும்ப செய்யமால் இருப்பது என நிறைய விடயம் உள்ளது. நம் உடனடி தேவை முள் வெளியில் வதை படும் நம் உறவுகளை வெளிக்கொண்டு வருதாகும். என்னால் முடிந்த உதவிகளை நாங்கள் நடத்தும் அறக்கட்டளை, என் நண்பர்கள், அண்ணன் சீமான் மற்றும் பெரியார் தி.க என செய்ய முற்படுகிறோம். நாம் ஓசை இல்லமால் செய்ய வேண்டிய கரியங்கள் நிறைய.... முயல்வோம், அடைவோம்.. --Munaivar. MakizNan 00:18, 31 ஜூலை 2009 (UTC)
புதிய திட்டம்
தொகுநக்கீரன். விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டபக்கத்தை பாருங்கள் உங்களின் கருத்துக்களை கூறுங்கள். இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு மிகவும் தேவை--கார்த்திக் 19:40, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
தன் குறிப்பு
தொகு- Cyclomatic complexity
--Natkeeran 03:25, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
sitenotice
தொகுநற்கீரன், sitenotice மாற்றி இருக்கிறேன். நல்ல யோசனை. இந்த மாற்றங்களை நீங்களும் செய்ய இயலுமே?--ரவி 19:06, 15 ஆகஸ்ட் 2009 (UTC)
நன்றி
தொகுபாராட்டுக்கு நன்றி நற்கீரன்.--மணியன் 05:08, 28 ஆகஸ்ட் 2009 (UTC)
தானியங்கி
தொகுFoxBot இற்கு தானியங்கி தகுதி வழங்கப்படலாம்.--Kanags \பேச்சு 07:35, 5 செப்டெம்பர் 2009 (UTC)
vision, mission, principles, strategy
தொகுநற்கீரன், நான் சில நாட்கள் விடுப்பில் இருந்தேன். உடனே மறுமொழி தர இயலாமைக்கு வருந்துகிறேன். கீழ்க்கண்ட சொற்களுக்கு இடத்திற்கு ஏற்றார்போலத்தான் ஈடுமொழிகள் தர இயலும். எல்லா இடங்களிலும் ஈடாக கீழே நான் தரும் சொற்கள் பொருந்தா.
- Goal - இலக்கு, குறிக்கோள்,முடிவு, எண்ணியம், நோக்கம்
- Vision - நோக்கம், பெருங்காட்சி, ஒளிவயல், தெரிசனம், முன்னோக்கம்
- Mission - குறித்திட்டம், குறிப்பணி, குறிவினை, குறிச்செயல்
- Principles - கொள்கைகள், இயற்கூறுகள், இயலுண்மைகள்
- Strategy - சூழ்ச்சி, வடிதிட்டம், தேர்திட்டம், சூழ்தேர்ச்சி
- Values - விழுமியம், மதிப்புகள், பயன்கள்,
இப்போதைக்கு இவற்றை முன் வைக்கின்றேன். --செல்வா 18:40, 13 செப்டெம்பர் 2009 (UTC)
Hi there. I just sent you an email. Amsaim 17:20, 23 செப்டெம்பர் 2009 (UTC)
Translation request
தொகுHi Natkeeran! Would you be so kind to help me translate this article into the wonderful Tamil language? Please. If you think that article is too long, here is a short version: "Lu Xun was a Chinese short story writer, editor, translator, critic, essayist and poet. He was most famous for the novella The True Story of Ah Q." Thanks a lot and best regards:)--Amaqqut 03:44, 3 நவம்பர் 2009 (UTC)
முதற்பக்கக் கட்டுரைகள்
தொகுஇவ்வாரம் தமிழறிஞர் சி. இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாள். அதையொட்டி அவரைப் பற்றிய கட்டுரையை முதற்பக்கத்தில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \பேச்சு 10:58, 16 நவம்பர் 2009 (UTC)
கட்டுரையில் புகைப்படங்கள்
தொகுஉங்கள் வாழ்த்துக்கும் வரவேற்புக்கும் நன்றிங்க நற்கீரன். ஒரு கட்டுரையில் புகைப்படத்தை நுழைப்பது குறித்த விளக்கங்கள் சரிவரப் புரியவில்லை. யாராவது வழிமுறைகளை விளக்கி உதவ முடியுமா? நன்றி..--இரஞ்சித்
முயல்கிறேன்
தொகுநற்கீரரே, வணக்கம், நன்றி! நீண்டதொரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் விக்கியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான். மெல்லதான் நான் வேகமெடுக்க வெண்டும், அதனின் ஆண்டறிக்கைக்கு பயனுள்ள கருத்துக்களை அளிக்க இயலுமா எனத்தெரியவில்லை, என்னால் முடிந்ததை முயல்கிறேன். பொறுத்தருள்க... --நரசிம்மவர்மன்10 05:43, 19 டிசம்பர் 2009 (UTC)
துவங்கத்திற்கு நன்றி
தொகுஇயற்பியலுக்கான விக்கித் திட்ட பக்கத்தினை துவங்கித் தந்தமைக்கு நன்றி. தாங்களும் அதில் இணைந்து கொள்ள வேண்டுகிறேன். போகப் போக திட்டத்தை மேன்மைப்படுத்துவோம். --நரசிம்மவர்மன்10 15:19, 5 ஜனவரி 2010 (UTC)
செயற்திட்டம்
தொகுவணக்கம் நற்கீரன்! விக்கியை மிகவும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் செழுமைப்படுத்தி வருகின்றீர்கள். நீங்கள் அளிக்கும் நேரம் / உழைப்பு வியக்கும் வண்ணம் உள்ளது. தொடருங்கள் உங்கள் பணியை.
(நிருவாகப் பொறுப்பிற்காக) உங்கள் வாழ்த்துதலுக்கு நன்றி . சற்று காலநேரம் (அவகாசம்) அளியுங்கள். செயற்திட்டம் குறித்து என் எண்ணங்களை அளிக்கின்றேன். -- பரிதிமதி 13:16, 19 டிசம்பர் 2009 (இந்திய நேரம்)
தாராண்மியவாதம்
தொகு"தாராண்மியவாதம்" என்ற சொல் தொடர்பாக உங்கள் கருத்தை ஏற்கெனவே அக் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் பார்த்தேன். இது பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காகத்தான் இதில் எனது கருத்தைக் கூறவில்லை. வேறு பயனர்களும் கருத்துக் கூறுவார்கள் என எதிர்பார்த்தேன். தாராண்மியவாதம் என்பது சரியான பொருள் தரவில்லை என்பது சரிதான். சுதந்திரவாதம் என்பதற்குப் பதிலாக நல்ல தமிழ்ச் சொல் ஏதாவது கிடைத்தால் நல்லது. வேறு யாருக்காவது நல்லசொல் தெரிகிறதா என்று இரண்டு மூன்று நாட்கள் பார்த்துவிட்டுப் பின்னர் மாற்றுங்கள். மயூரநாதன் 16:06, 3 ஜனவரி 2010 (UTC)
முதற்பக்க இன்றைப்படுத்தல்
தொகுவணக்கம் நற்கீரன், என்னால் எந்த அளவு தொடர்ச்சியாக செய்யவியலும் என தற்போது கூறவியலவில்லை.இருப்பினும் ஏதாவது ஒரு பகுதியை இன்றைப்படுத்த முயல்கிறேன். செயல்முறைகளை எனக்கு தெரிவிக்கவும்.--மணியன் 04:47, 5 ஜனவரி 2010 (UTC)
- இன்று முதற்பக்க கட்டுரைகள் சனவரி 25 என்ற திகதி இட்டு துவக்கியிருப்பதைப் பார்த்தேன். நான் நீங்கள் வேண்டியபடி சனவரி 24 திகதியிட்டு ஓர் கட்டுரை துவக்கியிருந்தேன். இதில் இந்திய குடியரசு நாளை முன்னிட்டு இந்தியக்கொடியைப் பற்றிய குறிப்பை இணைத்திருந்தேன். மற்றொரு கட்டுரையாக திலாப்பியாவையே உண்ணியிருந்தேன். நீங்கள் காணவில்லைபோலும். எலவே நாம் இத்தகைய செயல்களை ஒருங்கிணைக்க ஏதேனும் உரையாடற்குழு உள்ளதா ? அல்லது வேறு செயல்முறை உள்ளதா ?--மணியன் 07:38, 26 ஜனவரி 2010 (UTC)
- உங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி நற்கீரன்.இனி விக்கிப்பீடியா:முதற்பக்கம் இன்றைப்படுத்தல் ஒழுங்கமைவு பக்கத்தில் அடுத்து வருவது பகுதியில் தொடுப்பு கொடுத்து விடுகிறேன். தவிர முதற்பக்கக் கட்டுரைகளுக்கு {{முதற்பக்க கட்டுரை}} என்ற வார்ப்புருவை இடுவதும் இரண்டு முறை தேர்வாவதைத் தடுக்கும்.--மணியன் 04:22, 27 ஜனவரி 2010 (UTC)
நன்றிகள்
தொகுநற்கீரன், உங்கள் வாழ்த்துக்களுக்கு முதற்கண் எனது மனம் கனிந்த நன்றிகள். நீண்ட காலமாகப் பல வழிகளிலும் என்னை ஊக்கப்படுத்திய உடன் பங்களிப்பாளர்களில் நீங்கள் முக்கியமானவர். உங்களைப் போன்றவர்கள் சூழ இருக்கும்போது தொடர்ந்து பங்களிப்பதில் எனக்கு எந்தத் தடங்கலும் வராது என்பது எனது நம்பிக்கை. மயூரநாதன் 16:09, 13 ஜனவரி 2010 (UTC)
ஈராயிரம் கட்டுரைகள்
தொகுநற்கீரன், தமிழ் விக்கியில் இற்றைவரையில் 2000 கட்டுரைகளுக்கு மேல் (2107) ஒரு சாதனை படைத்துள்ளீர்கள். எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். அனைத்துத் தமிழ் விக்கிபீடியர்கள் சார்பிலும் இந்த ஈராயிரவர் என்னும் பதக்கம் அளித்துக் கௌரவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் நற்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன். அன்புடன் --Kanags \பேச்சு 09:11, 3 ஆகஸ்ட் 2008 (UTC)
- வாழ்த்துகள் நற்கீரன் !! தமிழ் விக்கியின் ஆக்கத்திலும் தரத்திலும் உங்கள் பங்களிப்பு சிறப்பானது.உங்கள் நற்பணியும் வழிகாட்டலும் தொடர வாழ்த்துகிறேன்.--மணியன் 06:27, 14 ஜனவரி 2010 (UTC)
- வாழ்த்துகள் நற்கீரன்! --Chandravathanaa 07:00, 14 ஜனவரி 2010 (UTC)
- மிக்க மகிழ்ச்சி நற்கீரன்! பெரும் பணி! தொடருங்கள்.-- பரிதிமதி 12:53, 14 சனவரி 2010 (இந்திய நேரம்)
அயராத பங்களிப்பாளர் | ||
நற்கீரனுக்கு இந்த விண்மீன் பதக்கம் பேருவகையுடன் அளிக்கப்படுகிறது பயனர்:பரிதிமதி | பரிதிமதி 12:53, 14 சனவரி 2010 (இந்திய நேரம்) |
- வாழ்த்துகள், நற்கீரன். இன்னும் பல்லாயிரம் கட்டுரைகள் படைப்பீர்கள் என நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 09:32, 14 ஜனவரி 2010 (UTC)
- பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. --Natkeeran 19:41, 14 ஜனவரி 2010 (UTC)
நற்கீரன், நீங்கள் 2000 கட்டுரைகளைக் கடந்திருக்கிறீர்கள். அது ஒருபுறம் இருக்க, கட்டுரைகளை வகைப்படுத்துதல், பரப்புரை, தமிழ் விக்கிப்பீடியா தொடர்பிலான வெளியார் கருத்துக்களைக் கவனித்துப் பிற பயனர்களுக்கு அறியத் தருதல், பிற பயனர்களை ஊக்குவித்தல் என்று பல்வேறு வகையில் பங்களித்துத் தமிழ் விக்கியின் தரத்தை உயர்த்துவதற்கு ஒரு முன்னணிப் பயனராக அயராது பணியாற்றி வருகிறீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இன்னும் பல ஆண்டுகள் உங்கள் பணி தொடரட்டும். மயூரநாதன் 19:59, 14 ஜனவரி 2010 (UTC)
- வாழ்த்துக்கள் நற்கீரன்! இன்னும் பல வழிகளில் உங்கள் பங்களிப்புகள் சிறக்கட்டும்.--Arafat 20:52, 14 ஜனவரி 2010 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் சாதனையாளர் பட்டியல்களில் ஒன்றாய் தாங்கள் இரண்டாயிரம் கட்டுரைகள் பங்களித்து இருப்பது சிறப்பு. இச்சிறப்பு மென்மேலும் தொடர்ந்து தங்களுக்கு மேலும் பல சிறப்புகள் கிடைக்க என் இனிய வாழ்த்துக்கள்.--Theni.M.Subramani 00:26, 15 ஜனவரி 2010 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் இரண்டாயிரம் கட்டுரைகள் படைத்த தங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக இந்த சிறப்புச் சான்றளிக்கப்படுகிறது.--Theni.M.Subramani 05:53, 15 ஜனவரி 2010 (UTC)
நற்கீரன், உங்கள் கட்டுரைப் பணியைப் போலவே திட்டமிடல் பணி மிகச் சிறப்பு. பல வகையிலும் சிறப்பாகப் பங்களிக்கும் உங்களைப் போன்றோர் இருப்பது தமிழ் விக்கிக்கு நற்பேறு--ரவி 14:55, 16 ஜனவரி 2010 (UTC)
- அனைவருக்கும் மிக்க நன்றிகள். --Natkeeran 01:05, 21 ஜனவரி 2010 (UTC)
test--Kavalooraan 18:14, 23 ஜனவரி 2010 (UTC)
இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு எங்கே?
தொகுஇந்திய மொழிகள் விக்கிகளை ஒப்பிட்டு பதிவு செய்திருந்த பக்கம் எங்கே? யாரோ நீக்கிவிட்டார்கள் போலத் தெரிகின்றதே (அல்லது என் கண்களுக்குச் சிக்கவில்லையா?)! வேறு இடத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளதா? --செல்வா 22:05, 6 பெப்ரவரி 2010 (UTC)
- இங்கிருப்பதைக் கண்டேன்.--செல்வா 22:46, 6 பெப்ரவரி 2010 (UTC)
கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் உருவாக்கும் போட்டி
தொகுகல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் போட்டி பக்கம் பார்க்கவும். திருத்தங்கள் இருந்தால் செய்யவும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் ஒரு மாணவர் த.வி.யின் முதற்பக்கத்திற்கு வந்தவுடனேயே முதல் சொடுக்கிலேயே இப்பக்கம் வர வேண்டும். (பல சொடுக்குகள் மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி, முக்கிய பக்கத்திற்கு வராமலேயே போய்விடச் செய்துவிடலாம்.)
இப்பக்கத்திலும் இரண்டே உட்தலைப்புகள் உள்ளவாறு அமைத்துள்ளேன். அவை 1. தலைப்புகள் 2. விதிகள்.
மேலும் பேசுவோம்.
அமைச்சர், செயலாளர் சந்திப்பின் சாரத்தை உங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன். தயந்து பார்க்கவும்.
நன்றி. பரிதிமதி
மாநாடு
தொகுநற்கீரன், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கட்டுரையில் நான் செய்திருந்த சில மாற்றங்களை நீக்கியிருக்கிறீர்கள். காரணம் தெரியலாமா?--Kanags \உரையாடு 03:02, 13 மார்ச் 2010 (UTC)
- நீங்கள் செய்த மாற்றங்கள் தவறுதலாக நீக்கப்பட்டன. மன்னிக்க. மீட்டெத்து விட்டேன். மற்றும் விமர்சனங்கள் தகுந்த ஆதாரங்களுடன் மீண்டு சேர்க்கப்பட்டுள்ளது. --Natkeeran 03:04, 13 மார்ச் 2010 (UTC)
Hello
தொகுHello Natkeeran, greeting you after a long time. Hope this finds you well. I thought you would be interested to learn about this. Recently, I had been helping Gastropod project in automating the process of creating species under the genus, Conus. Please check out this page and let me know your feedback. I was thinking it may be of use in creating similar articles here on Tamil Wikipedia. Regards, Ganeshk 03:22, 15 மார்ச் 2010 (UTC)
- Hello Ganash. Good to hear from you. Yes, it definitely looks like a good way to increase the diversity of articles. We will follow a similar process, first few test articles, before going full scale. Also, please explain the tasks we have complete. Thank you for your initiative. --Natkeeran 04:20, 16 மார்ச் 2010 (UTC)
- I was not looking to create Conus articles here. I wanted to show you the technique used. The project used a CSVLoader AWB plugin to create new articles based on information stored in delimited text files (CSV). Any set of new articles (in any area of interest) can be created using this logic. It removes the need to write new programs from scratch. Regards, Ganeshk 00:50, 17 மார்ச் 2010 (UTC)
ஐயம்
தொகுதிரு.நக்கீரன் அவர்களுக்கு சக விக்கியன் இ.பு.ஞானப்பிரகாசனின் நேச வணக்கம்!
சிறிது நேரத்துக்கு முன்பு படிமத்தோடு கட்டுரை எழுதுவது எப்படி என்று பயிற்சி செய்து பார்ப்பதற்காக Vadai.jpg என்ற படிமத்தை மணல்தொட்டிப் பகுதியில் கொண்டு வர முயன்றேன். இடையில் வேறு ஓர் ஐயம் வரவே முயற்சியைப் பாதியில் விட்டுவிட்டு விக்கிப்பீடியாவின் உசாத்துணை, ஒத்தாசை, நடைக்கையேடு ஆகிய பக்கங்களுக்கு ஒரு நடை போய்விட்டு வந்தேன். வந்து பார்த்தால், நீங்கள் நான் எழுதி வைத்திருந்தவற்றை அழித்து விட்டு, நான் ஒரு தவறான கோப்பைப் பதிவேற்ற முயல்வதாகக் கூறி எச்சரிக்கையும் விடுத்திருந்தீர்கள்.
ஏன் ஐயா? அந்தக் கோப்பு பதிவேற்றப்படக் கூடாத கோப்பா? அப்படியே இருந்தாலும் மணல்தொட்டிப் பகுதியில்தானே நான் அதைப் பயன்படுத்திப் பார்த்தேன். அது எப்படிப் பதிவேற்றுவதாகும்? மேலும் அது எப்படித் தவறாகும்? புதியவனான எனக்கு அன்பு கூர்ந்து விளக்கவும்!
- வணக்கம் ஞானபிரகாசன். நான் அப்படி எதையும் செய்யவில்லை. விக்கிப்பீடியா:மணல்தொட்டி வரலாற்றுப் பக்கத்தில் நான் அண்மையில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை என்பதைக் காணலாம். அங்கு செய்யப்பட்ட கடசி மூன்று தொகுப்புகளும் உங்களால் செய்யப்பட்டவையே. --Natkeeran 23:34, 27 மார்ச் 2010 (UTC)
போட்டி அறிவிப்பு
தொகுஎனக்கும் முந்தைய எளிய அறிவிப்பு பிடித்திருந்தது. சிறு மத்தாப்புப் பொறிகள் போன்றே புதிய வடிவமைப்பு இருப்பதாகத் தோன்றியது. எனினும், உங்கள் கருத்தும் சிந்திக்கத்தக்கதே. மயூரநாதனிடம் தெரிவிப்போம்--ரவி 17:36, 28 மார்ச் 2010 (UTC)
நோர்வே தமிழர்பற்றிய நிகழ்ப்படம்
தொகுஇணைப்புக்கு நன்றி நக்கீரன். நோர்வேயில் தமிழர்கள் பற்றிய விபரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். சரியான தகவல்கள் யாவும் கிடைத்ததும், அவற்றை தமிழ் விக்கியில் ஒரு இடத்தில் எழுதலாம் என்றிருக்கிறேன். --கலை 11:15, 31 மார்ச் 2010 (UTC)
Anarchy
தொகுஅனார்க்கி (anarchy) என்னும் சொல்லின் பொருள் கிரேக்க மொழியில் தலைவன் (தலைமை) இல்லாத நிலை எனப்பொருள்படுவது. ஆக்ஃசுபோர்டு அகராதியின் சொற்பிறப்பியலில் "without a chief or head" என்கிறது. அரசு ஆட்சியொழுக்கம், முறைமை, சட்டதிட்டங்களைப் பின்பற்றல் ஆகிய எதுவுமே இல்லாத அரசச் சீர்குலைவு நிலை. எனவே முறைகுலைவு, அரசின்மை, தலையின்மை எனலாம். --செல்வா 04:10, 3 ஏப்ரல் 2010 (UTC)
நோர்வேத் தமிழர்
தொகுநக்கீரன்! நோர்வேத் தமிழர் பக்கத்தை இற்றைப்படுத்துவதற்கான சரியான தகவல்களை ஒருவர் தருவதாகக் கூறியுள்ளார். அவற்றைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவற்றை இங்கே இணைக்கிறேன்.--கலை 22:30, 21 ஏப்ரல் 2010 (UTC)
கூகுள் திட்டம் பற்றிய கருத்து
தொகுநற்கீரன், கூகுள் திட்டம் குறித்து இன்னும் சிறிது காலம் பார்ப்போம் என வாக்களித்து உள்ளீர்கள். இன்னும் எவ்வளவு காலம் தரலாம், என்னென்ன அடிப்படைகளில் தர அளவீடு செய்யலாம், எப்படி அணுகலாம் என்பது குறித்து உங்கள் கருத்துகளை விரிவாகத் தந்தால் நன்று --ரவி 15:37, 21 ஏப்ரல் 2010 (UTC)
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
தொகுநற்கீரன், அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடல் பற்றிய கட்டுரை பார்த்தேன். உங்களை இந்த பாடல் கவர்ந்துள்ளதா? என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது. கடந்த சில வாரங்களாக இரவில் என்னைத் தழுவும் பாடலும் இதுவே. கட்டுரைக்கு நன்றி :) --அராபத்* عرفات 04:09, 23 ஏப்ரல் 2010 (UTC)
- ஆமாம். மிகவும் அழகான பாடல். இதுவரை தமிழில் அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்லாம். --Natkeeran 04:10, 23 ஏப்ரல் 2010 (UTC)
குரும்பனின் செயல்கள்
தொகுவிக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளில் இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட எந்த கட்டுரையையும் திருத்தவோ பகுப்பிடவோ திரு.குரும்பன் அவர்கள் செய்யக்கூடாது. ஏனெனில், அவர் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக துவேச உணர்வுடன் செயல்பட்டு வருகிறார். --Hibayathullah 18:34, 4 மே 2010 (UTC)
தமிழில் பறவைப் பெயர்கள்
தொகுதமிழம்.நெட் என்னும் தளத்தில் இந்நூல் (தமிழில் பறவைப் பெயர்கள்) பதிவேற்றப்பட்டுள்ளது. பார்க்க. --சிவக்குமார் \பேச்சு 15:07, 24 மே 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் நற்கீரன் உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/நற்கீரன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
தெரிவிப்பு
தொகுமதிப்பிற்குரிய நண்பருக்கு அன்பு வணக்கம்!
'சமசுகிருதம்/தமிழ் ஒத்த சொற்கள்' என்ற உங்கள் இணைப்புப் பக்கம் மிகவும் நன்று! இப்படி ஒரு முயற்சி எடுத்ததற்காகவே உங்களை மிகவும் பாராட்ட வேண்டும்.
நேற்று நான் அங்கே சென்றிருந்தபொழுது 'பூமி' என்பதற்குப் 'புவி' என்று பொருளளிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். புவி என்பதும் தமிழ்ச் சொல் இல்லையே. எனவே அதை அழித்து விட்டு வேறு மாற்றுச் சொற்களைப் பதிவேற்றியுள்ளேன். இதே போல் 'சோதனை' என்ற பொருளையும் நீக்கியுள்ளேன். அரசன், அரசி, அரசு, பேரரசு ஆகிய சொற்களும் தமிழ்ச் சொற்கள் அல்லவென்றாலும் அவற்றுக்குச் சரியான தமிழ்ப் பதங்கள் கிடைக்காததால் அவற்றை விட்டுவைத்திருக்கிறேன்.
நன்றி! வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன் 03:01, 19 ஜூன் 2010 (UTC)
- நன்றி. இயன்றவரை நல்ல தமிழில் எழுத வேண்டும் என்பதே எமது விருப்பம். எனினும் நன்கு வழக்கூன்றிய சொற்கள், அல்லது நுண்ணிய பொருள் வேறுபாடு தரும் சொற்கள் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்துகிறேன். உங்கள் பரிந்துரைகளுக்கு மீண்டும் நன்றிகள். --Natkeeran 03:06, 19 ஜூன் 2010 (UTC)
- ஞானப்பிரகாசன், இயன்றவரை நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவதில் இங்குள்ள பங்களிப்பாளர்கள் அனைவருமே உடன்படுகிறோம். அதே வேளையில் வழக்கூன்றிய சொற்களை மாற்றுப் பயன்பாட்டாகவாவது தருகிறோம். மற்றபடி வடமொழியிலும் இருப்பதால் மட்டுமே சில சொற்களைத் தமிழ் அல்ல என்று முடிவு செய்து விட முடியாது. திராவிட மொழிகளின் அடித்தட்டுத் தாக்கத்தால் சமக்கிருதம் அச்சொற்களைக் கொடையாகப் பெற்றிருக்கவும் கூடும். மீன் போன்றவை வெகுவாக அறிப்பட்ட அத்தகைய சொற்கள். புவி, அரசு பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. புவியை நிலம் என்றும் வழங்குவர் என நினைக்கிறேன். அரசனைக் கோ என்பர். மன்னன் என்ற சொல்லும் தமிழ் தான் என்று நினைக்கிறேன். தலைவன், கிழவன், கிழான் போன்ற சொற்களும் வெவ்வேறு ஆளுகைகளைக் கொண்ட தலைவர்களுக்கான சிறப்புச் சொற்கள். -- சுந்தர் \பேச்சு 06:09, 19 ஜூன் 2010 (UTC)
'உசாத்துணை' பகுதியில் நீங்கள் கேட்டிருந்த கேள்வி தொடர்பாக ஒரு பதில்
தொகுபெருமதிப்பிற்குரிய திரு. நக்கீரன் அவர்களுக்கு அன்பு வணக்கம்!
மேற்காணும் கேள்விக்கு உங்களுக்கு விடை கிடைத்து விட்டதா? அண்மையில் 'தினத்தந்தி'யின் நூல் விமர்சனப் பகுதியில் 'விடியலை நோக்கிக் களப்பிரர் வரலாறு' என்ற ஒரு புதிய நூலின் விமர்சனத்தைப் பார்த்தேன். அது கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையான (கிட்டத்தட்ட 325 ஆண்டுகள்) களப்பிரர் ஆட்சிக்காலம் பற்றித் தீவிரமாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் என்றும், அந்நூலின் எழுத்தாளர் பல புதிய வரலாற்றுத் தகவல்களை அதில் ஆதாரங்களோடு விளக்கியுள்ளதாகவும் அந்த நூல் விமர்சனப் பகுதியில் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. இந்நூல் உங்களுடைய ஆர்வத்துக்கும் உங்களுடைய அந்தக் கேள்விக்கும் ஓரளவாவது பதிலளிக்கும் என நினைக்கிறேன். எனவே படித்துப் பாருங்கள்! விவரம் பின்வருமாறு:
பெயர்: விடியலை நோக்கிக் களப்பிரர் வரலாறு படைப்பு: திரு. அ. சவரிமுத்து. வெளியீடு: கலைநிலா பதிப்பகம், 46, ஆசாத் நகர், கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி - 21. விலை: ரூ. 80/- (இந்திய மதிப்பில்).
- அன்பு வணக்கம் இ.பு.ஞானப்பிரகாசன். உங்கள் அடைமொழிகளுக்கு நன்றி...சற்றுச் சங்கடமாக உள்ளது. உங்கள் பரிந்துரைக்கு நன்றி. களப்பிரர்கள் யார் என்பது பற்றி சற்று மர்மாகவே உள்ளது. அவர்கள் வேற்று மொழியினரா, அல்லது வேற்றுச் சமயத்தினரா. அவர்கள் தமிழ்நாட்டை அபகரித்தார்களா, அல்லது பாண்டியர்கள் போன்ற ஒரு அரச மரபினரா என்று பல கேள்விகள். இந்த நூலைப் பெற முயற்சி செய்வேன். நன்றி. --Natkeeran 02:58, 1 ஜூலை 2010 (UTC)
நன்றி:
தொகுஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, தாங்கள் கூறிய கட்டுரைகளை கூடிய விரைவில் எழுதுகிறேன். என்னை ஊக்குவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி அண்ணா.--Jenakarthik 07:27, 2 ஜூலை 2010 (UTC)
அண்ணா, சிரமத்திற்கு மன்னிக்கவும். ஒரு உதவி வேண்டி தங்கள் முகவரியை தொடர்பு கொண்டுள்ளேன். இவ்விசயத்தில் எனக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.--Jenakarthik 12:03, 2 ஜூலை 2010 (UTC)
- நன்றி. பதில் தந்துள்ளேன். --Natkeeran 02:34, 3 ஜூலை 2010 (UTC)
சொற்கள்
தொகுதிரு ரவியின் உரையாடல் பகுதியில் தங்களது பழைய வினா ஒன்று கண்ணுறக் கிடைத்தது. நான் அறிந்த அளவில், சொற்களுக்கான பொருள் கீழே வருமாறு:
- காமம் என்பதற்கான ஆங்கிலச் சொல் - Lust
- Nocturnal emission என்பதற்கு தன்னறியா இரவு நேர விந்து வெளியீடு எனலாமா? கொஞ்சம் பெரிய சொற்றொடர்தான். ஆனால், அதன் பொருளை முழுமையாகக் கொணர வேண்டும் அல்லவா?
- Sex segregation பாலினப் பாகுபாடு எனலாம்.
- Sexual objectification என்பதைப் பாலினம் சார் பருப்பொருளாக்கம் எனலாமா?
- en:Sexual intercourse - இதற்கு ஊடல் என்பதைத் தவிர மற்ற அனைத்துமே பொருத்தம்தான். ஊடல் என்பது முற்றிலும் வேறானது. இதற்கு ஆங்கிலத்தில் வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லை - Dating என்பதற்குத் தமிழ் வார்த்தை தேட வேண்டி இருப்பதைப் போல.
இவை சரியா என்பதைச் சொல்லவும். நன்றி. --Tamil sarva 07:44, 12 ஜூலை 2010 (UTC)
- Pornography என்பதற்கான தமிழ்ச் சொல்லைப் பற்றி நீங்கள் கூறியது சரிதான். தேடவே நேரிடும் போலத் தோன்றுகிறது.
- sex என்பதைப் பாலினம் எனவும் sexology என்பதைப் பாலியல் எனவும் கொள்ளலாம் என நினைக்கிறேன். நன்றி.--124.123.158.130 01:24, 13 ஜூலை 2010 (UTC)
Bot request
தொகுCould you please flag User:Diego Grez Bot as bot?
- Function: Interwikis, fix double redirects
- Code: Pywikipedia
- Flagged on several other wikis. [1]
Thank you! Diego Grez 03:08, 13 ஜூலை 2010 (UTC)
- Provided. --Natkeeran 03:13, 13 ஜூலை 2010 (UTC)
- ஆங்கில விக்கியில் தடை செய்யப்பட்டுளது. தமிழில் ஏன் இந்தத் தானியங்கியைப் பயன்படுத்த வேண்டும் (மற்ற தானியங்கிகள் செய்யாதவை உள்ளனவா எனக் கருதுதல் வேண்டும்). இப்பயனரின் செயற்பாடுகள் பல (முன்னர்) கவலை அளிப்பதாக (இருந்து) உள்ளன, அருள்கூர்ந்து கவனமாக இருக்க வேண்டுகிறேன். தானியங்கிகளுக்கு ஒப்புதல் தருவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.--செல்வா 03:18, 13 ஜூலை 2010 (UTC)
- நற்கீரனின் வேண்டுகோளின்படி தானியங்கி அணுக்கத்தை மீளப்பெற்றுள்ளேன். முறையாகப் பயனரிடம் தெரிவித்து விளக்கம் கேட்க வேண்டும்.
- Diego Grez, concerns have been raised regarding some past actions of the bot. Pending an understanding of the issues and the resolution, I have temporarily reverted your bot flag. Will reinstate once concerns have been addressed. Selva, please raise your concerns here or in the bots' page. Links illustrating the issues are welcome. -- சுந்தர் \பேச்சு 04:16, 13 ஜூலை 2010 (UTC)
Hum, I don't understand, it has only done 2 edits, and it is currently flagged on a similar project, Tamil Wikinews. It would be good to have also a translation of what Selva says. Maybe ask admin User:Kanags who supported my previous request at Tamil Wikinews? Thanks and cheers, Diego Grez 00:45, 14 ஜூலை 2010 (UTC)
Hi Diego Grez, my apologies for making a comment which you didn't understand (actually it was intended for the user Natkeeran). When I last saw (just a few days ago), there was an YES in an English Wiki under the column whether it was blocked (in the link you gave. I meant that; but in the most recent version it says autopatrolled. I tried to see an earlier version but I couldn't. Some of the censures of your past activities [see here] and subsequent actions of Wiki admins calls for some care on our part in Tamil Wiki. I hope you will understand this as genuine due diligence. I was also making a general comment (not about your bot per se) that when permission is given to bots, it is important to know what it is doing which the other bots are not doing. This has nothing to do with your bot request per se. I hope you underatand. I will also paste this in the bot page --செல்வா 11:31, 14 ஜூலை 2010 (UTC)
- OK. Now I understand, yes, it was blocked at en.wiki per my request, but it is unblocked now. I had problems some time ago in the English Wiki, but everything now seems calm and OK. It is up to you, and I will respect your decision :) Thanks for your consideration, Diego Grez 17:17, 14 ஜூலை 2010 (UTC)
சொற்கள்
தொகுPornography என்பதற்கு wikidictionary இழிபொருள் இலக்கியம் எனப் பொருள் தருகிறது. ஆனால், நீங்கள் கூறியதைப் போல இது எதிர்மறையாகத்தான் ஒலிக்கிறது. 1864ஆம் ஆண்டு ஆங்கில அகராதி pornography என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு "பாலியல் தொழிலாளர்களின் சித்தரிப்பு" எனப் பொருள் அளித்ததாக www.wordinfo.info/words/index/info/view_unit/.../2/?. என்னும் இணைப்பு கூறுகிறது. பாலியலாளர் இலக்கியம் என வைத்துக் கொள்ளலாமா? (அதாவது பாலியளாருக்காக, பாலியளாரால், பாலியல் கொண்ட என்பதைப் போல!).
ஊடல் என்னும் கருத்தாக்கம் உலகின் அனைத்துக் கலாசாரங்களிலும் பழகியதாக இருப்பினும், தமிழ்க் கலாசாரத்தைப் போல பிறவற்றில் கொண்டாடப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. ஆகவே, அதற்குப் பொருத்தமான ஆங்கிலச் சொல் இல்லை எனவே நினைக்கிறேன்.
இந்திய மொழிகளில் புண்ணியம் என்ற ஒரு சொல் உண்டு. அதற்கு ஈடான சொல்லை ஆங்கிலத்தில் காண இயலாது. மேலைக் கலாசாரம் மற்றும் மதம்சார் கருத்தாக்கங்களில் அதற்கு ஈடான கோட்பாடு இன்மையே காரணம். --Tamil sarva 07:18, 14 ஜூலை 2010 (UTC)
பகுப்பு
தொகுநற்கீரன், ஆவணங்கள், தமிழர் வரலாறு என்னும் பகுப்புக்குள் வரலாம் என நினைக்கிறேன். ஆனால் தமிழர் ஆவணங்கள் என்னும் பகுப்புகள் வைத்து அதனைத் தமிழர் வரலாறு என்னும் பெரும் பகுப்புக்குள் அடக்கலாம். அதாவது தமிழர் வரலாறு>தமிழர் ஆவணங்கள் என்று அமைக்கலாம். தமிழர் ஆவணங்களும் கூட நிகழ்பட ஆவணம், கல்வெட்டுத் தொகுப்பு, திரைப்பட ஆவணம், ஒலிப்பதிவு ஆவணம் என்று உட்பகுப்புகளில் இட்டும் செய்யலாம் (ஒவ்வொரு உட்பகுப்பிலும் போதுமான கட்டுரைகள் இருக்குமா என்பது கேள்வி)--செல்வா 03:41, 31 ஜூலை 2010 (UTC)
- நல்ல பரிந்துரை. நிச்சியமாக இருக்கும். --Natkeeran 03:43, 31 ஜூலை 2010 (UTC)
கட்டுரைப் போட்டிக் கட்டுரைகள்
தொகுநற்கீரன், கட்டுரைப் போட்டிக் கட்டுரைகளை தரவேற்றுவது கண்டேன். நீங்கள் தரவேற்றிய கட்டுரைகளில் சில சோடாபாட்டில் என்ற பயனரால் எழுதப்பட்டவை. அவற்றை அவரே தரவேற்றுவது விரும்பத்தக்கது. எனவே நீங்கள் தரவேற்றியதை அழித்து விட்டு அவரை அவற்றை தரவேற்றச் சொல்வது நல்லது. சென்னை மாநிலம் எதிர் சம்பகம் துரைராஜன் என்ற கட்டுரையை அவரது பயனர் பக்கத்தில் இருந்து நகற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:49, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
- எனது 52 கட்டுரைகளில் 25 ஐ விக்கிப்படுத்தி/உரை திருத்தி எனது பயனர்வெளியில் வைத்துள்ளேன். தலைப்புகளும் திருத்தப்பட்டுள்ளன (போட்டியில் தரவேற்ற இட்ட கட்டுரைத் தலைப்புகள் சரியானவை அல்ல - கட்டுரை தரவேற்றும் போட்டி இணையதளத்தில் எண்களும் புள்ளிகளும், கமாக்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவே அவை இல்லாத தலைப்புகளை வைத்திருந்தேன். என் பயனர் வெளியில் உள்ள தலைப்புகளே சரியானவை). போட்டி குறியீட்டு எண் (LA182 போன்றவை) விவரம் மட்டும் என்னிடம் இல்லை. இல்லையெனில் நானே பயனர்வெளியிலிருந்து விக்கிக்கு நகர்த்திவிடுவேன். அந்தக் குறியீட்டு எண்களை மட்டும் எனக்குத் யாரேனும் தந்தால், நானே என் கட்டுரைகளை பதிந்து விடுகிறேன்.--சோடாபாட்டில் 10:44, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
- சோடாபட்டில் நீங்கள் கட்டுரைகளை ஏற்றி வார்ப்புருவை பேச்சுப் பக்கத்தில் இடுங்கள். நாண் எண்ணை பதிவு செய்துவிடுகிறேன். நன்றி. சிறப்பான கட்டுரைகள். --Natkeeran 03:22, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
நீங்கள் பதிவேற்றி வரும் கட்டுரைப் போட்டிக் கட்டுரைகள் பட்டியலை வலைவாசல்:கட்டுரைப்போட்டி/கட்டுரைகள் பதிவேற்றும் பணி பக்கத்தில் இட்டால் உதவியாக இருக்கும். நன்றி--இரவி 11:35, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
தமிழிசை
தொகுநற்கீரன், மிகவும் விரிவாகச் செய்ய வேண்டிய ஒன்று. என்னால் இயன்ற உதவியைச் செய்கிறேன். நெடுநாட்களாக மிக விரும்பியும், பல்வேறு காரணங்களால் செய்ய இயலாமல் இருப்பது இப்பெரும் தலைப்பில் உள்ள நூற்றூக்கணக்கான அடிப்படையான கட்டுரைகள் எழுதுவது. அண்மையில் இந்தியா சென்றபொழுது, இசை அறிஞர் முனைவர் வீ.ப.கா சுந்தரம அவர்களின் நான்கு தொகுதியாக வெளிவந்த இசைக்களஞ்சியத்தை வாங்கி வந்தேன். மறைந்த அறிஞர் மு. அருணாசலனார் எழுதிய இரண்டு நூல்களாகிய தமிழிசை இலக்கண வரலாறு (630+ பக்கங்கள்), தமிழிசை இலக்கிய வரலாறு (730+ பக்கங்கள்) மிக அண்மையில் வெளியாயின. இவையும் உள்ளன. பல வழிகளிலும் உதவ முடியும். எனினும், பணிகள் அடர்ந்து வந்து கொண்டே இருப்பது நினைக்கும் விரைவில் நிறைவேற்ற இயலாமால் உள்ளது. ஆனால் கட்டாயம் செய்ய வேண்டிய மிக முதன்மையானவற்றுள் ஒன்று இது. ஏனெனில் தமிழரின் பண்பாட்டின் மிகப்பெரும் கூறு இசைத்தமிழ். --செல்வா 14:27, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
- செல்வா, இந்த நூல்களை பெற விரும்புகிறேன். வழிமுறைகள் தெரிந்தால் கூறவும். நன்றி. --Natkeeran 17:20, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி
தொகுதமிழ் விக்கியில் நானும் ஒரு நிர்வாகி என்பதில் எனக்குதான் சிறப்பு நற்கீரன்! என் மீது நம்பிக்கை வைத்து என்னை முன்மொழிந்தமைக்கு நன்றி.--அராபத்* عرفات 03:41, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி
தொகுநிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 03:58, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
கூகுள் கட்டுரைகள் மதிப்பீடு பற்றிய கருத்து வேண்டல்
தொகுநற்கீரன், கூகுள் கட்டுரைகள் மதிப்பீடு பற்றி உங்கள் கருத்துகளை உடனடியாகத் தெரிவித்தால் மிகவும் உதவும். --இரவி 08:28, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
வாக்கெடுப்பு
தொகுn:Wikinews:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். நன்றி.--Kanags \உரையாடுக 14:45, 4 செப்டெம்பர் 2010 (UTC)
கட்டுரைப்போட்டி கட்டுரைகள் பதிவேற்றம்
தொகுவணக்கம்! எனது பேச்சுப் பக்கத்தில் கட்டுரைப் போட்டி கட்டுரைகள் என்ற பிரிவை தயவு செய்து பார்த்து உங்கள் முடிவைக் கூறுங்கள்.--கலை 21:46, 5 செப்டெம்பர் 2010 (UTC)
- Natkeeran, I think you have misunderstood :(. The main reason for that I couldn't share the files with Sodabottle is I don't have his email address (and I mentioned this in my message). And then he said Ravi has his email address and can share the files with him. All the other details Sodabottle asked for are also not with me, but with Ravi. So, he will share them with Sodabottle.--கலை 07:50, 7 செப்டெம்பர் 2010 (UTC)
தமிழ் மருத்துவச் சுவடிகள்
தொகுநற்கீரன் நீங்கள் கேட்டிருந்த கேள்விக்கு என் பேச்சுப் பக்கத்தில் கருத்திட்டிருக்கின்றேன் பார்க்கவும். உரையாடல் தொடர்ச்சி கருதி அங்கேயே இட்டிருக்கின்றேன். கீழேயும் உங்களுக்காக ஒரு படியை ஒற்றி இட்டிருக்கின்றேன்.
- குறிப்புக்கு நன்றி, நற்கீரன். கட்டாயம் இருக்கும் நற்கீரன். பெரும்பாலானவை பிற்காலத்தவையாக (15 ஆம் நூறாண்டுக்கும் பிந்தியதாக) இருக்கும். ஆனால் அவையும் முன்னிருந்ததை விரிவாக்கியோ சுருக்கியோ இட்டவையாக இருக்கும். நான் முன்பொருமுறை 100,000 உக்கும் மேலான மருத்துவம் பற்றிய தமிழ்ப்பாடல்களுக்கான பட்டிய ஒன்றைத் திரட்டி வைத்திருந்தேன், வருத்தம்தருவகையாக இழந்து விட்டேன்(நான் கண்டா வந்தபின்னர் என் உற்ற உறவினர்கள் என்னைக் கேட்காமல் தூய்மை செய்யும்பொழுது எறிந்துவிட்டார்கள் (!!), தீரா வருத்தம் அது எனக்கு (என் செய்வது, ஒரு நாள் நம்மையும் எரித்தோ புதைத்தோதானே விடுவார்கள் :) ). இவற்றுடன் மிக மிக அரிதான ஒரு அருமையான நூல் (காரைச் சித்தரின் முழுநூல் ஒன்று) ஒன்றையும் இழந்தேன் (இந்நூலை எனக்கு ஒரு அறமன்ற நடுவர் பொங்கல் நாளன்று பரிசாக அளித்தார் (அவர் மகளின் காதல் திருமணத்தில் இருந்த சிக்கலைத் தீர்த்ததற்கு நன்றி கூறும் முகமாக). மிக அரிய நூல். அதில் தங்கத்தை செம்பில் இருந்து உருவாக்க அவர் கொடுத்திருந்த முறை வியப்பூட்டுவதாக இருந்தது. அதில் கூறப்பட்ட செய்தியின்படி பார்த்தால் தங்கத்த்தின் அணுவெண் மிகத் துல்லியமாக வருமாறு கலப்பு இருந்தது (அதில் ஒரு கூறு கருநொச்சி என்று இருந்தது). எத்தனை அரிய நூல்களை யாழ்நூலக எரிப்பிலும், பிற பல நூலக எரிப்பிலும், தமிழர்களின் அறியாமையாலும் இழந்திருக்கின்றோம்!! பல நேரங்களில் நூலுக்கான குறிப்பு மட்டுமே இருக்கும், தேடிப்பிடிக்காமல் விட்டுவிட்டோம், இன்றும் விட்டுவிட்டுக்கொண்டும் இருக்கின்றோம். ஆனால் இன்றும் நாளையும் வளரும் அறிவு வளர்ச்சிகள அத்தனையையும் தமிழில் வடிப்பதிலாவது முனைப்புடன் இருப்போம். (தன்முகக் கூற்றுகளுக்கு மன்னிக்கவும், வருத்ததையும், எதிர்பார்ப்பையும் பகிர்ந்து கொள்கிறேன் - இவை கலைக்களஞ்சிய உருவாக்கத்துக்கு சிறிதளவேனும் தொடர்புடையது).--செல்வா 13:30, 10 செப்டெம்பர் 2010 (UTC)
தானியங்கி அணுக்கம்
தொகுநற்கீரன், Diego Grez Bot என்ற தானியங்கிக்கு தானியங்கி அணுக்கம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதனது தொகுப்புகளில் எவ்விதப் பிரச்சினையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 23:38, 11 செப்டெம்பர் 2010 (UTC)