வாருங்கள்!

வாருங்கள், Tamil23, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 11:54, 12 சூலை 2013 (UTC)


தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Tamil23!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-- :) நிஆதவன் ( உரையாட ) 15:36, 12 சூலை 2013 (UTC)
  விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:08, 15 சூலை 2013 (UTC)

வேண்டுகோள்...தொகு

வணக்கம்!
பல கட்டுரைகளில் 'பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை' என்பதனை நீக்கி வருகிறீர்கள். இதனை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நீக்குவதற்குரிய காரணத்தை தயவுசெய்து தங்களின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:18, 15 சூலை 2013 (UTC) வணக்கம். இலங்கை இனப்பிரச்சினை என்பது பொதுவான பகுப்பு. அதனுள் ஈழப் போராட்டம்‎, இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள், இலங்கை சமாதான பேச்சுவார்த்தைகள் என உப பகுப்புக்கள் அமைந்துள்ளதற்கேற்ப கட்டுரைகளைச் சேர்க்கிறேன். இன்னுமொரு விடயம், பல கட்டுரைகளுக்கு ஆங்கில இணைப்பும் இல்லை. அதனையும் செய்கிறேன். ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒழுங்காக அமைந்துள்ளதற்கேற்ப இங்கும் அமைத்து வருகின்றேன். மேற்கொண்டு செய்யலாமா? --Tamil23 (பேச்சு) 07:23, 15 சூலை 2013 (UTC)

ஏற்கனவே இருக்கும் பகுப்புகளை நீக்குவது குறித்து அந்தந்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் உரையாடிவிட்டு, மற்ற பயனர்களின் கருத்துக்களைப் பெற்றபிறகு உரியனசெய்யவும் என்பதே எனது வேண்டுகோள். நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:36, 15 சூலை 2013 (UTC)
என்னைப் பொறுத்த அளவில் 'பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை' என்பதனை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆங்கிலக் கட்டுரைகளுக்கு இணைப்பு தருவதைத் தாராளமாக செய்யுங்கள்; இதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்காது. புரிதலுக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:41, 15 சூலை 2013 (UTC)

அப்பகுப்பில் உள்ள 130+க்கு மேற்பட்ட கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் உரையாடிவிட்டு செய்வது எவ்வகையில் பொருத்தம் என நான் அறியேன். http://en.wikipedia.org/wiki/Category:Sri_Lankan_Civil_War இங்கு பாருங்கள் எவ்வளவு தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது என்பதை. இதைத்தான் நானும் செய்ய முற்பட்டேன். யாராவது செய்ய வேண்டும் அல்லது செய்பவர்களை விட வேண்டும். எல்லாக் கட்டுரைகளையும் இலங்கை இனப்பிரச்சினை என்ற பகுப்பில் குவிப்பது பொருத்தமன்று என்பது என் கருத்து. புரிந்து கொண்டிருப்பீர்கள் என்பது என் கருத்து. நன்றி. --Tamil23 (பேச்சு) 07:53, 15 சூலை 2013 (UTC)

இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமான கட்டுரைகள் உள்ள பகுப்புகள் அனைத்தும் மீள் ஆய்வு செய்யப்பட வேண்டும். கூடுதலாகப் பகுப்புகள் உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் சொல்வது போல எல்லாவற்றையும் இலங்கை இனப்பிரச்சினை என்ற தாய்ப்பகுப்புக்குள் இட வேண்டிய தேவை இல்லை தான். அனைத்து உப பகுப்புகளும் இலங்கை இனப்பிரச்சினை தாய்ப்பகுப்புக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினையின் உரையாடல் பக்கத்தில் ஒரு திட்டம் வகுத்து அதற்கேற்ப சில மேலதிக உப பகுப்புகளை உருவாக்கலாம். சிலவற்றை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 08:09, 15 சூலை 2013 (UTC)
  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:17, 15 சூலை 2013 (UTC)
தமிழ், நீங்கள் செய்யும் மேம்பாடுகளை தடுப்பது எனது நோக்கமன்று. தங்களின் உழைப்பும், ஏற்கனவே கட்டுரைகளை உருவாக்கியவர்களின் உழைப்பும் வீணாதலாகாது எனும் கண்ணோட்டதிலேயே வேண்டுகோள் வைத்தேன்; தவறாக எண்ண வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து பங்களியுங்கள்... நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:26, 15 சூலை 2013 (UTC)

உங்கள் ஆலோசனைக்கு நன்றி திரு. கனக்ஸ்! இந்த விடயத்தில் அனுபவமிக்கவர்கள் யாராவது உதவ முடியுமா? ஆங்கிலத்தில் உள்ளதுபோல் என்றால் என்னால் தகுந்த இடங்களில் இட முடியும். உங்கள் பதிலுக்க நன்றி திரு. செல்வசிவகுருநாதன். தவறான கண்ணோட்டத்தில் நானோ நீங்களே செயற்படவில்லை என நம்புவோமாக! :) Category:Sri_Lankan_Civil_War இல் உள்ளவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் பின்பு மேம்படுத்த வேண்டும். --Tamil23 (பேச்சு) 08:37, 15 சூலை 2013 (UTC)

  விருப்பம்-- :) நிஆதவன் ( உரையாட ) 09:05, 15 சூலை 2013 (UTC)
ஆம் தமிழ்.அப்பகுப்பில் உள்ள அனைத்து கட்டுரைகளும் தமிழில் உள்ளனவா? என பார்கவும்.இல்லாவிட்டால் உருவாக்கிவிட்டு ஆங்கிலத்தைபோலவே தமிழிலும் பகுப்பக்களை ஆக்கிவிடலாம்.-- :) நிஆதவன் ( உரையாட ) 09:05, 15 சூலை 2013 (UTC)
நன்றி! --Tamil23 (பேச்சு) 09:59, 16 சூலை 2013 (UTC)

வாழ்த்துதொகு

தமிழ் கணக்கு தொடங்கி சில நாட்களிலேயே வெகு வேகமான இயங்கிக் கொண்டிருப்பது கண்டு மகிழ்ச்சி. உங்களது பேச்சுப் பக்கத்தில் மற்றவர்கள் உரையாடுகின்றார்கள் என்றால் நீங்கள் மிக வேகமாக பங்களித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றே அர்த்தமாகும். விக்கிப்பீடியாவில் எல்லா பயனரையும் ஊக்கம் செய்யவும், வழிகாட்டவும் மட்டுமே விரும்புகிறோம். எனவே கருத்து வேறுபாடுகள் வரும் பொழுது அதையெல்லாம் புறந்தள்ளி தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டுகிறேன். உங்களைப் பற்றிய விபரங்களை தங்களுக்கு விருப்பமாயின் பயனர் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். இதன் மூலம் தங்கள் விருப்பதுறையை தேர்ந்தெடுத்து இயங்குவதற்கு வசதியாக இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:15, 15 சூலை 2013 (UTC)

நன்றி! --Tamil23 (பேச்சு) 09:59, 16 சூலை 2013 (UTC)

வணக்கம். இலங்கை பிரச்சனையை காலவாரியாக தொடர்ந்து ஆவணப்படுத்த ஆளில்லையே என வருத்தம் நெடுநாளாக எனக்கு இருந்தது. உங்கள் வருகை அதைப் போக்கும் என நம்புகிறேன். நீங்கள் பகுப்பை நீக்கும்/சேர்க்கும்/தொக்குக்கும் போது விக்கிப்பீடியா:ஹாட்கேட் கருவியை பயன்படுத்தலாம். உங்களுக்கு இனி அது நிச்சயம் தேவைப்படும். உபபகுப்பைச் சேர்த்து விட்டு தாய்பகுப்பை அழியுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் மீது யாருக்கும் ஐயம் வராது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:15, 16 சூலை 2013 (UTC)

நன்றி! --Tamil23 (பேச்சு) 07:45, 17 சூலை 2013 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்தொகு

வணக்கம், Tamil23!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 08:28, 3 ஆகத்து 2013 (UTC)

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்...தொகு


தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்புதொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:05, 27 அக்டோபர் 2013 (UTC)

அறிமுகம்-நூல்-கிரந்தம்தொகு

நம் விக்கியில் நீங்கள், நான் பெரிதும் விரும்பிப் படிக்கும் வரலாற்றுக்குறிப்புகளைத் தொடர்ந்து எழுதுவதில் மகிழ்ச்சி. கிரந்த பயன்பாடு பற்றிய தங்களின் கருத்துக்களை அணுக்கத்தேர்வில் அறிந்தேன். எனக்கும் உங்கள் கருத்துக்களை, பின்பற்றுவதில் உடன்பாடே. ஆனால், நடைமுறையில் உள்ள பணியடர்வின் காரணமாக முழுமுழுக்க அதுபற்றிய செயற்பாடு வேறுபடுகிறது. அது பலருக்கும் ஏற்படுவது இயல்பே. எடுத்துக்காட்டாக, பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற கட்டுரையில், நீங்களும் கிரந்தத்தை நீக்காமல் எழுதி இருப்பதை உணருங்கள்.

  1. அக்கட்டுரையை கண்டபோது, நாமும் அது போல கட்டுரையை, கிரந்தமில்லாமல் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. அவ்வெண்ணத்தால், தமிழகத்தில் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் உள்ளன. அவற்றை இங்கு, கட்டுரைகளாக்குவேன். இவ்வுழவனுக்கு விதைகள் கொடுத்தமைக்கு நன்றி.
  2. தாவரவியல் பெயர்களை, தமிழ் ஒலிப்புக்கேற்ப மாற்ற எனக்கும் எண்ணமுண்டு. ஆனால், அதனை அவ்விதம் தமிழ் ஒலிப்புக்கேற்ப மாற்ற விதிகள் தேவை. அவ்விதிகளின் அடிப்படையில் ஒரு நிரல் இருப்பின் நன்றாக இருக்கும். அதன் வழியாக கிரந்தம் இல்லாத தமிழ் பெயரை வைக்க இயலுமா என்று சிந்தித்து வருகிறேன். ஏனெனில், பல்லாயிரகணக்கான தாவரவியல் பெயர்கள் அதன் மூல வடிவிலேயே இன்னும் உள்ளன. உங்களின் எண்ணம் அறிய ஆவல். --≈ உழவன் ( கூறுக ) 02:19, 28 அக்டோபர் 2013 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் Tamil23!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:20, 30 திசம்பர் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tamil23&oldid=1774446" இருந்து மீள்விக்கப்பட்டது