வாருங்கள்!

வாருங்கள், Tnse anita cbe, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சுந்தர் (பேச்சு) 16:03, 2 மே 2017 (UTC)Reply

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தொகு

அன்புள்ள அனிதா, உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி. --இரவி (பேச்சு) 09:42, 10 மார்ச் 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:49, 13 மார்ச் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - புதிய தலைப்புகள் அறிவிப்பு, தமிழ் இரண்டாம் இடத்தில்!

தொகு

வணக்கம், அனிதா. வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. இப்போட்டி 45 நாட்களைக் கடந்து பாதி நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பரிசுகள் போக, இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிச்சமூகத்தைச் சேர்ந்த 40 விக்கிப்பீடியர்களுக்கு 3 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான நிதியுதவியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. தற்போது, பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா இப்போட்டியில் 300 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி முதல் நிலையில் இருக்கிறது. தமிழ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நேற்று முதல் இன்னும் பல கூடுதல் தலைப்புகளையும் சேர்த்துள்ளோம்.

குறிப்பாக,

எனவே, தொடர்ந்து உற்சாகத்துடன் போட்டியில் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவை வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:08, 16 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்

தொகு

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.

நன்றி.

இரவி 11:59, 1 மே 2018 (UTC)Reply


Thank you for keeping Wikipedia thriving in India

தொகு

I wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.

Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.

This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.

Your efforts can change the future of Wikipedia in India.

You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:

https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics

Thank you,

Jimmy Wales, Wikipedia Founder 18:18, 1 மே 2018 (UTC)

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!

தொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது

தொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.

நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!

தொகு

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!

தொகு

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்

தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

தொகு

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

Project Tiger 2.0

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி

தொகு

வணக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:59, 4 சனவரி 2020 (UTC)Reply

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020

தொகு

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:38, 17 சனவரி 2020 (UTC)Reply

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients

தொகு
 
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

பண்டிகைக் காலத் தொடர் தொகுப்பு 2020

தொகு

வணக்கம் , நீங்கள் பண்டிகைக் காலத் தொடர் தொகுப்பிற்கு விருப்பம் தெரிவித்துள்ளதைக் கண்டேன். நீங்கள் பங்களிக்கும் விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் {{பண்டிகைக் காலத் தொடர் தொகுப்பு 2020}} எனும் வார்ப்புர்வினைச் சேர்த்தால் தமிழ்ச் சமூகப் பங்களிப்பினை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். இது விருப்பத்திற்குட்பட்டது. நன்றி ஸ்ரீ (✉) 02:42, 6 திசம்பர் 2020 (UTC)Reply

Wikipedia 20th anniversary celebration edit-a-thon

தொகு
 

Dear editor,

I hope this message finds you well. Wikipedia 20th anniversary celebration edit-a-thon is going to start from tomorrow. This is a gentle reminder. Please take part. Happy editing. Thank you MediaWiki message delivery (பேச்சு) 18:03, 8 சனவரி 2021 (UTC)Reply

 

வணக்கம், Tnse anita cbe!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--~AntanO4task (பேச்சு) 02:14, 29 மார்ச் 2021 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

Feedback for Mini edit-a-thons

தொகு

Dear Wikimedian,

Hope everything is fine around you. If you remember that A2K organised a series of edit-a-thons last year and this year. These were only two days long edit-a-thons with different themes. Also, the working area or Wiki project was not restricted. Now, it's time to grab your feedback or opinions on this idea for further work. I would like to request you that please spend a few minutes filling this form out. You can find the form link here. You can fill the form by 31 August because your feedback is precious for us. Thank you MediaWiki message delivery (பேச்சு) 18:58, 16 ஆகத்து 2021 (UTC)Reply

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021

தொகு

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)Reply

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)

தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)

தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)

தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (19 செப்டம்பர் 2021)

தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டம் முடிவடைய இன்னும் 12 நாட்கள் உள்ளன. தற்போது தமிழ் விக்கிப்பீடியா 11 போட்டியாளர்களுடன் 550 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 32 போட்டியாளர்களுடன் 514 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 225 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 159 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

குறிப்பு: கட்டுரை நகர்த்தப்பட்டால், மறக்காமல் பவுண்டன் கருவியில் இணைத்துவிடுங்கள். ஆகவே, தலைப்பை மிகவும் சரியாகத் தேர்ந்தெடுங்கள். கட்டாயமாக, முக்கிய இலக்கண விதிகளை மீற வேண்டாம். மெய்யெழுத்திலும் ஆயுத எழுத்திலும் முதல் எழுத்து வருமாறு கட்டுரை எழுதுவதைத்தவிருங்கள். கட்டுரை குறைந்தது 2-3 வரையான நம்பகமான மூலங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

Mahatma Gandhi 2021 edit-a-thon to celebrate Mahatma Gandhi's birth anniversary

தொகு
 
Mahatma Gandhi 2021 edit-a-thon

Dear Wikimedian,

Hope you are doing well. Glad to inform you that A2K is going to conduct a mini edit-a-thon to celebrate Mahatma Gandhi's birth anniversary. It is the second iteration of Mahatma Gandhi mini edit-a-thon. The edit-a-thon will be on the same dates 2nd and 3rd October (Weekend). During the last iteration, we had created or developed or uploaded content related to Mahatma Gandhi. This time, we will create or develop content about Mahatma Gandhi and any article directly related to the Indian Independence movement. The list of articles is given on the event page. Feel free to add more relevant articles to the list. The event is not restricted to any single Wikimedia project. For more information, you can visit the event page and if you have any questions or doubts email me at nitesh@cis-india.org. Thank you MediaWiki message delivery (பேச்சு) 17:33, 28 செப்டம்பர் 2021 (UTC)

International Mother Language Day 2022 edit-a-thon

தொகு

Dear Wikimedian,

CIS-A2K announced International Mother Language Day edit-a-thon which is going to take place on 19 & 20 February 2022. The motive of conducting this edit-a-thon is to celebrate International Mother Language Day.

This time we will celebrate the day by creating & developing articles on local Wikimedia projects, such as proofreading the content on Wikisource, items that need to be created on Wikidata [edit Labels & Descriptions], some language-related content must be uploaded on Wikimedia Commons and so on. It will be a two-days long edit-a-thon to increase content about languages or related to languages. Anyone can participate in this event and editors can add their names here. Thank you MediaWiki message delivery (பேச்சு) 13:13, 15 பெப்ரவரி 2022 (UTC)

On behalf of User:Nitesh (CIS-A2K)

International Women's Month 2022 edit-a-thon

தொகு

Dear Wikimedians,

Hope you are doing well. Glad to inform you that to celebrate the month of March, A2K is to be conducting a mini edit-a-thon, International Women Month 2022 edit-a-thon. The dates are for the event is 19 March and 20 March 2022. It will be a two-day long edit-a-thon, just like the previous mini edit-a-thons. The edits are not restricted to any specific project. We will provide a list of articles to editors which will be suggested by the Art+Feminism team. If users want to add their own list, they are most welcome. Visit the given link of the event page and add your name and language project. If you have any questions or doubts please write on event discussion page or email at nitesh@cis-india.org. Thank you MediaWiki message delivery (பேச்சு) 12:53, 14 மார்ச் 2022 (UTC)

On behalf of User:Nitesh (CIS-A2K)

வேங்கைத்திட்டப் பயிற்சி 2022

தொகு

வணக்கம்.

இந்த கருவியின் தரவுப்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில் நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாகத் திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --உழவன் (உரை) 11:15, 9 சூன் 2022 (UTC)Reply

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு

தொகு

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு

தொகு

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு

தொகு

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2022

வணக்கம்!

செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்


வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு

தொகு
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்

தொடர்-தொகுப்பு 2023 நிகழ்வுகளுக்கான பயிற்சியாளர் அழைப்பு

தொகு

வணக்கம். புதுப் பயனர்களுக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகளை 2023 ஆம் ஆண்டில் தருவதற்காக திட்டமிட்டு வருகிறோம். தொடர்-தொகுப்பு எனும் பெயரில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். புதுப் பயனர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு புதுப் பயனர்களுக்கு பயிற்சி தர, விக்கிப்பீடியாவில் அனுபவமுள்ள பயனர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், ஒருங்கிணைக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

பயிற்சியாளராக பங்களிக்க, ஏற்பாடு செய்ய அல்லது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள் தமது விருப்பத்தை இங்கு குறிப்பிடுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

Women's Month Datathon on Commons

தொகு

Dear Wikimedian,

Hope you are doing well. CIS-A2K and CPUG have planned an online activity for March. The activity will focus on Wikimedia Commons and it will begin on 21 March and end on 31 March 2023. During this campaign, the participants will work on structure data, categories and descriptions of the existing images. We will provide you with the list of the photographs that were uploaded under those campaigns, conducted for Women’s Month.

You can find the event page link here. We are inviting you to participate in this event and make it successful. There will be at least one online session to demonstrate the tasks of the event. We will come back to you with the date and time.

If you have any questions please write to us at the event talk page Regards MediaWiki message delivery (பேச்சு) 18:09, 12 மார்ச் 2023 (UTC)

Women's Month Datathon on Commons Online Session

தொகு

Dear Wikimedian,

Hope you are doing well. As we mentioned in a previous message, CIS-A2K and CPUG have been starting an online activity for March from 21 March to 31 March 2023. The activity already started yesterday and will end on 31 March 2023. During this campaign, the participants are working on structure data, categories and descriptions of the existing images. The event page link is here. We are inviting you to participate in this event.

There is an online session to demonstrate the tasks of the event that is going to happen tonight after one hour from 8:00 pm to 9:00 pm. You can find the meeting link here. We will wait for you. Regards MediaWiki message delivery (பேச்சு) 13:38, 22 மார்ச் 2023 (UTC)

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு

தொகு

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு

தொகு

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)

- ஒருங்கிணைப்புக் குழு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tnse_anita_cbe&oldid=3780993" இலிருந்து மீள்விக்கப்பட்டது