Werklorum
வாருங்கள்!
வாருங்கள், Werklorum, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--Natkeeran 21:54, 9 மார்ச் 2008 (UTC)
நல்வரவு
தொகுஉங்கள் பங்கிளிப்பு கண்டு மகிழ்ச்சி. குறைந்தது மூன்று வசனங்களாவது ஒவ்வொரு கட்டுரைக்கும் இணைத்தால் நல்ல ஆரம்பமாக இருக்கும். நன்றி. --Natkeeran 21:55, 9 மார்ச் 2008 (UTC)
- உங்கள் பங்களிப்புக் கண்டு மிக்க மகிழ்ச்சி. அமெரிக்க நகரங்கள் பற்றிய ஒற்றைவரிக் கட்டுரைகளுக்கு speed-delete வார்ப்புரு இட்டுள்ளே. ஒரு மாதத்துள் அவை விரிவாக்கப்படாவிடின் நீக்கப்படும். ஒற்றைவரியில் தகவலை இடுவது தவறல்லவெனினும் அவ்வாறு பல்லாயிரம் கட்டுரைகளைத் தானியங்கிகளால் உருவாக்கலாம். அதனால் கலைக்களஞ்சியமென்றவகையில் அதிக பயனில்லை. நன்றி. கோபி 04:10, 11 மார்ச் 2008 (UTC)
பாஸ்டன் கட்டுரையில் தகவற்சட்டத்தை ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து பிரதிசெய்து மொழிபெயர்க்காமல் இட்டுள்ளேன். உரிய மொழிபெயர்ப்புக்களும் செய்தால் சிறப்பாக வரும். இவ்வாறு நீங்கள் உருவாக்கிய நகரங்கள் பற்றிய கட்டுரைகள் அனைத்திற்கும் ஆங்கில விக்கியிலுந்து தகவற்சட்டங்கள் இணைக்கலாம். நன்றி. கோபி 05:04, 11 மார்ச் 2008 (UTC)
- ஆங்கிலத்திலிருந்து தகவற்சட்டங்களை இங்கே பயன்படுத்துவதற்கு முதலில் முதன்மைத் தகவற்சட்டம் இங்கே உருவாக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக NBA team தகவற்சட்டம் இருந்தால்தான் ஒவ்வொரு அணிக்கும் அதனை இட முடியும். ஏனைய பயனர்களிடம் உதவி கோரினால் உங்களது முயற்சி மிக இலகுவானதாகிவிடும். தகவல்களை இடும்போது தமிழாக்கமும் செய்வது விரும்பத்தக்கது. நன்றி. கோபி 05:51, 12 மார்ச் 2008 (UTC)
வாழ்த்துக்கள்
தொகுஉங்கள் தொடர் பங்களிப்புகள் கண்டு மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து பங்களிக்கவும் உங்களைப் போன்ற தன்னார்வளகளில் கூட்டு முயற்சிக் காரணமாகவே தமிழ் விக்கிப்பீடியா இவ்வளவு வளர்ந்துள்ளது.--Terrance \பேச்சு 07:13, 12 மார்ச் 2008 (UTC)
- Werklorum, நீங்கள் கலக்குகிறீர்கள்! வாழ்த்துக்கள்! தொடர்ந்து பங்களியுங்கள். நீங்கள் இடும் தகவல்கள் எல்லாம் தமிழுக்குப் புதிது. --செல்வா 22:06, 12 மார்ச் 2008 (UTC)
NBA player தகவற்சட்டம்
தொகுடெரான் வில்லியம்ஸ் பக்கத்தைப் பார்க்கவும். தயவுசெய்து தகவல்களைத் தமிழாக்கமும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பணிகண்டு மிகுந்த மகிழ்ச்சி. NBA player தகவற்சட்டங் கொண்டு எல்லாக் கூடைப்பந்தாட்ட வீரர் பற்றிய கட்டுரைகளையும் விரிவாக்க முடியுமென நினைக்கிறேன். நன்றி. கோபி 10:43, 13 மார்ச் 2008 (UTC)
உங்களைப்பற்றி
தொகுஉங்களைப்பற்றி நீங்கள்: "i am an "ABCD" who is very fluent in Madras Bashai but doesn't know a whole lot of செந்தமிழ், so i'm using this as a way to learn." கூறியுள்ளீர்கள். ஆனால் நீங்கள் அளிக்கும் பங்களிப்புகள் மிக நன்றாக உள்ளன. Also, Madras Bashai has LOTS of "செந்தமிழ்" :) "மெய்யாவா", "இசுத்துகினு" போனான், "வலிக்கறான்", "கசுமாலம்", "மாய்மாலம்" "பால்மாறாதே" போன்ற எத்தனையோ சொற்கள் நல்ல தமிழ்ச்சொற்கள். உங்கள் ஆர்வம் மிக்க பங்களிப்புகள் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கின்றது. அருள்கூர்ந்து தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--செல்வா 00:59, 19 மார்ச் 2008 (UTC)
அடேயப்பா!! ஒரு மாதத்தில் 203 கட்டுரைகள்!! வாழ்த்துகள்
தொகுநீங்கள் ஒரே மாதத்தில் 203 கட்டுரைகள்] எழுதி அருஞ்செயல் நிகழ்த்தியுள்ளீர்கள். என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக எத்தனை அழகாக கட்டுரைகள் ஆக்கி வலம் சேர்த்துள்ளீர்கள்!! அதுமட்டுமா மிகப்பெரும்பாலான கட்டுரைகள் 2 கிலோ 'பைட்டுக்கும் அதிகவும், ஏறத்தாழ 5-12 கிலோ 'பைட் அளவும் கொண்ட கட்டுரைகள் ( ~ 95%). மிக்க நன்றிகள். அருள்கூர்ந்து தொடர்ந்து நல்லாக்கம் தர வேண்டுகிறேன். --செல்வா 18:31, 3 ஏப்ரல் 2008 (UTC)
- அருமையான பங்களிப்புக்கள். தொடர்ந்து பங்களிப்புச் செய்யுங்கள். வாழ்த்துக்கள். மயூரநாதன் 18:21, 4 ஏப்ரல் 2008 (UTC)
Thank you for your kind words. I started contributing here to become more fluent in proper Tamil. In one month I have learned a lot, but I still have to look up a lot of words in the dictionary. Hopefully as I contribute more I will continue learning more. Werklorum 22:51, 4 ஏப்ரல் 2008 (UTC)
- வாழ்த்துக்கள் Werklorum! விக்கிப்பீடியா துப்பரவாக்கலிலும் உங்கள் பங்களிப்பு கண்டேன். பல தமிழ்க் கட்டுரைகள் ஆங்கிலக் கட்டுரைகளுக்கு இணைக்கப்படாமல் உள்ளன. அவற்றையும் ஆங்காங்கே கண்டு இணைத்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்கள் தமிழ் ஆர்வம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். (தங்களை எப்படி அழைக்கலாம்:)--Kanags \பேச்சு 23:56, 4 ஏப்ரல் 2008 (UTC)
- வாழ்த்துக்கள். உங்களைப்பற்றி ஒரு சில இதர தகவல்களை இணைத்தாலும் நன்றாக இருக்கும். நன்றி. --Natkeeran 23:58, 4 ஏப்ரல் 2008 (UTC)
- பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். கோபி 03:05, 5 ஏப்ரல் 2008 (UTC)
நன்றிகள்
தொகுஉறங்கிக் கிடந்த விக்கிபீடியா நாடுகள் திட்டத்தை எழுப்பி வழிநடத்திச் செல்வதுக் கண்டு மகிழ்ச்சி.நன்றி. உங்கள் ஆக்கங்கள் யாவும் நன்று. தொடர்ந்து பங்களிக்க என் வாழ்த்துக்கள்.--Terrance \பேச்சு 05:27, 11 ஏப்ரல் 2008 (UTC)
mugunth kumar
தொகுநீங்களும் பயனர்:Mugunth Kumar ம் ஒருவரா? ஆம், எனில் இரு கணக்குகளையும் ஒன்றிணைப்பதோ ஒரு கணக்கை மட்டும் தொடர்ந்து பயன்படுத்துவதோ குழப்பம் தவிர்க்க உதவும். நன்றி--ரவி 15:46, 14 ஏப்ரல் 2008 (UTC)
i am definitely not mugunth kumar.. i don't know why he copied my info onto his user page Werklorum 18:11, 14 ஏப்ரல் 2008 (UTC)
- en:American-Born Confused Desi, முகுந் குமார், மதுரையில் பிறந்தார் என்று அவரது ஆங்கில பயனர் பக்கத்தில் குறித்து இருக்கிறார். ஒருவேளை ABCD என்பதை வேற்றாக புரிந்துகொண்டு பிரதி செய்திருக்கலாம். அல்லது அவர் ஒரு DCBA ஆக இருக்கலாம் :-). --Natkeeran 18:18, 14 ஏப்ரல் 2008 (UTC)
I'm also an ABCD in tamil but fluent in Madras Bashai... ;-) I mis-understood ABCD as a beginner and not as American Born Confused Desi... That's y copied it... :) just didn't get anything else to write into... Mugunth Kumar 15:24, 29 மே 2008 (UTC)
தானியக்க மாற்றங்கள்
தொகுபல பக்கங்களில் ஒரே போன்ற சிறிய மாற்றங்களைச் செய்ய auto wiki browser அல்லது தானியங்கிகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் நேரம், உழைப்பை மிச்சப்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, பல பக்கங்களில் பகுப்பு மாற்றங்களைச் செய்யலாம். இது குறித்த வழிகாட்டுதலை பயனர்:Trengarasu இடம் கேட்டுப் பெறலாம்--ரவி 08:14, 9 மே 2008 (UTC)
தமிழ் நடை
தொகுwerklorum உங்கள் அயராத பங்களிப்பைக் காண மகிழ்ச்சி. அமெரிக்கா, விளையாட்டு குறித்த பல தகவல்களை உங்களைப் போன்ற அங்கேயே உள்ள ஆர்வலர்கள் சேர்த்தாலன்றி தமிழ் விக்கிப்பீடியாவில் அவை எழுதப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதுவும் நீங்கள் அங்கு வாழ்வதால் இக்கட்டுரைகளில் கூடுதல் தகவல்களும் துல்லியமும் எதிர்ப்பார்க்கலாம். உங்கள் பயனர் பக்கத்தில் செந்தமிழ் (அல்லது உரைநடைத் தமிழ்) பழகும் இடமாக தமிழ் விக்கிப்பீடியாவைக் குறிப்பிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சி. உங்கள் கட்டுரைகளில் வரும் நாட்களில் இயன்ற அளவு உரை திருத்திப் பங்களிக்க முனைகிறேன். அந்த மாற்றங்களை ஒப்பிட்டு நீங்கள் பழகிக் கொண்டால், உங்கள் எழுத்து நடையை மேம்படுத்திக் கொள்ள இயலும். சொற்கள் தெரியாத இடங்களில் நீங்கள் அகரமுதலிகளைப் பார்ப்பது புரிந்து கொள்ளத்தக்கது. ஆனால், அகரமுதலிச் சொற்களை அப்படியே கட்டுரைகளில் சூழல் பாராமல் எழுத இயலாது என்பதை நீங்கள் அறிவீர்கள். இது எந்த மொழிக்கும் பொருந்தும் தானே? தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதும் நேரத்தில் பாதி நேரத்தையாவது மற்ற தமிழ் இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், பிறர் எழுதிய விக்கிப்பீடியா கட்டுரைகள். தமிழ் அச்சு இதழ்கள், புதினங்கள் ஆகியவற்றைப் படிக்க ஒதுக்கினீர்கள் என்றால் உங்கள் எழுத்து நடையைப் விரைந்து பெரிதும் மேம்படுத்த இயலும் என்று கருதுகிறேன். நன்றி. --ரவி 21:29, 9 மே 2008 (UTC)
Thank you very much, I really appreciate you correcting my articles. I realize some of the words I get from the dictionary probably don't fit properly in a given situation, but I use that usually as a last resort if I can't find the right word in any other place in the right context. Usually I first try to find other articles on Tamil wikipedia to see if a word I'm looking for has been used elsewhere in a similar context and then I use it accordingly. But please do fix as many of my articles as you can. I'll start reading other Tamil websites/publications/etc. too. Thanks. Werklorum 22:20, 9 மே 2008 (UTC)
உங்கள் பங்களிப்புகள் வியப்பூட்டுகின்றன!!
தொகுWerklorum, உங்கள் பங்களிப்புகள் வியப்பூட்டுகின்றன! உங்கள் உழைப்பும் ஆர்வமும் எல்லோருக்கும் மிகுந்த ஊக்கம் தருகின்றது. அருள்கூர்ந்து தொடர்ந்து பங்களியுங்கள்! உங்கள் பங்களிப்புக்கும் ஆர்வத்துக்கும் உடன்பங்களிப்பாளன் என்னும் வகையின் என் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களைப்போல் இன்னும் ஒரு 10-15 பேர் வந்து பங்களிக்க மாட்டார்களா என்று தோன்றுகின்றது!!--செல்வா 15:25, 22 மே 2008 (UTC)
- கட்டுரைகளை பகுப்புகளில் இடுவது மிகவும் பயனுள்ளதும் இன்றியமையாததும் ஆகும். திறம்பட செய்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது. -- சுந்தர் \பேச்சு 04:21, 28 மே 2008 (UTC)
Thanks, Werklorum 22:55, 29 மே 2008 (UTC)
பாராட்டுப் பதக்கம்
தொகுவெர்க்லோரும், நீங்கள் வியக்கவைக்கும் விதமாக மூன்று மாதங்களில் 335 கட்டுரைகள் எழுதி அரிய செயல் படைத்திருக்கிறீர்கள்! உங்களின் தனிச்சிறப்பான ஆர்வமும், இடையறாத பங்களிப்பும் பெரு மகிழ்ச்சி ஊட்டுகின்றன. உடன்பங்களிப்பாளனாகிய நான் என் பாராட்டைத் தெரிவிக்க ஒரு நாள்மீன் பதக்கம் உங்களுக்கு அன்புடன் அளிக்கிறேன். அருள்கூர்ந்து தொடர்ந்து பங்களித்து ஆக்கம் தர வேண்டுகிறேன்! வாழ்க உங்கள் நல்லுணர்வு!--செல்வா 23:12, 12 ஜூன் 2008 (UTC)
வெர்க்லோரும், பாராட்டுக்கள். செல்வா கூறியது போல உங்களின் பங்களிப்பு சிறப்பாக அமைகிறது. --Natkeeran 23:21, 12 ஜூன் 2008 (UTC)
வெர்க்லோரும், உங்கள் இடையறாத பணி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குச் சிறந்த ஊக்குவிப்பாக இருக்கிறது. உங்கள் வேகமான கட்டுரை ஆக்கம் பிற பங்களிப்பாளர்களுக்கும் ஊக்கம் தருகிறது. தொடர்ந்து உங்கள் பணி இங்கே வளர எனது நன்றியும், வாழ்த்துக்களும். மயூரநாதன் 05:29, 13 ஜூன் 2008 (UTC)
Thank you all very much for your kind words and compliments! Werklorum 22:31, 13 ஜூன் 2008 (UTC)
தொடர், பன்முகப் பங்களிப்புக்கு என் நன்றியும் பாராட்டுகளும். உங்களைப் போன்றோர் எவரேனும் தொடர்ந்து விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க முன்வருவார்கள் என்ற நம்பிக்கையே ஏற்கனவே இங்கு உள்ளவர்களை அயராது உழைக்க வைக்கிறது--ரவி 15:43, 6 ஜூலை 2008 (UTC)
500 கட்டுரைகள் எட்ட இருக்கின்றீர்கள்!!
தொகுவெர்க்லோரும், உங்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்! மிகக் குறுகிய காலத்தில் பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணி என்னும் கட்டுரையோடு நீங்கள் 493 கட்டுரைகள் எழுதி விட்டீர்கள். ஏராளமாக களப்பணியும் தொடர்ந்து செய்து வருகின்றீர்கள்! உங்கள் தொடர்ந்த நல்லாக்கங்களுக்கும், உழைப்பிற்கும் உடனுழைக்கும் பங்களிப்பார்கள் சார்பில் என் நன்றிகள். தொடர்ந்து ஆக்கம் தரவும் வேண்டுகிறேன். --செல்வா 14:55, 4 ஆகஸ்ட் 2008 (UTC)
Thank you very much! I didn't notice I was coming near 500 articles. I'll definitely continue creating more new ones, and most importantly I am slowly but surely accomplishing what I originally came to tamil wikipedia to do -- learn better Tamil. Once again thanks! Werklorum 21:03, 4 ஆகஸ்ட் 2008 (UTC)
வெர்க்லோரும், ரே சார்ல்ஸ் பற்றி கட்டுரை தொடங்கியதற்கு நன்றி. சிறு உரை திருத்தங்கள் செய்துள்ளேன். நன்றாக முக்கியமான செய்திகளைத் தொகுத்து கட்டுரை எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்!--செல்வா 12:26, 11 ஆகஸ்ட் 2008 (UTC)
Thanks, I appreciate you making corrections to the articles I create! Werklorum 04:45, 13 ஆகஸ்ட் 2008 (UTC)
சொற் பரிந்துரைகள்
தொகுwerklorum, வழமை உங்கள் பங்களிப்புகள் அருமை. இப்போது நீங்கள் பழைய பங்களிப்பாளர் ஆகி விட்டதால் அடிக்கடி பாராட்ட மாட்டேன் :) உங்கள் கட்டுரைகளில் பொதுவாகக் காணப்படும் சொற்களுக்குப் பதிலான என்னுடைய பரிந்துரைகளை இங்கு இட்டு வைக்கிறேன். --ரவி 18:58, 14 ஆகஸ்ட் 2008 (UTC)
Thanks! I'll make sure to keep that in mind when creating articles in the future. Werklorum 23:46, 15 ஆகஸ்ட் 2008 (UTC)
நாம் இருவருமே ஏறத்தாழ ஒரே நேரத்தில் இந்திய மற்போர் வீரர் சுசீல் குமார் (சுஷீல் குமார்) பற்றி எழுதத் தொடங்கியுள்ளோம்! இரண்டு கட்டுரைகளையும் இணைக்க வேண்டும். நீங்கள் செய்ய முடியுமா?--செல்வா 02:43, 21 ஆகஸ்ட் 2008 (UTC)
Haha I didn't notice... Sure I'll merge them. Werklorum 02:44, 21 ஆகஸ்ட் 2008 (UTC)
சிறு மாற்றம்
தொகுநீங்கள் இசுரேல் நகரங்கள் என்று உருவாக்கியிருந்த பகுப்பை நீக்கி விட்டு தமிழ் நடைக்கு ஏற்றவாறு இசுரேலிய நகரங்கள் என மாற்றியுள்ளேன்.--சிவக்குமார் \பேச்சு 09:51, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
முக்கிய கட்டுரைகள்
தொகுவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 பக்கத்தில் முக்கிய கட்டுரைகளாக இனங்காணப்பட்ட ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத பல தலைப்புக்கள் உள்ளன. உங்கள் ஆர்வத் தலைப்புக்களில் கட்டுரைகளை உருவாக்கக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தொடர்ச்சியான பங்களிப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும். கோபி 02:28, 15 செப்டெம்பர் 2008 (UTC)
Sure I'll help create some of those articles, thanks! Werklorum 03:00, 15 செப்டெம்பர் 2008 (UTC)
பாராட்டுகள்
தொகுWerklorum, முதன் முறையாக இப்பக்கத்தில் தமிழில் உரையாடியுள்ளீர்கள். வாழ்த்துகள். இயலுமானால் தமிழிலேயே தொடருங்கள். --சிவக்குமார் \பேச்சு 14:52, 16 அக்டோபர் 2008 (UTC)
ஜான் மெக்கெய்ன்
தொகுஒபாமா, மெக்கெய்ன் பற்றிய உங்கள் கட்டுரைகள் நன்று. நேரத்துக்கு தகுந்தவாறு அமைந்தது. முடிந்தால் [ஜான் மெக்கெய்ன்]] கட்டுரையின் இறுதிப் பகுதியையும் எழுதினால் நன்று. நன்றி. --Natkeeran 12:44, 4 நவம்பர் 2008 (UTC)
655 கட்டுரைகள் இதுவரை துவங்கியுள்ளீர்கள்
தொகுவெர்க்லோரும், இதுகாறும் நீங்கள் 655 கட்டுரைகள் எழுதி அருஞ்செயல் புரிந்திருக்கின்றீர்கள். என் பாராட்டுகள். சில நாட்களாக இங்கு வந்து பணியாற்ற இயலாமல் இருந்தது. உங்களுடைய அண்மைய கட்டுரை வடக்கு வசீரிஸ்தான் என்பது. உங்கள் கட்டுரைகள் எல்லாம் தற்காலத்தில் நிகழும் செய்திகளை தெளிவாக அறிய உதவும் தலைப்புகளாக இருப்பது மகிழ்ச்சியைச் தருகின்றது. விரைவில் 1000 கட்டுரைகளை எட்டுவீர்கள் என்று நினைக்கிறேன்.
மீண்டும் வருக
தொகுவெர்க்லோரும், மீண்டும் வருக! --செல்வா 14:51, 24 டிசம்பர் 2008 (UTC)
நலமா?
தொகுவெர்க்லோரும், எங்கே உங்களைப்ப் பல மாதங்களாகக் காணவில்லையே! நலமா? பணி அழுத்தங்கள் அதிகமா? உங்கள் பங்களிப்புகளை மீண்டும் பார்க்க ஆசைப்படுகின்றேன்.--செல்வா 18:30, 7 மார்ச் 2009 (UTC)
Request for help
தொகுPlease translate this paragraph into Tamil. Thank you very much for your kind assistance.Genghiskhan 11:33, 16 ஏப்ரல் 2009 (UTC)
Phong Nha-Ke Bang
Phong Nha-Ke Bang (Vietnamese: Vườn quốc gia Phong Nha-Kẻ Bàng) is a national park in Quang Binh, Vietnam, 450 km from Hanoi and 44 km north the provincial Dong Hoi.
This park has 300 caves and grottoes with a total length of 70 km, of which British and Vietnamese scientists have so far surveyed 20 km. This park has many underground rivers and has biological diversity. In 2003, யுனெசுகோ listed this national park in its world heritage sites (natural heritage sites).
en:Phong Nha-Ke Bang National Park
it:Parco nazionale di Phong Nha-Ke Bang
பங்களிப்பாளர் அறிமுகம்
தொகுவணக்கம் werkloum, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--ரவி 11:06, 5 அக்டோபர் 2009 (UTC)
சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்
தொகுவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:55, 18 பெப்ரவரி 2010 (UTC)
தேவைப்படும் கட்டுரைகள்
தொகுவணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் werklorum. அடுத்த இரு வாரங்களுக்கு, உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். வாழ்த்துகள்--ரவி 11:31, 26 ஏப்ரல் 2010 (UTC)
மீண்டும் வருக!
தொகுவெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் ஆகத்து மாதம் 6 அன்று உங்கள் பங்களிப்பைக் கண்டு மகிழ்ந்தேன் (ஜெய் சான் என்னும் பக்கத்தில்). எப்படி இருக்கின்றீர்கள்? இயன்றபொழுது பங்களிக்க வேண்டுகிறேன். அதிகம் தமிழ் தெரியாது என்று கூறிய நீங்கள் புயல் போல விரைந்து நிறைய நல்ல பங்களிப்புகள் தந்து வியப்பில் ஆழ்த்தினீர்கள். அட்லாண்ட்டாவில் தான் இருக்கின்றீர்களா?--செல்வா 17:29, 10 செப்டெம்பர் 2010 (UTC)
மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்
தொகுவணக்கம் Werklorum. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:11, 2 மே 2011 (UTC)
உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத்திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த உரிமைகளின் சட்டம் (ஐக்கிய அமெரிக்கா) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 16, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த ரென்மின்பி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 17, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த ஒன்சூ என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 24, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டெம்பர் 18, 2013 அன்று வெளியானது. |
முதற்ப்பக்க கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த இந்திய விண்வெளி ஆய்வு மையம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூலை 15, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த யெரூசலம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஜனவரி 6, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த இசுதான்புல் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூலை 6, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:02, 24 சூன் 2013 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
தொகுவணக்கம் Werklorum!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:12, 30 திசம்பர் 2014 (UTC)
உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த நா. சந்திரபாபு நாயுடு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 4, 2016 அன்று வெளியானது. |
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
தொகுஅன்புள்ள Werklorum,
நலமா?
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.