பாக்கித்தானில் பௌத்தம்

பாக்கித்தானில் பௌத்தம் (Buddhism in Pakistan), கிமு மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தின் போது பௌத்தம் பாக்கித்தான் நாட்டில் வேர் ஊன்றத் துவங்கியது.[1][2][3]2012ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பாக்கித்தானில் பௌத்த சமய மக்கள் தொகை 1,492 என கணக்கிடப்பட்டுள்ளது.[4]2017ஆம் ஆண்டில் 1,884 பௌத்த சமய வாக்காளர்கள் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் மட்டுமே உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.[5]

கிரேக்க சிற்பக் கலைநயத்தில் கௌதம புத்தர் சிற்பம், கிபி இரண்டாம் நூற்றாண்டு, பெசாவர், பாக்கித்தான்
போதிசத்துவரின் தலைச் சிற்பம், காந்தாரம், கிபி நான்காம் நூற்றாண்டு

பாக்கித்தான் தலைநகரான இஸ்லாமாபாத் நகரத்தில் மட்டுமே செயல்பாட்டில் உள்ள விகாரையில் இலங்கை போன்ற நாடுகளின் தூதரக ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் வழிபடுகின்றனர்.[6]

வரலாறு

தொகு

பாக்கித்தானில் பௌத்தம் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே வளரத் தொடங்கியது. சுவாத் சமவெளி அகழாய்வுகளில் கிமு 563 மற்றும் 483 இடைப்பட்ட காலத்தில் கடடப்பட்ட பௌத்தக் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[7]பாக்கித்தானில் மகாயான பௌத்தம் சிறப்பாக வளர்ந்தது.[8]பாக்கித்தானின் காந்தாரப் பகுதி பௌத்தத்தின் தாய் வீடு எனலாம். காந்தாரத்தில் பௌத்தக் கலைகள் மற்றும் சிற்பக்கலை செழிப்பாக வளர்ந்திருந்தது. [9]

பௌத்த தொல்லியற்களங்கள்

தொகு
 
தாமரையில் அமர்ந்த நிலையில் கௌதம புத்தர் சிற்பம், சுவாத் மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம்

பெசாவர் சமவெளியின் மையப் பகுதியில் அமைந்தது காந்தாரம் எனும் பண்டைய பண்பாட்டு நிலப்பகுதியில் சுவாத் ஆறு பாய்கிறது. காந்தாரத்தில் புத்தர் சிலை புகழ்பெற்றது. கைபர் பக்துன்வா மாகாணத்தில் தொல்லியல் அகழாய்வின் போது பௌத்தம் தொடர்புடைய அம்லுக்-தாரா தூபி, புத்கார தூபி, சமால் கார்கி, தக்த்-இ-பாகி, ஜௌலியன் விகாரை, கனிஷ்கரின் தூபி, கனிஷ்கர் பேழை மற்றும் பேரரசர் அசோகரின் மன்செரா பாறைக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

பஞ்சாப் மாகாணம்

தொகு
 
தர்மராஜிக தூபி, தட்சசீலம், பஞ்சாப் மகாணம், பாக்கித்தான்

பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகணத்தின், தட்சசீலத்தில் உள்ள தர்மராஜிக தூபியை மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது. கிபி 2-ஆம் நூற்றாண்டில் குசான் பேரரசு காலத்தில் தருமராசிக தூபியை மறுசீரமைத்து பல பெரிய விகாரைகளுடன் நிறுவப்பட்டது. கிபி 5-ஆம் நுற்றாண்டில் எத்தலைட்டுகளின் மன்னர் மிகிரகுலன் ஆட்சிக் காலத்தில் தருமராசிக தூபி முற்றிலும் சிதைக்கப்பட்டது.[10] 1980இல் இயுனெசுகோ நிறுவனம், தருமராசிக தூபியை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்ததுள்ளது.[11] இப்பகுதி இசுலாமியமயமான போது, தருமராசிக தூபி மேலும் சிதைக்கப்பட்டது. சான் மார்சல் எனும் பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர், 1913ல் சிதைந்திருந்த தருமராசிக தூபியை அகழ்வாய்வு செய்து பல தொல்பொருட்களை கண்டெடுத்தார்.

சிந்து மாகாணம்

தொகு
 
காகு-ஜொ-தார பௌத்தத் தூபி, கிபி 410, சிந்து மாகாணம், பாக்கித்தான்

பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பௌத்த தூபிகள் மற்றும் விகாரைகள் போன்ற தொல்லியற்களங்கள் மிகவும் சிதைந்து உருத்தெரியாமல் உள்ளது. இப்பகுதியில் கண்டெடுத்த சில சுடுமண் உருவங்கள் போன்ற தொல்லியல் எச்சங்களை சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[12]

பலுசிஸ்தான் மாகாணம்

தொகு
 
பௌத்தக் குடைவரை நகரம், கொண்டரானி, பலுசிஸ்தான் மாகாணம்

பலுசிஸ்தான் மாகாணத்தின் கடற்கரையில் பல பௌத்த விகாரைகள் மற்றும் கொண்டரனி எனும் குகை நகரத்தைக் கண்டதாக பௌத்த பயணி சுவான்சாங் தனது பயணக் குறிப்பில் குறித்துள்ளார்.[13][14][15]

பாக்கித்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள கில்ஜித்-பல்டிஸ்தானில் ஸ்கர்டு மாவட்டத்தில் கிபி எட்டாம் நூற்றாண்டு காலத்திய மந்தல் பௌத்த பாறைச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிபி 15ஆம் நூற்றாண்டில் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான பௌத்தர்கள் இசுலாமிற்கு கட்டாய மதம் மாற்றம் செய்யப்பட்டனர்.

பௌத்த மக்கள் தொகை

தொகு

பாக்கித்தானில் தற்போதைய பௌத்த மக்கள் தொகை குறித்தான விவரங்கள் சரிவர தெரியவில்லை.[16] சில பாக்கைத்தானியர்கள் தங்களை பௌத்தர்கள் என அறிவித்துக்கொண்டனர்.அவர்கள் அசாத் காசுமீரில் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.[17] 2012ஆம் ஆண்டின் தேசிய தரவுத் தளம் மற்றும் பதிவேடுகளின்படி, பாக்கித்தானில் 1,492 பௌத்தர்கள் மட்டுமே தேசிய அடையாள அட்டை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.[4] 2017ஆம் ஆண்டில் இது 1,884 ஆக உயர்ந்துள்ளதாக தெரிகிறது.[5] பாக்கித்தானிய பௌத்தர்களில் பெரும்பான்மையானவர்கள் சிந்து மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் நகர்புறங்களில் அதிகம் வாழ்கின்றனர்.

நவீன பாக்கித்தானில் பௌத்தர்கள்

தொகு

1971 வங்கதேச விடுதலைப் போரின் போது பௌத்த மன்னரான திரிதேவ் ராய் பாக்கித்தான் இராணுவத்திற்கு ஆதரவு அளித்தார். எனவே அவர் சிட்டகாங் நகரை விட்டு வெளியேறி பாக்கித்தானில் அடைக்கலம் புகுந்தார். இவரது பரம்பரையினர் பாக்கித்தான் பௌத்தர்களுக்கு பிரதிநிதியாக செயல்படுகின்றனர்.[18] இவரது குடும்பம் வங்காளதேசத்திற்கு பின்புறம் தங்கியிருந்தனர்.

 
கௌதம புத்தரின் பாறைச் சிற்பத்தை தாலிபான்கள் சிதைத்தல்

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rengel, Marian (2003-12-15). Pakistan: A Primary Source Cultural Guide (in ஆங்கிலம்). The Rosen Publishing Group, Inc. pp. 59–62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-4001-1. Archived from the original on 15 January 2023. பார்க்கப்பட்ட நாள் 4 August 2022.
  2. "Buddhism In Pakistan". pakteahouse.net. Archived from the original on 20 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2015.
  3. Buswell, Robert; Lopez, Donald (2014). The Princeton Dictionary of Buddhism. Princeton University Press. p. 773. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691157863. Archived from the original on 15 January 2023. பார்க்கப்பட்ட நாள் 21 November 2021.
  4. 4.0 4.1 "Over 35,000 Buddhists, Baha'is call Pakistan home". Tribune இம் மூலத்தில் இருந்து 2 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121102005352/http://tribune.com.pk/story/430059/over-35000-buddhists-bahais-call-pakistan-home/. 
  5. 5.0 5.1 "Pakistan elections: Non-Muslim voters up by 30%, Hindus biggest minority". 28 May 2018. Archived from the original on 18 September 2020. பார்க்கப்பட்ட நாள் 9 August 2018.
  6. "Vesak Festival in Islamabad". mfa.gov.lk. Archived from the original on 13 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2018.
  7. Magazine, Smithsonian; Kindy, David. "2,000-Year-Old Buddhist Temple Unearthed in Pakistan". Smithsonian Magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-16.
  8. "Remembering Pakistan's Buddhist past | The Express Tribune". tribune.com.pk (in ஆங்கிலம்). 2022-06-11. பார்க்கப்பட்ட நாள் 2023-01-16.
  9. "Long Read: A Pakistani homeland for Buddhism: Buddhist art, Muslim nationalism and global public history". South Asia@LSE. 2019-07-22. பார்க்கப்பட்ட நாள் 2023-01-16.
  10. "Dharmarajika: The Great Stupa of Taxila". GoUNESCO. UNESCO. 1 September 2016. Archived from the original on 20 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 22 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Taxila". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
  12. "Ancient Buddhist terracottas from Mirpurkhas in Pakistan" (in en-US). Art of South Asia, the Silk Road and Beyond. 2016-10-18 இம் மூலத்தில் இருந்து 18 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200918110232/https://coromandelart.wordpress.com/2016/10/18/fifth-century-stupa-ruins-from-mirpurkhas-in-pakistan/. 
  13. Royal Geographical Society (Great Britain) (1896). John Scott Keltie (ed.). The Geographical Journal Volume 7. Great Britain: Royal Geographical Society. p. 399.
  14. Wink, André (2002). "The frontier of alHind". Al-Hind : the making of the Indo-Islamic world ([2nd ed.]. ed.). Leiden: E. J. Brill. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0391041257. பார்க்கப்பட்ட நாள் 19 March 2013.
  15. Taylor & Francis (1989). South Asian Studies: Journal of the Society for South Asian Studies. University of Michigan: The Society for South Asian Studies.
  16. "Thread, Not Scissor Common Spiritual Heritage For Peace And Harmony, Ahmad Salim, SARRC – December 2008" (PDF). Archived from the original (PDF) on 16 October 2018. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.
  17. 800 years of Buddhism in Pakistan, Emi Foulk, The Friday Times, July 18, 2008
  18. "Monks to start peace march tomorrow,August 05, 2002". Archived from the original on 16 October 2018. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Buddhism in Pakistan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கித்தானில்_பௌத்தம்&oldid=3777588" இலிருந்து மீள்விக்கப்பட்டது