பிறையன் லாரா துடுப்பாட்டக் கழகம்

பிறையன் லாரா துடுப்பாட்டக் கழகம் என்பது திரினிடாட்டும் தொபாகோவும் நாட்டில் சான் பெர்னாண்டோ நகரில் தாரூபாவில் உள்ள ஒரு பல்நோக்கு அரங்கமாகும். இது 2017 இல் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டது.[1] இது பெரும்பாலும் துடுப்பாட்டப் போட்டிகளுக்குப் பயன்படுத்தப்படும். இது தெற்கு டிரினிடாட்டில், சான் பெர்னாண்டோ நகரின் மையப்பகுதிக்குச் சற்று வெளியே, சேர் சொலமன் ஒச்சோய் நெடுஞ்சாலை அருகில், திரினிடாட்டும் தொபாகோவுமின் முன்னாள் துடுப்பாட்ட மைதானமான குவாராக்காரா பூங்காவிலிருந்து தென்கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பிறையன் லாரா துடுப்பாட்டக் கழகம்
அரங்கத் தகவல்
அமைவிடம்தாரூபா, சான் பெர்னான்டோ, திரினாட்டும் தொபாகோவும்
ஆள்கூறுகள்10°17′48″N 61°25′47″W / 10.29667°N 61.42972°W / 10.29667; -61.42972
உருவாக்கம்2008, முடிக்கப்பட்டது 2017
இருக்கைகள்15,000
உரிமையாளர்திரினாட்டும் தொபாகோவும் அரசு
இயக்குநர்திரினாட்டும் தொபாகோவும் அரசு
குத்தகையாளர்திரின்பாகோ நைட் ரைடர்சு
திரினாட்டும் தொபாகோவும் துடுப்பாட்ட அணி
பன்னாட்டுத் தகவல்
ஒரே ஒநாப1 ஆகத்து 2023:
 மேற்கிந்தியத் தீவுகள் இந்தியா
முதல் இ20ப29 சூலை 2022:
 மேற்கிந்தியத் தீவுகள் இந்தியா
கடைசி இ20ப21 டிசம்பர் 2023:
 மேற்கிந்தியத் தீவுகள் v  இங்கிலாந்து
முதல் மஒநாப11 அக்டோபர் 2017:
 மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை
கடைசி மஒநாப15 அக்டோபர் 2017:
 மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை
முதல் மஇ20ப28 செப்டெம்பர் 2018:
 மேற்கிந்தியத் தீவுகள் தென்னாப்பிரிக்கா
கடைசி மஇ20ப6 அக்டோபர் 2018:
 மேற்கிந்தியத் தீவுகள் தென்னாப்பிரிக்கா
21 டிசம்பர் 2023 இல் உள்ள தரவு
மூலம்: பிறையன் லாரா அரங்கம், கிரிக்கின்போ

15, 000 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட இந்த மைதானத்திற்கு முன்னாள் மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்ட அணித்தலைவர் பிரையன் லாராவின் பெயரிடப்பட்டது. அவர் 2008 அக்டோபர் 17இல் சச்சின் டெண்டுல்கர் முறியடிக்கும் வரை தேர்வுத்துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்களை எடுத்த சாதனை வீரராக இருந்தார்.

கரீபியன் பிரீமியர் லீக் பிரையன் லாரா துடுப்பாட்டக் கழகத்தை 2017 போட்டியின் இறுதிப் போட்டிகளை நடத்தத் தேர்ந்தெடுத்தது. இது மைதானத்தில் நடந்த முதல் உயர்மட்ட போட்டியாகும்.[2] இதைத் தொடர்ந்து, டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசாங்கம் 2018 முதல் 2020 வரை சிபிஎல் இறுதிப் போட்டிகளை பிரையன் லாரா துடுப்பாட்டக் கழகத்தில் நடத்துவதற்கான உரிமைகளை வாங்கியது.[3]

துடுப்பாட்டப் போட்டிகள்

தொகு

செப்டம்பர் 2017 இல் கரீபியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி உட்பட பல போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்த முக்கிய போட்டிகளாகும்.[4] முதலாவது முதல் தரப் போட்டி நவம்பர் 2017 இல் நடைபெற்றது. 2017-18 மற்றும் 2018-19 டிரினிடாட்டும் டொபாகோவும் அணி தமது பிராந்திய நான்கு நாள் போட்டிகள் சிலவற்றை இங்கு விளையாடியது.[5]

 
பிரையன் லாரா அரங்கத்தின் காட்சி

2024 ஐசிசி ஆண்கள் இ20 உலகக் கோப்பை போட்டிகள்

தொகு
12 சூன் 2024
20:30
ஆட்டவிபரம்
  நியூசிலாந்து
136/9 (20 நிறைவுகள்)
செர்பேன் இரதர்போர்டு 68* (39)
டிரென்ட் போல்ட் 3/16 (4 நிறைவுகள்)
கிளென் பிலிப்சு 40 (33)
அல்சாரி யோசப் 4/19 (4 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 13 ஓட்டங்களால் வெற்றி
பிறையன் லாரா துடுப்பாட்டக் கழகம், சான் பெர்னாண்டோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), அலெக்ஸ் வார்ப் (இங்)
ஆட்ட நாயகன்: செர்பேன் இரதர்போர்டு (மேஇ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

13 சூன் 2024
20:30
ஆட்டவிபரம்
பப்புவா நியூ கினி  
95 (19.5 நிறைவுகள்)
  ஆப்கானித்தான்
101/3 (15.1 நிறைவுகள்)
கிப்லின் தொரிகா 27 (32)
பசல்கக் பரூக்கி 3/16 (4 நிறைவுகள்)
குல்புதீன் நயிப் 49* (36)
செமோ கமேயா 1/16 (3 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 7 இலக்குகளால் வெற்றி
பிறையன் லாரா துடுப்பாட்டக் கழகம், சான் பெர்னாண்டோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), அலெக்ஸ் வார்ப் (இங்)
ஆட்ட நாயகன்: பசல்கக் பரூக்கி (ஆப்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

14 சூன் 2024
20:30
ஆட்டவிபரம்
உகாண்டா  
40 (18.4 நிறைவுகள்)
  நியூசிலாந்து
41/1 (5.2 நிறைவுகள்)
கெனத் உவைசுவா 11 (18)
டிம் சௌத்தி 3/4 (4 நிறைவுகள்)
டேவன் கான்வே 22* (15)
ரியாசத் அலி சா 1/10 (1 நிறைவு)
நியூசிலாந்து 9 இலக்குகளால் வெற்றி
பிறையன் லாரா துடுப்பாட்டக் கழகம், சான் பெர்னாண்டோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: டிம் சௌத்தி (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

17 சூன் 2024
10:30
ஆட்டவிபரம்
பப்புவா நியூ கினி  
78 (19.4 நிறைவுகள்)
  நியூசிலாந்து
79/3 (12.2 நிறைவுகள்)
சார்லசு அமீனி 17 (25)
லொக்கி பெர்கசன் 3/0 (4 நிறைவுகள்)
டேவன் கான்வே 35 (32)
கபுவா மொரியா 2/4 (2.2 நிறைவுகள்)
நியூசிலாந்து 7 இலக்குகளால் வெற்றி
பிறையன் லாரா துடுப்பாட்டக் கழகம், சான் பெர்னாண்டோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), லாங்டன் ருசேரே (சிம்)
ஆட்ட நாயகன்: லொக்கி பெர்கசன் (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • டிரென்ட் போல்ட் (நியூ) தனது கடைசி இ20ப போட்டியில் விளையாடினார்.
  • லொக்கி பெர்கசன் (நியூ) இ20ப போட்டியில் தொடர்ச்சியாக ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் நான்கு ஓவர்கள் வீசிய இரண்டாவது பந்துவீச்சாளர் ஆனார். இதற்கு முன், 2021-இல் பனாமாவுக்கு எதிராக, கனடாவின் சாத் பின் சாபர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார்.[6]

முதலாவது அரையிறுதி

தொகு
26 சூன் 2024
20:30
ஆட்டவிபரம்
குழு 1 வெற்றியாளர்
குழு 2 இரண்டாமிடம்
பிறையன் லாரா துடுப்பாட்டக் கழகம், சான் பெர்னான்டோ, டிரினிடாட்

மேற்கோள்கள்

தொகு
  1. "CPL Venue Preview: Brian Lara Cricket Academy". Cricket மேற்கிந்தியத் தீவுகள். பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2020.
  2. "Fixtures | cplt20".
  3. "Home". Archived from the original on 2019-10-14. பார்க்கப்பட்ட நாள் 2019-10-14.
  4. "Brian Lara Stadium, Tarouba". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 5 January 2019.
  5. "First-class matches played on Brian Lara Stadium, Tarouba". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 5 January 2019.
  6. "NZ vs PNG: Lockie Ferguson records first instance of four maidens by a bowler in a T20 World Cup history". SportStar. பார்க்கப்பட்ட நாள் 17 June 2024.