பிளேடு ரன்னர்

பிளேடு ரன்னர் (ஆங்கிலம்: Blade Runner) 1982 ஆம் ஆண்டு ஒரு அறிபுனைத் திரைப்படம் ஆகும். ரிட்லி சுகாட்டினால் இயக்கப்பட்டது. ஹாரிசன் போர்ட், இரட்கர் ஹாவுவர், சான் யங், மற்றும் எட்வர்டு ஒல்ம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருங்காலத்து 2019 லாஸ் ஏஞ்சலஸ் மாநகரத்தில் அமையப்பெறுகிறது. இந்தக் காலகட்டத்தில், விண்வெளிக் குடியிருப்புகளில் பணி செய்ய செயற்கையான மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர். அவற்றில் சில செயற்கை மனிதர்கள் புவியிற்கு தப்பித்து மனிதர்களாய் வாழ்கின்றனர். காவலர் ரிக் டெக்கர்டிற்கு (ஃபோர்டு) இவர்களை கண்டறிந்து வேட்டையாடும் பணி வழங்கப்படுகிறது. ஆனால் இவர் தயக்கம் காட்டுகிறார்.

பிளேடு ரன்னர்
Blade Runner
Collage of a man holding a gun, a woman holding a cigarette, and a futuristic city-scape.
பிளேடு ரன்னரின் சுவரொட்டி
இயக்கம்ரிட்லி சுகாட்
தயாரிப்புமைக்கேல் டீலி
திரைக்கதை
  • ஹாப்டன் பான்சர்
  • டேவிட் பிபிள்ஸ்
இசைவான்செலிசு
நடிப்பு
ஒளிப்பதிவுஜோர்டன் குரொனன்வெத்
படத்தொகுப்பு
  • டெர்ரி ராலிங்சு
  • மார்சா நகஷிமா
கலையகம்
  • த லாட் கம்பனி
  • ஷா பிரதர்சு
  • பிளேடு ரன்னர் பார்ட்னர்ஷிப்சு
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுசூன் 25, 1982 (1982-06-25)
ஓட்டம்117 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா[2][3]
Hong Kong[4]
ஆக்கச்செலவு$30 மில்லியன்[5]
மொத்த வருவாய்$41.5 மில்லியன்[6]

இத்திரைப்படம் முதலில் அதிகம் வருவாய் ஈட்டவில்லை. சில விமர்சகர்கள் மட்டும் கதையின் சிக்கல்கள் மட்டும் திரைவண்ணங்களை புகழ்ந்தனர். வெறு சிலர் திரைப்படத்தின் குறைந்த வேகத்தினையும் குறைந்த சண்டைக் காட்சிகளையும் கடுமையாக விமர்சித்தனர். வருடங்கள் பிறகே பெரிதும் பாராட்டப்பட்டு, இவ்வகையான திரைப்படங்களிற்கு முன்மாதிரியாக மாறியது.

இத்திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக பிளேடு ரன்னர் 2049 அக்டோபர் 2017 இல் வெளிவந்தது.

பல்வேறு கருத்து மாறுபாடுகளினால் இத்திரைப்படத்திற்கு ஏழு வெவ்வேறு பதிப்புகள் உருவாக்கப்பட்டன. இரசிகர்களுக்காக 1992 ஆம் ஆண்டில் ரிட்லி சுகாட்டின் இயக்குநரின் வெட்டு வெளியிடப்பட்டது. இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு ஆக வெளியிடப்பட்ட முதல் திரைப்படங்களில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டில், இத்திரைப்பட வெளியீட்டின் 25 வருட நிறைவினை கொண்டாட, வார்னர் புரோஸ். பிளேடு ரன்னரின் இறுதி வெட்டினை வெளியிட்டது. இயக்குநர் ரிட்லி சுகாட்டின் விருப்பத்திற்கு ஏற்ப அமையப்பெற்று வெளியிடப்பட்ட பதிப்பு இது மட்டுமே.

தயாரிப்பு

தொகு

நடிகர்கள்

தொகு

இத்திரைப்படத்தில் நடிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது, குறிப்பாக ஹீரோ பாத்திரத்திற்கு.[7] பல மாதங்களாக இயக்குநர் ரிட்லி சுகாட்டும் தயாரிப்பாளர்களும் டசுடின் ஹாஃப்மனினை நடிக்க அழைத்தனர். ஆனால் அவர் கருத்து வேறுபாடுகளினால் வெளியேறினார்.[7] ஹாரிசன் ஃபோர்ட் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காகவும், ஃபோர்டின் பிளேடு ரன்னர் ஈடுபாட்டிற்காகவும், இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் பரிந்துரையாளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8] திரைப்பட தயாரிப்பு கோப்புகளின்படி, ஜீன் ஹாக்மன், சான் கானரி, ஜாக் நிக்கல்சன், பால் நியூமன், கிளின்ட் ஈஸ்ட்வுட், டாம்மி லீ ஜோன்சு, ஆர்னோல்டு சுவார்செனேகர், அல் பசீனோ மற்றும் பர்ட் ரெனால்ட்சு ஆகியோர் ஹீரோ பாத்திரத்திற்காக கண்டறியப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர்.[7]

பிளேடு ரன்னர் திரைப்படத்தில் அப்போது அறியப்படாத நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.[9][7]

சாரியட்ஸ் ஆப் பயர் திரைப்படத்திற்கு இசையமைத்து, அதற்கு ஆசுக்கர் விருதினை வென்ற வான்செலிசு இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[10]

திரை வண்ணங்கள்

தொகு

பிளேடு ரன்னர் திரைப்படத்தின் திரைவண்ணங்கள் மற்றும் அசைவூட்டங்கள் இன்றுவரை பெரிதும் பாராட்டப்படுகிறது.[11][12] அக்காலத்து தொழிநுட்பங்கள் அனைத்து அதன் முழுமைக்கும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. திரைப்படமாக்கலில் புதுவிதமான தொழில்நுட்பங்களைப் உருவாக்கி பயன்படுத்தியமைக்கு இத்திரைப்படத்தின் அசைவூட்ட பொறியியலாளர்கள் பெரிதும் பாராட்டப்பட்டனர்.[11][13] சில நுட்பங்கள் குலோசு என்கவுன்டர்சு ஆஃப் த தெர்டு கைன்டு திரைப்பட தயாரிப்பின் பொழுது உருவாக்கப்பட்டு இங்கு பயன்படுத்தப்பட்டன.[14]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு

பிளேடு ரன்னர் பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டு, அதில் சிலவற்றினையும் வென்றது.[15]

ஆண்டு விருது பிரிவு முடிவு
1982 லாஸ் ஏஞ்சலசு திரைப்பட விமர்சகர்கள் குழுமம் சிறந்த ஒளிப்பதிவு வெற்றி
1983 பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் சிறந்த ஒளிப்பதிவு வெற்றி
சிறந்த உடை அமைப்பு வெற்றி
சிறந்த தொகுப்பு பரிந்துரை
சிறந்த இசை பரிந்துரை
சிறந்த ஒப்பனை பரிந்துரை
சிறந்த தயாரிப்பு வெற்றி
சிறந்த ஒலி பரிந்துரை
சிறந்த திரை வண்ணங்கள் பரிந்துரை
ஹியூகோ விருது சிறந்த நாடகப்படம் வெற்றி
இலண்டன் திரைப்பட விமர்சகர்கள் குழு சிறப்பு விருது வெற்றி
கோல்டன் குளோப் விருதுகள் சிறந்த அசல் இசை பரிந்துரை
அகாதமி விருது சிறந்த தயாரிப்பு பரிந்துரை[16]
சிறந்த திரை வண்ணங்கள் பரிந்துரை[17][18]
சனி விருதுகள் சிறந்த இயக்குநர் பரிந்துரை
சிறந்த அறிவியல் புனைவுத் திரைப்படம் பரிந்துரை
சிறந்த திரைவண்ணங்கள் பரிந்துரை
சிறந்த துணை நடிகர் பரிந்துரை
பேன்டாசுபோர்டோ சர்வதேச திரைப்பட விருது பரிந்துரை
1993 பேன்டாசுபோர்டோ சர்வதேச திரைப்பட விருது பரிந்துரை
1994 சனி விருதுகள் சிறந்த காணொளி வெளியீடு பரிந்துரை
2008 சிறந்த காணொளி வெளியீடு வெற்றி

வரவேற்பு

தொகு

பல்வேறு சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் இடம்பெற்றுள்ளது,

ஆண்டு வழங்கியவர் பட்டியல் இடம் மேற்.
2001 தி வில்லேஜ் வாய்சு இருபதாம் நூற்றாண்டின் சிறந்த 100 திரைப்படங்கள் 94 [19]
2002 OFCS கடந்த 100 ஆண்டிகளின் சிறந்த 100 அறிவிய புனைவுத் திரைப்படங்கள் 2 [20]
சைட் & சவுண்டு 2002 பட்டியல் 45 [21]
50 கிளாசிக்கர், பிலிம் இல்லை [22]
2003 இறப்பதற்கு முன் பார்க்கவேண்டிய 1001 திரைப்படங்கள் [23]
என்டர்டெயின்மெண்ட் வீக்லி தீவிர இரசிகர்கள் கொண்ட சிறந்த 50 திரைப்படங்கள் 9 [24]
2004 தி கார்டியன், அறிவியலாளர்கள் அனைத்து காலத்து சிறந்த 10 அறிவியல் புனைவுத் திரைப்படங்கள் 1 [25][26][27]
2005 டோட்டல் பிலிம் அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள் 47 [28]
டைம் இதழின் விமர்சகர்கள் அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள் இல்லை [29][30][31]
2008 நியூ சயின்டிசுடு அனைத்து காலத்து சிறந்த அறிவியல் புனைவுத் திரைப்படங்கள் 1 [32][33]
எம்பையர் அனைத்து காலத்து சிறந்த 500 திரைப்படங்கள் 20 [34]
2010 ஐஜிஎன் அனைத்து காலத்து சிறந்த 25 அறிவியல் புனைவுத் திரைப்படங்கள் 1 [35]
டோட்டல் பிலிம் அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள் இல்லை [36]
2012 சைட் & சவுண்டு' 2012 விமர்சகர்கள் - சிறந்த 250 திரைப்படங்கள் 69 [37]
சைட் & சவுண்டு' 2012 இயக்குநர்கள் - சிறந்த 100 திரைப்படங்கள் 67 [38]
2017 எம்பையர் அனைத்து காலத்து சிறந்த 100 திரைப்படங்கள் 13 [39]

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "பிளேடு ரன்னர்". British Board of Film Classification. மே 27, 1982. Archived from the original on மார்ச்சு 22, 2016. பார்க்கப்பட்ட நாள் சனவரி 8, 2016.
  2. "Blade Runner". AFI.com. American Film Institute. Archived from the original on நவம்பர் 6, 2015. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 3, 2015.
  3. "Blade Runner". BFI.org. பிரித்தானியத் திரைப்பட நிறுவனம். Archived from the original on திசம்பர் 6, 2015. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 3, 2015.
  4. "Blade Runner (1982)". பிரித்தானியத் திரைப்பட நிறுவனம். Archived from the original on பிப்ரவரி 15, 2017. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 26, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  5. Gray, Tim (சூன் 24, 2017). "'Blade Runner' Turns 35: Ridley Scott's Unloved Film That Became a Classic". Variety. Archived from the original on சூலை 5, 2017. பார்க்கப்பட்ட நாள் சூலை 31, 2019.
  6. "Blade Runner (1982)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on மே 15, 2020. பார்க்கப்பட்ட நாள் மே 15, 2020.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 "Dangerous Days: Making பிளேடு ரன்னர் [documentary]", Blade Runner: The Final Cut (DVD), வார்னர் புரோஸ்., 2007 [1982]
  8. "Ford: 'Blade Runner Was a Nightmare'", Moono.com, சூலை 5, 2007, archived from the original on பிப்ரவரி 24, 2012, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  9. Sammon, ப. 92–93.
  10. Vangelis, "Blade Runner – Scoring the music", NemoStudios.co.uk, archived from the original on அக்டோபர் 19, 2013, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011[self-published source]
  11. 11.0 11.1 Savage, Adam (சூலை 2007), "Blade Runner at 25: Why the Sci-Fi F/X Are Still Unsurpassed", பாப்புலர் மெக்கானிக்ஃசு, archived from the original on ஏப்ரல் 2, 2015 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  12. "Los Angeles 2019 (Blade Runner) – Cinema's Greatest Effects Shots Picked by Hollywood's Top VFX Specialists", Empire, அக்டோபர் 2, 2015, archived from the original on மே 18, 2015
  13. Dalton, Stephen (அக்டோபர் 26, 2016). "Blade Runner: anatomy of a classic" பரணிடப்பட்டது 2017-10-15 at the வந்தவழி இயந்திரம். பிரித்தானியத் திரைப்பட நிறுவனம்.
  14. "Blade Runner: Spinner Vehicles", DouglasTrumbull.com, Trumbull Ventures, 2010, archived from the original on சூலை 4, 2015, பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 21, 2015 {{citation}}: Check date values in: |access-date= (help)[self-published source]
  15. "பிளேடு ரன்னர்", The New York Times, archived from the original on மே 17, 2013, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  16. Gandhi Wins Art Direction and Cinematography: 1983 ஆசுக்கர்கள்
  17. 1983|Oscars.org
  18. E.T. The Extra-Terrestrial Wins Visual Effects: 1983 ஆசுக்கர்கள்
  19. ஹொபர்மன், ஜெ.; Village Voice Critics' Poll (2001), "100 Best Films of the 20th Century", The Village Voice, archived from the original on மார்ச்சு 31, 2014, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011 – via FilmSite.org
  20. "OFCS Top 100: Top 100 Sci-Fi Films", OFCS.org, Online Film Critics Society, சூன் 12, 2002, archived from the original on மார்ச்சு 13, 2012, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  21. "Sight & Sound Top Ten Poll 2002", Sight & Sound, பிரித்தானியத் திரைப்பட நிறுவனம், 2002, archived from the original on மே 15, 2012, பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 4, 2018 – via BFI.org.uk {{citation}}: Check date values in: |access-date= (help)
  22. சுரோடர், நிக்கோலசு (2002), 50 Klassiker, Film (in German), Gerstenberg, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8067-2509-4{{citation}}: CS1 maint: unrecognized language (link)
  23. 1001 Movies to See Before You Die, சூலை 22, 2002, archived from the original on மே 28, 2014, பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 4, 2011 – via 1001BeforeYouDie.com {{citation}}: Check date values in: |access-date= (help)
  24. "Top 50 Cult Movies", என்டர்டெயின்மெண்ட் வீக்லி, மே 23, 2003, archived from the original on மார்ச்சு 31, 2014, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  25. "Top 10 sci-fi films", The Guardian, archived from the original on சூலை 25, 2013, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  26. Jha, Alok (ஆகத்து 26, 2004), "Scientists vote பிளேடு ரன்னர் best sci-fi film of all time", The Guardian, archived from the original on மார்ச்சு 8, 2013, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  27. "How we did it", The Guardian, ஆகத்து 26, 2004, archived from the original on சூலை 26, 2013, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  28. "Film news: Who is the greatest?", டோட்டல் பிலிம், Future Publishing, அக்டோபர் 24, 2005, archived from the original on சனவரி 23, 2014, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  29. "The Complete List – All-Time 100 Movies", டைம், மே 23, 2005, archived from the original on ஆகத்து 22, 2011, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  30. "All-Time 100 Movies", Time, பிப்ரவரி 12, 2005, archived from the original on ஆகத்து 31, 2011, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011 {{citation}}: Check date values in: |date= (help)
  31. Corliss, Richard (பிப்ரவரி 12, 2005), "All-Time 100 Movies: பிளேடு ரன்னர் (1982)", Time, archived from the original on மார்ச்சு 5, 2011, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011 {{citation}}: Check date values in: |date= (help)
  32. George, Alison (நவம்பர் 12, 2008), "Sci-fi special: Your all-time favourite science fiction", New Scientist, archived from the original on ஏப்ரல் 6, 2014, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  33. George, Alison (அக்டோபர் 1, 2008), "New Scientist's favourite sci-fi film", New Scientist, archived from the original on ஏப்ரல் 6, 2014, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  34. "எம்பையர் அம்சங்கள்", எம்பையர், archived from the original on அக்டோபர் 14, 2013, பார்க்கப்பட்ட நாள் சூலை 26, 2011
  35. Pirrello, Phil; Collura, Scott; Schedeen, Jesse, "Top 25 Sci-Fi Movies of All Time", IGN.com, archived from the original on சூலை 1, 2019, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  36. "Film Features: 100 Greatest Movies of All Time", Total Film, Future Publishing, archived from the original on திசம்பர் 22, 2013, பார்க்கப்பட்ட நாள் சூலை 27, 2011
  37. "Sight & Sound 2012 critics top 250 films", Sight & Sound, பிரித்தானியத் திரைப்பட நிறுவனம், 2012, archived from the original on அக்டோபர் 26, 2013, பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2012 – via BFI.org {{citation}}: Check date values in: |access-date= (help)
  38. "Sight & Sound 2012 directors top 100 films", Sight & Sound, பிரித்தானியத் திரைப்பட நிறுவனம், 2012, archived from the original on ஏப்ரல் 18, 2014, பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2012 – via BFI.org {{citation}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  39. "The 100 Greatest Movies", Empire, மார்ச்சு 20, 2018, archived from the original on அக்டோபர் 13, 2018, பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 7, 2018

புத்தகங்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேடு_ரன்னர்&oldid=4161481" இலிருந்து மீள்விக்கப்பட்டது