பி. கே. வாசுதேவன் நாயர்

இந்திய அரசியல்வாதி

பி.கே.வி என பிரபலமாக அறியப்படும் படையாத் கேசவப்பிள்ளை வாசுதேவன் நாயர் (Padayatt Kesavapillai Vasudevan Nair) (2 மார்ச் 1926 - 12 ஜூலை 2005) கேரளாவின் ஒன்பதாவது முதல்வராகவும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தார். இவர் 1957, 1962, 1967, 2004 இல் நான்கு முறை மக்களவைக்கும் , 1977, 1980 இல் இரண்டு முறை கேரள சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அ. கு. ஆன்டனி முதல்வர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, 20 அக்டோபர் 1978இல் இவர் முதல்வர் ஆனார்.[7] எனினும் ஐக்கிய முன்னணியிலுள்ள மற்ற கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இவர் 7 அக்டோபர் 1979இல் பதவி விலகினார்.

பி. கே. வாசுதேவன் நாயர்
P. K. Vasudevan Nair
P.K. Vasudevan Nair.jpg
7வது கேரள முதலமைச்சர்
பதவியில்
29 அக்டோபர் 1978 – 7 அக்டோபர் 1979
ஆளுநர் ஜோதி வெங்கடாசலம்
முன்னவர் அ. கு. ஆன்டனி
பின்வந்தவர் சி.எச் முகமது கோயா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
2004[1] – 12 ஜூலை 2005
முன்னவர் வி. எஸ். சிவக்குமார்
பின்வந்தவர் பானியன் இரவீந்திரன்
தொகுதி திருவனந்தபுரம்
பதவியில்
1967[2] – 1971
முன்னவர் உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் எம். எம். ஜோசப்
தொகுதி பீர்மேடு
பதவியில்
1962[3] – 1967
முன்னவர் பி. டி. புன்னூசு
பின்வந்தவர் சுசீலா கோபாலன்
தொகுதி அம்பழப்புழா
பதவியில்
1957[4] – 1962
முன்னவர் சாலக்குழி பௌலோசு மாதென்
பின்வந்தவர் இரவீந்திர வர்மா
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1977[5] – 1982[6]
முன்னவர் டி. வி. தாமஸ்
பின்வந்தவர் கே. பி. இராமச்சந்திரன் நாயர்
தொகுதி ஆலப்புழா
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கேரள மாநில அமைப்பின் செயலாளர்
பதவியில்
1984–1998
முன்னவர் எஸ். குமரன்
பின்வந்தவர் வெலியம் பார்கவன்
தனிநபர் தகவல்
பிறப்பு படையாத் கேசவப்பிள்ளை வாசுதேவன் நாயர்
மார்ச்சு 2, 1926(1926-03-02)
கிடங்கனூர், கோட்டயம், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு 12 சூலை 2005(2005-07-12) (அகவை 79)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கே. பி. இலட்சுமி குட்டியம்மா
பிள்ளைகள் 3 மகன்கள், 2 மகள்கள்
படித்த கல்வி நிறுவனங்கள் அரசு சட்டக் கல்லூரி, திருவனந்தபுரம்

பதவிதொகு

இவர் திருவிதாங்கூர் மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு, அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு ஆகியவற்றின் நிறுவனர்-தலைவராக இருந்தார். 1964இல் பொதுவுடைமை இயக்கத்தில் பிளவு ஏற்பட்ட பிறகு இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியுடன் இருந்தார். மேலும், 1982 இல் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறப்புதொகு

பி. கே. வாசுதேவன் நாயர், நீண்டகால இதய நோயாலும் கடுமையான நீரிழிவு நோயாலும் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் 12 ஜூலை 2005 அன்று பிற்பகல் 3.35 மணியளவில் புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில்இறந்தார்.[7]

மேற்கோள்கள்தொகு

  1. http://loksabhaph.nic.in/Members/statedetailar.aspx?state_name=Kerala&lsno=14 Members 14th of Loksabha 2004-09
  2. http://loksabhaph.nic.in/Members/statedetailar.aspx?state_name=Kerala&lsno=4 Members 4th of Loksabha 1967-71
  3. http://loksabhaph.nic.in/Members/statedetailar.aspx?state_name=Kerala&lsno=3 Members 3rd of Loksabha 1962-67
  4. http://loksabhaph.nic.in/Members/statedetailar.aspx?state_name=Kerala&lsno=2 Members 2nd of Loksabha 1957-62
  5. http://www.niyamasabha.org/codes/mem_1_5.htm Members of 5th KLA 1977-80
  6. http://www.niyamasabha.org/codes/mem_1_6.htm Members of 6th KLA 1980-82
  7. 7.0 7.1 "Veteran CPI leader 'PKV' passes on". outlookindia.com/. 2020-09-08 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் படிக்கதொகு