பெண்ணாடம்
பெண்ணாடம் (ஆங்கிலம்:Pennadam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் அருகில் தென் திசை நோக்கி 9 கிமீ தொலைவில் உள்ள அரியலூர் மாவட்டம் எல்லையான ஆலத்தியூர் கிராமத்தில் இந்தியாவில் மாபெரும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் ஒன்றான ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. [4]அதன் தொடர்ச்சியான ரயில்வே வழித்தடத்தில் ஈச்சங்காடு ரயில் நிலையம் தொடர்ந்து பெண்ணாடம் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.
பெண்ணாடம் | |
ஆள்கூறு | 11°24′N 79°14′E / 11.4°N 79.23°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
வட்டம் | திட்டக்குடி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
19,494 (2011[update]) • 1,541/km2 (3,991/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
12.65 சதுர கிலோமீட்டர்கள் (4.88 sq mi) • 54 மீட்டர்கள் (177 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/pennadam |
அமைவிடம்
தொகுவிருத்தாசலம் – அரியலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெண்ணாடம் பேரூராட்சிக்கு வடகிழக்கே விருத்தாச்சலம் 18 கிமீ; மேற்கில் திட்டக்குடி 13 கிமீ; தொழுதூர் 26 கிமீ; தென்மேற்கே பெரம்பலூர் 51 கிமீ; வடக்கே உளுந்தூர்பேட்டை 41 கிமீ; தெற்கே அரியலூர் 40 கிமீ; திருச்சி 100 கிமீ; மற்றும் தஞ்சாவூர் 85 கிமீ; தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் மாவட்டத் தலைமை நகரமான கடலூர் 80 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு12.65 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 164 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,708 வீடுகளும், 19,494 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.22% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1005 பெண்கள் வீதம் உள்ளனர். [6]
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 11°24′N 79°14′E / 11.4°N 79.23°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 54 மீட்டர் (177 அடி) உயரத்தில் இருக்கின்றது
கோயில்கள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ https://www.tradeindia.com/Seller-10341843-The-Ramco-Cements-Limited/
- ↑ பெண்ணாடம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pennadam Population Census 2011
- ↑ "Pennadam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்
- ↑ "சுடர்கொழுந்தீசர் கோயில்". Archived from the original on 2018-04-02. பார்க்கப்பட்ட நாள் 2018-03-18.