மல்தோவா

(மால்டோவா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மல்தோவா குடியரசு (Republica Moldova) கிழக்கு ஐரோப்பாவில் நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும். இதன் மேற்கே ருமேனியாவும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உக்ரேனும் அமைந்துள்ளன. 1812இல் இது உருசியப்ப் பேரரசுடன் இணைக்கப்பட்டு, உருசியாவின் வீழ்ச்சியின் பின்னர் 1918இல் ருமேனியாவுடன் இணைக்கப்பட்டது. 1940 இல் சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றின் பின்னர் இது சோவியத் ஒன்றியத்தின் கீழ் மல்தோவிய சோவியத் சோசலிசக் குடியரசு ஆகியது. பனிப்போர் முடிவில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது ஆகஸ்ட் 27, 1991 இல் இந்நாடு முழுமையாக விடுதலை பெற்றது.

மல்தோவா குடியரசு
Republica Moldova
கொடி of மல்தோவா
கொடி
சின்னம் of மல்தோவா
சின்னம்
குறிக்கோள்: Limba noastră-i o comoară  
எமது மொழி ஒரு பொக்கிஷம்
நாட்டுப்பண்: Limba noastră  (ருமேனிய மொழி:)
எமது மொழி
தலைநகரம்சிஷினோ
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)மல்தோவிய மொழி1
(ருமேனியன்)
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
• குடியரசுத் தலைவர்
மையா சண்டு
• தலைமை அமைச்சர்
வசிலி டார்லேவ்
சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை
• தேதி
ஆகஸ்ட் 27, 1991
• முடிவு
டிசம்பர் 25, 1991
பரப்பு
• மொத்தம்
33,843 km2 (13,067 sq mi) (139வது)
• நீர் (%)
1.4
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
4,320,490 (121வது3)
• 2004 கணக்கெடுப்பு
3,383,3322
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$9,367 மில்லியன் (141வது)
• தலைவிகிதம்
$2,962 (135வது)
ஜினி (2003)33.2
மத்திமம்
மமேசு (2006)0.694
மத்திமம் · 114வது
நாணயம்மல்டோவிய லியு (MDL)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கிஐநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கிஐகோநே)
அழைப்புக்குறி373
ஐ.எசு.ஓ 3166 குறியீடுMD
இணையக் குறி.md
  1. மல்தோவிய மொழி பொதுவாக ருமேனிய மொழியின் மாற்றுப் பெயராகும். (கோகோஸ் மொழி மற்றும் ரஷ்ய மொழி ஆகியன கோகோசிய தன்னாட்சிப் பகுதியின் ஆட்சி மொழிகளாகும்).
  2. 2004 மக்கள் தொகைக் கணக்கெடுப்புNational Bureau of Statistics.
  3. 2005 ஐநா தரவுப்படி

மல்தோவா ஒரு நாடாளுமன்ற சனநாயக நாடாகும். நாட்டின் தலைவராக சனாதிபதியும் அரசுத் தலைவராக தலைமை அமைச்சரும் உள்ளனர். விடுதலை பெற்ற நாளிலிருந்து மல்தோவா ஒரு நடுநிலை நாடாக விளங்கி வருகிறது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்தோவா&oldid=3480280" இலிருந்து மீள்விக்கப்பட்டது