மேல் மாகாணம், இலங்கை

இலங்கையின் மாகாணம்
(மேல்மாகாணசபை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மேல் மாகாணம் அல்லது மேற்கு மாகாணம் (Western Province, சிங்களம்: බස්නාහිර පළාත) இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்று. இலங்கையில் மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நிருவாக அலகுகளாக இருந்து வந்த போதும், 1987 இல் இலங்கை யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போதே இவற்றுக்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைத்தது. இதன் மூலம் மாகாணசபைகள் அமைக்கப்பட்டன.[2][3] மேல் மாகாணம் இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் ஆகும். இம்மாகாணத்திலேயே சட்டபூர்வத் தலைநகர் சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, மற்றும் நிருவாக, வணிகத் தலைநகர் கொழும்பும் அமைந்துள்ளன.

மேல் மாகாணம்
Western Province
බස්නාහිර පළාත
கொழும்பு
கொழும்பு
மேல் மாகாணம்-இன் கொடி
கொடி
இலங்கையில் அமைவிடம்
இலங்கையில் அமைவிடம்
நாடுஇலங்கை
அமைப்பு1 அக்டோபர் 1833
மாகாணசபை14 நவம்பர் 1987
தலைநகர்கொழும்பு
பெரிய நகரம்கொழும்பு
மாவட்டங்கள்
அரசு
 • வகைமாகாண சபை
 • நிர்வாகம்மேல் மாகாணசபை
 • ஆளுநர்ஹேமகுமார நாணயக்காரா
 • முதலமைச்சர்பிரசன்னா ரணதுங்க
பரப்பளவு
 • மொத்தம்3,684 km2 (1,422 sq mi)
 • நிலம்3,593 km2 (1,387 sq mi)
 • பரப்பளவு தரவரிசை9வது (5.61%)
மக்கள்தொகை
 (2012 கணக்கெடுப்பு)
 • மொத்தம்58,21,710
 • தரவரிசை1வது (28.73%)
 • அடர்த்தி1,600/km2 (4,100/sq mi)
இனம்
(2012 கணக்கெடுப்பு)
 • சிங்களவர்4,905,425 (84.26%)
 • இலங்கைச் சோனகர்450,505 (7.74%)
 • இலங்கைத் தமிழர்335,751 (5.77%)
 • மலையகத் தமிழர்61,826 (1.06%)
 • ஏனையோர்68,203 (1.17%)
சமயம்
(2012 கணக்கெடுப்பு)[1]
 • பௌத்தர்4,288,797 (73.67%)
 • கிறித்தவர்752,993 (12.93%)
 • முசுலிம்500,992 (8.61%)
 • இந்து274,336 (4.71%)
 • ஏனையோர்4,592 (0.08%)
நேர வலயம்ஒசநே+05:30 (இலங்கை)
அஞ்சல் குறியீடுகள்
00000-19999
தொ.பே. குறியீடுகள்011, 031, 033, 034, 036, 038
ஐஎசுஓ 3166 குறியீடுLK-1
வாகனப் பதிவுWP
அதிகாரபூர்வ மொழிகள்சிங்களம், தமிழ்
இணையதளம்மேல் மாகாண சபை

இலங்கைத்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இது, கொழும்பு, கம்பகா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. வடக்கே வடமேல் மாகாணத்தையும், தெற்கே தென் மாகாணத்தையும், கிழக்கில் சப்ரகமுவா மாகாணத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

முக்கிய நகரங்கள்

தொகு
நகரம் மாவட்டம் மக்கள்தொகை
(2001
கணக்கெடுப்பு)
[4]
கொழும்பு கொழும்பு 647,100
தெகிவளை-கல்கிசை கொழும்பு 210,546
மொறட்டுவை கொழும்பு 177,563
சிறீ ஜெயவர்தனபுர கோட்டை கொழும்பு 116,366
நீர்கொழும்பு கம்பகா 127,754
கம்பகா கம்பகா 9,889
களுத்துறை களுத்துறை 37,451

மேற்கோள்கள்

தொகு
  1. "A2 : Population by ethnic group according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2017-04-28. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. "Provinces of Sri Lanka". Statoids.
  3. "Provincial Councils". Government of Sri Lanka. Archived from the original on 2009-07-07. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
  4. "Population of principal towns by sex, census years" (PDF). Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka.



இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்  
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_மாகாணம்,_இலங்கை&oldid=3625869" இலிருந்து மீள்விக்கப்பட்டது