உருசியக் குடியரசுகள்
உருசியாவின் அரசமைப்புச் சட்டத்தின்படி, உருசியக் கூட்டமைப்பு 85 கூட்டாட்சி அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 22 குடியரசுகள் ஆகும். பெரும்பாலான குடியரசுகள் உருசியர்களல்லாத இனக்குழுக்களைக் கொண்டுள்ளன. ஆனாலும், பல குடியரசுகளில் உருசியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். குடியரசு ஒன்றின் சுதேசிய இனத்தவரின் பெயரைக்கொண்ட ஒரு குடியரசு "பெயரளவிலான தேசியம்" ஆகக் கருதப்படுகிறது.
உருசியக் குடியரசுகள் Republics of Russia | ||||
---|---|---|---|---|
| ||||
வகை | மாநிலம் | |||
அமைவிடம் | உருசியா | |||
எண்ணிக்கை | 22 | |||
மக்கள்தொகை | 206,195 (அல்த்தாய்) – 4,072,102 (பாஷ்கொர்டொஸ்தான்) | |||
பரப்புகள் | 3,000 km2 (1,200 sq mi) (இங்குசேத்தியா) – 3,287,590 km2 (1,269,350 sq mi) (சகா) | |||
அரசு | குடியரசு அரசாங்கம் | |||
உட்பிரிவுகள் | நிருவாகம்: மாவட்டங்கள், ஊர்களும் நகரங்களும், புறநகர்கள், செல்சோவியத்கள்; மாநகரசபைகள்: வட்டாரங்கள், மாநகர மாவட்டங்கள், நகரக் குடிருப்புகள், கிராமக் குடியிருப்புகள் |
அரசமைப்பு நிலை
தொகுஏனைய உருசிய நடுவண் அமைப்புகளைப் போலல்லாமல், உருசியக் குடியரசுகளுக்கு தமது ஆட்சி மொழியைத் தாமே தேர்ந்தெடுக்கவும், தமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.[1] ஏனைய நடுவண் அமைப்புகளான பிரதேசங்கள் (கிராய்கள்), மாகாணங்கள் (ஓப்லாஸ்துகள்) என்பவற்றுக்கு இந்த உரிமைகள் வழங்கப்படவில்லை. பல உருசியக் குடியரசுகளின் தலைவர் பொதுவாக அரசுத்தலைவர் (சனாதிபதி) என முன்னர் அழைக்கப்பட்டனர், ஆனால் 2010 இல் நடுவண் அரசமைப்பில் செய்யப்பட்ட மாற்றம் ஒன்றில், அரசுத்தலைவர் என்ற பதவிப் பெயர் உருசியத் தலைவருக்கு மட்டுமே உரியதாக்கப்பட்டது.[2]
உருசியாவின் குடியரசுகளுக்கும், பிரதேசங்களுக்கும் மேலாக அமைக்கப்பட்ட எட்டு பெரும் "நடுவண் மாவட்டங்கள்" உருசிய அரசுத்தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களால் நிருவகிக்கப்படுகின்றன. இவர்கள் குடியரசுகளின் செயற்பாடுகளை நேரடியாகக் கண்காணிப்பார்கள். அத்துடன், குடியரசுகளின் பிராந்திய நாடாளுமன்றங்களின் அதிகாரங்களும் குறைக்கப்பட்டு, அவற்றின் தலைவர்களை உருசிய அரசுத்தலைவரே நியமிக்கவும் அரசமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது.[3]
கிரிமியாவின் நிலை
தொகு2014 மார்ச் 18 இல், உடன்படிக்கை ஒன்றின் பேரில் கிரிமியா குடியரசும், செவஸ்தப்போலும் உருசியக் கூட்டமைப்பில் இணைந்தன.[4][5] பெரும்பாலான உலக நாடுகளும், உக்ரைன் அரசும் கிரிமியாவை உருசியா தன்னிடன் இணைத்துக் கொண்டதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவை கிரிமியாவை உக்ரைனின் ஒரு பகுதியாகவே பார்க்கின்றன.[6][7]
முன்னாள் தன்னாட்சிக் குடியரசுகளும் தன்னாட்சி மாகாணங்களும்
தொகுமுன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உருசிய சோவியத் நடுவண் சோசலிசக் குடியரசு மூன்று வகையான "சுயாட்சி" நிருவாக அமைப்புகளைக் கொண்டிருந்தது. அவை: தன்னாட்சிக் குடியரசுகள், தன்னாட்சி மாகாணங்கள் (ஓப்லஸ்துகள்), தன்னாட்சி ஓக்குருகுகள் என்பனவையாகும்.
சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஒவ்வொரு தன்னாட்சிக் குடியரசும் அதே பெயரில் குடியரசானது. (செச்சினிய-இங்கூசு சோவியத் தன்னாட்சி சோசலிசக் குடியரசு செச்சினியா, இங்குசேத்தியா என இரண்டு குடியரசுகளாயின.) பல "தன்னாட்சி மாகாணங்கள்" (அடிகேயா, அல்த்தாய், காராசாய்-செர்கெஸ்ஸியா, அக்காசியா) ஆகியனவும் குடியரசுகள் ஆயின.
மக்கள்தொகையியல்
தொகுகுடியரசு | கண்டம் | பெயரளவு தேசியம்1 | பெயரளவு தேசியம்: வீதம் (2010) | பெயரளவு தேசியம்: மொழிக் குழு | பெயரளவு தேசியம்: முக்கிய சமயம் | உருசிய இனம் / மொத்த மக்கள்தொகை (2010) | மக்கள்தொகை (2010)4 |
---|---|---|---|---|---|---|---|
அடிகேயா | ஐரோப்பா | அதிகே | 25.2% | காக்கசியம் | பழமைவாதக் கிறித்தவம், சுன்னி இசுலாம் | 63.6% | 440,388 |
அல்த்தாய் | ஆசியா | அல்த்தாய் | 34.5% | துருக்கியம் | புர்க்கானியம், திபெத்திய பௌத்தம், சாமனியம், பழமைவாதக் கிறித்தவம் | 56.6% | 206,195 |
பாஷ்கொர்டொஸ்தான் | ஐரோப்பா | பாசுக்கீர் | 29.5% | துருக்கியம் | சுன்னி இசுலாம் | 36.1% | 4,072,102 |
புரியாத்தியா | ஆசியா | புரியாத்துகள் | 30.0% | மங்கோலியம் | திபெத்திய பௌத்தம், சாமனியம், ஒங்கோலிசு எனப்படும் சிறிய உருசிய மரபுவழித் திருச்சபை சிறுபான்மையினம் | 66.1% | 972,658 |
செச்சினியா | ஐரோப்பா | செச்சினியர்2 | 95.3% | காக்கசியம் | சுன்னி இசுலாம், சூபித்துவம் | 1.9% | 1,103,686 |
சுவாசியா | ஐரோப்பா | சுவாசியர் | 67.7% | துருக்கியம் | உருசிய மரபுவழித் திருச்சபை, இசுலாம், சாமனியம் | 26.9% | 1,251,599 |
கிரிமியா | ஐரோப்பா | கிரிமியத் தத்தார் | 10.6%7 | துருக்கியம் | பழமைவாதக் கிறித்தவம், இசுலாம் | 67.9%7 | 2,284,769 |
தாகெஸ்தான் | ஐரோப்பா | 10 சுதேசியர்3 | 88.0% | காக்காசியம், துருக்கியம்5 | சுன்னி இசுலாம், யூதம் (மலையக யூதர்களும் யூத தாத்துகளும் சேர்த்து) | 3.6% | 2,576,531 |
இங்குசேத்தியா | ஐரோப்பா | இங்கூசு மக்கள்2 | 94.1% | காக்கசியம் | சுன்னி இசுலாம், சூபித்துவம் | 0.8% | 467,294 |
கபர்தினோ-பல்கரீயா | ஐரோப்பா | கபர்து, பால்க்கர் | 69.9% (கபர்து மக்கள் 57.2%, பல்க்கர் மக்கள் 12.7%) | காக்கசியம், துருக்கியம் | சுன்னி இசுலாம், உருசிய மரபுவழித் திருச்சபை6 | 22.5% | 859,802 |
கால்மீக்கியா | ஐரோப்பா | கால்மிக் மக்கள் | 57.4% | மங்கோலியம் | திபெத்திய பௌத்தம் | 30.2% | 289,464 |
காராசாய்-செர்கெஸ்ஸியா | ஐரோப்பா | கரச்சாய், செர்க்கெசு | 52.9% (கரச்சாய் 41.0%, செர்க்கெசு 11.9%) | துருக்கியம், காக்கசியம் | சுன்னி இசுலாம் | 31.6% | 478,517 |
கரேலியா | ஐரோப்பா | கரேலியர் | 7.4% | யூரலியம் | உருசிய மரபுவழித் திருச்சபை | 82.2% | 643,548 |
அக்காசியா | ஆசியா | காக்கசு | 12.1% | துருக்கியம் | சாமனியம், உருசிய மரபுவழித் திருச்சபை | 81.7% | 532,403 |
கோமி | ஐரோப்பா | கோமி மக்கள் | 23.7% | யூரலியம் | உருசிய மரபுவழித் திருச்சபை, சாமனியம் | 65.1% | 901,189 |
மாரீ எல் | ஐரோப்பா | மாரி மக்கள் | 43.9% | யூரலியம் | உருசிய மரபுவழித் திருச்சபை, சுதேசிய புறச்சமயம், மரியா வழிபாடு | 47.4% | 696,357 |
மொர்தோவியா | ஐரோப்பா | மோர்துவின் | 40.0% | யூரலியம் | உருசிய மரபுவழித் திருச்சபை | 53.4% | 834,819 |
வடக்கு ஒசேத்திய-அலனீயா | ஐரோப்பா | ஒசேத்தியர் | 65.1% | ஈரானியர் | கிழக்கு மரபுவழி திருச்சபை, சுன்னி இசுலாம் சிறுபான்மை | 20.8% | 712,877 |
சகா குடியரசு | ஆசியா | யாக்குத்துகள் | 49.9% | துருக்கியம் | உருசிய மரபுவழித் திருச்சபை, சாமனியம் | 37.8% | 958,291 |
தர்தாரிஸ்தான் | ஐரோப்பா | தத்தார்கள் | 53.2% | துருக்கியம் | சுன்னி இசுலாம், உருசிய மரபுவழித் திருச்சபை | 39.7% | 3,786,358 |
துவா | ஆசியா | துவான்கள் | 82.0% | துருக்கியம் | திபெத்திய பௌத்தம், சாமனியம், சிறிய உருசிய மரபுவழித் திருச்சபை சிறுபான்மை | 16.3% | 307,930 |
உத்மூர்த்தியா | ஐரோப்பா | உத்மூர்த்துகள் | 28.0% | யூரலியம் | உருசிய மரபுவழித் திருச்சபை | 62.2% | 1,522,761 |
குறிப்புகள்:
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Russian Constitution Chapter 3". பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2016.
- ↑ "Regional presidents to choose new job titles". RT International. பார்க்கப்பட்ட நாள் 7 May 2016.
- ↑ Remington, Thomas F. (2010) Politics in Russia, 6th edition. Boston: Pearson Education. pp. 82
- ↑ Kremlin.ru. Договор между Российской Федерацией и Республикой Крым о принятии в Российскую Федерацию Республики Крым и образовании в составе Российской Федерации новых субъектов (Treaty Between the Russian Federation and the Republic of Crimea on Ascension to the Russian Federation of the Republic of Crimea and on Establishment of New Subjects Within the Russian Federation) (உருசிய மொழியில்)
- ↑ Steve Gutterman and Pavel Polityuk (18 March 2014). "Putin signs Crimea treaty as Ukraine serviceman dies in attack". Reuters. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 May 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ U.N. General Assembly declares Crimea secession vote invalid பரணிடப்பட்டது 2014-03-30 at the வந்தவழி இயந்திரம். Reuters. 27 March 2014.
- ↑ "PACE: News". Assembly.coe.int. Archived from the original on 2015-02-19. பார்க்கப்பட்ட நாள் 2014-05-18.