விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு54

Translate wiki' இல் சூர்யாவுக்குப் பரிசு

தொகு

சூரியபிரகாசு Translatewiki.net (மீடியாவிக்கி மென்பொருளை பன்மொழிகளில் பெயர்க்கும் தளம்) நடத்திய மொழிபெயர்ப்புத் தொடரில் பங்கேற்று 500 க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளை செய்துள்ளார். இதன் மூலம் விக்கியா தளத்தால் அளிக்கப்படும் 1000 யூரோ பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் 59 விக்கியர்களுள் ஒருவராகிரார். இவர்கள் ஒவ்வொருவரும் 15.25 யூரோ வென்றுள்ளார். தமிழ் விக்கியிலிருந்து ஒருவர் இதனை வென்றுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் சூர்யா. வளர்க உங்கள் பணி--சோடாபாட்டில்உரையாடுக 17:59, 2 மே 2011 (UTC)[பதிலளி]

நன்றி சோடாபாட்டில், புன்னியாமீன். நான் இணையத்திற்கு அறிமுகம் ஆனதிலிருந்தே எந்த ஒரு தகவல்தரு தளம் (resource contain site) ஆனாலும் ஏன் இது தமிழில் இல்லை? என்றே எண்ணுவேன். நானும் பல தளங்களுக்கு வேண்டுகோள் கூட விடுப்பேன். (அப்போதெல்லாம் எனக்கு த.வி. பற்றி தெரிந்திருக்கவில்லை) பின்னர் நானாக முயன்று இணையத்தில் தமிழில் தட்டச்சிடும் முறைகளை அறிந்து கூகுள் நிறுவனத்தின் யூடியூப், கூகுள் நால் போன்ற திட்டங்களைத் தன்னார்வத்துடன் மொழிபெயர்த்ததுண்டு. (சான்று: http://google.com/transconsole/giyl/chooseProject) இப்போது விக்கி அறிமுகத்தினால் எனக்கு translatewiki.net போன்றதொரு நன்னடுவம் கிடைத்துள்ளது. அதற்கு நான் தமிழ் விக்கிப்பீடியாவுக்கே நன்றி சொல்ல வேண்டும். திறமூலத் திட்டங்களின் பங்களிப்பால் மரியாதையும் உண்டு money-யும் உண்டு. --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 16:39, 4 மே 2011 (UTC)[பதிலளி]

பாராட்டுகள், நன்றி சூர்ய பிரகாசு!! உங்கள் 15.25 யூரோவில் பங்கு கேட்கலாம் என்று நானும் வந்தேன் :) ஒரு 400 ஆவது மொழிபெயர்த்தேன் :) --செல்வா 21:06, 2 மே 2011 (UTC)[பதிலளி]


பாராட்டுக்கள் மிக்க. தொடர்க--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 22:48, 2 மே 2011 (UTC)[பதிலளி]
மிக்க உவகை, பாராட்டுக்கள் சூர்ய பிரகாசு--செந்தி//உரையாடுக// 22:56, 2 மே 2011 (UTC)[பதிலளி]

பாராட்டுக்கள் சூர்யப்பிரகாசு.--கலை 23:28, 2 மே 2011 (UTC)[பதிலளி]

சூரிய பிரகாசு தொடர்ந்து பல பாராட்டுக்களும் பரிசும் பெற்றிட என் இனிய வாழ்த்துக்கள் ---தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:06, 3 மே 2011 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் சூரிய பிரகாசு !!--மணியன் 03:41, 3 மே 2011 (UTC)[பதிலளி]

மிக்க மகிழ்ச்சி சூர்யப்பிரகாசு, வாழ்த்துகள் :) -- கி. கார்த்திகேயன் 04:04, 3 மே 2011 (UTC)[பதிலளி]

  • விக்கியின் வளர்ச்சியில் சிறப்பாய்ப் பங்கேற்று, பரிசும் பெற்ற சூர்ய பிரகாசை நெஞ்சார வாழ்த்துகின்றேன்!--பவுல்-Paul 04:24, 3 மே 2011 (UTC)[பதிலளி]
பாராட்டுக்கள் சூர்யா. திற-மூல/திற-தரவு சார் பங்களிப்புகள் மென்மேலும் கூட வாழ்த்துக்கள். ஸ்ரீகாந்த் 18:04, 3 மே 2011 (UTC)[பதிலளி]
பாராட்டுக்கள் சூரியப்பிரகாசு. இதுபோல் மேலும் பல பரிசில்கள் பெற்றுச் சிறப்படைய வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 18:51, 3 மே 2011 (UTC)[பதிலளி]
பாராட்டுகள் சூரியப்பிரகாசு.--Kanags \உரையாடுக 21:01, 3 மே 2011 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் சூரியா. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும். இப்போதைக்குத் தேர்வுகளில் கவனம் செலுத்துங்கள். -- சுந்தர் \பேச்சு 02:27, 4 மே 2011 (UTC)[பதிலளி]


அனைவருக்கும் நன்றி... --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 16:41, 4 மே 2011 (UTC)[பதிலளி]

ஒரு வேண்டுகோள் (குறுங்கட்டுரைகள் பற்றியது)

தொகு

ஒரு "கட்டுரை"யின் சராசரி பைட் அளவு என்பது விக்கிப்பீடியாவின் தர அளவீடுகளில் ஒன்றாகப் பயன்படுகின்றது (http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm இல் mean bytes என்பது). தமிழ் விக்கிப்பீடியா உலக மொழிகளின் வரிசையில் இத் தர அளவீட்டில் 10 ஆவது இடத்தில் உள்ளது (கடைசியாகக் கிடைக்கும் ஏப்பிரல் 2010 இன் தரவுப் படி). இதனைத் தக்க வைத்துக்கொள்வதோ உயர்த்துவதோ நாம் கருத்தில் இருத்திக்கொள்ள வேண்டிய ஒன்று. தற்பொழுது இந்த பைட் அளவு த.வி-யில் 3320 பைட்டு. குறுங்கட்டுரைகளை உருவாக்கும் பொழுது, ஏறத்தாழ விலக்கு இல்லாமல், அருள்கூர்ந்து குறைந்தது 3500 பைட்டுகளாவது இருக்குமாறு உருவாக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் (இது மிகவும் குறைவெல்லையான ஓர் எதிர்பார்ப்புதான்.. ஒரு கட்டுரை 5000-8000 பைட்டுகளாவது இருந்தால்தான் சற்றேனும் கூடுதலான பயன் தரும் ஒன்றாக இருக்கும்).--செல்வா 21:25, 2 மே 2011 (UTC)[பதிலளி]

தரவரிசையில் நம் இடத்தைத் தக்க வைக்கவும் முன்னேறவும் வேண்டும். அதைக் காட்டிலும் செல்வா குறிப்பிட்டது போல ஒரு 5000 பைட்டுகளாவது இருக்கும் கட்டுரைகள் தாம் தலைப்பைப் பற்றி ஒரு அறிமுகத்தையாவது தர முடியும். மற்ற குறுங்கட்டுரைகளைக் குறைந்தது அந்த அளவுக்குத் தகவல்களைச் சேர்த்து வளர்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 02:25, 4 மே 2011 (UTC)[பதிலளி]

என் கணினியில் மட்டுமா...இல்லை...!

தொகு
 
சிகப்புக் குறியிட்ட முகவரி

எனது கணினியில் http://tawp.in/r/1yh என்கிற இணைய முகவரி ஒன்று கட்டுரைத் தலைப்புக்கு வலது பகுதியில் இடம் பெறுகிறதே...(படத்தில் சிகப்புக் குறியிட்டுக் காண்பித்துள்ளேன்) இது என் கணினியில் மட்டுமா...? இல்லை... அனைவரது கணினியிலும் இருக்கிறதா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:51, 3 மே 2011 (UTC)[பதிலளி]


அது வழு இல்லை,புதிதாக சேர்க்கப்பட்ட அம்சம். பார்க்க - http://tawp.in/r/27vy பக்கத்தில் குறுந்தொடுப்பு பகுதி.நேற்று தான் ஓர் வாசகர் அதன் எழுத்துரு அளவு சிறிதாக இருக்கிறது என்றார், சற்று அளவை கூட்டினேன். இப்பொழுது ஒர் விளக்கமும் வரும் போல் செய்துள்ளேன். ஸ்ரீகாந்த் 17:39, 3 மே 2011 (UTC)[பதிலளி]

தொடுப்பில் உள்ள hover விளக்கம் போதுமானதாக இருக்கும். தொடுப்புக்கு முன்னும் குறிப்பு இடுவதால் பெரிய தலைப்புகள் உள்ள கட்டுரைகள் இரண்டாம் வரிக்கு இறங்குகின்றன. இதனுடன் சேர்ந்து இந்தக் குறிப்பும் வருவது தலைப்பைக் குழப்பும். எடுத்துக்காட்டு: புலிகள் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை. எனவே, இந்தக் குறிப்பை நீக்குமாறு வேண்டுகிறேன். நன்றி--இரவி 02:06, 4 மே 2011 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை ஐயம்

தொகு

நான் சமீபத்தில் இந்தியா அரசின் வலைதளத்தைப் [1] பார்க்கும் போது அதன் நிபந்தனைகளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா டெவலப்மன்ட் கேட்வே வலைவாசல் தகவல்கள், விவரங்கள் ஆகியன, நம்பகமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இயங்குகிறது. இந்ததகவல்கள் பெரும்பாலும் ஆதாரங்களின் அடிப்படையில் திரட்டப்பட்டவை. அதே சமயத்தில் கேட்வே - யின் உள்ள எல்லா விதமான புள்ளி விபரங்கள், தகவல்கள் போன்றவை பல்வேறு வலையதலங்கள், தகவல் திரட்டுகள் போன்றவற்றிலிருந்து எடுத்து தொகுக்கப்பட்டு விவரங்களாகத் தரப்பட்டுள்ளன. இவற்றில் எதையும் இந்த இணையக வலைவாசல், உருவாக்கவோ உரிமை கோரவோ இல்லை. இவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பதால் அதிலிருந்து தகவல் எடுப்பது பதிப்புரிமை மீறும் செயலாகுமா? :வின்சு 15:10, 6 மே 2011 (UTC)[பதிலளி]

ஆகாது. தகவல்களும் தரவுகளும் பதிப்புரிமைக்கு உட்பட்டவை அல்ல. ஆனால் அவற்றைத் தரும் விதம். எ.கா. அவர்கள் இட்டுள்ள வாக்கியங்களை வரிக்கு வரி படியெடுத்தல் கூடாது. தகவல்களைப் பயனபடுத்தலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 15:15, 6 மே 2011 (UTC)[பதிலளி]
வின்சுசுட்டிக்காட்டியுள்ளத் தளம் பல அரசுத்தகவல்களை தமிழில் தருகிறதே..இந்தளவில் தமிழ்நாடு அரசுத்துறைகள் கூட தருவதில்லையே :( --மணியன் 17:05, 6 மே 2011 (UTC)[பதிலளி]

ஐபி தொகுப்புகள்

தொகு

தள அறிவிப்புத் திட்டம் வெற்றி பெற்றுளது. ஐபி தொகுப்புகளின் எண்ணிக்கை நான்கைந்து மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு நாளொன்றுக்கு பத்துக்கும் குறைவான ஐபி தொகுப்புகளே நடைபெறும். கடந்த இரு நாட்களாக சுமார் 40-50 தொகுப்புகள் நடைபெறுகின்றன. புதிய கணக்குகள் தொகுப்பதும் சற்று கூடியுள்ளது. திட்டத்தை செயல்படுத்திய ரவி, மணியன், ஸ்ரீகாந்த், சுந்தர், தேனியார், சன்ஞீவி போன்றோருக்கு என் வாழ்த்துகள்.

வரும் நாட்களில் ஐபி தொகுப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று எண்ணுகிறேன். அவர்கள் என்ன செய்கிறார்கள், சரியான விதத்தில் தொகுக்கிறார்களா என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் புகுபதிகை செய்த பயனர்களை மறை என்ற தெரிவைக் கொண்டு ஐபி பங்களிப்புகளைக் கண்காணிக்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். 5-10 என்று இருந்த வரை தினமொரு முறை இதனை நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன். இப்போது எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 05:13, 7 மே 2011 (UTC)[பதிலளி]

நாளொன்றுக்கு சராசரி 60 பயனர்கள் அந்த பக்கத்தை பார்க்கிறார்கள், அதில் 40 பேர் தொகுப்பது மகிழ்ச்சியான செய்தி.1 மாதம் கழித்து, "கணக்கு தொடங்கி தொகுங்கள்" என ஒர் அறிவிப்பு பொட்டால் 40 50 புதுபயனர்கள் புகுபதிவு செய்வார்கள், அதில் 10 20 தொடர் பயனர்களாவது கிடைப்பார்கள். ஸ்ரீகாந்த் 07:32, 7 மே 2011 (UTC)[பதிலளி]
நல்ல செய்தி. புதிதாய் வந்து தொகுப்பவர்களை ஊக்குவித்துத் தொடர் பங்களிப்பாளர்களாக மாற்ற வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:43, 7 மே 2011 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சியான செய்தி. இவர்களது கட்டுரைகளை கவனித்து ஊக்குவிப்பதுடன் த.வி பற்றிய அறிமுகப் பட்டறைகளில் இவர்கள் குறித்த தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் ஐ.பி முகவரிகரிகளைக் கொண்டு கணக்குத் தொடங்க ஊக்குவிக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 06:37, 8 மே 2011 (UTC)[பதிலளி]

எக்ஸ்புளோரர் உலாவியில் விக்கி

தொகு

IE உலாவியில் தமிழ்விக்கி உட்பட அனைத்துத் தமிழ் விக்கிமீடியா திட்டங்களும் கடந்த இரு நாட்களாகச் சரியாகத் தெரியவில்லை. ஒரே குழம்பிப் போய் வருகிறது. மேலும் கட்டுரை ஒன்றின் பக்க வரலாற்றின் வேறுபாடு பக்கமும் சரிவரத் தெரியவில்லை. வேறு யாருக்கேனும் இப்பிரச்சினை உள்ளதா?--Kanags \உரையாடுக 22:30, 6 மே 2011 (UTC)[பதிலளி]

ஆம். எனக்கும் IE உலாவியில் பார்த்தபோது, இந்தப் பிரச்சனை நேற்றிலிருந்து இருக்கின்றது. இது தவிர, எனக்கு பல கிழமைகளாகவே IE உலாவியில் விக்கியில் உள்ள 'தமிழில் எழுத' என்பதையும் பயன்படுத்த முடியவில்லை. ஏதாவது பக்கத்தைப் பார்க்கும்போது, மேலே அந்த தமிழில் எழுத என்பது தெரியும். ஆனால் தொகு வை அழுத்திவிட்டு, தமிழில் எழுதலாம் என்று பார்த்தால், மேலேயோ, அல்லது தொகுத்தல் பெட்டியிலோ அதனைக் காணவில்லை. அதனால், சிரமம் உள்ளது.--கலை 23:51, 6 மே 2011 (UTC)[பதிலளி]
எனக்கும் எக்ஃசுபுளோரர் உலாவியில் இப்படி இன்று நடந்தது. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை!இடப்புறம் உள்ள பட்டி தெரியாது! ஏன் என்று விளங்கவில்லை!--செல்வா 02:22, 7 மே 2011 (UTC)[பதிலளி]
இது கடந்த இரு நாட்களாக அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக நான் மேலே குறிப்பிட்டவாறு வரலாற்றுப் பக்கம் ஒன்றில் வேறுபாடு முன்னர் மாதிரித் தெளிவாக இல்லை. இது குறித்து வழு பதிய வேண்டும். சுந்தர் கவனிப்பார் என நம்புகிறேன். பயர்பொக்சில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே போன்று இருந்தது, இப்போது இல்லை. எக்ஸ்புளோரர் பலரும் பயன்படுத்தும் உலாவி என்பதால் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 02:40, 7 மே 2011 (UTC)[பதிலளி]

எனக்கும் இதே குறை ஏற்பட்டது. பக்கத்தை மீளப் புதுப்பிக்கையில் அது சரிவருகிறது. ஏனென்று தெரியவில்லை.--பாஹிம் 02:42, 7 மே 2011 (UTC)[பதிலளி]

இச்சிக்கல்கள் த.விக்கியில் மட்டுமா அல்லது தமிழ் விக்சனரி, தமிழ் விக்கி செய்திகள் போன்ற பிற தமிழ் விக்கித் திட்டங்களும், ஆங்கில விக்கி போன்ற பிற மொழி விக்கித் திட்டங்களிலும் ஏற்படுகின்றனவா என்று கொஞ்சம் சோதித்து சொல்லுங்கள். வழு, இங்கு மட்டும் தானா அல்லது மீடியாவிக்கி அளவிலா என்பதைக் கண்டறிய உதவும். (இங்கு மட்டும் தானென்றால், நாம் அண்மையில் செய்த ஏதோ ஒரு மாற்றத்தால் உடைந்திருக்க்றது, நாமே சரி செய்ய வேண்டும், பிற தளங்களிலும் பிரச்சனை என்றால் வழு பதியலாம்)--சோடாபாட்டில்உரையாடுக 04:19, 7 மே 2011 (UTC)[பதிலளி]
விக்கி, விக்சனரி உட்பட அனைத்துத் தமிழ் விக்கிமீடியா திட்டங்களிலும் இக்குறைபாடு உள்ளது. ஆங்கில விக்கிகளில் இல்லை. இப்போது பயர்ஃபொக்சிலும் இதே பிரச்சினை வந்துள்ளது. மேலும் ஒரு வேண்டுகோள்: தமிழ் விக்கிசெய்தியில் காட்டப்படும் குறுந்தொடுப்புகள் அனைத்தும் விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கே தொடுப்புக் கொடுக்கப்பட்டுள்ளன. குறுந்தொடுப்புகள் அனைத்தையும் உடனடியாக நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 14:03, 7 மே 2011 (UTC)[பதிலளி]


விக்கிமீடியா வழங்கிகளில் உள்ள வழு பொலுள்ளது. colour shading on diffs. சரியாக சில நாட்களாகலாம். ஃபயர்பாக்சில் மிகப்பெரும்பாலும் வரவில்லை என்கிறார்கள். ஐ.ஈ மட்டும் பெரிதும் பாதிக்கபப்ட்டுள்ளது--சோடாபாட்டில்உரையாடுக 15:20, 7 மே 2011 (UTC)[பதிலளி]

  • என் IE உலாவியிலும் இச்சிக்கல் உள்ளது. சிலவேளைகளில் இரண்டு மூன்று முயற்சிகளுக்குப் பின் சரியாகிவிடுகிறது!--பவுல்-Paul 04:51, 8 மே 2011 (UTC)[பதிலளி]
எனக்கும் இதே பிரச்சினை உள்ளது. விக்சனரியிலும் இந்தப் பிரச்சினை உண்டு. இடையிடையே சில வேளைகளில் சரியாக வருகிறது. --- மயூரநாதன் 18:26, 8 மே 2011 (UTC)[பதிலளி]
வழு சரி செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 08:31, 10 மே 2011 (UTC)[பதிலளி]

அரசு மலையாளக் கலைக்களஞ்சியம் பொதுவில்

தொகு

மலையாள விக்கி பயனர்கள் முயற்சியால் சர்வ விஞ்ஞான கோசம் பொது உரிமத்தோடு விடப்பட்டு இருக்கிறது. இது விக்கிப்பீடியாவிற்கு ஒத்த உரிமம் என்பதால், மலையாள விக்கியில் அதன் உள்ளடக்கங்கள் இலகுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதே முன்மாதிரியை தமிழ்நாடு அரசு செய்ய ஊக்கிவிக்க வேண்டும். தமிழ், அறிவியல், மானிடவியல், மருத்த்வ கலைக்களஞ்சியங்கள் பொதுவில் கொண்டுவரப்பட்ட ஊக்கிவிக்கப்பட வேண்டும்.

"Way back in 2008, Kerala Government had officially announced that it is changing the license of Govt. sponsored print encyclopedia project (expert-written-encyclopedia) of Malayalam (sarvavijanakosam) to GFDL. This was done in 2008 December while Jimmy and Sue were in Thiruvananthapuram to attend the free software conference. Now since the license of that encyclopaedia is compatible with the license of Wikipedia, Malayalam community is able to reuse its content to develop many Malayalam wikipedia articles. We are still in the process of slowly migrating the content from this expert-written-encyclopedia to enhance many existing stub articles of Malayalam wikipedia. (But we are not blindly copy pasting content since the language style and the usage of words of this encyclopedia is bit different from the style of Malayalam wikipedia)"

LDF keralam website and wikipedia --Natkeeran 05:37, 8 மே 2011 (UTC)[பதிலளி]


திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள் விக்கிக்கு தேவையானவைகளுள் ஒன்றா?

தொகு

நான் இன்று ஒரு விக்கி பக்கம் கண்டேன், அதில் ஒரு குறிப்பிட்ட படம் பற்றிய விமர்சனம் கண்டேன். இது தேவைதானா என்ற எண்ணமும், இது விக்கிமீடியாவின் திட்டங்களில் ஒன்றா என்பதையும், விக்கிபீடியாவில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

விக்கி சமுகத்திற்கு சில கேள்விகள்

இதில் அந்தப் படத்தை பற்றிய எந்த ஒரு உருப்படியான ஆக்கமும் இல்லையே. இது விக்கிபடுத்துதளுக்கு உரிய பக்கமா என்பதனையும் தெளிவு படுத்த வேண்டுமென கேள்வி எழுப்புகிறேன். சும்மா வெறுமனே இது ஒரு படம் என்று உள்ளது, இதில் யார் நடித்து உள்ளனர் யார் இயக்கி உள்ளார், என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு இதனை ஒரு விக்கி பக்கம் என்றும், விக்கிபடுத்தளுக்குரிய அங்கிகாரம் பெற்றது என்றும் விக்கிபிடியா சமூகத்தினர் நம்புகிறோமா? தமிழில் செய்யப் பட வேண்டிய ஆக்கங்கள் பல உள்ளன. அதை விடுத்துவிட்டு படங்களைப் பற்றிய பக்கங்கள் விக்கிபீடியா விரும்புகிறதா என்பதையும் தெளிவுபடுத்துன்களேன். திரைப்படம் பற்றித்தான் செய்தித்தாள்களும், அனைத்து தொலைக்காட்சிகளும் அனைத்து மக்களும் (வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் தவிர) பக்கம் பக்கமாய், பேச்சு பேச்சுக்கலாய் மக்களிடைய உலவுகின்றனவே?

நமது விக்கிபிடியா பயன் படுத்தும் பயனர் இந்த மாதிரியான பக்கங்களை வேண்டுகிரவரா என்பதையும் விக்கிபீடியா சமூகத்தினர் தெளிவு படுத்தும்படி வேண்டிக்கொகிறேன்.

மேலும் இந்தப் பக்கம் பகுக்கவும் செய்யப்பட்டு உள்ளது.

http://ta.wikipedia.org/w/index.php?title=எங்கேயும்_காதல்

அன்புடன் Pitchaimuthu2050 06:18, 11 மே 2011 (UTC)[பதிலளி]

உங்கள் கேள்விகளில் இரு பகுதிகள் உள்ளன
முதல் பகுதிக்கான பதில்: விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். இதில் அனைத்து துறைகள் பற்றிய கட்டுரைகளும் இடம்பெறும். திரைப்படங்களைப் பற்றிய “தகவல் கட்டுரைகள்” இடம்பெறும். ”விமர்சனங்கள்” இடம் பெறா. நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரையில் விமர்சனமாக ஒன்றும் இல்லையே. வெறும் தகவல்கள் மட்டும் தானே உள்ளன?. தகவல்களின் அடிப்படையில் “அனைத்து விசயங்களைக்” குறித்தும் தகவல் கட்டுரைகள் விக்கியில் இடம் பெறும். ஆக்கப்பட வேண்டிய துறைகள் இவை, தேவையில்லாதவை இவை என்ற பண்பாட்டு மதிப்பீடு செய்யும் வேலை விக்கிப்பீடியாவினது கிடையாது. திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், ஏனைய பொழுதுபோக்கு விசயங்கள் அனைத்தும் இதில் அடங்கும். (தமிழ் விக்கியில் திரைப்படங்கள் குறித்து சுமார் 5000 கட்டுரைகள் உள்ளன, ஆங்கில விக்கியில் லட்சக்கணக்கில் உள்ளன, திரைப்படக் கட்டுரைகள் இடம்பெறா விக்கிப்பீடியாவே கிடையாது எனலாம்) இத்துறை வேண்டும் இத்துறை வேண்டா என்று பாகுபடுத்துவது கலைக்களஞ்சியத்துக்கு ஒவ்வாத போக்கு. சுருக்கமாக- ஆம் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள் கலைக்களஞ்சியக் கட்டுரைகளே (விக்கிப்பீடியா நடையில், தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்குமெனில்)
இரண்டாம் பகுதி: கட்டுரையின் அளவு - தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற குறைந்த பட்சம் மூன்று, நான்கு சொற்றொடர்கள் கொண்ட கட்டுரைகள் வேண்டும். அனைவராலும் எடுத்த எடுப்பிலேயே பத்தி பத்தியாக எழுத முடியாது. ஒரு விசயத்தைப் பற்றி அனைத்து விசயங்களைப் பற்றி எழுதினால் தான் கட்டுரையாக ஏற்றுக்கொள்ள முடியுமென்றால் விக்கியே இருக்காது. குறைந்த படசமாக மூன்று அல்லது நான்கு வரிகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது போன்று சிறு பக்கங்களாகத் தொடங்கிய பல கட்டுரைகள் காலப்போக்கில் வளர்ந்து நன்கு செம்மைப்பட்டிருக்கின்றன. விக்கிக்கு காலக்கெடு எதுவும் கிடையாது. --சோடாபாட்டில்உரையாடுக 06:34, 11 மே 2011 (UTC)[பதிலளி]

Pitchaimuthu2050 உங்கள் கேள்விகள் ஓரளவுக்கு நியாயமானவைதான். தற்போதுள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் பலவற்றில் போதிய உள்ளடக்கம் இல்லை. ஆனால் பயனர் சோடாபாட்டில் குறிப்பிட்டிருப்பதுபோல் இவை விரிவாக்கப்படக்கூடியவை. திரைப்படங்கள் தீண்டத்தகாதவையாக ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல. இந்தியாவைப் பொறுத்தவரை, குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரைப்படங்கள் மக்களின் அரசியல் சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களில் பெரும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. எனவே இவற்றைச் சரியான முறையில் அணுகவேண்டிய அவசியம் உள்ளது. திரைப்படங்கள் பால் மக்களுக்கு இருக்கும் கவர்ச்சியைப் பல ஊடகங்கள் வணிக நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துகின்றன. கீழ்த்தரமான ரசனைகளுக்கு மட்டும் தீனி போடுகின்றன. ஆனால் விக்கிப்பீடியா அப்படி இருக்க வேண்டியதில்லை. பல நூறு திரைப்படங்களைப் பற்றிப் பயனுள்ள கட்டுரைகளை எழுதமுடியும். திரைப்படங்கள் அவை வெளிவந்த காலத்துச் சமூக பொருளாதார, அரசியல், பண்பாட்டு நிலைமைகளை எடுத்துக் காட்டுகின்றன அத்துடன் அவையும் சமூகத்தின் மீது தாக்கங்களைக் கொண்டுள்ளன. அத்துடன், தொழில்நுட்ப வளர்ச்சிகளை உள்வாங்குவதன் மூலம் திரைப்படங்களில் புதுமைகள் புகுத்தப்படுகின்றன. புதிய புதிய உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன, புதிய திறமைகள் வெளிப்படுகின்றன. வரலாறுகள் மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன, சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன. அத்தோடு ஒவ்வொரு திரைப்படத்தையும் ஒரு கலைப் பொருளாகவும் அதே நேரம் அதை நாட்டின் முக்கிய தொழில் துறை ஒன்றின் உற்பத்திப் பொருளாகவும் நோக்கலாம். இவ்வாறான அடிப்படைகளி ஒவ்வொரு திரைப்படத்தையும் நோக்கிக் கட்டுரைகளை விரிவாக்கலாம். தற்போது இக்கட்டுரைகள் விதைகளாகத்தான் உள்ளன அவற்றைப் பெரிய மரங்களாக வளர்ப்பது நமது திறமையைப் பொறுத்தது. --- மயூரநாதன் 19:24, 11 மே 2011 (UTC)[பதிலளி]

நன்றாக விளக்கியுள்ளீர்கள். நன்றி -- மாகிர் 15:23, 12 மே 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:தள_அறிவிப்பு திட்டத்தை பற்றி உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் ஸ்ரீகாந்த் 15:23, 11 மே 2011 (UTC)[பதிலளி]

  • நல்ல நோக்கம், நல்ல திட்டம் ஸ்ரீகாந்த். ஆனால் மேலும் சரளமாக விரிவு படுத்தப்படல் வேண்டும் --P.M.Puniyameen 15:33, 11 மே 2011 (UTC)[பதிலளி]
நல்ல திட்டம், சிறீகாந்து. ஒவ்வொரு அறிவிப்பையும் வீச்சு, ஏற்பு, விளைவு போன்ற அடிப்படையில் அளக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். -- சுந்தர் \பேச்சு 05:45, 14 மே 2011 (UTC)[பதிலளி]

தேர்தல் முடிவுகள் தொடர்பான எக்செல் கோப்பு

தொகு

2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பற்றிய விக்கி கட்டுரைக்காக (http://tawp.in/r/25vo) எக்செல் கோப்பு ஒன்றை தொகுக்க வேண்டியுள்ளது. இதனை csv யாக மாற்றி பின்னர் ஜாவாஸ்கிரிப்ட் கோப்பில் உதவியுடன் தேவையான தகவல்களை வார்ப்புருவாக மாற்றிக்கொள்ளலாம்.234 சட்டமன்றத் தொகுதி கட்டுரைகளிலும் இந்த தகவல்களை பின்னர் தானியங்கி முறையில் பதிவேற்றலாம். தெரிந்தவர்களை இங்கு பங்களிக்க அழையுங்கள்.கோப்பு இங்கே . நன்றி -- மாகிர் 15:48, 12 மே 2011 (UTC)[பதிலளி]

பார்க்க: https://spreadsheets.google.com/ccc?key=0AmUxzk6vMxNSdFFyTnl0NVFxOWJTWDZjX204NnJtY3c&hl=en#gid=0 via Twittr http://twitter.com/#!/logic/status/69240793868668928

நான் இங்கே இடுவதற்கு முன் இட்ட நண்பருக்கு நன்றி. தமிழக தேர்தல் ஆணையம் இதனை தமிழ் பக்கத்தில் கொடுத்தாலமேலுள்ள கோப்பை தமிழிலும் உருவாக்கலாம். ஆனால் நான் தேடிய வரை இல்லை. பிற தளங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியது, ஆயினும் ஏதேனும் இருப்பின் தெரிவியுங்கள். நன்றி ஸ்ரீகாந்த் 06:05, 14 மே 2011 (UTC)[பதிலளி]

Google Quietly Protests Internet Censorship in India

தொகு

தொகுத்தவை தோன்றாதிருத்தல்

தொகு

தொகுக்கப்பட்ட தகவல்கள் தொகுத்தலில் காணப்பட்ட போதிலும் அவை சேமிக்கப்படும் போது வெளிப்படவில்லை. பார்க்க:நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கை .என்ன பிரச்சனை?--சஞ்சீவி சிவகுமார் 00:54, 15 மே 2011 (UTC)[பதிலளி]

சிறு நிரல் பிழையால். சரி செய்திருக்கிறுக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:57, 15 மே 2011 (UTC)[பதிலளி]
நன்றி சோடாபாட்டில்.--சஞ்சீவி சிவகுமார் 05:25, 15 மே 2011 (UTC)[பதிலளி]

நீயா-நானா: தமிழகத்து நிகழ்த்து கலைகள் நிகழ்ச்சியில் விக்கிப்பீடியா

தொகு

மிக அருமையான நிகழ்ச்சி ஒன்று. நிகழ்த்து கலைகளின் அழிவு நிலை, கலைஞர்கள் சந்திக்கும் சிக்கல்கள், தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தின் குறைபாடுகள், பண்பாட்டுக் கொள்கையின் குறைபாடுகள், மக்கள் கலைகள் எதிர் செவ்வியல் ?? கலைகள், நாட்டுப்புறக் கலை ஆய்வுகள் புறக்கணிக்கப்பட செம்மொழி இலக்கின் பங்கு, கலைகளில் தொடரும் சாதிப் பாகுபாடு என பல கருத்துக்களை இந்த நிகழ்ச்சி தொட்டுச் சொல்கிறது. இந்த நிகழ்ச்சியில் விக்கிப்பீடியா இரண்டு அல்லது மூன்று தடைகளாவது மேற்கோள் காட்டுப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. --Natkeeran 14:52, 15 மே 2011 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா இந்தியா செய்தி மடல்

தொகு

விக்கிமீடியா இந்தியா நிறுவனம் இந்திய மொழி விக்கித்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு செய்திமடல் ஒன்றை வெளியிட உள்ளது. அதன் முதல் இதழ் சூன் 2011ல் வெளிவர உள்ளது. தமிழ் விக்கித்திட்டங்களில் நடந்த முக்கிய நடவடிக்கைகள், திட்ட முயற்சிகள், எட்டிய மைல்கற்கள் போன்றவற்றை இதில் வெளியிட வேண்டும். இதற்கான வரைவுப் பக்கத்தை இங்கு - விக்கிப்பீடியா:விக்கிமீடியா இந்தியா செய்திமடல்/2011 சூன் - உருவாக்கியுள்ளேன். சில விசயங்களையும் சேர்த்துள்ளேன். இதனை முழுமை படுத்த அனைத்து பயனர்களின் உதவியினையும் கோருகிறேன். அனைவரும் இப்பக்கத்தில் நமது விக்கித்திட்டங்களில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை சேர்க்க வேண்டுகிறேன்.

(ஒரு ஒப்பீட்டுக்காக மலையாள விக்கியின் இதழ் பக்கம் இங்கு உள்ளது)--சோடாபாட்டில்உரையாடுக 14:00, 16 மே 2011 (UTC)[பதிலளி]