விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு76
ஆங்கில பெயர் சேர்க்கபடவேண்டும்
தொகுநமது தமிழ் விக்கியில் உள்ள பக்கங்களை தேடுவதற்க்கு நாம் அதன் பெயரை உள்ளிடுகிறோம். ஆனால் சில நேரங்களில் ஆங்கில ( அல்லது பிற மொழி ) பெயருள்ள ஒரு மனிதரை ( அல்லது பொருள்களை ) பற்றி தேடும் பொழுது சில குழப்பங்கள் உண்டாகிறது. எடுத்துக்காட்டாக EMINEM எனப்படும் பாடகரை பற்றி தேடுகயில் நாம் தமிழில் "எமினெம்" என்று தேட வேண்டுமா அல்லது "எமினம்" என்று தேட வேண்டுமா என்ற குழப்பம் எழும். இந்நிலையில் ஆங்கிலதில் Eminem என உள்ளிட்டு தேடும் பொழுது நமக்கு அப்பக்கதின் இணைப்பு கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும். எனவே இது போன்ற கட்டுரைகளில் ஆங்கிலதிலும் பெயர்களை குறிப்பிட்டால் தேடுவதற்க்கு மிகவும் பயனுள்ளதாக/எளிதாக இருக்கும். --Jayabharat (பேச்சு) 19:51, 8 சூன் 2012 (UTC) −முன்நிற்கும் கருத்து Jayabharat (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- கட்டுரையில் அப்படிக் குறிப்பிடலாம். அப்படியே பிறமொழி பெயர்களையும் பிறமொழிகளிலும் தரலாம். --Natkeeran (பேச்சு) 20:21, 4 சூன் 2012 (UTC)
- இது அனைத்து மொழி விக்கிகளிலும் உள்ள நடைமுறை. தமிழ் விக்கியின் அனைத்துப் பயனர்களும் இதனைக் கட்டாயமாக நடைமுறைப் படுத்துவதாகத் தெரியவில்லை.--−முன்நிற்கும் கருத்து kanags (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- கட்டுரையில் அப்படிக் குறிப்பிடலாம். அப்படியே பிறமொழி பெயர்களையும் பிறமொழிகளிலும் தரலாம். --Natkeeran (பேச்சு) 20:21, 4 சூன் 2012 (UTC)
- இதை அனைத்து பயனர்களும் பின்பற்றினால் மேகவும் நன்றாக இருக்கும். --Jayabharat (பேச்சு) 19:59, 8 சூன் 2012 (UTC)
- இவ்வாறே புதிய கலைச்சொற்களை அறிமுகப்படுத்தும்போதும் பயன்படுத்துவது ஒரே ஆங்கிலச் சொல்லிற்கு இரு கலைச்சொற்கள் ஆக்கப்படுவதைத் தடுக்கும்.--மணியன் (பேச்சு) 16:43, 14 சூன் 2012 (UTC)
தவறு நிகழ்ந்து விட்டது
தொகுவார்ப்புரு:Tlx பக்கத்தில், தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ளது வார்ப்புருவை தொடுப்பிணைப்பியின் உதவியுடன் சேர்த்தேன், தற்போது, அது நீக்கினாலும், நீக்காவிட்டாலும் தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ளது என்ற தகவல் வருகிறது. விரைந்து சரி செய்யவும். :-( -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:12, 5 சூன் 2012 (UTC)
- இப்போது பாருங்கள் .. ஒரு முறை தொகுத்து சேமித்தவுடன் எனக்கு சரியாக தெரிகிறது.. அநேகமாக பக்கம் இற்றையாகாமல் இருந்திருக்கலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 11:20, 5 சூன் 2012 (UTC)
- இப்படி சேமிப்பதன் பெயர் null editஆம். பார்க்க en:wp:purge--சண்முகம்ப7 (பேச்சு) 11:23, 5 சூன் 2012 (UTC)
- ஆம். சரியாகி விட்டது. நன்றி சண்முகம்! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:24, 5 சூன் 2012 (UTC)
- இப்படி சேமிப்பதன் பெயர் null editஆம். பார்க்க en:wp:purge--சண்முகம்ப7 (பேச்சு) 11:23, 5 சூன் 2012 (UTC)
- வார்ப்புருக்களில் இவ்வாறு translate போன்ற பொதுவான வார்ப்புருக்களை இடும்போது <noinclude>{{translate}}</noinclude> என எழுத வேண்டும். ஆனாலும் இவ்வாறான பல கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் வார்ப்புருக்களில் இவ்வாறு translate போன்ற கட்டுரை வார்ப்புருக்களை இணைப்பதைத் தவிர்ப்பது நல்லது.--Kanags \உரையாடுக 11:32, 5 சூன் 2012 (UTC)
- விளக்கத்திற்கு நன்றி Kanags, இனிவரும் காலங்களில் இப்பிழை நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:34, 5 சூன் 2012 (UTC)
2011 Picture of the Year competition
தொகுмакедонски • norsk • polski
Dear Wikimedians,
Wikimedia Commons is happy to announce that the 2011 Picture of the Year competition is now open. We are interested in your opinion as to which images qualify to be the Picture of the Year 2011. Any user registered at Commons or a Wikimedia wiki SUL-related to Commons with more than 75 edits before 1 April 2012 (UTC) is welcome to vote and, of course everyone is welcome to view!
Detailed information about the contest can be found at the introductory page.
About 600 of the best of Wikimedia Common's photos, animations, movies and graphics were chosen –by the international Wikimedia Commons community– out of 12 million files during 2011 and are now called Featured Pictures.
From professional animal and plant shots to breathtaking panoramas and skylines, restorations of historically relevant images, images portraying the world's best architecture, maps, emblems, diagrams created with the most modern technology, and impressive human portraits, Commons Features Pictures of all flavors.
For your convenience, we have sorted the images into topic categories.
We regret that you receive this message in English; we intended to use banners to notify you in your native language but there was both, human and technical resistance.
See you on Commons! --Picture of the Year 2011 Committee 18:41, 5 சூன் 2012 (UTC)
Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)
IRC on community building - June 7, 2012
தொகுHey folks, Hisham had posted an update on the community building pilot Shiju ran as part of India Program. This pilot was run in Assam but there are tips and pointers and suggestions from this pilot that are relevant for all Indic communities. As part of the India Programs IRCs, we propose the first monthly IRC of June to be on this topic. We'd like to discuss how to build and support communities by increasing the number of editors, assessing progress on Wikiprojects as well as fostering possibilities of new collaborations. Please join us on 7th June at 09:30 p.m IST using this link. Thank you. Noopur28 (பேச்சு) 10:50, 6 சூன் 2012 (UTC)
தமிழ் 99 க்ஷ் வழு
தொகுதமிழ் 99 இன் விதிகளின்படி க்ஷ் (மற்றும் அதன் உயிர்மெய்கள்) hfW என்று விசையைப் பயன்படுத்தும்பொழுது தனியெழுத்தாக வரவேண்டும் (க், ஷ நடுவில் ZWNJ வரவேண்டும்). கூட்டெழுத்து வேண்டுமென்போர் T விசையைப்பயன்படுத்த வேண்டும். இந்த வழுவை gerrit:10739யில் சரி செய்துள்ளேன். 1-2 வாரங்களில் விக்கியில் மாற்றப்படும். க்ஷ் பயன்பாட்டு பற்றி உங்கள் கருத்துக்களை தனியெழுத்து_மாய_இடைவெளி_நீக்கம் பக்கத்தில் இடுங்கள். ஸ்ரீகாந்த் (பேச்சு) 06:53, 9 சூன் 2012 (UTC)
- நான் தமிழ்99 பயன்படுத்துபவன். ஆனால், பெரும்பாலும் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதில்லை.T பயன்படுத்தும் போது, க்ஷ வருகிறது.மகிழ்ந்தேன். மற்றொரு ஐயம், ஆங்கில விசைப்பலகைக்கு மாற, இரண்டு விசைகளை(Ctrl+m) தற்பொழுது பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரே விசையில், மொழிகளை மாற்ற வகை செய்ய முடியுமா? ஆம் எனில், இதற்காக F10, F12 விசைகளை (அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை) முன்மொழிகிறேன்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
F12 பயன்படுத்த வேண்டாம் அது கணினியில் வேறொரு பயன்பாட்டிற்காக ஏற்கனவே உள. ஃப் 10 எதற்கும் இல்லை. அதைப் பயன்படுத்துங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:12, 10 சூன் 2012 (UTC)
- மொழிகளிடையே(வடிவமைப்புகளுக்கிடையே மாற்றுவது புதிய அம்சம், வழு பதிகிறேன். விக்சனரி பயன்படுத்துவோருக்கு எளிதாக இருக்கும். நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 05:34, 10 சூன் 2012 (UTC)
கட்டிடக்கலை
தொகுகட்டிடக்கலை கட்டுரை சிறப்புக் கட்டுரைகளில் ஒன்றா? இது விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் பகுதியில் காணப்படுகிறது.ஆயினும், சிறப்புக் கட்டுரைகள் பகுப்பில் காணப்படவில்லை.--Prash (பேச்சு) 11:57, 12 சூன் 2012 (UTC)
- சேர்க்கப்பட்டுள்ளது.--கலை (பேச்சு) 09:55, 15 சூன் 2012 (UTC)
- கட்டிடக்கலை கட்டுரை சிறப்புக் கட்டுரையாக அடையாளம் காணப்பட்டாலும், அதற்கு சிறப்புக் கட்டுரைக்கான முத்திரை இன்னும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 10:04, 15 சூன் 2012 (UTC)
மதுரையில் விக்கி பட்டறை
தொகுகருத்துகள் வேண்டப்படுகின்றன. காணவும் விக்கிப்பீடியா:2012 மதுரை , தமிழ் விக்கிப்பீடியா பட்டறை-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:00, 12 சூன் 2012 (UTC)
தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்
தொகுதமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள் ஒரு அருமையான உசாத்துணை. இதனனை வைத்து தமிழர் ஆடற்கலைகள் பட்டியல் கட்டுரைகளை உருவாக்கலாம். --Natkeeran (பேச்சு) 19:01, 14 சூன் 2012 (UTC)
- சீரியத் தொகுப்பு. அங்குள்ள ஊடகங்களை, நாம் பயன்படுத்தலாமா?பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
- பயன்படுத்த முடியாது அவை படியெடுக்கவோ, சேமிக்கவோ முடியாதபடி காக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:00, 17 சூன் 2012 (UTC)
An Invite to join the Wikimedia India Chapter
தொகு- - - - - - - - - - - - Wikimedia India Chapter - - - - - - - - - - - - | ||
---|---|---|
Hi all,
Greetings from the Wikimedia India Chapter ! Wikimedia India is an autonomous non-profit organization. The objective of the Chapter is to educate Indian public about availability and use of free and open educational content and build capacity to access and contribute to such resources in various Indian languages and in English. It works in coordination with Wikimedia Foundation and the Wikipedian community to promote building and sharing of knowledge through Wikimedia projects. As you have shown an interest in articles related to India we thought you might be interested in knowing about the Wikimedia India chapter, its activities, volunteering and process to gain membership to the society. We need your help.
| ||
More details can be found at Official Portal • Our Blog • Our Wiki | ||
We welcome you to join and particpate in the India Chapter's activites. To join the chapter please click here. We thank you for your your contributions thus far and look forward to your continued participation.
|
PDF வடிவில் கட்டுரைகளை தரவிறக்கல்
தொகுஆங்கில விக்கியை போன்று தமிழ் விக்கியில் PDF வடிவில் கட்டுரைகளை தரவிறக்க முடியாதா ? OpenDocument Text வடிவில் தரவிறக்கும் போது தமிழ் எழுத்துரு தெளிவாக இல்லை. இதே பிரச்சினை Book creator பயன்படுத்தி புத்தகமாக கட்டுரைகளை தரவிறக்கும் போதும் ஏற்படுகிறது.--Sank (பேச்சு) 16:50, 16 சூன் 2012 (UTC)
- இந்திய மொழிகளை PDF வடிவில் உருவாக்குவதில் வழுக்கள் உள்ளன.(கொம்பு,கால் மாறி வரும் முதலியவை) எழுத்துரு பற்றிய பின்னூட்டம் பற்றி முன்னர் கூட கேட்டேன், மாற்ற முடியுமா என முயற்சித்து வருகிறேன். ஸ்ரீகாந்த் (பேச்சு) 20:13, 16 சூன் 2012 (UTC)
- நன்றி சிறீகாந்த், முன்னர் (2,3 ஆண்டுகளுக்கு முன்னர்) தமிழ் விக்கிமூலம், தமிழ் விக்கிநூல்கள், விக்கிசெய்திகளில் மட்டும் (தமிழ் விக்கிப்பீடியா தவிர்த்து) PDF இல் தரவிறக்கம் செய்யும் வசதி இருந்தது. மிக அழகான ஒருங்குறி எழுத்துகளில் படிக்க முடிந்தது. ஆனால் பின்னர் எழுத்துகள் குழம்பி வர ஆரம்பித்தன. ஏன் அப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 23:12, 16 சூன் 2012 (UTC)
- ஓ! நிரல்தளத்தில் பல மாற்றங்கள் நடைபெற்றிருக்கக் கூடும். வேறு கட்டமைப்பில் நிரல் மாற்றுதல் / மாற்றி எழுதுதல் / புதிய நிரல் ஆய்வு / பாதுகாப்பு ஆய்வு / காப்புரிமைச் சிக்கல் போன்ற பல காரணங்களால் கூட சில நேரங்களில் வேலை செய்யும் நிரலுக்கு மாற்றாக வேலை செய்யாத நிரல் வந்திருக்கக்கூடும். மேலும் ஒருங்குறி எழுத்துருக்கள் மூலம் படிப்பதெல்லாம் ஒருங்குறி எழுத்துகளாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. :( ஸ்ரீகாந்த் (பேச்சு) 07:49, 17 சூன் 2012 (UTC)
- நன்றி சிறீகாந்த், முன்னர் (2,3 ஆண்டுகளுக்கு முன்னர்) தமிழ் விக்கிமூலம், தமிழ் விக்கிநூல்கள், விக்கிசெய்திகளில் மட்டும் (தமிழ் விக்கிப்பீடியா தவிர்த்து) PDF இல் தரவிறக்கம் செய்யும் வசதி இருந்தது. மிக அழகான ஒருங்குறி எழுத்துகளில் படிக்க முடிந்தது. ஆனால் பின்னர் எழுத்துகள் குழம்பி வர ஆரம்பித்தன. ஏன் அப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 23:12, 16 சூன் 2012 (UTC)
தட்டச்சு முறைகள் - இன்ஸ்கிரிப்ட்,பாமினி,ICTA
தொகுதமிழ் இன்ஸ்கிரிப்ட் முறை விரைவில் நரையம் நீட்சியில் இணைக்கப்படும். இன்ஸ்கிரிப்ட் ஆவணம் சோதனைகளை எழுத உதவியாக இருந்தது. மேலும் சோதித்த ஸ்ரீரமண சர்மாவிற்கு நன்றிகள். இது தமிழ் விக்கித்திட்டங்களில் பயன்படும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், பிற இந்திய மொழி விக்கித்திட்டங்களில் தமிழ் எழுத பயன்பட வாய்ப்புள்ளது(அவர்களுக்கு இன்ஸ்கிரிப்ட் எளிது). பாமினி தமிழ் எழுத்து முறைக்கான சோதனைகள் தயார் (உங்களுக்கு மேலும் சோதனைகள் தெரிந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்), ஆனால் விதிகள் எழுதுவதில் சிறு சிக்கலிருக்கிறது, அதனையும் விரைவில் தீர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அது முடிந்தபின் இலங்கையின் ICTA (ரெங்கநாதன் சார்ந்த இலங்கை அரசின் தகவல் தொடர்பு அமைப்பு வெளியிட்ட விசைப்பலகை) இணைக்கப்படும். இந்திய மொழி தட்டச்சுகளிலேயே பாமினி, ரெங்கநாதன் விசைப்பலகைகள் மட்டும் தான் "எழுதுவது போல் தட்டச்சு" முறையைக் கையாள்வதால் கூடுதல் காலம் எடுக்கிறது. நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 07:47, 19 சூன் 2012 (UTC)
விக்கிக் கட்டுரைகள் 47000
தொகுதற்போது விக்கிக் கட்டுரைகள் எண்ணிக்கை 47000த்தை தாண்டிவிட்டது. விரைவில் 50000 நோக்கி பயணம். முன்னை விட தற்போது நிறைய பேர் தர மேம்படுத்தலில் பங்கு பெறுகிறார்கள் என்பது முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைக் கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரிகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:23, 20 சூன் 2012 (UTC)
- உண்மைதான். தற்போது பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையும் சிறிது அதிகரித்துள்ளது. விரைவில் 50,000 ஐப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:21, 20 சூன் 2012 (UTC)
- கடந்த சில வாரங்களாக, பகுப்பு:பட்டியல் பக்கத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டிய பக்கங்கள் கீழ் இருந்த 150+ கட்டுரைகளை ஒன்றிணைத்து வந்தேன். 47,000 கட்டுரைகள் இலக்கு சற்று தாமதமானதற்கும், தற்போது 13 நாட்களில் 168 கட்டுரைகள் மட்டுமே கூடி இருப்பதற்கும் இது ஒரு காரணமாக இருக்கலாம். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், 50,000 இலக்கை விரைவாக எட்ட முனையாமல், விக்கிப்பீடியா துப்புரவுப் பணிகளில் முனைப்பு காட்டினோம் என்றால், 50,000 கட்டுரைகளை எட்டும் போது இன்னும் தரமான கலைக்களஞ்சியத்தை உருவாக்கி உள்ளோம் என்று பெருமைப்படலாம். 48,000 கட்டுரைகளைத் தாண்டிய பிறகு, நடப்பு நிகழ்வுகள் குறித்த தலைப்புகளை மட்டும் புதிதாக உருவாக்கிக் கொண்டு, எஞ்சிய நேரத்தைத் துப்புரவுப் பணிகளில் முழுமையாக ஈடுபடுமாறு அனுபவம் வாய்ந்த பயனர்களை வேண்டலாம் என்று ஒரு நப்பாசை :)--இரவி (பேச்சு) 08:23, 3 சூலை 2012 (UTC)
Lessons on community building
தொகுDear all, Assamese Wikipedia has seen phenomenal growth in the past one year. It currently has 31 active editors and 6 Wikiprojects (from 10 editors and no project in November 2011.) Their average monthly edits increased from 3000 in April 2011 to 5000 in November 2011. Congratulations, Assamese Community! India Program worked closely the Assamese community - and this work was part of Shiju's pilot focused on basic community building. There are several lessons for how small (and larger) communities can be built. It is worth reflecting on what inspired this progress, and to share these with all other communities.
Lessons
தொகுStrong communication: Like Shiju developed strong personal bonds with Assamese Wikipedians to guide them in their efforts, any community needs open communication, exchange of ideas and brainstorming to keep its projects going.
Initial push: Some of us are experienced editors and some might need help getting started. Shiju helped conduct the first two outreach sessions in Assam and this gave the community confidence to do more.
Encouraging collaboration: The basic idea of any Wikiproject is working together. A single editor can write many articles but a group of editors can manage a Wikiproject of hundreds of articles!
Building capacity and confidence: What started with basic support, translations and outreach advice by Shiju resulted in a wonderful 10th anniversary celebration where all editors themselves confidently put forth ideas to promote Assamese Wikipedia.
Healthy environment: Any organization, club or even a group of friends needs cooperation and productive inputs to progress. Like the Assamese Wikipedia family, young and old people from different walks of life who contribute selflessly to Wikipedia need that motivation to continue. Let's always strive to make it a pleasant experience.
While this update focuses on how the Assamese community has successfully woven together a bunch of great friendships, collaborations and figured a great way of working toegether, these learnings could help every community think about what they could also do, or do more of!. If you want to discuss measures to build or improve your community or need our help to start a Wikiproject, you can write to Shiju (salex@wikimedia.org) or if you are interested in conducting outreach sessions, do reach out to Nitika (nitika@wikimedia.org) Noopur28 (பேச்சு) 11:24, 20 சூன் 2012 (UTC)
மொழிபெயர்ப்பு
தொகுMoscow state university என்பதை எப்படி மொழிபெயர்ப்பது? மாசுக்கோவ் மாநில பல்கலைக்கழகம் என்றா? பொருத்தமான சொல்லொன்றை கூறவும். --தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:14, 10 சூலை 2012 (UTC)
- மாசுக்கோ மாநிலப் பல்கலைக்கழகம் எனலாம். --மதனாகரன் (பேச்சு) 14:01, 11 சூலை 2012 (UTC)
பயனர் வரவேற்பு
தொகுதற்போதைய புதுப்பயனர் வரவேற்பு தமிழில் மட்டுமே உள்ளது. தமிழறிந்த பயனர்களிலிருந்து பிறமொழிப் பயனரும் பங்கேற்கும் விக்கிப்பீடியாவாக விரிந்துவரும் வேளையில் பிறமொழிப் பயனர்களை வரவேற்க புதுப்பயனர் வார்ப்புருவில் பிற மொழிகளுக்கும் (குறைந்தது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்ட உரைக்கு) முதன்மை நாட்டுக்கொடியால் இணைப்பு வழங்குதல் நலம் பயக்கும். பெரும்பாலும் இவர்கள் தமிழ் உரைத்தொகுப்புகளில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்பதால் சுருக்கமாக இருக்கலாம்.
தொடர்புள்ள விதயமாக பல மொழிபெயர்ப்பு கோரிக்கைகளும் எழுப்பப்படுகின்றன. சில கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டும் உள்ளன. இவை தற்போது தமிழ் தூதரகம் பக்கத்திற்கு வழிகாட்டப்படுகின்றன. இவற்றைக் குறித்து தமிழ் விக்கிப்பீடியாச் சமூகத்தின் கருத்து/கொள்கை என்ன ? --மணியன் (பேச்சு) 14:22, 18 சூன் 2012 (UTC)
- எளிமையான மொழிமாற்று வசதியும்
- தொகுத்தல் பற்றிய ஊடகங்களும் (சுருக்கமான அறிமுகம்) ,(விரிவான அறிமுகம்) உடையதாக இருப்பின் சிறப்பு.
- புதுப்பயனருக்கு மென்மையையும், மேன்மையையும் தொடர்ந்து காட்டி, அவர்களின் தொகுத்தல் இடர்களை நீக்குதல் மிகமிக அவசியம்.
- இதற்குரிய நமது நிகழ்படங்களை இங்கு இணைத்தல் நன்று.முன்பு இரவி, விக்சனரிக்காக உருவாக்கினார். விக்கிப்பீடியாவிற்காக பல ஊடக வழிகாட்டிகள் நம்மிடையே இல்லைதானே?
- தமிழர் பலநாடுகளில் வசிப்பதால், அம்மொழிகளில், வரவேற்பை உருவாக்குதல் நன்றே. வணக்கம். பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
- விருப்பம், குறிப்பாக தமிழ் அறியாதவர்களுக்கு தூதரம் பற்றி, தமிழ் மொழியறிவு தேவைப்படாத ஏனைய பங்களிப்பு வாய்ப்புகள் பற்றி இருத்தல் அவர்களுக்கு பொறுத்தமாக இருக்கும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 07:47, 19 சூன் 2012 (UTC)
சமூகவலைத்தள மேலாண்மை
தொகுமுன்பை விட தற்போது (ஊடகப்போட்டிக்குப் பிறகு) சமூக வலைத்தளத்தில் தமிழ் விக்கி குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்குள்ளோரை இங்கு அழைத்துவர இதுபோன்ற வழிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக {{StayTuned}} என்பது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வார்ப்புருவை {{புதுப்பயனர்}} வார்ப்புருவிலும் {{anonymous}} வார்ப்புருவிலும் பயன்படுத்தலாம் என்று தோன்றியது.
இது குறித்து அனைவரது கருத்தும் தேவை. மேலும், அந்த வார்ப்புருவை இன்னும் எழில் மிக்கதாகவும், அதனை பிற இரண்டிலும் அழகாகப் பொருந்தத்தக்கதாகவும் ஆக்கவேண்டும். இதற்கும் ஆலோசனை தேவை. தங்கள் கருத்துகளைப் பகிரவும்.-- சூர்யபிரகாஷ் உரையாடுக 09:22, 21 சூன் 2012 (UTC)
கருத்துகள்
தொகுநல்ல கருத்து. மேலே மணியன் கொண்டு வந்துள்ள பயனர் பக்க வரவேற்பு பற்றிய கருத்துடன் சேர்த்து இதனையும் நடைமுறைப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 09:56, 21 சூன் 2012 (UTC)
- விருப்பம், ஆனால் நானறிந்த வரை டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்களின்(குழு அல்ல) கட்டுப்பாடு ஒருவரிடமே உள்ளது. அதன் மந்த நிலைக்கும் அதுவே காரணம் என்று கேட்டேன். மந்தமாக இருக்கும் அலைவரிசைகளை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் "stay tuned" என்றால் அப்பக்கங்களின் மந்த நிலை போன்றே விக்கி சமூகமும் மந்தமாக இருக்கிறோம் எனக் கருத வாய்ப்புண்டு. ஸ்ரீகாந்த் (பேச்சு) 10:44, 21 சூன் 2012 (UTC)
- +1 ஸ்ரீகாந்த். எனவே, கணக்கை நிர்வகிக்க ஆர்வமுள்ள அதே நேரத்தில் அந்தத் தளங்களில் நல்ல பரிட்சயமுள்ளவர்கள் இதைவிட மேலாக, விக்கிசமூகத்தின் நம்பிக்கைக்கு உரியவர்கள் பலரும் கணக்கை நிர்வகிக்கலாம். இதன்மூலம், மந்தநிலை எனும் காரணியைக் கூடியமட்டும் தவிர்க்கலாம். :) வேறேதேனும் இருப்பினும் கூறலாம். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 11:58, 21 சூன் 2012 (UTC) விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:50, 21 சூன் 2012 (UTC) விருப்பம்--Sank (பேச்சு) 05:45, 23 சூன் 2012 (UTC)
இன்றைய நாளில்
தொகுவிக்கிப்பீடியாவின் இன்றைய நாளில் பகுதியில் இடம்பெறும் தகவல்களைக் கொண்ட கட்டுரைகளில் இடம்பெறவேண்டிய வார்ப்புரு திருத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தலாம்.பார்க்க--Prash (பேச்சு) 14:12, 22 சூன் 2012 (UTC)
அறிவியல் குறட்கள் நூலிற்கு அழைப்பு
தொகுஅறிவியல் குறட்கள் என்றொரு நூல் உருவாக்கியுள்ளேன். அறிவியல் குறட்கள் என்ற இந்நூலானது இதுவரையிலும் எழுதப்பட்ட, இனி எழுதப்பட இருக்கிற அனைத்து அறிவியல் தத்துவங்களையும், குறள் வெண்பாக்களாக உருவாக்க எண்ணம் கொண்டதாகும். இதில் இடம்பெறும் குறட்களை யார் வேண்டுமானாலும் திருத்தம் செய்யலாம். அனைவரும் இணைந்து அருமையான மாபெரும் அறிவியல் குறட்கள் என்னும் இந்த நூலை உருவாக்கி வளர்த்து வருவோம். கவிதை எழுதும் ஆர்வமுள்ளவர் அவ்வ போது ஒரு அறிவியல் கருத்துக்களை குறள் வெண்பாவாக எழுதி, இந்நூலுக்கு சிறப்பு சேருங்கள். வாரம் ஒரு குறள் சேர்த்தாலே பெருஞ்செயல். நாம் திருக்குறளைப் போன்று உலகப்புகழாக இதனை செய்வதைவிட வேறென்ன தமிழுக்கு பெருமை சேர்த்துவிடமுடியும். ஏனென்றால், தமிழ் மொழியால் மட்டுமே இந்நூலை சிறப்பாக செய்ய முடியும். அவ்வளவு தெளிவான இலக்கணம் நம்மிடம் உண்டு.
இவ்வகையான குறள் வெண்பா எழுதுவது கடினம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் வெண்பா எழுதுவதில் கடினமில்லை. அதில் இலக்கணப் பிழை இல்லையென்று உறுதியாகச் சொல்லுவதே கடினம். இங்கு அனைவரும் அவ்வாறே. ஆகையால், நீங்கள் துணிந்து தவறு இருந்தபோதிலும் அதனை பேச்சுப்பக்கத்தில் பதிவு செய்யுங்கள். --இராஜ்குமார் (பேச்சு) 20:00, 24 சூன் 2012 (UTC)
- நல்ல முயற்சி. ஆனால், கதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்பு முயற்சிகளுக்கு விக்கிநூலில் இடம் உண்டா என்று ஐயம் உள்ளது. பாட நூல்கள், பயனர் கையேடுகள் போன்றவை இடம்பெறுவதே வழக்கம்--இரவி (பேச்சு) 05:08, 25 சூன் 2012 (UTC)+1--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:38, 25 சூன் 2012 (UTC)
- இது என் தனிப்பட்ட கவிதை அல்ல. இது நான் ஒருவன் மட்டும் உருவாக்க போவதில்லை. சொந்த உணர்ச்சிகளை, கருத்துக்களை எழுதப்போவதில்லை. நாம் அறிவியல் விதிகளை மொழிப்பெயர்த்து உரைநடையில் எழுதுவதை போல் குறளாக அழகுப் படுத்துகிறோம். நான் எழுதிய குறள் கடுந்தமிழில் இருந்தால் வேறொருவர் அதனை எளிமையாக செய்துவிடுவர். இது ஒரு கூட்டு முயற்சி. இதனால் பல அறிவியல் விதிகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்றால் நன்று தானே. இதுவும் ஒரு அறிவியல் பாடநூல் அல்லவா? --இராஜ்குமார் (பேச்சு) 05:45, 25 சூன் 2012 (UTC)
உரையாடலை விக்கிநூல் பேச்சுப் பக்கத்தில் தொடர்கிறேன்.--இரவி (பேச்சு) 07:02, 25 சூன் 2012 (UTC)
Presenting Chatasabha
தொகுHi All,
This message is in English, sincere apologies for that.
New editors across Indic Wikipedias often face problems while editing for which need they help. However, most don't know where they can ask questions or get clarifications as they are usually unfamiliar with village pumps or mailing lists or even talk pages on basic editing. Many existing editors want to help new editors and could appreciate a central place where they can meet and help new editors. India Program has started a pilot to support the Odia community's help desk, Chatasabha. (Incidentally, "Chata" means student and "Sabha" means community, in Odia.) This pilot will build on the community's existing efforts - and seeks to provide a structured way of designing and running a Help Desk. It takes learnings from English Wikipedia's Tea House as well as other experiences on Help Desk and similar services.
The Help Desk that is being piloted is user friendly, has guidelines to provide simple answers to new editors and tries to manage the work load of existing community members by providing ready answers to frequently asked questions. The user friendliness of the Help Desk is in the form of being able to ask questions without getting stuck on Wiki markups as well as illustrated answers to some questions.
I have put a page on meta which has the pilot design. Eventually, we would like to help other Indic languages build similar Help Desks. Please do provide your feedback on the talk page.
-- Subha WMF (பேச்சு) 04:44, 26 சூன் 2012 (UTC) (subha wikimedia.org)
தமிழ் விக்கியூடகங்கள்: கூட்டு மதிநுட்ப மாதிரி
தொகுதமிழ் விக்கியூடகங்கள்: கூட்டு மதிநுட்ப மாதிரி --Natkeeran (பேச்சு) 03:48, 27 சூன் 2012 (UTC)
Auto Wiki Interlang Linker
தொகுஆங்கில விக்கி கட்டுரைகளை மொழிபெயர்க்கும் போது அக்கட்டுரைகளில் உள்ளிடப்பட்ட இணைப்புகளுக்கான கட்டுரைகளில் தமிழ் கட்டுரைக்கான இணைப்பு இருந்தால் அவ்விணைப்புகளை தமிழ் இணைப்புகளால் தானியக்கமாக மாற்றி அமைக்க எடுக்கப்பட்ட எனது முதல் முயற்சி இது. இது பி.எச்.பியில் wiki API பயன்படுத்தி செய்யப்பட்டதாகும். இது இன்னமும் முதிர்ச்சி அடையாத ஒரு திட்டம். ஆகவே இதில் பல பிழைகள் இருக்கலாம். மேலும் இதில் இன்னமும் பல முன்னேற்றம் செய்ய வேண்டி உள்ளது.
பட்டியல்கள், வார்ப்புருக்கள், தகவற்சட்டங்கள் முதலியன இதனால் எளிதில் செய்யலாம்.
பயன்படுத்தும் முறை: Article Title பெட்டியில் ஆங்கில விக்கி கட்டுரையின் தலைப்பை இட்டு fetchஐ செடுக்கினால், அக்கட்டுரையின் wikitext கீழுள்ள இரண்டாம் பெட்டியில் கட்டப்படும், இப்பெட்டியில் நீங்களாகவே wikitextஐ உள்ளீடும் செய்யலாம். பின்பு, Start»ஐ சொடுக்கி அது தமிழ் விக்கி இணைபுகளைக்கொண்ட ஆங்கில கட்டுரையின் wikitextஐ மூன்றாம் பெட்டியில் இடும்.
எ.கா இரண்டாம் பெட்டியில்:
[[Abdul Kalam]] is an [[India]]n who served as the [[List of Presidents of India|11th]] [[President of India]].
He was born and raised in [[Rameswaram]], [[Tamil Nadu]].
He completed his studies in [[aerospace engineering]] at [[Madras Institute of Technology]] (MIT – Chennai).
எனத் தந்து Start»ஐ சொடுக்கினால் அதன் முடிவு:
[[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்]] is an [[இந்தியா]]n who served as the [[இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்|11th]] [[இந்தியக் குடியரசுத் தலைவர்]].
He was born and raised in [[இராமேஸ்வரம்]], [[தமிழ்நாடு]].
He completed his studies in [[aerospace engineering]] at [[சென்னை தொழில்நுட்ப நிறுவனம்]] (MIT – Chennai).
என இருக்கும்.
இணையம்: http://wikiproject.net76.net/Wiki/
இதை open sourceஆக வெளியிட விறுப்பம். Doccumentation comments சேர்த்த பின்பு, விரைவிலேயே வெளியிடுவேன். நீங்கள் இதில் பங்களிக்க விறும்பினால் என்னை தொடர்பு கொள்ளவும். இதனைப் பயன் படுத்தி/பரிசோதித்து தங்களின் கருத்துகளைப்பதிய வேண்டுகிறேன். நன்றி
(பி.கு: இதைப்பற்றி முன்பே திரு. கோபியினால் இங்கே பேசப்பட்டிருக்கின்றது.) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:33, 30 சூன் 2012 (UTC)
- பயனுள்ள கருவி. இதே போன்று நீச்சல்காரனும் ஒரு கருவி உருவாக்கி உள்ளார். பார்க்க: விக்கிப்பீடியா:பயனர் கருவிகள் , பயனர்:Neechalkaran/துடுப்புகள் . முக்கிய கட்டுரைகள் பேச்சுப் பக்கத்தில் உங்கள் முயற்சியைப் பற்றி தெரிவித்திருந்தபோது, இது நினைவில் வராமல் போனது--இரவி (பேச்சு) 20:55, 30 சூன் 2012 (UTC)
- நமது பயனர் நீச்சல்காரன் புதிதாக நாவி என்ற சந்திப்பிழை திருத்தி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அதனையும் நமது விக்கிப் பயனர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.--Kanags \உரையாடுக 03:23, 1 சூலை 2012 (UTC)
- இதனையும் பார்க்கவும் -- http://toolserver.org/~mahir/. நன்றி -- மாகிர் (பேச்சு) 04:07, 1 சூலை 2012 (UTC)
- விக்கிப்பீடியா:பயனர் கருவிகள் இருப்பதை இப்போது தான் அறிந்தேன். சந்திப்பிழை
த்திருத்தி எனக்கு மிகவும் பயன் தரும் என்று நினைக்கின்றேன். . இதே போல், ஏதேனும் கருவிக்கான கருத்து இருந்தாலோ அல்லது ஏதேனும் ஒன்றை தானியக்கமாக செய்ய உதவி தேவைப்பட்டாலோ அதனை தெரிவிக்க ஏதேனும் பக்கம் உள்ளதா? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:29, 1 சூலை 2012 (UTC)
- விக்கிப்பீடியா:பயனர் கருவிகள் இருப்பதை இப்போது தான் அறிந்தேன். சந்திப்பிழை
- விக்கிப்பீடியா பேச்சு:பயனர் கருவிகள் பக்கத்தைப் பயன்படுத்தலாம்--இரவி (பேச்சு) 08:18, 3 சூலை 2012 (UTC)
தேடிக்கண்டுபிடித்து மாற்று எங்கே?
தொகுவிக்கித் தொகுப்புப்பலகைக்கு மேல்வரும் தேடிக்கண்டுபிடித்து மாற்று கருவி தற்போது எங்கே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:34, 2 சூலை 2012 (UTC)
- அங்கேயேதான் உள்ளது தென்காசியாரே , உங்களுக்கு வரவில்லையா?..--சண்முகம்ப7 (பேச்சு) 16:42, 2 சூலை 2012 (UTC)
வரவில்லை. அது என்றிலிருந்து வரவில்லையோ அன்றிலிருந்து ,ர, கரங்களும் டேப் (tab) l வரவில்லை. அதே கூகுள் கிரோம் உளாவியையே பயன்படுத்துகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:27, 2 சூலை 2012 (UTC)
- ,ர, கரங்களும் டேப் (tab) l அப்படியென்றால்?, புரியவில்லை?.. நானும் குரோம் உலாவியையே பயன்படுத்துகிறேன். எனக்கு சரியாக வருகிறது. உலாவியை மாற்றி பாருங்கள். மேம்பட்ட tabன் கீழ்தானே உள்ளீர்கள். ஒரு screenshot அனுப்புங்களேன், பார்க்கலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 17:51, 2 சூலை 2012 (UTC)
விக்கிப்பீடியா குறித்த நேர்காணல்
தொகுகட்டுரை.காம் இணையதளத்திற்கு விக்கிப்பீடியா குறித்து நான் அளித்த நேர்காணல் (பேட்டி) கீழ்காணும் முகவரியில் இடம் பெற்றிருக்கிறது.
இப்பேட்டி குறித்த தங்கள் கருத்துக்களை அந்தத் தளத்தின் கீழுள்ள பின்னூட்டம் பகுதியில் பதிவு செய்யலாம். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:51, 3 சூலை 2012 (UTC)
- கட்டுரையை வாசித்தேன். பேட்டி மிக அருமையாக உள்ளது. வாழ்த்துகள் தேனியார்.--Kanags \உரையாடுக 12:23, 3 சூலை 2012 (UTC)
வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 12:33, 3 சூலை 2012 (UTC)
நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய செய்தி. இனி வரும் ஊடகப்பேட்டிகளில் தேனியார் போன்றவர்கள் தமிழ் விக்கியில் என்னென்ன பகுப்புகளில் கட்டுரைகள் குறைவாக உள்ளன என்பதை அறிவித்தால் மேலும் நலன் பயக்கும் என்பது என் கருத்து.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:22, 3 சூலை 2012 (UTC)
- கட்டுரையும் நேர்காணலும் மிகச்சிறப்பாக வந்துள்ளன. ஊடகங்களில் உங்களைப் போன்றவர்களின் பரப்புரை மிகவும் நன்மை பயக்கும். வாழ்த்துகள் பல தேனியார் !!--மணியன் (பேச்சு) 14:13, 3 சூலை 2012 (UTC)
தொடர்ந்து தமிழ் எழுத்துலகில் பரப்புரை நடத்தி வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள். விக்கிப்பீடியா ஆதாரமற்றவை என்ற கேள்வியின் பதிலில் "சீ… சீ… இந்தப் பழம் புளிக்கும்" என்ற உருவகம் படிக்க நன்றாக இருந்தது. ஆனால் மற்றவர்கள் 'பெரிய அறிஞர்கள் இல்லை' என்ற வரி சிறு உருத்தலை ஏதுற்படுத்தியது. அடுத்த முறையிலிருந்து அம்மாதிரியான கேள்விகளுக்கு மேற்கோள் சுட்டுதல், புத்தாக்க ஆய்வு கூடாது போன்ற கொள்கைகளைச் சுட்டி பதிலளித்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. தொடரட்டும் பரப்புரை :) ஸ்ரீகாந்த் (பேச்சு) 19:52, 3 சூலை 2012 (UTC)
- வாழ்த்துகள் தேனி சுப்பிரமணி. விக்கிப்பீடியாவுக்கு நல்ல பரப்புரை. நன்றி. விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மையைப் பற்றி ஒன்றைக் கூறலாம். அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம், எம்.ஐ.டி. போன்ற முன்னணி பல்கலைக்கழகங்கள் முதல் புகழ்பெற்ற மின்னியல் மின்னணுவியல் பொறியியலாளர் கழகமாகிய ஐஇஇஇ (IEEE) வெளியிட்டுள்ள ஆணித்தரமான நூல்களிலும், முன்னணி ஆய்விதழ்களில் உசாத்துணைகளாகவும் சுட்டபெற்றிருக்கின்றன. எந்தத் தகவலாக இருந்தாலும் எங்கு வெளியிட்டாலும் (அச்சு நூல்கள், புகழ்பெற்ற நிறுவனங்கள் வெளியிட்ட நூல்கள்) யாரால் கூறப்பட்டாலும், அவற்றின் உண்மையையும், நம்பகத்தன்மையையும் தேர்வு செய்து கொள்ள வேண்டியது நம் கடமை. பிழையான தகவல்கள் உயர்நிலை பல்கலைக்கழகப் பாடநூல்களிலும் காணப்படுகின்றன. நம்பகத்தன்மையைக் கூட்டுவதற்காகவே விக்கிப்பீடியாவில் மேற்கோள் சுட்டும் பொறுப்பு அதிகம் வலியுறுத்தப்பெறுகின்றது. பிழை என்று கருதினாலோ, ஐயம் எழுப்பினாலோ உடனே தக்க நடவடிக்கை எடுக்க விக்கிப்பீடியாவில் மிக எளிய வசதிகள் உள்ளன. இவை போன்ற வளர்முகமான கருத்துகளை முன் வைத்து கேட்போருக்கும் இணக்கம் ஏற்படும்படி சொல்லி முற்செலுத்தலாம். --செல்வா (பேச்சு) 01:36, 4 சூலை 2012 (UTC)
- தேனி சுப்பிரமணி, நேர்காணலாகத் தாங்கள் அளித்த பரப்புரை மிக்க அருமை! பாராட்டுகள்!
/குறைவான பயன்பாட்டிலிருக்கும் மொழியிலான விக்கிப்பீடியாக்களை விட தமிழ் விக்கிப்பீடியா மிகவும் பின் தங்கியிருக்கிறதே…?/ என்ற கேள்விக்கு நீங்கள் அளித்த விரிவான பதிலில் தமிழ்ப் பேராசிரியர்கள் பற்றிப் பொதுவான விதத்தில் குறையாகச் சொன்னதுபோன்று உணர்ந்தேன். :) வருங்காலத்தில், தமிழ் விக்கியில் தமிழில் புலமை கொண்ட பலர்/சிலர் பங்களிப்பதையும் சுட்டிக்காட்டினால் நலம் என்பது என் கருத்து. உங்கள் சீரிய பணியைப் பாராட்டுகின்றேன்!--பவுல்-Paul (பேச்சு) 03:41, 4 சூலை 2012 (UTC)
- நேர்காணல் பயனுள்ளதாயிருந்தது தேனி. வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:43, 4 சூலை 2012 (UTC)
ஆதாரமில்லை என்று கூறுவதன் காரணம்
தொகுஎனக்கென்னவோ அவர்கள் கூறுவது ஓரளவு சரியென்றே தோன்றுகிறது. உதாரணத்திற்கு நாம் மேற்கோள் தேவை என்று ஒரு வரிக்கு கேட்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை கேட்டுவிட்டு அப்படியே விட்டு விடுகிறோம். நமக்கு அது நம்பத்தகுந்த வரியில்லை என்பது தெரியும். ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் எவ்வாறு அறிவார்கள். (ஆதாரம் தேவை என்ற வார்ப்புரு பற்றி அவர்கள் எப்படி அறிவார்கள்). அதனால் மேற்கோள் தேவை என்று கேட்டும் ஒரு மாத காலத்திற்கு அவ்வரிக்கான மேற்கோள் சேர்க்கப்படாமலிருப்பின் அவ்வரியை நீக்குமாறு வைக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:37, 4 சூலை 2012 (UTC)
- அச்செய்தி/கருத்து உறுதிப்படுத்தப்படாதது என்று படிப்பவருக்கு விளங்கும்தானே! ஒரு மாதம் கழித்து நீக்கினாலும், இடைப்பட்ட காலத்தில் அக்கட்டுரையைப் படித்தவர் என்ன செய்வார்? உறுதிப்படுத்தப்படாத கருத்து என்பதை அவர் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். அதே நேரத்தில் விக்கிப்பீடியாவில் கண்டுபிடிப்புகள் உடனுக்குடன் சேர்க்கப்படுவதும் பெருமை என்றாலும் அவை முற்றிலுமாக உறுதி செய்யப்படாத அல்லது சரிவர உள்வாங்கப்படாத போதும் ஏற்கப்படுவதும் சிக்கலானதே. தமிழ்ச்சூழலில் எவை உறுதி பயக்கும் சான்றுகோள்கள் என்பதும் சிக்கல். மூலிகை பற்றிய ஒரு செய்தி அச்சில் இருந்துவிட்டால் அது தக்க சான்றுகோள் என்பது போதாது. இதேபோலத்தான் மொழியியல், புவியியல் போன்ற பிற பல துறைகளிலும் சிக்கல்கள் உள்ளன. நாம் நம்பும்படியாக நமக்கான சீர்தரங்களை நாம் உருவாக்க போதிய அளவு முனையவில்லை என்றே நினைக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 05:00, 4 சூலை 2012 (UTC)
- வளர்ந்து வரும் அறிமுக நிலையில் தான் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. அதனால் எளியநடைமுறை மிகமிக முக்கியம். நுட்பமான, அவசியமான வார்ப்புருவினை இடுவது என்ற பெயரில், வேலைகளை நாம் அதிகரித்து, புதுப்பயனரை அயர்ச்சியடைய செய்யக்கூடாது. படிக்கும் நபருக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தகவல்கள் குறைவு என்பது நன்கு தெரியும். அவர் இதோடு நிறுத்தி விடப்போவதில்லை. நன்கறிய விரும்பும் ஒருவர், ஒரு பார்வையை உறுதியாக, ஆ.வியினை செய்வார். நாம் ஆதாரம் தேவை என்று சொன்னாலும், சொல்லாவிட்டாலும் பயனரின் நோக்கம், நம்மிடையே இருப்பது போல இருப்பதில்லை. எனவே, எளிய நடைமுறையை வளர்ப்போம்.அப்பொழுதுதான் நிறைய பேர் செயல்படுவர். எண்ணிக்கை அடிப்படையில் தான் நாம் ஆங்காங்கே, விக்கிப்பீடியாவைப்பற்றி பேசுகிறோம். ஆங்கில கட்டுரையை விட, எளிமையான, தரமான தரவுகளைக்கொண்டு கட்டுரைகள் நம்மிடையே இருக்கிறதா? இருப்பின், அக்கட்டுரைகளை காட்டி, பலரையும் ஈடுபடத்தூண்டலாம்.விதிகளை ஓரளவு தளர்த்துதல் நல்லது. --த♥ உழவன் +உரை.. 07:16, 4 சூலை 2012 (UTC)
- ஒரு தகவலுக்காக: பேரா. மனோ சிங்கம் அவர்கள் விக்கிப்பீடியா பற்றி Wikipedia and its ‘undue weight’ policy.--Kanags \உரையாடுக 09:12, 4 சூலை 2012 (UTC)
- வளர்ந்து வரும் அறிமுக நிலையில் தான் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. அதனால் எளியநடைமுறை மிகமிக முக்கியம். நுட்பமான, அவசியமான வார்ப்புருவினை இடுவது என்ற பெயரில், வேலைகளை நாம் அதிகரித்து, புதுப்பயனரை அயர்ச்சியடைய செய்யக்கூடாது. படிக்கும் நபருக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தகவல்கள் குறைவு என்பது நன்கு தெரியும். அவர் இதோடு நிறுத்தி விடப்போவதில்லை. நன்கறிய விரும்பும் ஒருவர், ஒரு பார்வையை உறுதியாக, ஆ.வியினை செய்வார். நாம் ஆதாரம் தேவை என்று சொன்னாலும், சொல்லாவிட்டாலும் பயனரின் நோக்கம், நம்மிடையே இருப்பது போல இருப்பதில்லை. எனவே, எளிய நடைமுறையை வளர்ப்போம்.அப்பொழுதுதான் நிறைய பேர் செயல்படுவர். எண்ணிக்கை அடிப்படையில் தான் நாம் ஆங்காங்கே, விக்கிப்பீடியாவைப்பற்றி பேசுகிறோம். ஆங்கில கட்டுரையை விட, எளிமையான, தரமான தரவுகளைக்கொண்டு கட்டுரைகள் நம்மிடையே இருக்கிறதா? இருப்பின், அக்கட்டுரைகளை காட்டி, பலரையும் ஈடுபடத்தூண்டலாம்.விதிகளை ஓரளவு தளர்த்துதல் நல்லது. --த♥ உழவன் +உரை.. 07:16, 4 சூலை 2012 (UTC)
- தனியெழுத்து_மாய_இடைவெளி_நீக்கம் பக்கத்தில் க்ஷ் / க்ஷ் தெரிவு பற்றி கேட்டிருந்தேன். மணியன் மட்டுமே வாக்களித்தாலும், இலங்கை / பொது வழக்கில் கூட்டெழுத்து இல்லை என்பதால் ksh மூலம் தனியெழுத்து வருமாறு மாற்றியுள்ளேன். கூட்டெழுத்து பொது வழக்கில் இல்லை என்றாலும் அவசியம் கூட்டெழுத்து வேண்டுமென்போர் ksH பயன்படுத்தி அதனை பெறலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே இருக்கும் கூட்டெழுத்து க்ஷ் ஐ தானியங்கி மூலம் பிரிக்கலாம்.(இது தேடுதலை சீராக்கும்). உங்கள் கருத்துக்களை தனியெழுத்து_மாய_இடைவெளி_நீக்கம் பக்கத்தில் தெரியப்படுத்துங்கள்.
- Sr = ஸ்ரீ என்று இருந்த விதியினால் ஸ்ரேயா,ஸ்ருதி போன்ற சொற்களை தட்டச்சு செய்ய இயலாமல் இருந்தது. இப்பொழுது Sri = ஸ்ரீ என மாற்றியுள்ளேன். <சுய-விளம்பரம்>ஸ்ரீ-ஶ்ரீ ஒருங்குறி பற்றிய வலைப்பதிவு </சுய-விளம்பரம்>
இந்த மாற்றங்கள் சில வாரங்களில் இற்றைப்படுத்தப்படும். கருத்துக்கள் இருப்பின் தெரிவிக்கவும். பி.கு : தட்டச்சுக் கருவி விக்கிப்பீடியாவிற்கு மட்டும் தனிப்பட்ட பயன்பாட்டில் இல்லாததால் நான் இவற்றை தன்னிச்சையாக செய்தேன். ஸ்ரீகாந்த் (பேச்சு) 20:25, 3 சூலை 2012 (UTC)
உலகளாவிய கணக்கு
தொகுஎனது தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தில் இருந்து ஆங்கில விக்கிப்பிடியா பக்கத்துக்கு செல்வதற்கு வேறு கணக்கு உருவாக்க வேண்டுமா? அவ்வறில்லாவிட்டால் நான் எவ்வாறு ஆங்கில விக்கியில் பங்களிக்கலாம்?--Fasly (பேச்சு) 05:46, 4 சூலை 2012 (UTC)
- தனியாக கணக்கு உருவாக்கத் தேவையில்லை. தமிழ் விக்கியில் உங்கள் பயனர் விருப்பத் தேர்வுகளில் உலகளாவிய கணக்கு பகுதியைப் பாருங்கள். en:Wikipedia:Unified login --Kanags \உரையாடுக 09:44, 4 சூலை 2012 (UTC)