விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2018
இதை தொகுப்பவர்கள் [[சனவரி 2]], [[2019]] என்று தருவதற்கு பதிலாக [[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 2, 2019|ஜனவரி 2, 2019]] என்று தாருங்கள். அடுத்து வரும் குறுந்தட்டு திட்டங்களுக்கு இது உதவும்.
ஒவ்வொரு வாரமும் காட்சிப்படுத்தப்பட்டவுடன் காட்சிப்படுத்தப்பட்ட தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்
- பீடோ என்பது சாக்ரட்டீசு மரண தண்டனைப் பெற்று நஞ்சு அருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்த நூல் ஆகும்.
- புது பாபிலோனியப் பேரரசு என்பது கிமு 626 முதல் கிமு 539 வரையான மெசொப்பொத்தேமிய வரலாற்றுக் காலப்பகுதியாகும்.
- வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு (படம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவிலும் இரும்புக் காலத்தின் இறுதியில் கிமு 700 - 200க்கும் இடைப்பட்ட காலத்தில் செழித்திருந்த நகரப் பண்பாட்டுக் காலமாகும்.
- தம்மபதம் பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த சமயப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும்.
- விக்டோரியா பொது மண்டபம் (படம்) சென்னையில் விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக 1888 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
- மூன்றாவது ஊர் வம்சம் மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த ஊர் என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்டு பாபிலோனியவை கிமு 2112-2004 காலத்தில் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.
- தம்நார் குகைகள் 51 குடைவரைகளில் பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகளைக் கொண்டு கிபி ஏழாம் நூற்றாண்டில் மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டன.
- விரிசுருள் சிரை நோய் என்பது உடலில் உள்ள சிரைகள் முறுக்கியும், உப்பியும் உள்ள நிலையைக் குறிப்பது ஆகும்.
- பாஃபின் தீவு கனடாவின் மிகப் பெரும் தீவும், உலகில் ஐந்தாவது பெரிய தீவும் ஆகும்.
- கோண்டு மக்கள் (படம்) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டி மொழியை பேசும் திராவிடப் பழங்குடி மக்கள் ஆவர்.
- கிருஷ்ண பக்தி (1949) என்ற திரைப்படத்தில் மட்டுமே எம். எல். வசந்தகுமாரி பாடி நடித்திருந்தார்.
- இசுலாமிய நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி என்பது ஆண்டுக்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.
- மூன்று அடிப்பறக் கோடுகள் என்பது கணக்கியலில் உள்ள மூன்று பகுதிகளான சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் நிதி ஆகியவைகளை கொண்டு கூறப்பட்ட ஒரு கோட்பாடு ஆகும்.
- காலி மும்மொழிக் கல்வெட்டு (படம்) என்பது சீனத் கடற்படைத்தளபதி செங் கே இலங்கைக்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409-இல் சீன, தமிழ், பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு ஆகும்.
- பக்த ஸ்ரீ தியாகராஜா என்ற 1937ஆம் ஆண்டு திரைப்படம் தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.
- பன்னிருவர் என்பது சியா இசுலாமின் ஒரு பிரிவாகும். இசுலாமிய நாடுகளில் ஈரான் மட்டும் இந்நெறியை அலுவல் சமயமாக கொண்டுள்ளது.
- பெரும் சீனப்பஞ்சம் 1959-61-ஆம் ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்டது. இதனால் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் இறந்தனர்.
- தர்மராஜிக தூபி மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது.
- பக்த நந்தனார் (படம்) பிரபல கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் ஆகும், இது 1935 இல் வெளியானது.
- லிமாவின் புதையல் 1820 இல் பெருவின் லிமா நகரில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, புதைக்கப்பட்ட 208 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு புதையல் ஆகும்.
- திரீச்சர் காலின்சு நோய்த்தொகை என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் ஒரு மரபியல் கோளாறு ஆகும்.