விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல்

தொடக்கநிலை உரையாடல்களை இந்த இணைப்பில் காணுங்கள்.

ஒருங்கிணைப்புக் குழு தொகு

இந்த நிகழ்வை நடத்தும் பொருட்டு தன்னார்வலர்கள் இணைந்து, குழு ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள். நிகழ்வு நடப்பதற்கான இடம், தங்குமிடம், உணவு வழங்கல், பயணச் செலவிற்கான நிதிநல்கை, மற்ற ஏற்பாடுகள் குறித்தான பணிகளை இக்குழுவின் உறுப்பினர்கள் செய்துவருகிறார்கள். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:55, 14 ஆகத்து 2023 (UTC)Reply

நிகழ்ச்சி நிரல் தொகு

* இதுவொரு வரைவு மட்டுமே; மாறுதலுக்கு உட்பட்டது.

எண் பரிந்துரைகள் அமர்வின் வடிவம் காலம் (மணி நேரம்)
1 வரவேற்பு உரையாற்றுதல் 0.25
2 விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கி பொதுவகம், விக்கி நூல்கள் - சுருக்கமான அறிமுகம் உரையாற்றுதல் 0.5
3 பயனர்களின் அனுபவப் பகிர்வு உரையாற்றுதல் 0.75
4 "திரும்பிப் பார்ப்போம்" உரையாற்றுதல் 0.5
5 அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் உரையாற்றுதல் 0.5
6 தொழினுட்பம், தொகுத்தல் தொடர்பான கேள்வி-பதில் நிகழ்ச்சி கலந்துரையாடல் 0.50
7 புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த சிந்தனை கலந்துரையாடல் 0.25
8 உலக நாடுகளில் வாழும் பயனர்களை இணையவழியே சந்தித்தல் உரையாற்றுதல் / காணொலி 0.5
9 விருந்தினர் உரை உரையாற்றுதல் 0.25
10 குறிப்பிடத்தக்க பணியாற்றிய பங்களிப்பாளர்களை பெருமைப்படுத்துதல் பரிசளிப்பு 0.25

விண்ணப்பிக்க இறுதி நாள் தொகு

  1. விண்ணப்பிக்க இறுதி நாள் கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 20:58, 24 ஆகத்து 2023 (UTC)Reply
    விண்ணப்பிக்க இறுதி நாள் 24 அல்லது 28ஆ என்பதை தெளிவுபடுத்தவும். கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 21:02, 24 ஆகத்து 2023 (UTC)Reply
27 ஆகத்து 2023 இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம். --சத்திரத்தான் (பேச்சு) 00:58, 25 ஆகத்து 2023 (UTC)Reply

பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் அறிவிப்பு தொகு

விக்கிப்பீடியாவில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ள, இந்தியாவை வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் பயனர்களின் பெயர்களை இயன்றளவு பட்டியலிட்டோம். அவர்களில், இதுவரை விண்ணப்பிக்காத பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் அழைப்பினை இட்டுள்ளோம். இதற்கு உதவிய பக்கங்கள்: வார்ப்புரு:இருபதாண்டுகள் நிறைவுக் கூடல்/விண்ணப்பம் குறித்தான அறிவிப்பு, விக்கிப்பீடியா:இருபதாண்டுகள் நிறைவுக் கூடல்/விண்ணப்பம் குறித்தான அறிவிப்பு, ஒரே செய்தியைப் பல்வேறு பயனர்களுக்கு அனுப்பும் கருவி - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:38, 25 ஆகத்து 2023 (UTC)Reply

நிகழ்வு குறித்தான பின்னூட்டம் தொகு

நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. @சத்திரத்தான் ,மா. செல்வசிவகுருநாதன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். ஒவ்வொரு வார இறுதியிலும் நிகழ்வு நடைபெற கலந்துரையாடிய அனைத்துப் பயனர்களுக்கும் ஒருங்கிணைபுக் குழு சார்பாக மனமார்ந்த நன்றி. சில பயனர்கள் தங்கள் வருகை குறித்து முறையான அறிவிப்பு வழங்காதது வருத்தத்திற்குரியது. ஒரு பயனர் எந்த முன் அறிவிப்பும் இன்றி கலந்து கொண்டார். ஒருவர் வரவில்லை என்பதைத் தெரிவிக்கவே இல்லை (மற்றவர்கள் தங்களால் வர இயலவில்லை என்பதை முன்னரே தெரிவித்தனர்) .இது போன்ற செயல்கள் ஒருங்கிணைப்பாளர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் எனும் அடிப்படைப் புரிதல் பயனர்களுக்கு வேண்டும் என்பதைப் பதிவு செய்கிறேன். மற்ற பயனர்களும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 07:21, 26 செப்டம்பர் 2023 (UTC)

  1. நிகழ்ச்சி ஏற்பாடு சிறப்பாக இருந்தது. பயிற்சியும் 20ம் ஆண்டு கூடலும் சிறப்பு--Balu1967 (பேச்சு) 08:30, 26 செப்டம்பர் 2023 (UTC)
  2. நிகழ்ச்சி ஏற்பாடு சிறப்பாக இருந்தது. பயிற்சியை ஒருங்கிணைத்த சத்திரத்தான் ,மா. செல்வசிவகுருநாதன் இருவருக்கும் நன்றிகள். பயிற்சியில் கலந்து கொள்வதாக தெரிவித்த பயனர்கள் தாங்கள் வர இயலாத சூழ்நிலை ஏற்படின் முன்னதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். தஞ்சைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து நிகழ்த்தியதால் நாளிதழ்களில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த செய்திகள் மாநில அளவிலும் நிகழ்வு நடந்த மண்டல அளவிலும் பரவலாகச் சென்றடைந்துள்ளது. முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கும் நன்றி. நிகழ்விற்கான அறை ஏற்பாடு, உணவு ஏற்பாடு, தமிழ் விக்கிப்பீடியர்களை அங்கீகரிக்கும் நினைவுப் பரிசுகள், விளம்பரப் பதாகைகள் என அனைத்தையும் ஏற்பாடு செய்த சத்திரத்தான் அவர்களுக்கும் நன்றி. நிகழ்வில் முதல் நாள் பயிற்சியில் கருத்தாளர்களாகச் செயல்பட்டவர்களுக்கும், இரண்டாம் நிகழ்வில் விக்கிப்பீடியாவுடனான தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.--மகாலிங்கம் இரெத்தினவேலு 04:47, 28 செப்டம்பர் 2023 (UTC)
  3. ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து என்னால் ஆன உதவியைச் செய்யமுடிந்ததை எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன். நிகழ்வு மிக சிறப்பாக இருந்தது. பெரும்பாலும் அனைத்து நிகழ்வுகளும் நிறைவாகவே இருந்தன.இரண்டாம் நாள் வரவேற்புரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு என் நன்றி. தஞ்சை வரலாற்று உலாவின்போது வந்தவர்களை நேரம் காரணமாக சற்று துரிதப்படுத்த வேண்டிய சூழலுக்கு ஆளானேன். உரிய நேரத்திற்குள் திட்டமிட்ட இடங்களைப் பார்க்கவைக்க நினைத்ததால் அந்நிலை. தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு நல்ல களமாக அமைந்துவிட்டது. சக விக்கிப்பீடியர்களுக்கும், நிகழ்வில் பங்குகொண்டோருக்கும், தஞ்சையைப் பற்றி சிறுஉரையாற்றிய முனைவர் மணி.மாறன் அவர்களுக்கும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும், ஊடகத்தினருக்கும் மனமார்ந்த நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:26, 29 செப்டம்பர் 2023 (UTC)
  4. நிகழ்ச்சி ஏற்பாடு சிறப்பாக இருந்தது. பயிற்சியை ஒருங்கிணைத்த சத்திரத்தான், மா. செல்வசிவகுருநாதன், ஸ்ரீதர், ஜம்புலிங்கம் மற்றும் ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் அணைவருக்கும் நன்றிகள். என்னுடன், தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. நிகழ்வு மிக சிறப்பாக இருந்தது. பெரும்பாலும் அனைத்து நிகழ்வுகளும் நிறைவாகவே இருந்தன. CHURCHIL JERIN (பேச்சு) 18:02, 29 செப்டம்பர் 2023 (UTC)
  5. நிகழ்வை ஒருங்கிணைத்த செல்வ. சிவகுருநாதன், ஸ்ரீதர், சத்திரத்தான், ஜம்புலிங்கம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இரண்டாம் நாள் நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினரைச் சிறப்பு செய்ய எனக்கு வாய்ப்பளித்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி. நிகழ்வுப் படங்களையும், செய்தித்தாள்களில் வெளியான செய்தி வெளியீட்டுப் படங்களையும் இங்கு இணைக்கலாமே...! --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 18:29, 8 அக்டோபர் 2023 (UTC)Reply
    @Theni.M.Subramani:ஐயா, இங்கும், இங்கும் காணுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:36, 8 அக்டோபர் 2023 (UTC)Reply
  6. தவிர்க்க முடியாத சூழலால் என்னால் நிறைவுக் கூடலில் கலந்து கொள்ள முடியவில்லை. ஐயா மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தேன். நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து செய்திகளில் பரப்புரை செய்த அனைவருக்கும் என் நன்றிகளும் பாராட்டுகளும்.--சா. அருணாசலம் (பேச்சு) 04:21, 26 அக்டோபர் 2023 (UTC)Reply

பயணப்படி எந்நாளில் கிடைக்கும்? தொகு

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் வங்கிக் கணக்கு, அலைப்பேசி எண் ஆகியவை பயணப்படிக்காக பெறப்பட்டது. பயணப்படி அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டதா? எந்நாளில் அச்செலவு தரப்படும்? உழவன் (உரை) 04:00, 19 அக்டோபர் 2023 (UTC)Reply

இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கண்ட எனது வினாவிற்கு உகந்த பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். உழவன் (உரை) 02:31, 25 அக்டோபர் 2023 (UTC)Reply
வணக்கம். CIS அமைப்பினர், கலந்துகொண்ட பயனர்களின் வங்கிக் கணக்கில் மதிப்பூதியத்தை இந்த வாரத்தில் செலுத்துவார்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:44, 25 அக்டோபர் 2023 (UTC)Reply
நன்றி. சில நண்பர்கள் கேட்டனர். அவர்களிடத்திலும் சொல்லி விடுகிறேன். உழவன் (உரை) 01:24, 26 அக்டோபர் 2023 (UTC)Reply
சொந்தப் பணிகளின் காரணமாக, CIS அமைப்பினரிடத்து ஆவணங்களை தாக்கல் செய்வதில் என்னால் தாமதம் ஆகிவிட்டது. எனினும், நவம்பர் 13ஆம் தேதிக்குள் மதிப்பூதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:49, 9 நவம்பர் 2023 (UTC)Reply
கலந்துகொண்ட பயனர்களுக்குரிய மதிப்பூதியத் தொகையை CIS அமைப்பினர் நவம்பர் 20 அன்று வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளனர். அனைவரும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் கேள்விகள் இருப்பின், இங்கு தெரிவிக்கலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:19, 21 நவம்பர் 2023 (UTC)Reply
Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல்".