ஸ்டுவாட் பின்னி

இந்தியத் துடுப்பாட்ட வீரர்

ஸ்டுவாட் டெரென்ஸ் ரோஜர் பின்னி (Stuart Binny, பிறப்பு: சூன் 3, 1984), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இந்திய அணிக்காக இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில்ராஜஸ்தான் ராயல்ஸ் அனிக்காக விளையாடியுள்ளார்.

ஸ்டுவாட் பின்னி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 18 18
ஓட்டங்கள் 513 208
மட்டையாட்ட சராசரி 18.32 18.90
100கள்/50கள் 0/1 0/1
அதியுயர் ஓட்டம் 54 74
வீசிய பந்துகள் 940 474
வீழ்த்தல்கள் 10 10
பந்துவீச்சு சராசரி 50.00 40.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/10 4/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/0 7/0
மூலம்: கிரிக்இன்ஃபோ, மே 16 2008

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ஸ்டுவாட் டெரென்ஸ் ரோஜர் பின்னி சூன் 3, 1984 இல் பெங்களூர், கருநாடகத்தில் பிறந்தார். இவரின் தந்தை ரோஜர் பின்னி இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார்.[1][2] இவர் பெங்களூருவில் உள்ள தெ ஃபிராங்க் அந்தோனி பப்ளிக் பள்ளியில் பயின்றார். இவர் 2012 ஆம் ஆண்டில் மயந்தி லான்கர் எனபவரைத் திருமணம் செய்தார்.[3][4]2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளாயாடினார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொகு

2010 தொகு

2010 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது. இந்தத் தொடரில் இவர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். இந்தப் போட்டியில் 8 ஓட்டங்களை எடுத்தார். மேலும் ஒரு ஓவர் வீசி 9 ஓட்டங்களை விட்டுகொடுத்தார். ஆனால் இலக்குகளைக் கைப்பற்றவில்லை.[5]

2011 தொகு

2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது.[6] இதில் துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 6 போட்டிகளில் விளையாடி 37 ஓட்டங்களை எடுத்தார். பந்துவீச்சில் 4 ஓவர்களை வீசி 44 ஓட்டஙகளை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்குகளைக் கைப்பற்றவில்லை.[5]

சர்வதேச போட்டிகள் தொகு

2014 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் அனியில் இவர் இடம்பெற்றார்.ஜனவரி 28, 2014 இல் நடந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 1 ஓவர் வீசி 8 ஓட்டஙகளைக் கொடுத்தார். இலக்குகளைக் கைப்பற்றவில்லை. இவருக்கு மட்டையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.[7] 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் விளையாடினார். ஆனால் அதில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சூன் 17, 2014 இல் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 4 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் சிறந்த பந்துவீச்சான அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார். மேலும் மூன்றாவது போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25* ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அந்தப் போட்டி மழையால் ரத்தானது.[8] இந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2014 இல் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 1 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 78 ஓட்டங்களும் எடுத்தார். பின் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய துடுப்பாட்ட அணியின் வீரர்கள் பட்டியலில் இவர் இடம்பெற்றார். ஆனால் ஒருபோட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

சூலை 17, 2015 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[9] 2016 ஆம் ஆண்டில் புளோரிடாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது போட்டியில் பின்னி வீசிய ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 5 பந்துகளில் ஆறு ஓட்டஙகளை அடித்தார். இந்த ஓவரில் 32 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

சான்றுகள் தொகு

  1. kundu-adds-weight-to-scorecards/1112307/ "After shedding kilos, Binny adds weight to scorecards – Indian Express". பார்க்கப்பட்ட நாள் 1 September 2016. {{cite web}}: Check |url= value (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-02-07. பார்க்கப்பட்ட நாள் 2018-05-20.
  3. "Stuart Binny still discovering himself at 29 – The Times of India". Archived from the original on 2013-09-14. பார்க்கப்பட்ட நாள் 1 September 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "Meet Mayanti Langer, a woman who knows more about cricket than you". பார்க்கப்பட்ட நாள் 1 September 2016.
  5. 5.0 5.1 "IPLT20.com - Indian Premier League Official Website", www.iplt20.com (in ஆங்கிலம்), archived from the original on 2018-03-10, பார்க்கப்பட்ட நாள் 2018-05-20
  6. "Karnataka's Binny signs for Rajasthan Royals". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2011-01-17. {{cite web}}: External link in |publisher= (help)
  7. "India squads for New Zealand tour announced". ESPN Cricinfo. Archived from the original on 2014-01-01. பார்க்கப்பட்ட நாள் 2013-12-31. {{cite web}}: External link in |publisher= (help)
  8. "Stuart Binny breaks Kumble's 21 year old record" (in Hindi). Patrika Group. பார்க்கப்பட்ட நாள் 18 June 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "India tour of Zimbabwe, 1st T20I: Zimbabwe v India at Harare, Jul 17, 2015". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 July 2015.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டுவாட்_பின்னி&oldid=3480184" இலிருந்து மீள்விக்கப்பட்டது