தமிழ்நாட்டில் ஈழப்போராட்ட ஆதரவு, 2008

இந்தியத் தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் இறுகிய உறவு உண்டு. ஈழத்தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்டு, உடைமைகள் சிதைக்கப்பட்டு, உயிர்கள் கொல்லப்படுதை எதிர்த்து தமிழகத்தமிழர்கள் என்றும் குரல்கொடுத்த வண்ணமே இருந்திருக்கின்றார்கள். ஈழப்போராட்டம் இராணுவ முறையில் விரிவுபடுத்தப்பட்டதற்கு தமிழ்நாட்டு தலைவர்களும், இந்தியாவும் காரணாமாக இருந்தன. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நடாத்தும் இன அழிவுக்கு எதிராகவும், இந்திய அரசு வழக்கும் இலங்கை படைத்துறைக்கு வழங்கும் உதவிகளுக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களும் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டில் பல முனைகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தக் கட்டுரை 2008இல் நிலவிய தமிழ்நாட்டில் ஈழப்போராட்டத்திற்கான ஆதரவு நிலையை எடுத்துரைக்கும்.

பின்புலம் தொகு


ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலக எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

ஈழத்தில் இலங்கை படைத்துறை கிழக்கை கைப்பற்றி வடக்கின் பல பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த செயற்பாட்டில் பல் நூறாயிரம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு இடம்பெயர்தார்கள். அவர்கள் மீது குண்டுத்தாக்குதல்கள், செல் வீச்சுகள் இடம்பெற்றன. உணவு மருந்து ஆகியவை தடுக்கப்பட்டன. உதவி புரிந்த பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டன. இலங்கை அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வந்த மக்கள் அனைவரும் காவல்துறையிடம் பதிய வேண்டி கட்டளையிடப்பட்டது. நாளந்தம் பலர் கடத்தப்பட்டனர், கைது செய்யப்பட்டனர்.

2002 இல் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை 2005 இறுதியில் செயலிழந்தது. 2008 ஆரம்பத்தில் இலங்கை அரசால் அதிகார பூர்வமாக கைவிடப்பட்டது. இலங்கை அரசு இராணுவ தீர்வில் நம்பிக்கை கொண்டு செயற்படுகிறது. இலங்கை இராணுவம் சட்டத்துக்கு புறம்பான பல நடவிடிக்கைகளில் ஈடுபட்டு இராணுவ வெற்றியை அடைய முயற்சி செய்கிறது. இலங்கையில் தமிழர்கள் காணாமல் போவதுற்கு, கடத்தப்படுவதற்கு, கொல்லப்படுவதற்கு இலங்கை அரசு முக்கிய காரணம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை ஐக்கிய நாடுகள் உயர் அதிகாரியும் Fact finding mission சென்று உறுதிபடுத்தியுள்ளார். மேலும் தமிழர்கள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழர் வாழ்விடங்கள் அபகரிக்கப்படுகின்றன. அத்யாவசிய பொருட்களை எடுத்து செல்ல தடைவிதிக்கப்படுகிறது. அரசாங்க சார்பற்ற பொது உதவி நிறுவனங்கள் இயங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கத்தைய நாடுகள் மனித உரிமைகளை பேண இலங்கை அரசை வற்புறித்திய போதும், இலங்கை அரசு அதை பொருட்படுத்தவில்லை. இலங்கை மேற்கத்தைய தயவில் இனி இல்லை என்றும், சீனா, பாகிஸ்தான், இரான், ஜப்பான், இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலேயே தங்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இராணுவ, பொருளாதர உதவிகளை வழங்கும் நாடுகளில் இந்தியாவும் இன்று முன்ணில் நிற்கின்றது. இந்த சூழலியே தமிழ்நாட்டின் இன்றைய ஈழ ஆதரவு நிகழுகின்றது.

ஈழப்போராட்ட ஆதரவு புலிகள் ஆதரவா தொகு

இன்று இலங்கையில் முக்கிய தமிழர் போராட்ட அமைப்பாக இருக்கும் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளே. வெளிப்படையாக ஆதரிக்கும் அனேக அமைப்புகள் புலிகளையும் கருத்திய நோக்கில் ஆதரிக்கின்றார்கள். இருப்பினும், ஈழப்போராட்ட ஆதரவு புலிகளுக்கான ஆதரவாக அமையாது. புலிகளுக்கு எதிரான அரசியல் அமைப்புகள் பல இலங்கையில் உண்டு. எடுத்துக்காட்டாக மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை குறிப்பிடலாம். இந்த அமைப்பு இலங்கை அரசு மேற்கொள்ளும் பல்வேறு மனித உரிமை மீறல்களையும் கொலைகளையும் ஆவணப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு புலிகள் செய்த்த பல்வேறு மனித உரிமை மீறல் செயற்களையும் ஆவணப்படுத்தி, அவர்களுக்கு எதிர்ராகா இயங்கும் ஆமைப்புக்களில் ஒன்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழப்போராட்டம் என்பது புலிகளின் வன்முறைப் போராட்டத்தை மட்டும் குறிக்காது. புலிகளுக்கு முன்னர் நடாத்தப்பட்ட அரசியல் போராட்டத்தையும், புலிகளைச் சாராத எதிப்புப் போராட்டங்களையும் சுட்டும். ஈழப்போராட்டம் தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் போணுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு போராட்டதையே கருத்தியல் நோக்கில் சுட்டும்.

வெளிப்படையாக ஆதரிக்கும் அமைப்புகள் தொகு

தேர்தல் அரசியல் கட்சிகள் தொகு

விடுதலைச் சிறுத்தைகள்

மற்ற அமைப்புகள் தொகு

அமைதியாக ஆதரிக்கும் அமைப்புகள் தொகு

எதிர்ப்பற்ற அமைப்புகள் தொகு

மாணவர் போராட்டங்கள் தொகு

மனிதச் சங்கிலி தொகு

வழக்கறிஞர் மன்றம் தொகு

சென்னை உயிர்நீதி மன்றம் வழக்கறிஞர் மன்றம் (Madras High Court Advocate’s Association (MHAA)) ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அக்டோபர் 15 வேலை நிறுத்த போராட்டம் நடாத்தியது.[1]

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் தொகு

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அக்டோபர் 31, 2008 அன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்ககள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. 5500 அமைப்புகளைச் சேர்த 25 இலச்சத்துக்கு மேற்பட்ட வணிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.[2]

திரைத்துறை தொகு

இராமேஸ்வரம் தொகு

தமிழ் திரைத்துரை சார்த 2000 மேற்பட்ட கலைஞர்கள் ராமேஸ்வரத்தில் அக்டோபர் 17, 2008 அன்று பேரணியும் பொதுக்கூட்டமும் நடாத்தினர். இதில் பாலச்சந்தர், பாரதிராஜா, சீமான், சேரன், அமீர், செல்வணி போன்ற முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இதில் வடிவேலு, ராஜேந்தர் போன்ற நடிகர்களும் கலந்து கொண்டனர்.[3]

சென்னை தொகு

சென்னையில் அக்டோபர் 31, 2008 நடந்த எட்டு மணிநேர அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் திரையுலகைச் சேர்த அனேக நடிகர்கள் கலந்து கொண்டார்கள். சரத்குமார், பார்த்தீபன், வடிவேலு, விஜய், விக்ரம், ரஜனிகாந்த், கமலகாசன், சூரியா, அஜித், விவேக், விஜகாந்த், கார்த்திக், மனோராமா, லதா, நயந்தரா உட்பட அனேக நடிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.[4]

மனித உரிமைகள் கழகம் தொகு

நிவாரண நிதி தொகு

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Tamil Nadu: Advocates to boycott courts on Lanka Tamil's issue
  2. Tamil Nadu shuts down for traders' bandh on Eelam Tamils issue
  3. "ராமேஸ்வரம் பேரணி-பொதுக்கூட்டம்: குவிந்தனர் கலைஞர்கள்!". Archived from the original on 2010-06-14. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  4. உண்ணாவிரதம்: ரஜினி, விஜயகாந்த் பங்கேற்பு [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு