ஆத்தூர் (சேலம்)
ஆத்தூர் (Attur) சேலம் மாவட்டத்திலுள்ள உள்ள ஆத்தூர் வட்டம் மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் (சேலம்) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும்.
ஆத்தூர் | |||||||
— தேர்வு நிலை நகராட்சி — | |||||||
ஆள்கூறு | 11°35′54″N 78°35′51″E / 11.598300°N 78.597400°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ் நாடு | ||||||
மாவட்டம் | சேலம் | ||||||
வட்டம் | ஆத்தூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||||||
நகராட்சித் தலைவர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
61,793 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
10.7 சதுர கிலோமீட்டர்கள் (4.1 sq mi) • 244 மீட்டர்கள் (801 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.municipality.tn.gov.in/attur/ |
இது வசிஷ்ட்ட நதியின்(வற்றாத ஆறு எனப்பொருள்) தென் புறம் அமைந்துள்ளது. பேரூராட்சியாக இருந்த இந்நகரம் 1965 சனவரி நான்காம் தேதி நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டது. இந்நகரின் வழியாக தேசியநெடுஞ்சாலை 68 செல்கிறது. மாநில நெடுஞ்சாலைகள் 30 & 157 ஆகியவை இங்கு தொடங்குகின்றன. மாநில நெடுஞ்சாலை 30 ஆத்தூரையும் முசிறியையும் இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை 157 ஆத்தூரையும் பெரம்பலூரையும் இணைக்கிறது
மக்கள் வகைப்பாடு
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 16,371 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 61,793 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 82.9% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,021 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6147 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 916 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 13,797 மற்றும் 384 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.7%, இசுலாமியர்கள் 7.24%, கிறித்தவர்கள் 1.88%, சமணர்கள 0.04% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.[1]
வரலாறு
தொகுதமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு 1886 ஆம் ஆண்டிலேயே பஞ்சாயத்து தோற்றுவிக்கப்பட்டது. வற்றாத ஆறு, வறண்டு விட்டதால், சமீப காலம் வரை தமிழகத்தின் மிகச் செழிப்பான பகுதிகளுள் ஒன்றாக விளங்கிய இது, இப்பொழுது வறட்சியால் வாடுகிறது.இது மிக பழமையான நகரமாக இருந்த போதிலும், பொருளாதாரத்துறையில் வளர்ச்சியடையவில்லை. எனினும், கிழங்கு மாவு, சவ்வரசி, பருத்தி உற்பத்தியில் தமிழ்நாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
பெயர்களும், காரணங்களும்
தொகுஇந்த ஊருக்கு வேறு சில பெயர்களும் உள்ளன.சேலம் மாவட்டக் கையேட்டைத் (Salem District Manual) தயாரித்த "லெபான்" என்ற ஆங்கிலேயர் ஆறு+ஊர் ஆற்றூராகி பின் வழக்கில் ஆத்தூர் என அழைக்கப்பட்டது என்கிறார். ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளதால் ஆற்று+ஓரம்+ஊர் என்பதிலிருந்து திரிந்து பின்னர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என அவர் கருதுகிறார்."அனந்தகிரி" என்றும் இவ்வூர் பெயர் பெற்றிருந்தது. அனந்தகிரி என்றால் மலைகளுக்கிடையே அமைந்துள்ள ஊர் (கிரி என்றால் மலை) எனப் பொருள் உண்டு. ஆத்தூர், அனந்தகிரி என இரு பெயர்களால் இது அழைக்கப்பட்டதாக "ரிச்சர்ட்ஸ்" என்ற ஆங்கிலேயர் தனது குறிப்பில் கூறுகிறார்.
தண்டகாருண்யம்
தொகுதிரேதாயுகத்தில் தண்டகாருண்யம் என வழங்கப்பட்ட இவ்விடத்தில், வசிஷ்டரும் அவரது சீடர்களும் தவம் செய்தார்கள். அம்முனிவர் வெங்கடேச பெருமாளை நினைத்து தவம் செய்தார். அத்தவத்தைப் பாராட்டி வெங்கடேஸ்வரர் அலர்மேலுமங்கையோடு காட்சியளித்தார். ஆகையால் இங்கிருக்கின்ற கோட்டை கோயிலுக்கு "பிரசன்ன வெங்கடேஸ்வரர்" ஆலயம் எனப் பெயர் வந்தது. இந்த நதிக்கு "வசிஷ்டர் நதி" எனப் பெயரிடப்பட்டது. கலியுகத்தில் "தீர்த்தகிரி" என்பவரின் வம்சம் ஆத்தூரை ஆண்டது. அவ்வம்சத்தில் வந்த அனந்தகிரி என்பவன் கோட்டை, கோயில், அரண்மனை ஆகியவற்றைக் கட்டினார். ஆகையால் அந்த அரசனுடைய பெயரால் இவ்வூர் அழைக்கப்பட்டது.
மேலும் இவ்வூருக்கு ஆரையூர், இறைவனரையூர், தபோவனம் என்ற பெயர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கல்வெட்டுகள்
தொகு- சோழ அரசன் பரகேசரி, கோயிலுக்கு நெல் வழங்கியதாக, இக்கோயிலின் கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருக்கிறது.
- இந்த ஊர் மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கியதாகவும் வேறொரு கல்வெட்டு உள்ளது.
- கோட்டைக் கோயில் கல்வெட்டுகள், 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில், நாயக்கர் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்டன. அவற்றில் ஒன்று, விஜயநகர அரசர் கிருஷ்ணராயர் (1509-30) காலத்தில், இப்பகுதியை ஆண்ட திம்மராய நாயக்கர் என்பவன் மகதை மண்டலத்திலுள்ள, ஜனநாத வள மண்டலத்தின் ஆத்தூர் நாடு, ஆத்தூர் கூற்றத்தில், வில்லவராயர் நத்தம் என்ற ஊரை, இறைவனரையூரைச் சேர்ந்த ஸ்ரீரங்கராஜ பட்டருக்குத் தானமாக வழங்கினான் எனக்கூறுகிறது.
முடியாட்சி
தொகுஇந்த ஊரை, கெட்டி முதலி மரபினர் 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஆண்டனர். இவர்களே, இங்கிருக்கின்ற கோட்டையைக் கட்டினார்கள். கி.பி.1689ல் மைசூரை ஆண்ட சிக்க தேவராயன் இப்பகுதியைப் பிடித்தான். பின்னர் இது அயிதர் அலியின் ஆட்சிப் பகுதியாக மாறியது. 1792ல் மூன்றாம் மைசூர் போரின் போது ஆத்தூர், திப்புவிடமிருந்து ஆங்கிலேயர் வசம் மாறியது. ஆங்கிலேயர் ஒரு ராணுவத் தொகுப்பை இங்கு 1799ஆம் ஆண்டு வரை வைத்திருந்தார்கள். பிறகு 1824 வரை ஆயுதங்களின் கிட்டங்கித் தளமாக விளங்கியது. அதன் பின்னர் அந்த மதிப்பையும் இது இழந்தது.
பள்ளி௧ள்
தொகு- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் .
- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர்
- அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி,அம்பேத்கர் நகர்,ஆத்தூர்
- அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைவாசல்
- அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைவாசல்
- அரசு நடுநிலை பள்ளி நடுமேடு மற்றும் புனித மரியாள் RC Cbsc மேல்நிலைப் பள்ளி.
- தாகூர் மேல்நிலைப் பள்ளி
- தாகூர் (நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்) பள்ளி
- தாகூர் மேல்நிலைப் பள்ளி
- முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர்
- சரஸ்வதி ௨யர்நிலைப் பள்ளி, அம்மம்பாளையம், ஆத்தூர் .
- சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர் .
- மாருதி மேல்நிலைப் பள்ளி.
- தி கேம்பிரிட்ஜ் பள்ளி
- பாரதியார் பள்ளிகள்
- ராசிமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- ஈச்சம் பட்டி மல்லியகரை
அலுவலங்கள்
தொகு- தலைமை அஞ்சல் அலுவலகம் , ஆத்தூர் வட்டம் .
- வணிகவரித்துறை அலுவலகம்.
வங்கிகள்
தொகு- ஆத்தூர் நகர கூட்டுறவு வங்கி (வரை எண்-94) (பொது மக்கள் 94 வங்கி என்பர்)
- ஃபெடரல் வங்கி,ஆத்தூர்.
- கரூர் வைசியா வங்கி , ஆத்தூர் .
- கனரா வங்கி, ஆத்தூர்.
- ஐசிஐசிஐ வங்கி , ஆத்தூர் .
- ஆக்சிஸ் வங்கி, ஆத்தூர்.
- பாரத ஸ்டேட் வங்கி (SBI) , ஆத்தூர்.
- இந்தியன் வங்கி, ஆத்தூர்.
- விஜயலட்சுமி வங்கி , ஆத்தூர் .
- ஐ டி பி ஐ வங்கி , ஆத்தூர்
- பேங்க் ஒப் பரோடா , ஆத்தூர்
- தாய்கோ வங்கி , ஆத்தூர்
- கோ-ஆப் சொசைடி(புதுப்பேட்டை) , ஆத்தூர்
- எச் டி எப் சி வங்கி , ஆத்தூர்
- லக்ஷ்மி விலாஸ் வங்கி , ஆத்தூர்
- சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி , ஆத்தூர்
- ஸ்டேட் பேங்க் ஒப் மைசூர் , ஆத்தூர்
- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஆத்தூர்
வழிபாட்டுத்தலங்கள்
தொகு- அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில்
- ஆத்துர் ஶ்ரீ வெள்ளை பிள்ளையார் கோவில்
- ஶ்ரீ திரௌபதி அம்மன் கோவில்
- ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
- புனித ஜெயராக்கினி அன்னை ஆர்சி ஆலயம்
- சிஎஸ்ஐ சியோன் ஆலயம்
- புதுப்பேட்டை மசூதி
- ஶ்ரீ ஆதி சக்தி மாரியம்மன் திருக்கோயில் நடுமேடு
- ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில் அம்பேத்கர் நகர், ஆத்தூர்.
மேற்கோள்கள்
தொகுஊடகக் காட்சியகம்
தொகு-
திரௌபதி அம்மன்
-
கனரா வங்கி,ஆத்தூர்.
-
தொடருந்து மறியல்.
-
நகராட்சி ஊழியர்
-
இலவச வழங்கல்
-
பள்ளிக்குழந்தைகள்
-
காவல் நிலைய முகப்பு
வெளிஇணைப்புகள்
தொகு- ஆத்தூர் நகராட்சி இணையதளம் பரணிடப்பட்டது 2009-01-02 at the வந்தவழி இயந்திரம்