இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலின் பட்டியல் (List of Indian presidential elections) என்பது இந்தியாவில் நடைபெற்ற குடியரசுத் தேர்தல் முடிவுகளின் தொகுப்பாகும். இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது ஒரு மறைமுகத் தேர்தலாகும். இத்தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்களின் மாநில சட்டப் பேரவைகளின் (மாநிலச் சட்டப் பேரவை) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வாக்காளர்கள் வாக்களிப்பர். சட்டமன்றங்களைக் கொண்ட ஒன்றிய பிரதேசங்களின் சட்டமன்றக் கூட்டங்கள், அதாவது, தில்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி. மக்களவை உறுப்பினர்களால் மட்டும் மறைமுகமாக (மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல்) தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரைக் காட்டிலும் குடியரசுத் தலைவரின் தேர்தல் செயல்முறை மிகவும் விரிவான செயலாகும். அரசியலமைப்பு மேலாதிக்கத்துடன் அரசியலமைப்பு குடியரசில் அரசியலமைப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்கக் கடமைகள் கொண்ட அரசியலமைப்பு தலைவராகக் குடியரசுத் தலைவர் இருப்பதால், மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் ரகசியமான முறையில் குடியரசுத் தலைவர் வாக்குச்சீட்டு நடைமுறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[1][2]
தேர்தல் முடிவுகள்
தொகுஆண்டு | கட்சி | கூட்டணி | குடியரசுத் தலைவர் வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | பங்கேற்ற மாநிலங்கள் | முடிவு | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
படம் | பெயர் | வாக்கு | % | ||||||
1950 | இந்திய தேசிய காங்கிரசு | – | இராசேந்திர பிரசாத் | தேர்தல் நடத்தப்படவில்லை | 20 | வெற்றி | |||
1952 | இந்திய தேசிய காங்கிரசு | – | இராசேந்திர பிரசாத் | 507,400 | 83.81% | 20 | வெற்றி | ||
சுயேச்சை | – | கே. டி. சா | 92,827 | 15.33% | 0 | தோல்வி | |||
1957 | இந்திய தேசிய காங்கிரசு | – | இராசேந்திர பிரசாத் | 459,698 | 98.99% | 20 | வெற்றி | ||
சுயேச்சை | – | செளத்ரி அரி இராம் | 2,672 | 0.43% | 0 | தோல்வி | |||
1962 | சுயேச்சை | – | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் | 553,067 | 98.2% | 25 | வெற்றி | ||
சுயேச்சை | – | செளத்ரி அரி இராம் | 6,341 | 1.1% | 0 | தோல்வி | |||
1967 | சுயேச்சை | – | சாகீர் உசேன் | 471,244 | 56.2% | 21 | வெற்றி | ||
சுயேச்சை | – | கோகா சுப்பா ராவ் | 363,971 | 43.4% | 5 | தோல்வி | |||
1969 | சுயேச்சை | – | வி. வி. கிரி | 420,077 | 50.9% | 21 | வெற்றி | ||
சுயேச்சை | – | நீலம் சஞ்சீவ ரெட்டி | 405,427 | 49.1% | 7 | தோல்வி | |||
1974 | இந்திய தேசிய காங்கிரசு | – | பக்ருதின் அலி அகமது | 754,113 | 79.9% | 26 | வெற்றி | ||
புரட்சிகர சோசலிசக் கட்சி | – | திரிதிப் சதூரி | 189,196 | 20.1% | 2 | தோல்வி | |||
1977 | ஜனதா கட்சி | – | நீலம் சஞ்சீவ ரெட்டி | எதிர்ப்பில்லை | 28 | வெற்றி | |||
1982 | இந்திய தேசிய காங்கிரசு | – | ஜெயில் சிங் | 754,113 | 72.7% | 26 | வெற்றி | ||
சுயேச்சை | – | ஆன்சு ராஜ் காணா | 282,685 | 27.3% | 2 | தோல்வி | |||
1987 | இந்திய தேசிய காங்கிரசு | – | ரா. வெங்கட்ராமன் | 740,148 | 72.3% | 27 | வெற்றி | ||
சுயேச்சை | – | வி. ஆர். கிருஷ்ணய்யர் | 281,550 | 27.5% | 4 | தோல்வி | |||
1992 | இந்திய தேசிய காங்கிரசு | – | சங்கர் தயாள் சர்மா | 675,864 | 65.9% | 25 | வெற்றி | ||
சுயேச்சை | – | ஜோர்ஜ் கில்பர்ட் சுவெல் | 346,485 | 33.8% | 6 | தோல்வி | |||
1997 | இந்திய தேசிய காங்கிரசு | – | கே. ஆர். நாராயணன் | 956,290 | 95.0% | 31 | வெற்றி | ||
சுயேச்சை | – | டி. என். சேஷன் | 50,631 | 5.0% | 0 | தோல்வி | |||
2002 | சுயேச்சை | தே.ஜ.கூ. | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் | 922,884 | 89.6% | 28 | வெற்றி | ||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி | இ.மு. | இலட்சுமி சாகல் | 107,366 | 10.4% | 2 | தோல்வி | |||
2007 | இந்திய தேசிய காங்கிரசு | ஐ.மு.கூ. | பிரதிபா பாட்டில் | 638,116 | 65.8% | 23 | வெற்றி | ||
பாரதிய ஜனதா கட்சி | தே.ஜ.கூ. | பைரோன் சிங் செகாவாத் | 331,306 | 34.2% | 7 | தோல்வி | |||
2012 | இந்திய தேசிய காங்கிரசு | ஐ.மு.கூ. | பிரணப் முகர்ஜி | 713,763 | 69.3% | 22 | வெற்றி | ||
தேசிய மக்கள் கட்சி | தே.ஜ.கூ. | பி. ஏ. சங்மா | 315,987 | 30.7% | 8 | தோல்வி | |||
2017 | பாரதிய ஜனதா கட்சி | தே.ஜ.கூ. | ராம் நாத் கோவிந்த் | 702,044 | 65.65% | 21 | வெற்றி | ||
இந்திய தேசிய காங்கிரசு | ஐ.மு.கூ. | மீரா குமார் | 367,314 | 34.35% | 10 | தோல்வி | |||
2022 | பாரதிய ஜனதா கட்சி | தே.ஜ.கூ. | திரெளபதி முர்மு | 676,803 | 64.03% | 22 | வெற்றி | ||
சுயேச்சை | ஐ.எ. | யஷ்வந்த் சின்கா | 380,177 | 35.97% | 8 | தோல்வி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Explainer : How the President of India is Elected?". 21 June 2022.
- ↑ "Explained: How the President of India is elected". 23 June 2022.