இரத்தினபுரி, கோயம்புத்தூர்
இரத்தினபுரி (Rathinapuri) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இங்கு மக்கள் குடியிருப்புகள் நெருக்கத்துடன் இருப்பதுடன், சிறு தொழிற்சாலைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் நாள், கோவையில் தீயசக்திகளால் நடத்தப்பட்ட கார் வெடிப்பு சம்பந்தமாக, இந்திய தேசிய புலனாய்வு முகமையால் கோயம்புத்தூரில், தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களைத் தேடும் சோதனைகள் நடைபெற்ற தமிழ்நாட்டிலுள்ள 45 இடங்களில் இரத்தினபுரியும் ஒன்று.[1][2]
இரத்தினபுரி, கோயம்புத்தூர் Rathinapuri | |
---|---|
ஆள்கூறுகள்: 11°01′37″N 76°58′04″E / 11.026900°N 76.967900°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் மாவட்டம் |
ஏற்றம் | 441 m (1,447 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 641027 |
தொலைபேசி குறியீடு | +91422xxxxxxx |
வாகனப் பதிவு | TN 66 yy xxxx |
அருகிலுள்ள ஊர்கள் | கோயம்புத்தூர், காந்திபுரம், ஆவாரம்பாளையம், டாடாபாத், சங்கனூர், சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி, ஆர். எஸ். புரம், கவுண்டம்பாளையம், துடியலூர், கணபதி, சின்னவேடம்பட்டி, மணியகாரன்பாளையம், நல்லாம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம் |
மாநகராட்சி | கோயம்புத்தூர் மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | பி. ஆர். நடராஜன் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | அம்மன் கே. அர்ஜுனன் |
இணையதளம் | https://coimbatore.nic.in |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 441 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இரத்தினபுரி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 11°01'36.8"N, 76°58'04.4"E (அதாவது, 11.026900°N, 76.967900°E) ஆகும்.
அருகிலுள்ள ஊர்கள்
தொகுகோயம்புத்தூர், காந்திபுரம், ஆவாரம்பாளையம், டாடாபாத், சங்கனூர், சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி, ஆர். எஸ். புரம், கவுண்டம்பாளையம், துடியலூர், கணபதி, சின்னவேடம்பட்டி, மணியகாரன்பாளையம், நல்லாம்பாளையம் மற்றும் பாப்பநாயக்கன் பாளையம் ஆகியவை இரத்தினபுரிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும்.
போக்குவரத்து
தொகுசாலைப் போக்குவரத்து
தொகுஇரத்தினபுரி பகுதிக்கு அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.
தொடருந்து போக்குவரத்து
தொகுஇரத்தினபுரியிலிருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்தில் கோயம்புத்தூர் வடக்கு தொடருந்து நிலையமும், சுமார் 4 கி.மீ. தொலைவில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாகக் காணப்படும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகியவையும் உள்ளன.
வான்வழிப் போக்குவரத்து
தொகுகோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், இரத்தினபுரியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
கல்வி
தொகுபள்ளி
தொகுமாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஒன்று இரத்தினபுரியில் உள்ளது. இப்பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று 26-11-2022 அன்று நடத்தப்பட்டது.[3]
ஆன்மீகம்
தொகுகோயில்
தொகுதமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இரத்தினபுரி தண்டுமாரியம்மன் கோயில் இங்கு அமைந்துள்ளது.[4]
அரசியல்
தொகுஇரத்தினபுரி பகுதியானது, கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் அம்மன் கே. அர்ஜுனன். மேலும் இப்பகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக பி. ஆர். நடராஜன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கார் வெடிப்பு சம்பவம் : கோவையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை" (in ta). https://tamil.indianexpress.com/tamilnadu/nia-officers-kovai-investigation-539082/.
- ↑ "Coimbatore car blast case: NIA raids underway at 45 locations across Tamil Nadu" (in en). 2022-11-10. https://www.hindustantimes.com/india-news/coimbatore-car-blast-case-nia-raids-underway-at-45-locations-across-tamil-nadu-101668064465945.html.
- ↑ The Hindu Bureau (2022-11-26). "Coimbatore Corporation organises ‘Varumun Kappom’ health camp" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/coimbatore-corporation-organises-varumun-kappom-health-camp/article66187019.ece.
- ↑ "Arulmigu Dhandumariamman Temple, Rathinapuri, Coimbatore - 641027, Coimbatore District [TM011651].,Dhandumariamman,Dhandumariamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-05.