தூயவன்
தூயவன் (Thooyavan இறப்பு: 11. சூலை. 1987 ) என்பவர் ( இயற்பெயர் எம். எஸ். அக்பர் ) என்பவர் தமிழ் எழுத்தாளரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.
எழுத்துப் பணிகள்
தொகுஇவர் தமிழ்நாட்டின் நாகூரைச் சேர்ந்தவர். இவரது முதல் நிறுகதையான பூஜைக்கு வந்த மலர் என்ற சிறுகதை முத்திரை கதையாக ஆனந்தவிகடனில் 1967இல் வெளிவந்தது. தினமணி கதிர் வார இதழில் இவர் எழுதிய சிவப்பு ரோஜா என்ற சிறுகதை பரிசுக்கதையாகத் தேர்ந்தெடுக்கபட்டு வெளியானது. நடிகர் மேஜர் சுந்தராஜனின் நாடகக் குழுவுக்காக தீர்ப்பு என்ற நாடகத்தை எழுதினார். மேலும் ஏ. வி. எம். ராஜனின் நடகக் குழவுக்காக பால் குடம் என்ற நாடகத்தை எழுதினார்.
திரைப்படத் துறையில்
தொகுஇவர் கிட்டத்தட்ட 84 திரைப்படங்களுக்கு திரைக்கதை, உரையாடலை எழுதியிருக்கிறார். ஏழு திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இதில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் 12 ஆகும்.
விருதுகள்
தொகு1978இல் பலப்பரிட்சை என்ற திரைப்படத்திற்காக சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றார்.
குடும்பம்
தொகுஇவரது மனைவி கே.ஜெய்புன்னிசா என்பவராவார் இவர் செல்வி என்ற பெயரில் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர்களுக்கு 27, செப்டம்பர். 1968 இல் திருமணம் நடந்தது.[1] இந்த இணையருக்கு பாபு தூயவன் (இக்பால்) என்ற மகனும், யாஸ்மின் என்ற மகளும் என இரு பிள்ளைகளாவர். பாபு தூயவன் திரைப்படக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்று, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளராக உள்ளார்.[2]
தயாரித்த திரைப்படங்கள்
தொகுவசனம் எழுதிய திரைப்படங்கள்
தொகு- பால் குடம்
- புதிய வாழ்க்கை
- மனிதருள் மாணிக்கம்
- திக்குத் தெரியாத காட்டில்
- முடிசூடா மன்னன்
- கல்யாணமாம் கல்யாணம்
- எங்களுக்கும் காலம் வரும்
- கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன
- கோமாதா என் குலமாதா
- மாணவன்
- ஆட்டுக்கார அலமேலு
- அன்புக்கு நான் அடிமை
- தாயில்லாமல் நான் இல்லை
- தாய் மீது சத்தியம்
- தாய் வீடு
- ரங்கா
- அன்னை ஓர் ஆலயம்
- தவப்புதல்வன்
- பொல்லாதவன் 1980
- அன்புள்ள ரஜினிகாந்த்
- பணம் பெண் பாசம்