துவாலு

(எலீஸ் தீவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

துவாலு (Tuvalu,IPA: [t:u:'valu]), என்பது பசிபிக் கடலில் ஹவாய்க்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது முன்னர் எலீஸ் தீவுகள் என அழைக்கப்பட்டது. இதன் அயல் நாடுகளாக கிரிபட்டி, சமோவா மற்றும் பீஜி ஆகியன அமைந்துள்ளன. துவாலுவில் மொத்தம் நான்கு தீவுகள் உள்ளன. மொத்தப் பரப்பளவு 26 சதுர கிமீ ஆகும். இதுவே வத்திக்கானை அடுத்து உலகின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். ஐநா அவையில் உறுப்புரிமை கொண்ட மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடு. உலகின் நான்காவது மிகச்சிறிய நாடு.

துவாலு
கொடி of துவாலு
கொடி
சின்னம் of துவாலு
சின்னம்
குறிக்கோள்: "Tuvalu mo te Atua" (துவாலுவான்)
"Tuvalu for the Almighty"
நாட்டுப்பண்: Tuvalu mo te Atua (Tuvaluan)
Tuvalu for the Almighty
துவாலு அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
புனாபுட்டி
8°31′S 179°12′E / 8.517°S 179.200°E / -8.517; 179.200
ஆட்சி மொழி(கள்)
இனக் குழுகள்
  • 96% துவாலுவான்கள்
  • 4% மற்றவர்கள்
சமயம்
கிறிஸ்தவம் (Church of Tuvalu)[1]
மக்கள்துவாலுவான்
அரசாங்கம்ஒருமுக கட்சி சார்பற்ற நாடாளுமன்ற அரசியல்சட்ட முடியாட்சி
• முடியாட்சி
சார்லசு III
• அளுனர்-நாயகம்
டோஃபிகா வேவாலு ஃபலானி
• பிரதமர்
கௌசியா நடனோ
சட்டமன்றம்நாடாளுமன்றம்
விடுதலை
• ஐ.இ. இடமிருந்து
1 அக்டோபர் 1978
பரப்பு
• மொத்தம்
26 km2 (10 sq mi)[2] (192வது)
• நீர் (%)
negligible
மக்கள் தொகை
• 2021 மதிப்பிடு
11,900 (225வது)
• 2017 கணக்கெடுப்பு
10,645
• அடர்த்தி
475.88/km2 (1,232.5/sq mi) (27வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2016 மதிப்பீடு
• மொத்தம்
$39 மில்லியன்[3] (226வது)
• தலைவிகிதம்
$3,566[3] (156வது)
மொ.உ.உ. (பெயரளவு)2020 மதிப்பீடு
• மொத்தம்
$45 மில்லியன்[3] (194வது)
• தலைவிகிதம்
$2,970[3] (118வது)
ஜினி (2010) 39.1[4]
மத்திமம்
மமேசு (2021)Increase 0.641[5]
மத்திமம் · 130வது
நாணயம் (AUD)
நேர வலயம்ஒ.அ.நே+12
வாகனம் செலுத்தல்இடது பக்கம்
அழைப்புக்குறி+688
ஐ.எசு.ஓ 3166 குறியீடுTV
இணையக் குறி.tv

இந்நாட்டின் ஆதிமக்கள் பொலினேசியர்கள் ஆவார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இத்தீவுகள் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது. எலீஸ் தீவுகள் பிரித்தானியாவினால் 1892 முதல் 1916 வரை ஆளப்பட்டது. 1916இலிருந்து 1974 வரையில் இவை கில்பேர்ட் தீவுகளுடன் இணைந்து நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1974 இல் எலீஸ் தீவு மக்கள் தமது தீவை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட துவாலு என்ற தனித்தீவாக்க வாக்களித்தனர். இதன் படி 1978இல் இது பிரித்தானிய பொதுநலவாய நாடுகளின் கீழ் முழுமையான விடுதலை பெற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "2010 Report on International Religious Freedom – Tuvalu", United States Department of State
  2. "Population by sex, annual rate of population increase, surface area and density" (PDF). United Nations. 2012.
  3. 3.0 3.1 3.2 3.3 "Tuvalu". International Monetary Fund.
  4. "Gini index (World Bank estimate)".. Washington, DC: World Bank Group. 
  5. "Human Development Report 2021/2022" (PDF) (in ஆங்கிலம்). United Nations Development Programme. 8 September 2022. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாலு&oldid=3633540" இலிருந்து மீள்விக்கப்பட்டது