எல்லீஸ் நகர்
எல்லீஸ் நகர் (ஆங்கிலம்: Ellis Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். சென்னை மாகாணத்தில், 1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய அரசு அதிகாரியாக பணிபுரிந்த, திருக்குறளின் அறத்துப்பால் அதிகாரத்தில் முதல் 13 அத்தியாயங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரை எழுதி அச்சிட்ட, பிரான்சிசு வைட் எல்லிசு என்பவரது நினைவாக, இப்பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.[1][2]
எல்லீஸ் நகர் Ellis Nagar | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: 9°54′50″N 78°06′13″E / 9.913800°N 78.103700°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 159 m (522 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625016 |
தொலைபேசி குறியீடு | +91452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், அரசரடி, தத்தனேரி, காளவாசல், கோச்சடை, பழங்காநத்தம், சிம்மக்கல், யானைக்கல், ஜெய்ஹிந்த்புரம் மற்றும் எஸ். எஸ். காலனி |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | டாக்டர். எஸ். அனீஷ் சேகர், இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்ற உறுப்பினர் | பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் |
இணையதளம் | https://madurai.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 159 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எல்லீஸ் நகர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°54′50″N 78°06′13″E / 9.913800°N 78.103700°E (அதாவது, 9°54'49.7"N, 78°06'13.3"E) ஆகும். மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், அரசரடி, தத்தனேரி, காளவாசல், கோச்சடை, பழங்காநத்தம், சிம்மக்கல், யானைக்கல், ஜெய்ஹிந்த்புரம் மற்றும் எஸ். எஸ். காலனி ஆகியவை எல்லீஸ் நகர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற ஆனந்த விநாயகர் கோயில் எல்லிஸ் நகர் பகுதியில் அமைந்துள்ளது.[3]
எல்லீஸ் நகர் பகுதியானது, மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[4] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆவார். இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதியைச் சேர்ந்தது. 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "By the way, who is Ellis?". The Hindu (in Indian English). 2012-03-12. Retrieved 2023-02-08.
- ↑ "200 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்து தங்கக் காசு வெளியிட்ட எல்லீஸ் துரை". Hindu Tamil Thisai. Retrieved 2023-02-08.
- ↑ "Arulmigu Ananda Vinayagar Temple, Ellies Nagar, Madurai - 625016, Madurai District [TM032557].,". hrce.tn.gov.in. Retrieved 2023-08-02.
- ↑ "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. Retrieved 2023-02-08.