கங்கா நடவடிக்கை

உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க எடுத்த நடவடிக்கை

கங்கா நடவடிக்கை (Operation Ganga) நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பிற்கிடையே, உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை உடனடியாக, உக்ரைனின் அண்டை நாடுகளான அங்கேரி, போலந்து, உருமேனியா, சிலோவாக்கியா மற்றும் மால்டோவா நாடுகள் வழியாக வெளியேற்றி, இந்தியாவிற்கு விமானங்கள் மூலம் மீட்டு வருவதே இதன் நோக்கமாகும்.[3][4]

கங்கா நடவடிக்கை
பகுதி: 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு
நடவடிக்கையின் நோக்கம் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை
திட்டமிடல் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியப் பாதுகாப்புப் படைகள்
இலக்கு உக்ரைனிலிருந்து வெளியேறிய இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வருதல்
திகதி 26 பிப்ரவரி 2022
செயற்படுத்தியோர் உக்ரைன் நாட்டின் மேற்கு அண்டை நாடுகளின் அரசுகள் மற்றும் தூதரகங்ககளின் துணையுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய வான்படை மற்றும் ஏர் இந்தியா இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்[1][2]
விளைவு 17,400 (10 மார்ச் 2022 வரை)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் துணையுடன் 26 பிப்ரவரி 2022 அன்று முதல் தொடர்ந்து, உக்ரைன் நாட்டு அதிபர் வலோதிமிர் செலேன்சுக்கி மற்றும் உருசியா நாட்டு அதிபர் விளாதிமிர் பூட்டின் ஆகியோர்களுடன் தொலைபேசி மூலம் பேசி உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களை மீட்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தார்.[5][6] ருமேனியா நாட்டின் தலைநகரான புக்கரெஸ்ட் நகரத்திலிருந்து 249 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு முதல் மீட்பு விமானம் 22 பிப்ரவரி 2022 அன்று புது தில்லியில் தரையிரங்கியது.[7] உக்ரைக்கு மேற்கில் உள்ள நாடுகளுக்கு தப்பி வரும் இந்தியர்களை தங்கும் இடம், உணவு, மருந்து போன்ற வசதிகளை செய்து கொடுக்கவும், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து செயல்படவும், 27 பிப்ரவரி 2022 அன்று இந்தியப் பிரதமர் நான்கு மூத்த அமைச்சர்களை அனுப்பி வைத்தார்.[8][9]

இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான மீட்பு நடவடிக்கையில் இந்திய வான்படை மற்றும் தனியார் விமான நிறுவனங்களான ஏர் இந்தியா இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானகள் பயன்படுத்தப்பட்டது.[2] உக்ரைன் நாட்டு அதிபர் வலோதிமிர் செலேன்சுக்கி மற்றும் உருசியா நாட்டு அதிபர் விளாதிமிர் பூட்டின் ஆகியோர்களுடன், 24 பிப்ரவரி முதல் 7 மார்ச் வரை தொடர்ந்து தொலைபேசி மூலம் பேசி, போர்க்களத்தில் சிக்கியுள்ள இந்தியர்களின் கள நிலைமைகளை அறிந்து கொண்டதுடன், உக்ரைனை விட்டு இந்தியர்கள் வெளியேறுவதற்கு வசதியாக அப்போது தற்காலிக போர் நிறுத்தங்கள் ஏற்படச் செய்தார்.[10][11]

உக்ரைன் நாட்டில் ஏறத்தாழ 20,000 இந்திய மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.[12] அவர்களில் 16,000 பேர் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஆவார்.[13] 5 மார்ச் 2022 முடிய ஏறத்தாழ 18,000 பேர் உக்ரைனின் மேற்கு எல்லையைக் கடந்து, அண்டை நாடுகளில் தங்கினார்கள்.[14][15]

இருப்பினும் உக்ரைன் நாட்டின் கீவ், கார்கீவ் சுமி, மரியபோல் போன்ற நகரங்களில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களிடமிருந்து, தங்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேற்றுவதற்கு அவசரகால நடவடிக்கைகள் எடுக்க கோரியுள்ளனர்.[16][17][18][19].[20][21] மார்ச் 6-ஆம் தேதி வரை ஏறத்தாழ 16,000 இந்தியர்களை, 76 விமானங்களில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.[22][23] மனிதாபிமான நடவடிக்கையாக இந்தியா, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை உக்ரைனுக்கு அனுப்பி வைத்தது.[24][25]

இறுதியாக 8 மார்ச் 2022 அன்று சுமி நகரத்தில் தங்கியிருந்த 674 மாணவர்களை மீட்க, இந்திய அரசின் முயற்சியால் இரு நாடுகளும் ஒரு நாள் போர் நிறுத்தம் மேற்கொண்டது. சுமி நகரத்திலிருந்து 674 மாணவர்களை பொல்தாவா நகரத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் பேருந்துகள் மூலம் மேற்கில் உள்ள லிவீவ் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து தொடருந்து மூலம் போலந்து நாட்டு எல்லைப்புற நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட்னர்.[26][27] கங்கா நடவடிக்கை மூலம் இதுவரை 83 விமானங்கள் மூலம் 17,400 இந்தியர்களை தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.[28]

பின்னணி

தொகு
 
3 மார்ச் 2022 அன்று உக்ரைன் நாட்டில் உள்ள உருசியாவின் இராணுவ நிலைகள்

உக்ரைன் மீது உருசியா படையெடுக்கும் நிலையில் இருப்பதால், கீவ் நகரத்தில் இருக்கும் இந்திய தூதரகம், இந்தியர்கள் உக்ரைன் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற 15 பிப்ரவரி 2022 அன்று அறிவுறுத்தப்பட்டது.[29][29] 24 பிப்ரவரி 2022 அன்று ஏறத்தாழ 4,000 இந்தியர்கள் உக்ரைனை விட்டு அதன் மேற்கு அண்டை நாடுகளின் எல்லைப்புறப் பகுதிகளில் அடைக்கலம் அடைந்தனர்.[30] 26 பிப்ரவரி 2022 அன்று ஆப்பரேஷன் கங்கா நடவடிக்கை தொடங்கப்பட்டது.[31] உக்ரைனிலிருந்து வெளியேறும் இந்தியர்களின் அதிகரித்து வரும் எண்ணிக்கையில் உதவி வழங்குவது கடினமாகி வருவதால், பிப்ரவரி 26 அன்று, தூதரகத்தின் முன் ஒருங்கிணைப்பு இல்லாமல் எல்லைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.[32] 28 பிப்ரவரி 2022 அன்று உக்ரைனில் உள்ள இந்தியர்கள், அதன் மேற்கு அண்டை நாட்டு எல்லைப்புற நகரங்களில் தங்கி இருக்க இந்திய வெளியுறதுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.[33] இந்திய வெளியுறவு அமைச்சகம் உக்ரைனில் உள்ள இந்தியர்களுடன் பலவகையான தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் தொடர்பு கொண்டது.[34][35] துன்பத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களுக்கான இந்திய சமூக நல நிதியை கங்கா நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டது.[36][37][38]

6 மார்ச் 2022 அன்று மதியம் வரை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு 12,400 தொலைபேசி அழைப்புகளும், 9,000 மின்னஞ்சல்களும் உக்ரைன் வாழ் இந்தியர்களிடமிருந்து பெறப்பட்டது.[39] அதே நாளன்று உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம், உக்ரைனிலிருந்து வெளியேற விரும்புபவர்களிடமிருந்து கூகுள் படிவங்கள் மூலம் தரவுகளை சேகரித்தது.[20][21][40]


 
ஐ நா சபை 2005-இல் வெளியிட்ட உக்ரைன் நாட்டின் வரைபடம், 784.93 மைல்கள் (1,263.22 km) நீளம் மற்றும் 346.4 மைல்கள் (557.5 km) அகலம் [41]

இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்த முதல் விமானம் பிப்ரவரி 26 அன்று உருமேனியாவின் தலைநகரான புகாரெஸ்டு நகரத்திலிருந்து இருந்து, பிப்ரவரி 27 அன்று அதிகாலை 2:55 மணிக்கு தில்லியை அடைந்தது.[7][42] 27 பிப்ரவரி 2022க்குள் (நாள் 3) 469 மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். மார்ச் 1 ஆம் தேதிக்குள், 6,000 மேற்பட்ட இந்தியர்களை மீட்டனர்.[43] The next five days saw the number climb to about 16,000.[23] அடுத்த ஐந்து நாட்களில் எண்ணிக்கை 16,000 ஆக உயர்ந்தது.[42] ஏர் இந்தியா, இன்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகிய தனியார் விமானங்கள் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டது[2][43] இந்திய விமானப்படையின் போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III விமானம் மீட்புப்பணிக்கு பலமுறை பயன்படுத்தப்பட்டது.[2]

மீட்புக்கான ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு உதவ பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு தூதர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பினார்.[8] உயர் மட்டச் சிறப்புத் தூதர்களான மத்திய அமைச்சர்கள் - சிவில் விமான போக்குவரத்து, போக்குவரத்து, சட்டம் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர்களான ஜோதிராதித்ய சிந்தியா, கிரேன் ரிஜிஜு, ஹர்தீப் சிங் பூரி ஜெனரல் வி. கே. சிங் ஆகியோர் ஒருங்கிணைப்புக்கு உதவினார்கள்

பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள், வெளிவிவகார அமைச்சர் மற்றும் செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் மீட்பு நடவடிக்கை தொடர்பாக குறைந்தபட்சம் மூன்று உயர்மட்ட கூட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கினார்.[[44][45] இந்திய பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1 அன்று இந்தியக் குடியர்சுத் தலைவர் இராம் நாத் கோவிந்திடம் நிலைமை குறித்து விளக்கினார். மார்ச் 2 அன்று இந்தியா, அதன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உட்பட, மருத்துவ உதவி, கூடாரங்கள், போர்வைகள், தூங்கும் பாய்கள் மற்றும் சோலார் விளக்குகள் போன்ற மனிதாபிமான நிவாரணங்களை அனுப்பியது.[24][25][46]

மீட்பு வழித்தடங்கள்

தொகு

உக்ரைனின் அண்டை நாடுகளின் நகரங்களிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்களை விமானம் மூலம் இந்தியாவின் புது தில்லி, மும்பை நகரங்களுக்கு அழைத்து சென்றனர்.[42][47][48][49]

விமர்சனங்கள்

தொகு

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் பல இந்திய மாணவர்கள் இந்திய அரசின் மீட்பு முயற்சிகளை விமர்சித்துள்ளனர். உக்ரைனில் தங்களின் அவல நிலையை எடுத்துரைக்க அவர்கள் சமூக ஊடகங்களில் பல காணொலிகளை பதிவேற்றினர்.[50] கார்கீவ் மீதான உருசிய ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து விமர்சனம் தீவிரமடைந்தன.[51] பதிலுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் பலர் மாணவர்களை "நன்றியற்றவர்கள்" எனக் குறிப்பிட்டனர்.[52]

பல இந்திய அரசியல்வாதிகள் மற்றும் குடிமக்கள் அரசாங்கத்தின் முயற்சிகளை விமர்சித்துள்ளனர் மேலும் மாணவர்களை மீட்பதில் அது போதுமான அளவு செயல்படவில்லை என்று குற்றம் சாட்டினர். சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்தை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.[53][54][55] பிப்ரவரி 28 அன்று, அடையாளம் தெரியாத இந்திய மாணவர் ஒருவர் கௌரவ் சாவந்த் என்ற இந்திய பத்திரிகையாளரின் உரையில் குறுக்கிட்டு, தங்களுக்கு அரசின் எந்த உதவியும் கிடைக்கவில்லை, அரசின் எந்த பிரதிநிதியும் இல்லை என்று கூறினார்.

மாணவர்களை மீட்கும் பணியில் வட இந்திய மாணவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்ட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். அரசு வெளியிட்ட 10 உதவி எண்களும் வேலை செய்யவில்லை என்றும், மீட்புத் தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் இந்தியில் மட்டுமே இருந்ததால் தமிழ் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டனர்.[56] மேலும் இந்திய தூரதக அதிகாரிகளிடம் ஆங்கிலத்தில் உதவி கேட்டால் இந்தியில் மட்டுமே பதில் அளித்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.[57]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Russia-Ukraine war: Air India, IndiGo, SpiceJet fly to evacuate stranded Indians back home". The Free Press Journal. 28 February 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
  2. 2.0 2.1 2.2 2.3 "IAF joins Operation Ganga, 31 flights to bring back 6,300 Indians stranded in Ukraine". மலையாள மனோரமா. 2 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  3. "IndiGo to join Operation Ganga to evacuate stranded Indian nationals in Ukraine". இந்தியா டுடே. 27 February 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
  4. "Operation Ganga: India deploying Russian-origin Ilyushin-76 planes for evacuation of Indian citizens from Russia". The Print. 3 March 2022. பார்க்கப்பட்ட நாள் 3 March 2022.
  5. Roy, Shubhajit (2022-02-27). "Zelenskyy speaks to Modi after UNSC vote, seeks support". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  6. "Prime Minister speaks to His Excellency President Volodymyr Zelenskyy of Ukraine". Ministry of External Affairs, Government of India. February 26, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  7. 7.0 7.1 Tripathi, Neha LM (2022-02-27). "Indian students return from Ukraine, recall their struggle". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
  8. 8.0 8.1 "PM Narendra Modi sends four Ministers to countries bordering Ukraine". தி இந்து. 2022-02-28. https://www.thehindu.com/news/national/four-union-ministers-to-travel-to-ukraines-neighbouring-countries-to-coordinate-evacuation-of-indians/article65092161.ece. 
  9. Kaushik, Krishn; Mukul, Pranav; Barman, Sourav Roy (2022-03-01). "India sends aid to Ukraine today, 4 ministers to help in evacuation". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  10. "Modi urges Putin to hold direct talks with his Ukrainian counterpart Zelenskyy". தி டிரிப்யூன். PTI. 7 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.{{cite web}}: CS1 maint: others (link)
  11. Ghosh, Poulomi (2022-03-07). "PM Modi speaks with Zelensky, call with Putin scheduled later today". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
  12. "60 per cent of Indians in Ukraine crossed the borders and are safe: Centre submits to Kerala HC". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 2 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
  13. Pandey, Nikhil, ed. (27 February 2022). "Why is Ukraine such a popular choice for Indian medical students?". WION. பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
  14. Kabir, Radifah (2022-03-03). "OpGanga: The Complete Timeline Of Evacuation Flights Bringing Back Indians Stuck In Ukraine". ABP News. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  15. "6,400 Indian national evacuated under Operation Ganga, says Centre". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2022-03-03. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  16. Sharma, Ritu (2022-03-03). "'Our morale is broken, the hostel we stayed in was destroyed in air-strike': Indian students stuck in Pisochyn share ordeal". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  17. Krishnankutty, Pia (2022-03-03). "1,000 students stranded in Kharkiv outskirts, day after India asks citizens to leave city". ThePrint. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  18. "Supreme Court tells Attorney-General to talk to Centre over evacuation of Indian students stranded in Ukraine". தி இந்து. 2022-03-03. https://www.thehindu.com/news/national/supreme-court-summons-attorney-general-after-lawyer-seeks-evacuation-of-indian-students-stranded-in-ukraine/article65186212.ece. 
  19. Razdan, Nidhi (2 March 2022). ""Leave Kharkiv Immediately, Proceed On Foot To...": India's Advisory". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  20. 20.0 20.1 Kaushik, Krishn (2022-03-03). "'Stay in bunker, learn Russian phrases': MoD issues 'survival guidelines' for students stuck in Ukraine". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  21. 21.0 21.1 Ministry of Defence (3 March 2022). "Advisory for Indian Nationals/Students in Ukraine (Kharkiv)". Press Information Bureau, Government of India. Archived from the original on 4 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  22. 15,900 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்: மத்திய அரசு
  23. 23.0 23.1 "India successfully evacuated over 15,920 students from Ukraine via 76 flights". மாத்ருபூமி (இதழ்) English. 6 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
  24. 24.0 24.1 பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (2022-03-02). "NDRF sends relief material to war-hit Ukraine". ThePrint. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  25. 25.0 25.1 "Russia-Ukraine Crisis: India sends relief, medical supplies to war-hit Kyiv". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2022-03-02. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  26. Three flights bring back 674 students evacuated from Sumy, Ukraine
  27. உக்ரைனின் சுமி நகரிலிருந்து இந்தியர்களை மீட்டது எப்படி?
  28. Operation Ganga: Nearly 17,400 Indians brought back to country from Ukraine so far
  29. 29.0 29.1 Kalra, Shyna (2022-02-23). "For Indian Students in Ukraine, It's a War Between Expensive Airfare and Learning Losses". சிஎன்என்-ஐபிஎன். பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
  30. "Operation Ganga: Air India's second flight carrying 250 Indian evacuees from Ukraine lands in Delhi". Firstpost. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 2022-02-27. பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.{{cite web}}: CS1 maint: others (link)
  31. Arnimesh, Shanker (2022-02-27). "Bouquets, PM's message for students back from Ukraine — how BJP pushed its machinery into 'Op Ganga'". ThePrint. பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
  32. Kumar, Akhil, ed. (26 February 2022). ""Don't Go To Border Posts Without...": Advisory From Indian Embassy In Ukraine". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
  33. Achom, Debanish, ed. (28 February 2022). "Don't Reach Borders Directly, Government To Indian Students In Ukraine". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 1 March 2022.
  34. "Control Room established in Ministry of External Affairs in view of the prevailing situation in Ukraine". Ministry of External Affairs, Government of India. February 16, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  35. Dasgupta, Victor (February 27, 2022). "Operation Ganga: Govt Sets Up Dedicated Twitter Handle To Assist In Evacuation of Indians from Ukraine". India.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
  36. "60 per cent of Indians in Ukraine crossed the borders and are safe: Centre submits to Kerala HC". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 2 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  37. "Embassy of India, Riyadh, Saudi Arabia : Revision of Indian Community Welfare Fund Guidelines". Embassy of India, Riyadh, Saudi Arabia. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  38. "Embassy of India, Copenhagen, Denmark : Indian Community Welfare Fund (ICWF)". Embassy of India, Copenhagen, Denmark. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  39. Bhaumik, Anirban (2022-03-06). "Over 15,920 Indians brought back from Ukraine under Operation Ganga". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
  40. "Indian Embassy in Ukraine asks stranded students to fill Google form on urgent basis". இந்தியன் எக்சுபிரசு. 2022-03-06. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
  41. "Where is Ukraine in the World?", World Population Review. Accessed 1 March 2022.
  42. 42.0 42.1 42.2 "Govt launches 'Operation Ganga'; devises plan to evacuate 15,000 Indians". மின்ட். 2022-02-27. பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
  43. 43.0 43.1 "616 Indians Return From Ukraine On 3 IndiGo, Air India Express Flights". என்டிடிவி. 1 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  44. "Ukraine crisis: PM Modi chairs high-level meeting on 'Operation Ganga'". Business Today. 28 February 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  45. "PM Narendra Modi chairs high-level meeting on Ukraine issue". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 February 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.
  46. "Russia-Ukraine War: India sends tonnes of humanitarian aid including medicines, tents, blankets to Ukraine via Poland". Free Press Journal. With Agency Inputs. 2 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-03.{{cite web}}: CS1 maint: others (link)
  47. "'Operation Ganga': Fourth Evacuation Flight Carrying 198 Indians Leaves for Delhi from Bucharest". News18. PTI. 2022-02-27. பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.{{cite web}}: CS1 maint: others (link)
  48. Dutta, Sharangee (28 February 2022). Goswami, Sohini (ed.). "Moldova new route for evacuation, 1,396 Indians brought back since conflict began: MEA". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 28 February 2022.
  49. Sourav Roy Barman, Divya Goyal, Aditi Raja, Ritika Chopra (2022-02-28). "Students stuck at Poland border, India looks at Budapest route". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
  50. "Indian student killed in Ukraine amid criticism over evacuation". Al Jazeera. 1 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
  51. Kuchay, Bilal (3 March 2022). "Tears, anger at airport as Indian students return from Ukraine". www.aljazeera.com (in ஆங்கிலம்).
  52. Mallick, Abhilash (5 March 2022). "Student Criticism & Misinformation: Narratives Around India's Ukraine Evacuation". TheQuint (in ஆங்கிலம்).
  53. C G, Manoj (1 March 2022). "Opp slams Govt: Should have started airlift of students earlier". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/india/opp-slams-govt-should-have-started-airlift-of-students-earlier-7795323/. 
  54. "Grief, Shock, Anger: Netizens, Opposition Slam Centre After Indian Student is Killed in Ukraine’s Kharkiv". News Click. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 1 March 2022. https://www.newsclick.in/grief-shock-anger-netizens-opposition-slam-centre-after-indian-student-killed-ukraines-kharkiv?amp. 
  55. "Government Needs Strategic Plan For Evacuation Of Indians From Ukraine: Rahul Gandhi". என்டிடிவி. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 1 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.{{cite web}}: CS1 maint: others (link)
  56. "வட இந்தியர்களுக்கு முன்னுரிமை.. தூதரக ஹெல்ப்லைன்கள் கூட வேலை செய்யவில்லை!" தமிழக மாணவி வேதனை ஒன்இந்தியா, 2022, மார்ச், 6
  57. "பச்சை தமிழன்".. உக்ரைனிலும் "ஹிந்தியா", எங்களை பார்த்தால் மனுஷனா தெரியலயா.. கொந்தளித்த தமிழ் மாணவர் ஒன்இந்தியா, 2022, மார்ச், 5
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கா_நடவடிக்கை&oldid=3775181" இலிருந்து மீள்விக்கப்பட்டது