கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி

கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Terengganu; ஆங்கிலம்: Kuala Terengganu Federal Constituency; சீனம்: 瓜拉登嘉楼国会议席) என்பது மலேசியா, திராங்கானு, கோலா திராங்கானு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P036) ஆகும்.[8]

கோலா திராங்கானு (P036)
மலேசிய மக்களவைத் தொகுதி
 திராங்கானு
Kuala Terengganu (P036)
Federal Constituency in Terengganu
கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி
(P036 Kuala Terengganu)
மாவட்டம் கோலா திராங்கானு மாவட்டம்
 திராங்கானு
வாக்காளர்களின் எண்ணிக்கை107,081 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிகோலா திராங்கானு தொகுதி
முக்கிய நகரங்கள்கோலா திராங்கானு, கம்போங் சீனா, கோலா திராங்கானு மாவட்டம், சுல்தான் மாமுட் வானூர்தி நிலையம்
பரப்பளவு331 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அகமது அம்சாத் அசிம்
(Ahmad Amzad Hashim)
மக்கள் தொகை129,031 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் கோலா திராங்கானு மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[6][7]

  மலாயர் (90.6%)
  சீனர் (8.6%)
  இதர இனத்தவர் (0.2%)

கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]

கோலா திராங்கானு மாவட்டம்

தொகு

கோலா திராங்கானு மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.

இந்த மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் கோலா நெருசு மாவட்டம், தெற்கில் மாராங் மாவட்டம்; மற்றும் கிழக்கில் தென்சீனக் கடல், திராங்கானு ஆறு ஆகியவை எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா திராங்கானு ஆகும்.

கோலா திராங்கானு

தொகு

திராங்கானு மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரமாகவும்; அரசத் தலைநகரமாகவும் கோலா திராங்கானு விளங்குகிறது. இந்த நகரத்திற்கு 2008 சனவரி 1-ஆம் தேதி கரையோர மரபுரிமை நகரம் எனும் மாநகரத் தகுதி வழங்கப்பட்டது.

இந்த நகரம், திராங்கானு மாநிலத்தின் முக்கியமான அரசியல், பொருளாதார மையமாக இருப்பதுடன், மாநிலத்தின் பல சுற்றுலா மையங்களுக்கான நுழைவாயிலாகவும் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள கம்போங் சீனா, பசார் பெசார் கெடாய் பாயாங் (Pasar Besar Kedai Payang), திராங்கானு மாநில அருங்காட்சியகம், பத்து பூரோக் கடற்கரை (Batu Buruk Beach) போன்றவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாக உள்ளன.

கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி

தொகு
கோலா திராங்கானு மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1974-ஆம் ஆண்டில் கோலா திராங்கானு தொகுதி உருவாக்கப்பட்டது
கோலா திராங்கானு
4-ஆவது மக்களவை P032 1974–1978 முசுதபா அலி
(Mustafa Ali)
பாரிசான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
5-ஆவது மக்களவை 1978–1982 அப்துல் மனான் உத்மான்
(Abdul Manan Othman)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
6-ஆவது மக்களவை 1982–1986
கோலா திராங்கானு
7-ஆவது மக்களவை P033 1986–1990 சுபிர் எம்போங்
(Zubir Embong)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
8-ஆவது மக்களவை 1990–1995 அப்துல் மனான் உத்மான்
(Abdul Manan Othman)
செமாங்காட் 46
9-ஆவது மக்களவை P036 1995–1999 அபுபக்கர் தாவூத்
(Abu Bakar Daud)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
10-ஆவது மக்களவை 1999–2004 சையத் அசுமான் சையத் அகமத் நவாவி
(Syed Azman Syed Ahmad Nawawi)
மாற்று முன்னணி
(மலேசிய இசுலாமிய கட்சி)
11-ஆவது மக்களவை 2004–2008 ரசாலி இசுமாயில்
(Razali Ismail)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008
2008–2013 முகமது அப்துல் வாகித் எண்டுட்
(Mohd Abdul Wahid Endut)
பாக்காத்தான் ராக்யாட்
(மலேசிய இசுலாமிய கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2015 ராஜா கமருல் பகரின் சா ராஜா அகமது
(Raja Kamarul Bahrin Shah Raja Ahmad)
2015–2018 அமாணா
14-ஆவது மக்களவை 2018–2020 அகமது அம்சாத் அசிம்
(Ahmad Amzad Hashim)
மலேசிய இசுலாமிய கட்சி
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

கோலா திராங்கானு தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
மலேசிய இசுலாமிய கட்சி அகமது அம்சாத் அசிம்
(Ahmad Amzad Hashim)
68,369 76.41% + 11.14%  
பாக்காத்தான் அரப்பான் அசான் இசுமாயில்
(Azan Ismail)
21,103 23.59% + 12.25%  
செல்லுபடி வாக்குகள் (Valid) 89,472 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 1,049
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 111
வாக்களித்தவர்கள் (Turnout) 90,632 73.34% - 4.96%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 123,397
பெரும்பான்மை (Majority) 47,266 52.82% + 10.45%  
மலேசிய இசுலாமிய கட்சி வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  7. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  8. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  9. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
  10. "FEDERAL GOVERNMENT GAZETTE" (PDF). P.036 KUALA TERENGGANU. பார்க்கப்பட்ட நாள் 1 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு