சிபித்தாங் மக்களவைத் தொகுதி
சிபித்தாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sipitang; ஆங்கிலம்: Sipitang Federal Constituency; சீனம்: 实必丹联邦选区) என்பது மலேசியா, சபா, உட்பகுதி பிரிவு, சிபித்தாங் மாவட்டம்; பியூபோர்ட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P178) ஆகும்.[5]
சிபித்தாங் (P178) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Sipitang (P178) Federal Constituency in Sabah | |
சிபித்தாங் மக்களவைத் தொகுதி (P178 Sipitang) | |
மாவட்டம் | சிபித்தாங் மாவட்டம் பியூபோர்ட் மாவட்டம் உட்பகுதி பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 45,871 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | சிபித்தாங் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலா பென்யூ |
பரப்பளவு | 3,715 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | சபா மக்கள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | மாட்பாலி மூசா (Matbali Musah) |
மக்கள் தொகை | 66,583 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1995 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
சிபித்தாங் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து சிபித்தாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
சிபித்தாங் மாவட்டம்
தொகுசிபித்தாங் மாவட்டம் என்பது சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். சிபித்தாங் (Sipitang Town) நகரம், சிபித்தாங் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபா மாநிலம் முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோ என்று அழைக்கப்பட்டது.
1884-ஆம் ஆண்டு வரையில், சிபித்தாங் மாவட்டம், புரூணை சுல்தானகத்தின் முன்னாள் பிரதேசமாகும். நவம்பர் 5, 1884-இல், சிபித்தாங்; கோலா பென்யூ ஆகிய நிலப் பகுதிகளை பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு (North Borneo Chartered Company), அப்போதைய புரூணை சுல்தான் விட்டுக் கொடுத்தார்.
சிபித்தாங் கடற்கரை
தொகுபுரூணை விரிகுடாவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் சிபித்தாங் கடற்கரை உள்ளது. லாங் மியோ (Long Mio) மற்றும் லாங் பாசியா (Long Pasia) எனும் சுற்றுச்சூழல் சுற்றுலா கிராமங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன.
இந்தக் கிராமங்களில் தங்கி ஓய்வு எடுப்பதற்காக சபா, சரவாக் மாநிலங்களில் இருந்து அதிகமானோர் வருகை தருகின்றனர். மழைக்காலத்தில் சிபித்தாங்கில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உண்டு.
சிபித்தாங் மக்களவைத் தொகுதி
தொகுசிபித்தாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1995 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சிபித்தாங் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது மக்களவை | P155 | 1995-1999 | யூசோப் யாக்கோப் (Yusof Yacob) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
10-ஆவது மக்களவை | 1999-2004 | |||
11-ஆவது மக்களவை | P178 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008-2013 | சப்பாவி அகமட் (Sapawi Ahmad) | ||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | யமானி அபிஸ் மூசா (Yamani Hafez Musa) | ||
2018-2019 | சுயேச்சை | |||
2019-2020 | பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |||
2020–2022 | சபா மக்கள் கூட்டணி (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022 | மாட்பாலி மூசா (Matbali Musah) | ||
2022–தற்போது வரையில் | சபா மக்கள் கூட்டணி (சுயேச்சை) |
தேர்தல் முடிவுகள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
மாட்பாலி மூசா (Matbali Musah) | சபா மக்கள் கூட்டணி (GRS) | 14,459 | 49.75 | 49.75 | |
அட்னான் பூத்தே (Adnan Puteh) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 9,768 | 33.61 | 11.55 ▼ | |
லகிருள் லத்திகுல் (Lahirul Latigul) | பாக்காத்தான் (PH) | 4,834 | 16.63 | 16.63 | |
மொத்தம் | 29,061 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 29,061 | 97.89 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 626 | 2.11 | |||
மொத்த வாக்குகள் | 29,687 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 45,871 | 63.35 | 16.58 ▼ | ||
Majority | 4,691 | 16.14 | 12.70 | ||
சபா மக்கள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.