எருசலேம்

(செருசலேம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யெரூசலம் அல்லது எருசலேம் (Jerusalem) என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது.

יְרוּשָׁלַיִם
யெருசலையிம்
القُدس
அல்-குத்சு
யெரூசலம் (எருசலேம்)
மேல் இடமிருந்து: கிவாட் க-அரபா, மமில்லா, பழைய நகர், பாறைக் குவிமாடம், சோக், சட்டமன்றம், மேற்குச் சுவர், தாவீதின் கோபுரம், பழைய நகர் சுவர்கள்
மேல் இடமிருந்து: கிவாட் க-அரபா, மமில்லா, பழைய நகர், பாறைக் குவிமாடம், சோக், சட்டமன்றம், மேற்குச் சுவர், தாவீதின் கோபுரம், பழைய நகர் சுவர்கள்
יְרוּשָׁלַיִם யெருசலையிம் القُدس அல்-குத்சு யெரூசலம் (எருசலேம்)-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் יְרוּשָׁלַיִם யெருசலையிம் القُدس அல்-குத்சு யெரூசலம் (எருசலேம்)
சின்னம்
அடைபெயர்(கள்): Ir ha-Kodesh (புனித நகர்), Bayt al-Maqdis (கடவுளின் வீடு)
நாடுஇசுரேல்
மாவட்டம்யெரூசலம் மாவட்டம்
அரசு
 • மாநகரத் தலைவர்நிர் பார்கட்
பரப்பளவு
 • நகரம்125.2 km2 (48.3 sq mi)
 • மாநகரம்
652 km2 (252 sq mi)
ஏற்றம்
754 m (2,474 ft)
மக்கள்தொகை
 (2012)
 • நகரம்8,01,000
 • அடர்த்தி6,400/km2 (17,000/sq mi)
 • பெருநகர்
10,29,300
இனம்Jerusalemite
நேர வலயம்ஒசநே+2 (IST)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (IDT)
இடக் குறியீடு(கள்)வெளிநாடு: +972-2; உள்ளூர்: 02தொலைபேசிக் குறியீடு
இணையதளம்www.jerusalem.muni.il

எருசலேம் என்பது எபிரேய மொழியில் יְרוּשָׁלַיִם (யெருசலையிம்) என்றும், அரபியில் அல்-குத்சு (القُدس) என்றும் அழைக்கப்படுகிறது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்குப் புனித தூயகம் என்றும் பொருள்[1].

கிழக்கு எருசலேமையும் உள்ளடக்கிப் பார்த்தால் எருசலேம் நகரம் இசுரேல் நாட்டின் மிகப் பெரிய நகரம் என்பது மட்டுமன்றி, மிகப்பெரும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள நகரமும் ஆகும். இந்நகரில் 801,000 மக்கள் வாழ்கின்றார்கள். இதன் பரப்பளவு 125 சதுர கி.மீ (48.3 சதுர மைல்) ஆகும். பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரம் யூதேய மலைப்பகுதியில், மத்தியதரைக் கடலுக்கும் சாக்கடலின் வடக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது.[2][3] ஆபிரகாமிய சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற யூத சமயம், கிறித்தவ சமயம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுக்கும் எருசலேம் ஒரு புனித நகராக உள்ளது.

எருசலேமின் நீண்டகால வரலாற்றை நோக்கும் போது, அந்நகரம் இருமுறை அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது; 23 தடவை முற்றுகையிடப்பட்டது; 52 தடவை தாக்குதலுக்கு உள்ளானது; 44 தடவை கைப்பற்றப்பட்டது.[4] நகரத்தின் பழைய பகுதியில் கி.மு. 4ஆம் ஆயிரமாண்டிலிருந்தே மக்கள் குடியேற்றம் இருந்துவந்துள்ளது.[5] இவ்வாறு எருசலேம் உலகப் பழம் நகரங்களுள் ஒன்றாக எண்ணப்படுகிறது. மதில்சுவர்களைக் கொண்ட பழைய எருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்து (World Heritage) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.[6] இது நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது. அவை: அர்மீனியக் குடியிருப்பு, கிறித்தவக் குடியிருப்பு, யூதக் குடியிருப்பு மற்றும் முஸ்லிம் குடியிருப்பு என்பனவாகும்.[7]

சொல் பொருள்

தொகு

இந்நகர் உருசலிமம் (Rušalimum/Urušalimum) (சலீமின் அத்திவாரம்)[8] என அழைக்கப்பட்டதாகப் புராதன எகிப்தின் இரண்டு கி.மு. 19ம், 18ம் நூற்றாண்டு குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது[9][10]

வரலாறு

தொகு

எருசலேம் 5000 வருட வரலாற்றைக் கொண்டது.[11][12] இது சீயோசிய மற்றும் பாலஸ்தீன தேசியவாதத்திற்குக் காரணமுமாகும். உதாரணத்திற்கு: இசுரேலிய தேசியவாதிகளாகச் சீயோனியர்களுக்கு யூத கால வரலாறு முக்கியத்துவமிக்கது.[13][14] அதேவேளை, இசுலாமியர் மற்றும் யூதரல்லாதவர்களுக்கு அந்நகரின் வரலாறு முக்கியத்துவமிக்கது. அவர்கள் தங்கள் முன்னோர் இவ்விடத்தில் வாழ்ந்ததாகக் கருதுகின்றனர்.[15][16]

எருசலேமின் வரலாற்றுக் காலங்களின் மேலோட்டம்

தொகு
எகிப்திய புதிய பேரரசு
ஜெபுசேயர்
இசுரயேல் - யூதேயா (தாவீதின் குலம்)
புது அசீரியர்
புது பாபிலோனியர்
மசிடோனியர்கள்
சசனிட் பேரரசு
அயூபிட் பேரரசு
மம்லுக் சுல்தான்
இசுரேல் மற்றும் யோர்தான்
கி.மு. 2000
கி.மு. 1500
கி.மு. 1000
கி.மு. 500
கி.பி. 0
கி.பி. 500
கி.பி. 1000
கி.பி. 1500
கி.பி. 2000
கி.பி. 2500

     யூதர்      இசுலாமியர்      கிறித்தவர்      யோர்தான் ஆக்கிரமிப்பு      பிறர்


யூதர்களின் புனித நகரம்

தொகு
 
எருசலேம்: அழுகைச் சுவர் (மேற்குச் சுவர்) விரிநோக்கு; பின்னணியில் பாறைக் குவிமாடமும் (இடப்புறம்), அல்-அக்சா மசூதியும் (வலப்புறம்).

பழைய ஏற்பாட்டின்படி, இசுரயேலின் மன்னர் தாவீது எருசலேம் நகரை இசுரயேல் ஐக்கிய இராச்சியத்தின் தலைநகராக சுமார் கி.மு. 1000 ஆண்டளவில் நிறுவினார். தாவீது மன்னரின் மகன் சாலமோன் எருசலேமில் புகழ்வாய்ந்த கோவிலைக் கட்டியெழுப்பினார். இவ்வாறு எருசலேம் யூதா நாடு மற்றும் இசுரயேல் நாடு இரண்டும் இணைந்த ஐக்கிய நாட்டுக்கு மாபெரும் புனித நகராக மாறியது.[17]

 
எருசலேம் - கோவில் மலைத் தோற்றம்: முன்பகுதியில் மேற்குச் சுவர், பின்னணியில் பாறைக் குவிமாடம்.

கிறித்தவர்களின் புனித நகரம்

தொகு

புதிய ஏற்பாட்டின்படி, இயேசு கிறிஸ்து சுமார் கி.பி. 30இல் எருசலேமுக்கு வெளியே சிலுவையில் அறையுண்டு இறந்தார். அவர் உயிர்நீத்த சிலுவையை கான்ஸ்டன்டைன் மன்னனின் தாய் புனித ஹெலென் என்பவர் கி.பி. 300 அளவில் எருசலேமில் கண்டெடுத்தார். இவ்வாறு கிறித்தவர்களுக்கு எருசலேம் புனித நகரமாயிற்று.

இசுலாமியரின் புனித நகரம்

தொகு
 
எருசலேம்: கோவில் மலைமேல் அமைந்த பாறைக் குவிமுக மாடம்.

மெக்கா, மதீனா ஆகிய நகரங்களுக்கு அடுத்த நிலையில் இசுலாமியர் எருசலேமைத் தங்கள் புனித நகராகக் கருதுகின்றனர். கி.பி. 610ஆம் ஆண்டில் இசுலாமியர் எருசலேமை நோக்கித் தொழுகை நடத்தினார்கள். 620இல் முகம்மது நபி எருசலேமிலிருந்து விண்ணகப் பயணம் சென்று திரும்பினார் என்று இசுலாமியர் நம்புகின்றனர்.

இவ்வாறாக, எருசலேமின் பழைய நகர்ப்பகுதி உலகப் பெரும் சமயங்களுள் மூன்றினுக்குப் புனித நகராக விளங்குகிறது. அப்பகுதியின் பரப்பளவு 0.9 சதுர கி.மீ (0.35 சதுர மைல்) மட்டுமே ஆகும். அங்கே புனித இடங்களாக இருப்பவை: கோவில் மலை, "அழுகைச் சுவர்" என்று அழைக்கப்படுகின்ற மேற்குச் சுவர், திருக்கல்லறைத் தேவாலயம், பாறைக் குவிமாடம், அல்-அக்சா மசூதி.

எருசலேம் பற்றிய நிலைப்பாடுகள்

தொகு

இசுரயேல் நாடு தன் தலைநகராக எருசலேமைக் கருதுகின்றது.[5][18] எருசலேம் நித்திய காலத்துக்கும் தன் தலைநகராக இருக்கும் என்று 1949இல் இசுரயேல் அறிவித்தபோதிலும் பன்னாட்டளவில் எந்த நாடும் அந்த நிலைப்பாட்டை ஏற்கவில்லை. பாலத்தீன மக்களுக்கென வருங்காலத்தில் உருவாக்கப்படவிருக்கின்ற தன்னுரிமைகொண்ட பாலத்தீன நாட்டின் தலைநகராக எருசலேம் அமையவேண்டும் என்பது இன்றைய பாலத்தீன ஆட்சியமைப்பின் (Palestinian Authority) கொள்கையாகும்.[19] இசுரேல் சட்டப்படி எருசலேம் அந்நாட்டின் தலைநகரம் எனக்குறிக்கப்படுகிறது. இசுரேலின் குடியரசுத் தலைவர் உறைவிடம், அரசு அலுவலகங்கள், நாடாளுமன்றம் ஆகியவை அங்கு அமைந்துள்ளன. பாலஸ்தீன அதிகார அமைப்பு வருங்காலத்தில் அமையக்கூடிய பாலத்தீன நாட்டின் தலைநகராக கிழக்கு எருசலேமைக் கருதுகிறது. ஐக்கிய நாடுகள் அவையும் பெரும்பாலான உலக நாடுகளும் இந்நகரை இசுரேலின் தலைநகரம் என ஏற்றுக்கொள்வதில்லை. அவை இந்நகரின் எதிர்கால நிலை இசுரேல்-பாலத்தீன அதிகார அமைப்பிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளால் முடிவு செய்யப்பட வேண்டும் என்ற நிலைபாட்டைக் கொண்டுள்ளன. பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் டெல் அவீவ் அல்லது எருசலேமின் புறநகர்ப் பகுதிகளிகளில் அமைந்துள்ளன.[20]

இசுரயேல்-பாலஸ்தீன மோதலும் எருசலேமின் சட்ட உரிமை நிலையும்

தொகு
 
ஐ.நா. 1947இல் பரிந்துரைத்த இசுரயேல்-பாலஸ்தீன எல்லைக்கோடு.

முதலாம் உலகப் போரின்போது பாலஸ்தீனப் பகுதியை உள்ளடக்கியிருந்த ஒட்டோமானிய அரசு செருமனியை ஆதரித்தது. செருமனியும் அதன் கூட்டுநாடுகளும் போரில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து பிரித்தானிய மற்றும் பிரான்சு அரசுகள் பாலஸ்தீனத்தைத் தமக்குள் பங்கிட்டுக்கொண்டன. 1917இலிருந்து 1948 வரை அங்கு ஆதிக்கம் செலுத்திய பிரித்தானிய அரசு ஆட்சியைக் கைவிட்டபோது அரபு-இசுரயேல் எல்லைகள் வரையறுப்பது பற்றிய தெளிவு இருக்கவில்லை.

1948இல் நிகழ்ந்த அரபு-இசுரயேலிப் போரின் விளைவாக வரையப்பட்ட எல்லைக்கோட்டின்படி, எருசலேமின் பழைய நகர்ப்பகுதி முழுவதும் யோர்தான் நாட்டு எல்லைக்குள் வந்தது. ஆனால், 1967இல் நிகழ்ந்த ஆறு நாள் போரில் இசுரயேல் எருசலேமின் பழைய நகர்ப்பகுதியையும் கிழக்குப் பகுதியையும் யோர்தானிடமிருந்து கைப்பற்றித் தன்னோடு இணைத்துக்கொண்டது.

இவ்வாறு இணைத்துக்கொண்டதை பன்னாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் உலக நாடுகள் சட்ட மீறுதலாகக் கருதின. கிழக்கு எருசலேம் பாலஸ்தீனப் பகுதி என்றும், அது தற்போது இசுரயேலின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் பன்னாட்டுச் சட்டக் கருத்து உள்ளது. ஆனால், எருசலேம் முழுவதும் இசுரயேலுக்கே சொந்தம் என்று இசுரயேல் நாடு உரிமை பாராட்டுவதோடு, 1980இல் "ஒருங்கிணைக்கப்பட்ட எருசலேம் நகரம் இசுரயேலின் தலைநகராய் இருக்கும்" என்றும் அறிவித்துச் சட்டம் இயற்றியது.

எருசலேம் நகரம் பிளவுபடக் கூடாது என்றும், முழு நகரமும் இசுரயேலின் ஆட்சிக்கு உட்பட்டதாய் இருக்கவேண்டும் என்றும் இசுரயேல் கூறுகிறது. 1967இல் இசுரயேல் கைப்பற்றிய கிழக்கு எருசலேம் பகுதியாவது தம் ஆட்சிக்கு உரியது என்று பாலஸ்தீனியர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள்.

இசுரயேல் அரசின் முதன்மை நிறுவனங்கள் எருசலேமில்தான் உள்ளன. க்னெஸ்ஸெட் என்று அழைக்கப்படும் இசுரயேல் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் போன்றவை மேற்கு எருசலேமின் "புதிய பகுதியில்" அமைந்துள்ளன.

2000 ஆண்டளவில் இசுரயேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதி கொணரும் முயற்சியாக, எருசலேமின் அரபுப் பகுதிகள் பாலஸ்தீனத்துக்குச் சேர வேண்டும் என்றும், எருசலேமின் யூதப் பகுதிகளை இசுரயேல் தக்கவைத்துக் கொள்ளும் என்றும், இரு தரப்பினரும் கோவில் மலை என்னும் பகுதியின் கீழ் நிகழும் அகழ்வாய்வுகளை இணைந்து நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. கொள்கையளவில் இப்பரிந்துரை ஏற்கப்பட்டது, ஆனால் நடைமுறையில் ஒன்றும் நிகழவில்லை. எருசலேமின் புனித இடங்கள் பாலஸ்தீனக் கட்டுப்பாட்டுக்குள் வருவதை இசுரயேல் எதிர்க்கிறது. அதுபோலவே, கிறித்தவ மற்றும் இசுலாமிய புனித இடங்கள் இசுரயேலின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது அம்மதங்களைச் சார்ந்தவர்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதில்லை என்று பாலஸ்தீனம் முறையிடுகிறது.

இசுரயேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து நிலவுகின்ற மோதலில் ஹமாஸ் மற்றும் ஹெஸ்புல்லா ஆகிய தீவிர இயக்கங்களும் ஈடுபட்டுள்ளன. இன்றைய சூழ்நிலையில், ஈரான், சிரியா ஆகிய நாடுகள் அரபு-இசுரயேலி பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாமல் தடுக்கின்றன என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.[21]

புவியியல்

தொகு

காலநிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், Jerusalem (1881–2007)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 23.4
(74.1)
25.3
(77.5)
27.6
(81.7)
35.3
(95.5)
37.2
(99)
36.8
(98.2)
40.6
(105.1)
44.4
(111.9)
37.8
(100)
33.8
(92.8)
29.4
(84.9)
26.0
(78.8)
44.4
(111.9)
உயர் சராசரி °C (°F) 11.8
(53.2)
12.6
(54.7)
15.4
(59.7)
21.5
(70.7)
25.3
(77.5)
27.6
(81.7)
29.0
(84.2)
29.4
(84.9)
28.2
(82.8)
24.7
(76.5)
18.8
(65.8)
14.0
(57.2)
21.5
(70.7)
தினசரி சராசரி °C (°F) 9.1
(48.4)
9.5
(49.1)
11.9
(53.4)
17.1
(62.8)
20.5
(68.9)
22.7
(72.9)
24.2
(75.6)
24.5
(76.1)
23.4
(74.1)
20.7
(69.3)
15.6
(60.1)
11.2
(52.2)
17.53
(63.56)
தாழ் சராசரி °C (°F) 6.4
(43.5)
6.4
(43.5)
8.4
(47.1)
12.6
(54.7)
15.7
(60.3)
17.8
(64)
19.4
(66.9)
19.5
(67.1)
18.6
(65.5)
16.6
(61.9)
12.3
(54.1)
8.4
(47.1)
13.5
(56.3)
பதியப்பட்ட தாழ் °C (°F) -6.7
(19.9)
-2.4
(27.7)
-0.3
(31.5)
0.8
(33.4)
7.6
(45.7)
11.0
(51.8)
14.6
(58.3)
15.5
(59.9)
13.2
(55.8)
9.8
(49.6)
1.8
(35.2)
0.2
(32.4)
−6.7
(19.9)
மழைப்பொழிவுmm (inches) 133.2
(5.244)
118.3
(4.657)
92.7
(3.65)
24.5
(0.965)
3.2
(0.126)
0
(0)
0
(0)
0
(0)
0.3
(0.012)
15.4
(0.606)
60.8
(2.394)
105.7
(4.161)
554.1
(21.815)
ஈரப்பதம் 72 69 63 58 41 44 52 57 58 56 61 69 58.3
சராசரி மழை நாட்கள் 12.9 11.7 9.6 4.4 1.3 0 0 0 0.3 3.6 7.3 10.9 62.0
சூரியஒளி நேரம் 192.2 226.3 243.6 267.0 331.7 381.0 384.4 365.8 309.0 275.9 228.0 192.2 3,397.1
Source #1: Israel Meteorological Service[22][23]
Source #2: Hong Kong Observatory for data of sunshine hours[24]

அகலப் பரப்பு காட்சி

தொகு
 
ஒலிவ மலையிலிருந்து அகலப் பரப்பு காட்சி

உசாத்துணை

தொகு
  1. எருசலேம்
  2. Largest city:
  3. "Press Release: Jerusalem Day" (PDF). Central Bureau of Statistics. 24 May 2006. பார்க்கப்பட்ட நாள் 10 March 2007.
  4. "Do We Divide the Holiest Holy City?". Moment Magazine. Archived from the original on 3 ஜூன் 2008. பார்க்கப்பட்ட நாள் 5 March 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help). According to Eric H. Cline’s tally in Jerusalem Besieged.
  5. 5.0 5.1 "Timeline for the History of Jerusalem". Jewish Virtual Library. American-Israeli Cooperative Enterprise. பார்க்கப்பட்ட நாள் 16 April 2007.
  6. "Old City of Jerusalem and its Walls". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 11 September 2010.
  7. Ben-Arieh, Yehoshua (1984). Jerusalem in the 19th Century, The Old City. Yad Izhak Ben Zvi & St. Martin's Press. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-44187-8.
  8. Binz, Stephen J. (2005). Jerusalem, the Holy City. Connecticut, USA.: Twenty-Third Publications. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58595-365-3. பார்க்கப்பட்ட நாள் 17 December 2011. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  9. G. Johannes Botterweck, Helmer Ringgren (eds.) Theological Dictionary of the Old Testament, (tr. David E. Green) William B. Eerdmann, Grand Rapids Michigan, Cambridge, UK 1990, Vol. VI, p. 348
  10. "''The El Amarna Letters from Canaan''". Tau.ac.il. பார்க்கப்பட்ட நாள் 11 September 2010.
  11. Azmi Bishara. "A brief note on Jerusalem". Archived from the original on 5 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 September 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. Daniel Pipes. "Constructing a Counterfeit History of Jerusalem". பார்க்கப்பட்ட நாள் 22 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. “No city in the world, not even Athens or Rome, ever played as great a role in the life of a nation for so long a time, as Jerusalem has done in the life of the Jewish people.” டேவிட் பென்-குரியன், 1947
  14. “For three thousand years, Jerusalem has been the center of Jewish hope and longing. No other city has played such a dominant role in the history, culture, religion and consciousness of a people as has Jerusalem in the life of Jewry and Judaism. Throughout centuries of exile, Jerusalem remained alive in the hearts of Jews everywhere as the focal point of Jewish history, the symbol of ancient glory, spiritual fulfillment and modern renewal. This heart and soul of the Jewish people engenders the thought that if you want one simple word to symbolize all of Jewish history, that word would be ‘Jerusalem.’” Teddy Kollek (DC: Washington Institute For Near East Policy, 1990), pp. 19–20.
  15. "Throughout history a great diversity of peoples has moved into the region and made Palestine their homeland: Canaanites, Jebusites, Philistines from கிரீட், Anatolian and Lydian Greeks, Hebrews, அமோரிட்டு மக்கள், Edomites, Nabateans, அரமேயர்கள், Romans, Arabs, and European crusaders, to name a few. Each of them appropriated different regions that overlapped in time and competed for sovereignty and land. Others, such as Ancient Egyptians, இட்டைட்டு பேரரசு, Persians, பபிலோனியா, and Mongols, were historical 'events' whose successive occupations were as ravaging as the effects of major earthquakes ... Like shooting stars, the various cultures shine for a brief moment before they fade out of official historical and cultural records of Palestine. The people, however, survive. In their customs and manners, fossils of these ancient civilizations survived until modernity—albeit modernity camouflaged under the veneer of Islam and Arabic culture." Ali Qleibo, Palestinian anthropologist
  16. "(With reference to Palestinians in Ottoman times) Although proud of their அராபியர் heritage and ancestry, the Palestinians considered themselves to be descended not only from Arab conquerors of the seventh century but also from indigenous peoples who had lived in the country since time immemorial, including the ancient Hebrews and the Canaanites before them. Acutely aware of the distinctiveness of Palestinian history, the Palestinians saw themselves as the heirs of its rich associations." Walid Khalidi, 1984, Before Their Diaspora: A Photographic History of the Palestinians, 1876–1948. Institute for Palestine Studies
  17. எருசலேம் ஐக்கிய அரசின் தலைநகர் ஆதல் – "Jerusalem has been the holiest city in Jewish tradition since, according to the Hebrew Bible, King David of Israel first established it as the capital of the united Kingdom of Israel in c. 1000 BCE, and his son, King Solomon, commissioned the building of the First Temple in the city."
  18. Jerusalem is the official capital, and the location of the presidential residence, government offices and the கெனெசெட், Israel's Parliament. In 1980, the Knesset asserted Jerusalem's status as the nation's "eternal and indivisible capital", by passing the Basic Law: Jerusalem — Capital of Israel. However, the ஐக்கிய நாடுகள் அவை does not recognize this designation. The bulk international community argues that the city is still legally an international Corpus separatum and the final issue of the status of Jerusalem will be determined in future Israeli-Palestinian negotiations. Most countries maintain their embassies in டெல் அவீவ் (CIA Factbook பரணிடப்பட்டது 2006-07-16 at the வந்தவழி இயந்திரம்). See the article on எருசலேம் for more information.
  19. "எருசலேம் தலைநகர் பற்றிய சர்ச்சை". Archived from the original on 2006-05-14. பார்க்கப்பட்ட நாள் 2006-05-14.
  20. CIA Factbook பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம் and Map of IsraelPDF (319 KB))
  21. அரபு-இசுரயேலி பிரச்சினை.
  22. "Long Term Climate Information for Israel". June 2011.
  23. "Record Data in Israel".
  24. "Climatological Information for Jerusalem, Israel". Hong Kong Observatory. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-07-04.

வெளி இணைப்புகள்

தொகு

அரசாங்கம்

கலாச்சாரம்

கல்வி

வரைபடங்கள்

சமயம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எருசலேம்&oldid=4040954" இலிருந்து மீள்விக்கப்பட்டது