டி. வி. எஸ். நகர்

மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

டி. வி. எஸ். நகர் (ஆங்கில மொழி: T V S Nagar) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

டி. வி. எஸ். நகர்
T V S Nagar

டி. வி. எஸ். நகர்
புறநகர்ப் பகுதி
டி. வி. எஸ். நகர் T V S Nagar is located in தமிழ் நாடு
டி. வி. எஸ். நகர் T V S Nagar
டி. வி. எஸ். நகர்
T V S Nagar
டி. வி. எஸ். நகர், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°54′04″N 78°05′52″E / 9.901200°N 78.097800°E / 9.901200; 78.097800
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்159 m (522 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்625003
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்ற உறுப்பினர்செல்லூர் கே. ராஜூ
இணையதளம்https://madurai.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 159 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டி. வி. எஸ். நகர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°54′04″N 78°05′52″E / 9.901200°N 78.097800°E / 9.901200; 78.097800 (அதாவது, 9°54'04.3"N, 78°05'52.1"E) ஆகும். மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை டி. வி. எஸ். நகர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

டி. வி. எஸ். நகரில் கோதண்டராமர் கோயில் என்ற வைணவக் கோயில் ஒன்று உள்ளது.[3]

மதுரையில் மாடக்குளம் மற்றும் டி. வி. எஸ். நகரை இணைக்கும் சாலை மேம்பாலம் கடந்த 2015ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் இரண்டாவது பகுதி, ரூ.16.62 கோடி மதிப்பீட்டில் ஜெய்ஹிந்த்புரம் நோக்கி 251 மீட்டர் நீளமுள்ளதாகக் கட்டப்பட்டு வருகிறது.[4]

டி. வி. எஸ். நகர் பகுதியானது, மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[5] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் செல்லூர் கே. ராஜூ ஆவார்.[6] மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "டி.வி.எஸ்.நகர் : ராணுவத்தில் உயிர்நீத்த இளம் தியாகி வீட்டில் வீரர்கள் மரியாதை - குடியரசு தினத்தில் ஏற்பாடு!". News18 Tamil. 2022-01-26. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
  2. (in ta) செந்தமிழ். Tamiḻccaṅka Muttirācālaip Patippu. 1968. https://books.google.co.in/books?id=WCM-AQAAIAAJ&q=%25E0%25AE%259F%25E0%25AE%25BF.+%25E0%25AE%25B5%25E0%25AE%25BF.+%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.+%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D,+%25E0%25AE%25AE%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2588&dq=%25E0%25AE%259F%25E0%25AE%25BF.+%25E0%25AE%25B5%25E0%25AE%25BF.+%25E0%25AE%258E%25E0%25AE%25B8%25E0%25AF%258D.+%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D,+%25E0%25AE%25AE%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2588&hl=ta&sa=X&ved=2ahUKEwjyz7Pt0_n8AhUqumMGHR23AdwQ6AF6BAgKEAM. 
  3. "மதுரை டி.வி.எஸ்.நகர் கோதாண்டராமர் கோயில் திருவாராதனம் நிறைவு விழா". Dinamalar. 2018-10-25. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
  4. The Hindu Bureau (2022-11-18). "Construction of Jaihindpuram arm of Madakulam - TVS Nagar road overbridge begins". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
  5. "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
  6. "Madurai West Assembly constituency" (in ஆங்கிலம்). 2022-08-15. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.
  7. "Madurai Lok Sabha constituency" (in ஆங்கிலம்). 2022-12-08. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._எஸ்._நகர்&oldid=3668926" இலிருந்து மீள்விக்கப்பட்டது