டைகேயம் என்பது டைகேயிடே குடும்பத்தினைச் சார்ந்த பூங்கொத்தி பேரினம் ஆகும். இந்த பசாரிபார்மிசு வரிசை பறவைகள் தெற்காசியாவின் வெப்பமணலப்பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவில் இந்தியாவிலிருந்து, கிழக்கே பிலிப்பீன்சு வரையும் காணப்படுகிறது. டைகேயம் சிற்றினமானது பிரியோனோசிலசு பேரினத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இது ஒரு ஒற்றைத்தொகுதி மரபு உயிரினக் குழுவை உருவாக்குகிறது.[2][3]

டைகேயம்
ஆண் வாகாதோபி பூங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்

குவியர், 1816
மாதிரி இனம்
Certhia erythronotus[1] = Certhia cruentata
லாதம், 1790
சிற்றினம்

உரையினை காண்க

முண்டிங்கியா கலபுரா பெர்ரி (ஐதராபாத்து, இந்தியா ) உடன் வெளிர்-அலகு பூங்கொத்தி டைகேயம் எரித்ரோஹைஞ்சோஸ்
ஹெலிக்டெரசு ஐசோராவில் பருத்த அலகு பூங்கொத்தி டைகேயம் ஏஜில்

இதன் உறுப்பினர்கள் மிகவும் சிறிய, தடிமனான, பெரும்பாலும் பிரகாசமான நிறமுள்ள பறவைகள். இவை 10 முதல் 18 செ.மீ. வரை நீளம் வரை வளரக்கூடியன. குட்டையான வால்கள், குட்டையான தடிமனான வளைந்த அலகுகள் மற்றும் குழல் நாக்குகளுடன் காணப்படும். குழல் நாக்கு பல சிற்றினங்களின் உணவில் தேனின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன. இருப்பினும் பெர்ரி, சிலந்திகள் மற்றும் பூச்சிகளைக் கூட இவை உண்ணுகின்றன.

இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை மரத்தில் இடைப் பகுதியில் பணப்பை போன்று தொங்கவிடப்பட்ட கூட்டில் இடும்.

வகைப்பாட்டியல் தொகு

1816-ல் பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் ஜார்ஜஸ் குவியர் என்பவரால் டைகேயம் பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது.[4] இந்த பெயர் பண்டைய கிரேக்க டிகாயோனிலிருந்து வந்தது. இது உரோமானிய எழுத்தாளரான கிளாடியஸ் ஏலியானஸ் குறிப்பிட்டுள்ள மிகச் சிறிய இந்தியப் பறவைக்கான வார்த்தை என்று குவியர் கூறினார், ஆனால் இந்த வார்த்தை உருள்வண்டு இசுகாராபேயசு சேசருக்குப் பதிலாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.[5] 1840ஆம் ஆண்டில் ஜார்ஜ் ராபர்ட் கிரே என்பவரால் இந்த மாதிரி சிற்றினம் கருஞ்சிவப்பு முதுகு பூங்கொத்தியாக நியமிக்கப்பட்டது.[6][7]

இந்தப் பேரினமானது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Dicaeidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  2. Nyária, Árpád S.; Peterson, A. Townsend; Rice, Nathan H.; Moyle, Robert G. (2009). "Phylogenetic relationships of flowerpeckers (Aves: Dicaeidae): Novel insights into the evolution of a tropical passerine clade". Molecular Phylogenetics and Evolution 53 (3): 613–19. doi:10.1016/j.ympev.2009.06.014. பப்மெட்:19576993. 
  3. "Notes on flowerpeckers (Aves, Dicaeidae). 2, The primitive species of the genus Dicaeum. American Museum novitates ; no. 1991". American Museum Novitates (1991). 1960. 
  4. Cuvier, Georges (1816). Le Règne animal distribué d'après son organisation : pour servir de base a l'histoire naturelle des animaux et d'introduction a l'anatomie comparée (in French). Vol. 1. Paris: Déterville. pp. 410–411.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm.
  6. Gray, George Robert (1840). A List of the Genera of Birds : with an Indication of the Typical Species of Each Genus. London: R. and J.E. Taylor.
  7. Check-List of Birds of the World. Vol. 12. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. 1986.
  8. "Dippers, leafbirds, flowerpeckers, sunbirds". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. July 2021. பார்க்கப்பட்ட நாள் 9 October 2021.
  9. 9.0 9.1 "Species Updates – IOC World Bird List". www.worldbirdnames.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகேயம்&oldid=3930565" இலிருந்து மீள்விக்கப்பட்டது